Dinamani - பரிகாரத் தலங்கள் - https://www.dinamani.com/specials/Parigara-thalangal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3066104 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை என்.எஸ். நாராயணசாமி Monday, December 31, 2018 11:04 AM +0530  

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருவாடானை. சம்பந்தர் தனது பதிகத்தில், இத்தல இறைவனை வழிபடுவதால் நமது வினைகள் யாவும் நீங்கும் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பட்டுப் பாடியுள்ளார். சுக்கிர தோஷ நிவர்த்தி தலமாகவும் இருப்பது மற்றொரு சிறப்பாகும். 

இறைவன் பெயர்: ஆடானைநாதர், ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர்

இறைவி பெயர்: சிநேகவல்லி, அம்பாயிஅம்மை

இத்தலத்துக்கு சம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 42 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து தொண்டி சாலையில் காளையார்கோவில் வழியாக சுமார் 50 கி.மீ. தொலைவிலும் திருவாடானை தலம் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடி, சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் இருந்து இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தில் இருந்தும் இங்கு வர சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில்

திருவாடானை அஞ்சல்

திருவாடானை வட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் - 623 407.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 

ஒருமுறை, வருணனின் மகன் வாருணி, நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன் ஆடானைநாதர் என்று பெயர் பெற்றார்.

சூரியன், தானே மிகுந்த ஒளி உடைவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக, நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீலமணியால் ஆவுடையார் மற்றும் லிங்கம் ஸ்தாபித்து, ரத்தினமயமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால், இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில், 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிராகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில், மூலவர் மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஸ்வநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், கார்த்திகை ரோகிணியுடன் சந்திரன், அருகில் சனீஸ்வரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.

இத்தல முருகப் பெருமான், ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வெள்ளிக்கிழமைதோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பவர்கள் சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி நடைபெறும் சமயத்தில் இத்தலம் வந்து வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனை வழிபடுவதால் நமது வினைகள் நீங்கும் என்று குறிப்பிடும் சம்பந்தர், நோய் பிணிகள் ஆகியவற்றில் இருந்தும் விடுபடுவோம் என்று 3-வது, 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே. 

2. வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே. 

3. மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே. 

4. சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே. 

5. கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே. 

6. வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே. 

7. துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள்வார் வினை மாயுமே. 

8. வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
சிந்தையார் வினை தேயுமே. 

9. மறைவல் லாரொடு வானவர் தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே. 

10. மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழ
தீய வல்வினை தீருமே. 

11. வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருவாதவூர் குமார. இராமச்சந்திரன் ஓதுவார்

 

]]>
ஆடானைநாதர், ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், சிநேகவல்லி, அம்பாயிஅம்மை, திருவாடானை https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/dec/28/முன்ஜென்ம-தீவினைகள்-நீங்க-ஆடானைநாதர்-கோவில்-திருவாடானை-3066104.html
3061079 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை என்.எஸ். நாராயணசாமி Thursday, December 20, 2018 05:41 PM +0530  

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருமாந்துறை. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: ஆம்ரவனேஸ்வரர்

இறைவி பெயர்: பாலாம்பிகை

எப்படிப் போவது

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. 

ஆலய முகவரி

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்

மாந்துறை அஞ்சல்

லால்குடி வட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 703.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.

கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால், இறைவனை மிருகண்டு முனிவர் வழிடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். 

பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன் இருப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே, சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கின்றன.

இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது. அந்த நாள்களில் இவ்வாலத்தில் சூரிய பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் பாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

திருப்புகழ் தலம் 

மேற்குப் பிராகாரத்தில், வள்ளி, தெய்வானையுடன் தனி சந்திதியில் சுப்பிரமணியர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தலச் சிறப்பு 

திருவண்ணாமலையில், சிவபெருமான் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக்கொண்டார். சூரியனுடைய மனைவி சம்யாதேவி, தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக்கொள்ள முடியாமல், இத்தலத்தில் தவம் இருந்து சூரிய ஒளியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தகாத எண்ணத்துடன் தீண்டியதால், இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக்கொண்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் உண்டான தோஷம் நீங்க, சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம் இதுவாகும்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில், மாமரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபசாரம் செய்ததால், மானாகப் பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாகப் பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்குப் பிறந்தார். ஒருநாள், குட்டி மானை விட்டுவிட்டு தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரை தேடச் சென்ற இடத்தில், வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும் பார்வதியும், அவற்றை அம்பால் வீழ்த்தி சாப விமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மற்றும் தந்தை மான்கள் இருப்பிடத்துக்குத் திரும்பாததால் கலங்கிய குட்டிமான், கண்ணீருடன் காத்துக்கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்குப் பசியெடுக்கவே அது அலறியது.

சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான்கள் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்குப் பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான், தன் சாபத்துக்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக, சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதி தேவியும் இங்கேயே தங்கினாள். இறைவன் சந்நிதி கருவறை நுழைவு வாயிலில் மேலே, இறைவனும் இறைவியும் தந்தை மற்றும் தாய் மான்களாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் மாந்துறை என வழங்கப்படுகிறது.

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில், இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில், இறைவன் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால், சகல தோஷவகளும் நீங்கி குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார்.

இவ்வாலயம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவர்கள் இத்தலத்தில் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்து வந்தால், அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இக்கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், கல்வியில் மேன்மை பெறவும், வாழ்க்கையில் உள்ள தீராத இன்னல்கள் தீங்கவும், செய்யும் தொழில் மேன்மை அடையவும், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் அனைத்து மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறையருள் பெற, ஒரு முறை இத்தலம் சென்று வழிபட்டு வரவும்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண்                 பகமானைக்

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ லேத்துதல் செய்வோமே. 

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது கெழுமுதல் அறியோமே. 

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது வணங்குதல்                             அறியோமே. 

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே. 

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே. 

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே. 

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே. 

நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே. 

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் பண்ணிசைப் பேரறிஞர், பழநீ க.வெங்கடேசன் ஓதுவார்

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/dec/21/மூல-நட்சத்திரத்தில்-பிறந்தவர்கள்-வழிபட-வேண்டிய-ஆம்ரவனேஸ்வரர்-கோவில்-திருமாந்துறை-3061079.html
3057938 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க புஷ்பவனநாதர் கோவில், திருப்பூந்துருத்தி என்.எஸ். நாராயணசாமி Friday, December 14, 2018 12:17 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 11-வது தலமாக இருப்பது திருப்பூந்துருத்தி. திருமழபாடியில் நடைபெற்ற நந்திதேவர் திருமணத்துக்கு இத்தலத்து இறைவன் மூலம் மணமாலைகள், பூக்கள் முதலியவை அனுப்பிவைக்கப்பட்ட சிறப்புடைய தலம் இது. திருவையாற்றைத் தலைமைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

இறைவன் பெயர்: புஷ்பவனநாதர்

இறைவி பெயர்: சௌந்தர்யநாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்று உள்ளன.

எப்படிப் போவது

அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்

திருப்பூந்துருத்தி, திருப்பூந்துருத்தி அஞ்சல்

கண்டியூர் வழி

திருவையாறு வட்டம்

தஞ்சை மாவட்டம் - 613 103.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர், மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

கோவில் அமைப்பு

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் உள்ளன. இங்கும் நந்தி, சந்நிதியை விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு, இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தல புராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் இருக்கிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவனநாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார்.

மகிஷாசுரனை அழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அருகில் சம்பந்தர், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமான், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் சுந்தரர் இருக்கும் சிலா உருவங்கள் இருக்கின்றன. பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையது. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

காசிப முனிவர், இத்தலத்தில் உள்ள ஆதிவிநாயகர் சந்நிதி அருகில் உள்ள கிணற்றில் கங்கையை வரவைத்து, அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திருஅங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டிய நாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்துகொண்டிருந்தார்.

சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்துகொண்ட அப்பர், தன்னை இன்னாரென்று காட்டிக்கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறிவந்த சிவிகையை தானும் தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும், அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ, ‘உங்கள் சிவிகையைத் தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்’ என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையில் இருந்து கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகி ஒருவரை ஒருவர் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குமானால், நீண்ட நாள்களாக திருமணம் ஆகாமல் இருத்தல், கல்யாணம் ஆகியும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருத்தல் ஆகியவற்றுக்கு, ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், அமாவாசை நாள்களில் இத்தலம் வந்து புஷ்வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நல்லதே தடக்கும் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில், அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் உள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என்று மனமுருகிக் குறிப்பிடுகிறார்.

தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

 

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ

 

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம் இறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ

 

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்

 

வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்

 

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை

மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்

 

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்

 

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து

பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்

 

கால்களால் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்

கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்

 

உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ

 

இறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன் பல்கணத்து      எண்ணப்பட்டுச்

சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து                                                                                  இருப்பன்கொலோ

 

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்

தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர்கள் மயிலாடுதுறை சொ.சிவகுமார், திருஞான பாலசந்திரன் 

 

]]>
திருப்பூந்துருத்தி, சௌந்தர்யநாயகி, புஷ்பவனநாதர் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/dec/14/திருமணத்-தடை-நீங்க-குழந்தை-பாக்கியம்-கிடைக்க-புஷ்பவனநாதர்-கோவில்-திருப்பூந்துருத்தி-3057938.html
3051631 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பித்ரு தோஷ பரிகாரத் தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம் என்.எஸ். நாராயணசாமி Thursday, December 6, 2018 05:45 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது ஆவூர் பசுபதீச்சரம். இத்தலத்தின் சிறப்பு, இங்குள்ள பஞ்ச பைரவர்கள் சந்நிதி.

இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்

இறைவி பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது?

கும்பகோணத்தில் இருந்து கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

ஆவூர், ஆவூர் அஞ்சல்

வலங்கைமான் வட்டம்

தஞ்சை மாவட்டம் - 612 701.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 

ஒருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேஷன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேஷன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய வாயு, இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து, தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தல புராணம் தெரிவிக்கிறது.

வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகுக்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகுக்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகில் உள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம் இருப்பதைப் பார்க்கலாம்.

கோவில் அமைப்பு 

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. இறைவன் கருவறை விமானம், மணிக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.

தெற்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகா மண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை, குளத்தில் இருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.

இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகா மண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணெய்யால் விளக்கேற்றி இங்குள்ள பைரவர்களை வழிபாடு செய்துவந்தால், பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் ஏற்படும். மேலும் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வினையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர். இந்த ஐந்து பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர்.

இத்தலத்தில், தசரதர் தனக்குப் புத்திரன் பிறக்க வேண்டும் என்று சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை பங்கஜவல்லி அம்பாள் சந்நிதியின் கிழக்குச் சுவற்றில் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உள் பிராகாரத்தில் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்கு உள்ளது. இத்தல முருகன், வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி, மேற்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன், தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். 

தர்மத்வஜன் என்ற அரசன், இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்டநோய் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது.

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்று நூலை இயற்றிய சாத்தனார், ஆவூரில் பிறந்தவர் என்பது குறிப்படத்தக்கது. 

தலவிருட்சமாக அரச மரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகியவை உள்ளன. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனு தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா, சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிஷ்டர், மகாவிஷ்ணு, தசரதர் ஆகியோர் வழிபட்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபடுங்கள்.

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் “ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே” என்று தனது நாவுக்குக் கட்டளையிடுகிறார்.

1. புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடுவார் தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழுது ஏத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

2. முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொடு இருந்த ஊராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

3. பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவர் என்றும் இருந்த ஊராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

4. தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

5. இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்த ஊராம்
கொந்தணை யுங்குழ லார்விழவில்
கூட்டமி டையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

6. குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

7. நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்த இருந்த ஊராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

8. வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

9. மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

10. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவரி டந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

11. எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர் போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டினி தாயிசை பாடியாடிக்
கூடு மவருடை யார்கள்வானே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன் ஓதுவார்

 

]]>
பசுபதீஸ்வரர் , மங்களாம்பிகை, பங்கஜவல்லி, திருஞானசம்பந்தர், பசுபதீஸ்வரர் திருக்கோயில் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/dec/07/பித்ரு-தோஷ-பரிகாரத்-தலம்-பசுபதீஸ்வரர்-கோவில்-ஆவூர்-பசுபதீச்சரம்-3051631.html
3043711 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் குழந்தைப் பேறு பெற, கல்வியில் சிறக்க கயிலாசநாதர் திருக்கோவில், அயனீச்சுரம் (பிரம்மதேசம்) என்.எஸ். நாராயணசாமி Saturday, November 24, 2018 05:52 PM +0530  

ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் அயனீச்சரம் என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தேவார வைப்புத் தலம், இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கப்படுகிறது.

இறைவன் பெயர்: கயிலாசநாதர்

இறைவி பெயர்: பெரியநாயகி

எப்படிப் போவது?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரில் இருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து சென்றுவர நகரப் பேருந்து வசதி மற்றும் ஆட்டோ, வாடகைக் கார் வசதியுள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில்

பிரம்மதேசம்

பிரம்மதேசம் அஞ்சல்

அம்பாசமுத்திரம் வட்டம்

திருநெல்வேலி மாவட்டம் - 627 414.

இவ்வாலயம், தினமும் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில், இந்த அயனீச்சுரம் வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் ‘ஈச்சுரம்’ என வரும் தலங்களை வகுத்து, அப்பர் அருளிச் செய்துள்ளார்.

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்

    நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்

    குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் ‘அயனீச்சுரம்’

    அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்

ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி

    இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

பொழிப்புரை

கூத்தப்பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்று இவற்றைக் கூறுமிடத்து, உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், ‘அயனீச்சுரம்’ அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக. 
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தல வரலாறு 

பிரம்மதேசம் ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருவாலீஸ்வரம் என்ற ஊரில், ராஜராஜ சோழன் கட்டிய திருவாலிநாத சுவாமி கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ராஜராஜசதுர்வேதிமங்கலம் என்றும் அயனீச்சரம் என்றும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த இன்றைய பிரம்மதேசம் ஊரை, அந்தணர்களுக்குத் தானமாகத் தந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. சோழர்கள் காலத்தில் மிகப் புகழ்பெற்று விளங்கிய பிரம்மதேசம், மிகவும் வளமான ஊர் என்பதால், அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு, நாலாயிரத்தம்மன் என்றே பெயர். இந்த நாலாயிரத்தம்மன் கோயில், கயிலாசநாதர் கோயிலை ஒட்டியே காணப்படுகிறது. சரித்திர காலங்களில், இத்தலத்தில் உள்ள கோயில், ஒரு போர்க்கால அரணாக இருந்துள்ளது. சுற்றிலும் உள்ள நீண்ட மதில்சுவர்கள், மேல்பாகம் சுமார் 2.5 அடி அகலம் உள்ளது. இது, ஆள்கள் நடமாடவும், வரும் பகைவர்களைக் கண்காணிக்கவும் உபயோகப்பட்டது. ஆலயத்தின் 7 நிலை ராஜகோபுரத்துக்கு மேலே செல்ல படிகள் உண்டு.

பிரம்மாண்ட புராணத்தில், பிரம்மதேசம், சிவசைலம் மற்றும் அருகில் உள்ள திருவாலீஸ்வரம் ஆகிய மூன்று தலங்களிலும் சுயம்புவாகத் தோன்றப்போவதாக அத்திரி முனிவரிடம் சிவபெருமான் கூறியதாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமச முனிவர், தனது தோஷம் நீங்க பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தை மரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதியில், ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜிக்க, அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமான் அருள் செய்தார். உரோமச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், இத்தலத்தில் கயிலாசநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

கோவில் அமைப்பு 

தாமிரபரணி மஹாத்மியத்தில் அயனீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு, இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கும் இத்தலத்தில் உள்ள கயிலாசநாதர் ஆலயம், கருணையாற்றின் தென்கரையில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுரத்துக்கு வெளியே பெரிய தெப்பக்குளம் காட்சி தருகிறது. ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டடடக் கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்நவுடன், நாம் காண்பது மரத்தால் செய்யப்பட்டதைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கல்லால் ஆன கூரையை உடைய முகப்பு மண்டபம். முதன்முதலாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் அது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில், மரத்தில் செய்யப்பட்டதுபோல, அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆனதாக இந்தக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வசந்த மண்டமும், ஒரே கல்லால் ஆன சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நந்திகேஸ்வரர் திருவுருவத்தைக் காணலாம். 

கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன், வலது புறத்தில் 20 யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில், ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண் அருகே இருந்து பார்த்தால், வாலி-சுக்ரீவன் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம், வாலி-சுக்ரீவன் உருவம் பொறித்த தூண் அருகே இருந்து பார்த்தால், ராமர் இருக்கும் தூண் தெரியாது. இந்த அற்புதமான சிற்பக் கலைத் திறன், ஒவ்வொருவரும் பார்த்து மகிழ வேண்டிய காட்சியாகும்.

இத்தலத்தில் உள்ள நடராஜர், புனுகு நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவர் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், அம்மை சிவகாமி மற்றும் மாணிக்கவாசகர் சிலாவுருவங்களும் உள்ளன. இந்த நடராஜருக்கு, வருடத்தில் மார்கழி மாத திருவாதிரை அன்று மட்டும்தான் அபிஷேகம். மற்ற நாள்களில் இவருக்கு வெறும் புனுகுக்காப்புதான் சார்த்தப்படுகிறது.

உள்ளே கருவறையில், மூலவர் கயிலாசநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். கருவறைச் சுற்றில் வல்லப கணபதி, முருகன், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோரைக் காணலாம். இத்தலத்தின் தலவிருட்சம், இலந்தை மரம். இலந்தை மரத்தின் அடியில், பத்ரிவனேஸ்வரர் என்ற இலந்தையடிநாதருக்கு இங்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதிகள், தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, இலந்தையடிநாதரை தரிசித்து வேண்டிக்கொண்டு, இலந்தைப் பழத்தை பக்தியுடன் உண்டு வழிபட்டால், அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

பெரிய 7 நிலை கோபுரம் கொண்டு சிறப்புறத் திகழும் இத்தலத்தில், ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என மூன்று கோபுரங்களுடன் ஏழு விமானங்களும் அமைந்துள்ளன. கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவக் கல்லின் மீது நின்று பார்க்கும்போது, இவை அனைத்தும் ஒரே பார்வையில் தெரிவது சிறப்பாக உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இத்தலம், கட்டடக் கலைக்கும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுக்கும் சிறப்பு பெற்றதாகும். இறைவன் சந்நிதியில் இருந்து அம்பாள் சந்நிதிக்குப் போகும் வழியில் சோமவார மண்டபமும், கூர்ம பீடமும் உள்ளன. அதன் அருகில் அமைந்துள்ள பிட்சாடனர் சபையில், பிரதானமாக விளங்கும் சுமார் 7 அடி உயரமுள்ள பிட்சாடனர் சிலாவுருவம், எந்தவிதப் பிடிமானமும் இல்லாமல் பூதகணங்கள் சூழ, புவிஈர்ப்புச் சக்தியின் துணை கொண்டு, நின்ற நிலையில் காட்சி தருகிறார். சுற்றிலும் சுவற்றில் பிற தெய்வங்கள், தேவமாதர்கள், சந்திரன், சூரியன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர். நந்தியெம்பெருமான் உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில், ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது, அக்கால சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இத்தலத்தில், நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனால், சூரியனுக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் ஆகிய புண்ணிய தினங்களில், சூரியனுடைய ஒளிக் கதிர்கள் கயிலாசநாதர் கருவறையில் சுவாமி மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. மேலும், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி அமைந்துள்ளது. சூரிய தலமாகவும் விளங்கி, சரஸ்வதியும் அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டு படித்தால், கற்ற கல்வி நன்றாக நினைவில் நிற்கும் என்றும்; அதனால் படிப்பில் சிறப்புத் தேர்ச்சிபெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

பிரம்மதேசம் ஊரிலிருந்து மேற்கே, சுமார் 3 கி,மீ, தொலைவில் மன்னார்கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில், பெருமாள் ராஜகோபாலசுவாமி என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தையும் பிரம்மதேசம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

 

]]>
பெரியநாயகி, கயிலாசநாதர், பிரம்மதேசம், குழந்தைப் பேறு https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/23/குழந்தைப்-பேறு-பெற-கல்வியில்-சிறக்க-கயிலாசநாதர்-திருக்கோவில்-அயனீச்சுரம்-பிரம்மதேசம்-3043711.html
3039321 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் சனி, செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில், கூந்தலூர் என்.எஸ். நாராயணசாமி Monday, November 19, 2018 01:28 PM +0530  

தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இருப்பது கூந்தலூர். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடைய ஸ்தலம்.

இறைவன் பெயர்: ஜம்புகாரண்யேஸ்வரர்

இறைவி பெயர்: ஆனந்தவல்லி

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள ஒரு பதிகத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-ம் பாடலில் கூந்தலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

எப்படிப் போவது?

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலையில் எரவாஞ்சேரிக்கு அருகில் சாலை ஓரத்திலேயே கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. கருவிலிகொட்டிட்டை என்ற பாடல் பெற்ற தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில்

கூந்தலூர், கூந்தலூர் அஞ்சல்

எரவாஞ்சேரி வழி

குடவாசல் வட்டம்

திருவாரூர் மாவட்டம் - 609 501.

இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகம் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்.

திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி    

    தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை      

கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்

    குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு

அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்

    ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்

கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்

    கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை

திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், கூழையூர், குமரி, கொங்கு, அசோகந்தி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தலப் பெயர் காரணம்

பண்டைய காலத்தில் நாவல் மரங்கள் அடர்ந்து இருந்த வனத்திடையே அமைந்த திருத்தலமானதால், ஆலய இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும், வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரண்யேஸ்வரர் என ஈசன் அழைக்கப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜம்பு என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப் பொருள்படும். மேலும், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்தத்தில், சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாகத் தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கூந்தலூர், ஒரு தேவார வைப்புத் தலமாக இருந்தாலும், இத்தலம் கூந்தலூர் முருகன் கோவில் என்றுதான் இப்பகுதி மக்களால் அறியப்படுகிறது.

ரோமரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து, கூந்தலூர் ஆலய சிவபெருமான் அருளைப் பெற்றார். அவ்வாறு அவர் தவம் செய்துவரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெற, தனது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் அளித்து வந்தார். ஒரு சமயம், சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன் வருவது நின்றுவிட்டது. ரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல் சிவனைத் தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த சிவ சித்தரான ரோமரிஷி சித்தரை, விநாயகரும் முருகனும் விரைந்து வந்து கோவிலுக்கு உள்ளே வரவிடாமல் தடுத்தனர்.

ஆலய நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி தெய்வானை சமேத முருகனும் காட்சி அளிப்பது இந்தப் புராண வரலாற்றை வெளிப்படுத்துகிறது. சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்துக்கு வெளியே காட்டி புறத்தூய்மையைவிட அகத்தூய்மையே இன்றியமையாதது என மற்றவர்க்கும் உணர்த்தி, ரோமரிஷிக்கு அருள்புரிந்தார் என தல வரலாறு கூறுகிறது. இந்த ரோம மகரிஷி மேலே எண்ணெய் பூசி, அந்த எண்ணெய்யை நம் உடலில் பூசி வந்தால், சரும நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

திருப்புகழ் தலம் 

ரோமரிஷி முனிவரைத் தடுக்க முருகப் பெருமான் வந்ததால், அவரின் சந்நிதி கோவிலின் முன்புறம் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன், குமரகுருபரர் என்ற பெயருடன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. குமரகுருபரர் ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மயிலின் முகம் வலப்பகம் உள்ளது. சூரசம்ஹாரத்துக்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் இது என்பர். இது தேவ மயில் என்றும் கூறுவர். ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஈசான்ய பாகத்தில் அமைந்துள்ள இந்த முருகனின் சந்நிதிக்கு எதிரே, ஓரத்தில் சனி பகவானின் சந்நிதி அமைந்து, முருகப் பெருமானை சனி பகவான் வழிபடுவதுபோல் இருப்பது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். 

குமரகுருமரரின் சந்நிதி, ரோம மகரிஷியின் ஜீவசமாதி மேல் அமைந்துள்ளது. ஜாதகக் கட்டத்தில் செவ்வாய்க்கு உரிய இடமான ஈசான்ய பாகத்தில், இவ்வாலயத்தில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப் பெருமான் அமர்ந்திருப்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் குமரகுருபரரை வழிபட்டு நன்மை அடையலாம். மேலும், இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை எம்பது குறிப்பிடத்தக்கது. நவக்கிரகங்களில், செவ்வாயும் சனியும் எதிரிகள். ஆலயங்களில் நவக்கிரக மேடையில் செவ்வாயும் சனியும் எதிர் எதிரே இருப்பார்கள். இவ்வாலயத்தில், செவ்வாய் இடத்தில் அதன் அதிபதியான முருகப் பெருமானே வீற்றிருப்பதால், சனி பகவான் அவர் எதிரே இல்லாமல் சற்று ஓரமாகக் காட்சி தருகிறார். சனியின் சந்நிதியை ஈசான்ய பார்வையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் முருகன், செவ்வாய் கிரகத்தின் அதிபதியாவார். அதனால், சனி மற்றும் செவ்வாய் கிரகப் பாதிப்புகளுக்கு இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. 

ஜாதகத்தில் சனி, செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இத்தலம் வந்து சனி மற்றும் செவ்வாய்க்கு உரிய வஸ்திரம் சார்த்தி, எள் மற்றும் துவரை சமர்ப்பித்து, வள்ளி தெய்வானை சமேத குமரகுருபரரையும், மூலவர் ஜம்புகாரண்யேஸ்வரரையும் வழிபட்டால் தகுந்த நிவாரணம் பெறலாம். திருமணத் தடை நீங்கும், தள்ளிப்போய்க்கொண்டு இருக்கும் திருமணம் விரைவில் நடைபெறும். 

கோவில் அமைப்பு 

ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் மேற்புறம் உள்ள சிறிய மண்டபத்துள் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர், சுதை வடிவங்களில் காட்சி அளிக்கின்றனர். கருவறையில், இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு தோக்கியும் அருள்புரிகின்றனர். ஜம்புகாரண்யேஸ்வரர் நீண்டு உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார். மூலவர் சந்நிதியில், துவாரபாலகர்களுக்கு முன்புறம் திருநாராயணப் பெருமாள் அருள்காட்சி தருவது, இத்திருத்தலத்தின் மேலும் ஒரு அற்புத சிறப்பாகும். கருவறை பிராகாரம் வலம் வரும்போது, கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை அம்மன் ஆகியோரைக் காணலாம். சண்டிகேஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது. 

பல்லவர் கால 16 பட்டை தாரா லிங்கத்தை பாலசுப்ரமணியர் சந்நிதி அருகே காணலாம். இந்த்த் தாரா லிங்கத்தை வணங்கிவந்தால், 16 வகை செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தின் தீர்த்தங்களாக சீதா தீர்த்தமும், குமார தீர்த்தமும் உள்ளன. 

முருகப் பெருமானின் அருள் பெற, ஒருமுறை கூந்தலூர் சென்று வாருங்கள்.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன் ஓதுவார்

 

]]>
பரிகாரத் தலம், ஜம்புகாரண்யேஸ்வரர் , ஆனந்தவல்லி, குடவாசல், சனி, செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/16/சனி-செவ்வாய்-தோஷ-பரிகாரத்-தலம்-ஜம்புகாரண்யேஸ்வரர்-திருக்கோவில்-கூந்தலூர்-3039321.html
3034945 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் குரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி என்.எஸ். நாராயணசாமி Friday, November 9, 2018 11:24 AM +0530  

குரு தோஷ பரிகாரத் தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி
பாடல் பெற்ற ஸ்தங்கள் வரிசையில் இல்லாவிட்டாலும், கொல்லுமாங்குடி மாகாளநாதர் ஆலயம் ஒரு பழமையான சிவ ஸ்தலம்.

இறைவன் பெயர்: மாகாளநாதர்

இறைவி பெயர்: சௌந்தரநாயகி

எப்படிப் போவது

மயிலாடுதுறை - பூந்தோட்டம் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லுமாங்குடி ஊர். 

ஆலய முகவரி

அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்

மாங்குடி சிவன் கோவில்

கொல்லுமாங்குடி, நன்னிலம் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய அர்ச்சகர் வீடு கோவிலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், அவரை தொடர்புகொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
ஆலய குருக்கள் கைப்பேசி எண்: +918680978478.

தல பெயர் காரணம்

ராமன் தனது மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் வனவாசம் இருந்துவந்த காலத்தில், மாரீசன் என்ற அரக்கன் பொன்மான் உருவில் அவர்கள் எதிரில் வந்தான். பொன்மானின் அழகில் மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி ராமனிடம் வேண்ட, ராமன் அதை துரத்திக்கொண்டு போனார். மாயமான் அவருக்கு பிடிபடாமல் இருக்க, அதைக் கொல்ல தனது அம்பை எய்தார். அவ்வாறு பொன்மான் உருவில் வந்த மாரீசனைக் கொன்ற ஊர் இது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கொல்லு + மான்குடி என்று பெயர் ஏற்பட்டு, நாளடைவில் கொல்லுமாங்குடி என மாறியதாகக் கூறப்படுகிறது.

மாகாளர் என்ற சித்தர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு முக்தி அடைந்ததால், இத்தல இறைவனுக்கு மாகாளநாதர் என்று பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது.

தலத்தின் சிறப்பு

சிவனை குரு பகவனான் வழிபட்ட பல தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள இறைவனை குரு பகவான், விஸ்வாமித்திரர், காசியப முனிவர், புதன் மற்றும் பல முனிவர்கள் வழிபட்டு நற்பலன்களைப் பெற்றுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் வழிபட்ட நாள் பங்குனி மாத வளர்பிறையில் வரும் வியாழக்கிழமை என்று கருதப்படுகிறது. அதனால், வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள், ஜனன ஜாதகத்தில் வியாழ குருவின் பாதிப்பு உடையவர்கள், பங்குனி மாதத்தில் ஒரு வியாழக்கிழமை அன்று இங்கு வந்து, ஆலய தீர்த்தத்தில் நீராடி இறைவனையும். இறைவியையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். மேலும், இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானை வணங்கி வழிபட்டால், குரு பகவானால் வரும் தடைகள் யாவும் விலகி சுகம் ஏற்படும் என்பது ஐதீகமாகும். திருமணத் தடை விலகும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.

மேலும், இத்தல இறைவன் மாகாளநாதரை வழிபடுவர்களின் வினைப் பலன்கள் குறைத்து ஆயுள் பலம் கூடும். மரண பயத்தை இறைவன் நீக்கித் தருவார். தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கி ஆன்மாக்களைப் புனிதப்படுத்தும் இறைவன் இந்த மாகாளநாதர். இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் சௌந்தரநாயகியும் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறாள். இந்த அம்பாளை வழிபடுவோர் தோற்றப் பொலிவும், ஐஸ்வர்யமும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு 

2017-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இந்த ஆலயம், புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் பலிபீடமும், அதையடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. விசாலமான வெளிப் பிராகாரமும் உள்ளதைக் காணலாம். நந்தி மண்டபத்தைத் தாண்டி அடுத்துள்ள வாயில் வழியே உள்ள நுழைந்து அம்பாள் சந்நிதி, இறைவன் சந்நிதி இருக்குமிடத்தை அடையலாம். இரண்டாவது நுழைவாயில் மேற்புறம் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகர் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றனர். மூலவர் மாகாளநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள் சௌந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நாகர்கள், நால்வர், சூரியன், ஈசான விநாயகர், ஸ்படிக லிங்கேஸ்வரர், கைலாசநாதர், காசி விஸ்நாதர் ஆகியோரின் சிலா உருவங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. 

இவ்வாலத்தின் இறைவன் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி, சிறப்பு வாய்ந்த மூர்த்தமாக திகழ்கிறார். சுமார் நான்கடி உயரம் உள்ள இந்தச் சிலா உருவம், மிக்க கலையழகுடன் காண்போர் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தட்சிணாமூர்த்தி முன்பு அமர்ந்து நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துவர நல்ல பலன்கள் உண்டாகும்.

சந்தர்ப்பம் கிடைத்து மயிலாடுதுறை செல்பவர்கள், அவசியம் இந்த ஆலயத்துக்குச் சென்று இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மாகாளநாதர் மற்றும் சௌந்தரநாயகியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/09/குரு-தோஷ-பரிகாரத்தலம்-மாகாளநாதர்-கோவில்-கொல்லுமாங்குடி-3034945.html
3030778 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் ஆயுள் பெருக, பூர்வ ஜன்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர் என்.எஸ். நாராயணசாமி Wednesday, October 31, 2018 05:45 PM +0530  

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருபுன்கூர். இத்தல இறைவன் சிவலோகநாதரைப் பணிந்து வழிபடுவோருக்கு நோய்கள் வராது, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகும் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது.

இறைவன் பெயர்: சிவலோகநாதர்

இறைவி பெயர்: சௌந்தரநாயகி, சொக்கநாயகி

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன. இவற்றில், திருநாவுக்கரசர் அருளிய பதிகம் திருபுன்கூர் மற்றும் திருநீடூர் ஆகிய இரண்டு தலங்களுக்கும் பொதுவானது.

எப்படிப் போவது

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மீ. சென்றால், ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

ஆலய முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்

திருப்புன்கூர், திருப்புன்கூர் அஞ்சல்

சீர்காழி வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் - 609 112.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவமான திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்), ஆலய வாயிலில் நின்று சிவதரிசனம் செய்ய முயற்சிப்பார். ஆனால், நந்தி இடையே இருந்ததால் சிவபெருமானை அது மறைத்தது. மானசீகமாக ஈசனை வழிபட்டு மனம் உருகுவார். நந்தனாரின் பக்திக்கு உருகிய இறைவன், தம்மை நேராகத் தரிசனம் செய்து நந்தனார் வணங்கும் பொருட்டு, அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு பணித்து, நந்தனாருக்கு அருள் செய்து அருளிய தலம் திருப்புன்கூர்.

நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவர். அதனால், ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அவருக்குத் தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி, நந்தனாரின் பக்தியை உலகுக்கு இறைவன் எடுத்துக்காட்டிய தலம் இதுவாகும். எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால், நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும், இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம், நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்

கோவில் அமைப்பு

மூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம், ஒரு 5 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான திறந்த முற்றவெளி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், தலமரமும், பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய நந்தியையும் (சற்று விலகியுள்ளது) கடந்து சென்றால், உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால், உள்பிராகாரத்தில் இடதுபுறம் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் இருக்கும் சந்நிதியைக் காணலாம். அதையடுத்து, சுந்தரவிநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்துள்ள சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் இத்தலத்துக்குரிய தனிச்சிறப்பு பெற்ற சந்நிதியாக விளங்குகிறது. அடுத்து, சூரியனும் அக்னியும் வழிபட்ட லிங்கங்கள், ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. பிரம்மதேவனுக்காக, பஞ்ச முகங்களுடன் அமைந்துள்ள பஞ்சலிங்க மேடை மிகவும் சிறப்பான சந்நிதியாகும்.

நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால், நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புனுகுச் சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.

பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர். இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம், அம்பாள் சௌந்தரநாயகியின் சந்நிதி தனிக்கோயிலாக வலம் வரும் வகையில், ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது

சுந்தரர் பதிகம்

ஒருமுறை, சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்துக்கு வருகை புரிந்தனர். அச்சமயம், திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம், 12 வேலி நிலம் ஆலயத்துக்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற, அரசனும் சம்மதித்தான். அதன்படி, சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று, இந்த்த் திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.

இந்த வரலாற்றை சுந்தரர், அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

வையகம் முற்றும் மாமழை மறந்து

வயலில் நீர்இலை மாநிலம் தருவோம்

உய்யக் கொள்கமற் றெங்களை என்ன

ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டு அருளும்

செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்

செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.

சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது, அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்த பின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்போது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என் றேவிய பின்னை

ஒருவன் நீகரி காடரங் காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

மணிமு ழாமுழக் கவருள் செய்த

தேவ தேவநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. சுந்தரர் பாடிய இத்தல பதிகத்தில் கூறியபடி, நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து, தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணி முழக்குவதைக் காணலாம்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

]]>
சிவலோகநாதர், திருபுன்கூர், சௌந்தரநாயகி, சொக்கநாயகி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/02/ஆயுள்-பெருக-பூர்வ-ஜன்ம-பாவம்-விலக-சிவலோகநாதர்-கோவில்-திருப்புன்கூர்-3030778.html
3029402 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் தீவினைகள் நீங்கி, துன்பமும் துயரமும் இல்லாமல் இருக்க துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர் என்.எஸ். நாராயணசாமி Monday, October 29, 2018 11:30 AM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 40-வது தலமாக போற்றப்படுவது திருவிளநகர். இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர நமது தீவினைகள் அகலும், துன்பமும், துயரமும் நம்மை வந்தடையாது.

இறைவன் பெயர்: துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்

இறைவி பெயர்: வேயுறுதோளியம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - செம்பொனார்கோவில் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவிலின் தெற்கு நுழைவாயில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில்

திருவிளநகர்

மயிலாடுதுறை வட்டம்

நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 305.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தருமை ஆதீன அருளாளுகைக்கு உட்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்த சோழர் காலத்திய ஆலயம் இது. தெற்கில் ஒரு நுழைவாயிலுடனும் கிழக்கில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்கோவில் 2 பிராகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிராகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மடபமும் இருக்கின்றன. இரண்டாவது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார்.

மூலவர் உச்சிரவனேஸ்வரர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவன் கருவறை விமானம் அழகிய சுதை சிற்பங்கள் நிறைந்து இருப்பதைக் காணலாம். இறைவன் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் துர்க்கை கண்டு ரசிக்கத்தக்கது. கருவறை மேற்கு கோஷ்டத்தில் காணப்படும் திருமால் சிற்பமும் கலையழகுடன் காட்சி அளிக்கிறது. இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவகிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

சம்பந்தர் ஒருமுறை இத்தலத்துக்கு விஜயம் செய்ய வந்தபோது, காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க, வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாக மறைந்துவிட்டதைக் கண்டார். இறைவனே வேடனாக வந்து துறை காட்டியதால் அவர் துறைகாட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள்தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் காவிரி ஆற்றைக் கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன், தன்னைப் பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான்.

தலையளவு வெள்ளம் வந்துவிட்டபோதிலும், தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்று கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள்புரிந்து, காவிரி ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் துறைகாட்டும் வள்ளல் ஆனார்.

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்

குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி

நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்

மிளிரிளம்பொறி அரவினார் மேயது விளநகரதே.

 

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்

டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்

புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய

மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

 

வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்

தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட

காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்

மீளியேறுகந் தேறினார் மேயது விளநகரதே.

 

கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்

நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்

மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்

மேல்விளங்குவெண் பிறையினார் மேயது விளநகரதே.

 

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்

துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்

சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்

மின்னுபொன்புரி நூலினார் மேயது விளநகரதே.

 

தேவரும்அமரர்களும் திசைகள்மேலுள தெய்வமும்

யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்

மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்

மேவரும்பொரு ளாயினார் மேயது விளநகரதே.

 

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்

கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்

மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்

விற்றரும்மணி மிடறினார் மேயது விளநகரதே.

 

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்

அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்

விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்

மிடறரும்படை மழுவினார் மேயது விளநகரதே.

 

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்

பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்

மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்

மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயது விளநகரதே.

 

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்

உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்

உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்

உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.

 

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய

நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன் சீர்

இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார் வினை நீங்கிப்போய்த்

துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.

சிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்தின் பாடல்களைக் தினமும் பாடி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள்; அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார். துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால், பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி முருக.இரமேஷ்குமார் ஓதுவார்

 

]]>
திருவிளநகர், துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர், வேயுறுதோளியம்மை https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/oct/29/தீவினைகள்-நீங்கி-துன்பமும்-துயரமும்-இல்லாமல்-இருக்க-துறைகாட்டும்-வள்ளலார்-கோவில்-திருவிளநகர்-3029402.html
3021602 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் தீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி என்.எஸ். நாராயணசாமி Wednesday, October 17, 2018 03:56 PM +0530  

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 126-வது தலமாக இருப்பது அகத்தியான்பள்ளி. இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமை வாய்ந்தது.

இறைவன் பெயர்: அகத்தீஸ்வரர்

இறைவி பெயர்: பாகம்பிரியாள், மங்கைநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்

அகத்தியான்பள்ளி

அகத்தியான்பள்ளி அஞ்சல்

வழி வேதாரண்யம், வேதாரண்யம் வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் – 614810.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி - சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி இறைவன் பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் - பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.

சிவபெருமான், அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். இதையடுத்து, அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்துவந்தார். அப்போது, தான் கொடுத்த வாக்கின்படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கு இத்தலத்தில் காட்டி அருள்புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

கோவில் அமைப்பு

மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு ஒரு தோரண வாயிலும், அதையடுத்து ஒரு மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் - பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.

இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சந்நிதி மேற்கு நோக்கியும் இருப்பதை, திருமணத்தில் மாலை மாற்றும் கோலம் என்று கூறுவார்கள். அத்தகைய அமைப்பில் இறைவனும் இறைவியும் இருப்பதால், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தடைபெற்ற திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து, குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப்பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையைப் பார்த்துள்ளன. இத்தல எமதர்மன் தனது நீண்ட காலம் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, ஜீவன் முக்தி பெற்றுள்ளான். எமவாதனையில் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் அதிலிருந்து விமோசனம் பெறலாம்.

இவ்வாலத்தின் விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்கில் உள்ள அகத்தியதீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் (அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்

1. வாடிய வெண்தலை மாலை சூடி மயங்கிருள்

நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி

ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்

பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.

அகத்தியான் பள்ளி இறைவனை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப்

பாவம் இல்லை.என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

2. துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்

மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர்

அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை

உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

அகத்தியான்பள்ளி இறைவனை நினையும் மனம் உடையவர்களின்

வினைகள் நீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

3. உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்

கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்

அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே.

 

4. காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்

பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை

ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே.

 

5. போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

 

6. தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்

எரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை

அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

புரிந்ததுவும் உமையாள் ஓர் பாகம் புனைதலே.

 

7. ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்

சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்

ஆதியெங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை

நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

அகத்தியான் பள்ளி இறைவனை முறையாகத் தொழுபவர் வினைகள்

நீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

8. தக்கன் வேள்வியை திருந்தார் புரம்

ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்

அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.

 

9. சிரமும் நல்ல மதமத்தமும் திகழ் கொன்றையும்

அரவும் மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்

பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை

பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.

அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரம்மாவும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறி பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

10. செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி

புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி

அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்

சிந்திமின் நும்வினை ஆனவை சிதைந்து ஓடுமே

அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து

ஓடும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

11. ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்

ஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்

சூலம் நல்ல படையான் அடிதொழுது ஏத்திய

மாலை வல்லார் அவர் தங்கள் மேல்வினை மாயுமே.

உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன், சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும் என்று தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் கூறுகிறார்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருப்பரங்குன்றம். இரா.குமரகுருபரன் ஓதுவார்

 

 

]]>
அகத்தீஸ்வரர், பாகம்பிரியாள், மங்கைநாயகி, அகத்தியான்பள்ளி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/oct/19/தீவினைகள்-நீங்க-திருமணத்-தடை-விலக-அகத்தீசுவரர்-கோவில்-அகத்தியான்பள்ளி-3021602.html
3017650 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 2) என்.எஸ். நாராயணசாமி Wednesday, October 10, 2018 04:09 PM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக இருப்பது திருவொற்றியூர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்திரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவொற்றியூர் ஆலயத்தின் சிறப்புகள்

சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிரந்தபுரி, பூலோக சிவலோகம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருவொற்றியூர் சிவஸ்தலம், எளிதில் முக்தி தரும் தலமாகும். திருவொற்றியூர் செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்தாலே எம பயம் நீங்கும். தலத்தின் எல்லையை மிதித்தாலே துன்பம் நீங்கும். இத்தலத்தில் இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவபதம் கிடைக்கும். அன்னதானம் செய்தால் இந்திரபதம் கிட்டும் என்று இத்தலத்தின் தலபுராணம் விவரிக்கிறது. இத்தலத்தில் உறையும் ஆதிபுரிஸ்வரர், வடிவாம்பிகை, ஆடும் தியாகப் பெருமான் ஆகிய கடவுளர்களை வழிபடும் அடியார்களுக்கு நல்வாழ்வு கிட்டும்.

அகத்தியர் கண்ட திருமணக் காட்சி

இமவான் மகள் பார்வதியை சிவபெருமான் மணக்கும்போது, வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயரத்தில் செல்லாமல் இருக்க அகத்தியரை தென்னகம் அனுப்பினார் இறைவன். சிவ-பார்வதி திருமணத்தை தன்னால் காண முடியாமல் போகுமே என்று கவலைப்பட்ட அகத்தியரிடம், அவர் விரும்பும் இடத்தில் எல்லாம் தனது திருமணக் காட்சியைக் காணலாம் என்று அருள் புரிந்தார். அகத்தியர் திருவொற்றியூர் தலம் வந்தபோது, இங்கு கல்யாண சுந்தரர் ஆக காட்சி கொடுத்தார். இத்தலத்தில் கல்யாண சுந்தரருக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி

ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கருவறைப் பிராகாரம் சுற்றி வரும்போது, வடக்குச் சுற்றில் இத்தலத்துக்குப் பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிராகாரத்தை அடையலாம். கவிச் சக்கரவர்த்தி கம்பர், வட்டப்பாறை அம்மனை தினமும் பூஜித்து வழிபட்டு வந்தார்.

கி.பி. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் குலோத்துங்கச் சோழன், கம்பரை தமிழில் ராமாயணம் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். கம்பர் பல கலைகளையும் பயின்ற சதுரானை பண்டிதர் என்பவரிடம் பகல் முழுவதும் வால்மீகி ராமயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவில் தமிழில் எழுதுவார். எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்கிவிட்டு எழுதத் தொடங்குவார். அவர் எழுதுவதற்கு உதவியாக, சாதாரணப் பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.

ரத்தத்தில் விளக்கேற்றிய கலியநாயனார்

63 நாயன்மார்களில் ஒருவரான கலியநாயனார், திருவொற்றியூரில் செல்வச் செழிப்புடன் சொக்கர் குலத்தில் பிறந்தவர். திருவொற்றியூர் இறைவனுக்கு கோவிலில் அன்றாடம் திருவிளக்கு ஏற்றும் திருத்தொண்டினை செய்துவந்தார். இவரின் துருத்தொண்டினையும், பக்தியையும் உலகறியச் செய்ய எண்ணிய இறைவன், இவரின் செல்வம் யாவும் இழக்கச் செய்தார். செல்வம் இழந்தும் தனது விளக்கேற்றும் தொண்டு நின்றுவிடாமல் இருக்க, கடன் வாங்கியும் தன் வீட்டை விற்றும், பிறகு கூலி வேலை செய்தும் பாடுபட்டார்.

வறுமையில் வாடிய கலியநாயனார், ஒருநாள் எண்ணெய் வாங்க பணம் இன்றி அவதிப்பட்டார். எண்ணெய் ஊற்றி திருவிளக்கு ஏற்ற முடியாத நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதி, கத்தியால் தன் உடலை வெட்டிக்கொண்டார். இறுதியாக தன் ரத்தத்தை ஊற்றியாவது விளக்கேற்றலாம் என்று எண்ணி, தன் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தைக் கொண்டு விளக்கேற்ற முயற்சி செய்தார். கலியநாயனாரின் உண்மையான பக்தியைக் கண்ட திருவொற்றியூர் இறைவன் அவர் முன் தோன்றி அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

திருவொற்றியூரில் முக்தி பெற்ற பட்டித்தார்

18 சித்தர்களில் ஒருவராக்க் கருதப்படும் பட்டினத்தார், சிவபெருமானைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்று தன்னுடைய செல்வம், மனைவி, உறவு அனைத்தையும் விட்டுவிட்டு கோவணத்துடன் பல ஊர்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி பாடல்களைப் பாடி வந்தார். திருவொற்றியூர் இறைவனைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் சுவையே இல்லாத பேய்க்கரும்பு இனித்ததை அறிந்த பட்டினத்தார், தான் முக்தி அடைய இவ்வூரே சிறந்த இடமெனக் கருதி கடற்கரை ஓரத்தில் தங்கினார். ஒருமுறை மீனவச் சிறுவர்களிடம் தன்னை மண்ணில் புதைக்குமாறு செய்து பின்பு வெளிவராமல் சிவலிங்கமாக மாறி முக்தி அடைந்தார்.

ராமலிங்க அடிகளாருக்கு அன்னமிட்ட வடிவாம்பிகை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளார், பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை படைத்திருந்திருந்தவர். சிறு வயதில் இருந்தே திருவொற்றியூர் இறைவனை வணங்கி, இக்கோவிலின் தலவிருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றவர். நாள்தோறும் வடிவுடை அம்மனைத் தரிசித்தபின் இரவு வீடு திரும்புவார். அவரின் அண்ணி உணவு பரிமாறுவார். ஒருமுறை, வடிவுடை அம்மனைத் தரிசித்துவிட்டு வீடு திரும்ப நேரமாகிவிட்டதால், அண்ணி வீட்டின் உள்புறம் பூட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள். தூங்கும் அண்ணியை எழுப்ப மனமில்லாமல் இரவில் பசியுடன் திண்ணையில் படுத்துக்கொள்ள, அவரின் பசியைப் போக்க நினைத்த வடிவுடையம்மன், அவரின் அண்ணி உருவில் வந்து உணவு பரிமாறினார். இவ்வாறு இத்தலத்து வடிவாம்பிகையின் அருள் பெற்ற அடிகளார், இத்தலத்து அம்பிகையைப் போற்றி ஶ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்று 101 பாடல்களைப் பாடியுள்ளார்.

*

இத்தலத்து இறைவன் புற்று மண்ணால் ஆனவர் ஆதலால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. படம்பக்கநாதர் மேல் எப்போதும் கவசம் சாற்றியே இருக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று, திருவொற்றியூர் இறைவனுக்குப் பூஜை செய்ய தேவர்கள் வருவதாக ஐதீகம். அதனால், ஆண்டுதோறும் கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் மாலை 6 மணிக்கு மேல் படம்பக்கநாதரின் மேல் அணிவிக்கப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பூஜைகள் மூன்று நாள்கள் நடைபெறும்.

இப்பூஜையின்போது இறைவனுக்கு ஜவ்வாது, புனுகு, சாம்பிராணி தைலம் ஆகியவை சாற்றப்பட்டு அவை பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தத் தைலத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால், சகலவித தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த 2018-ம் வருடம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி (22.11.2018) அன்று அல்லது அடுத்த 2 நாள்களில் திருவொற்றியூர் சென்று படம்பக்கநாதரையும் வடிவாம்பிகையையும் தரிசித்துப் பலன் பெறுங்கள்.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளில் மேலூருக்கு காலை வேளையில் சென்று இச்சா சக்தியான திருவுடையம்மனையும், பகல் வேளையில் திருவொற்றியூரில் உள்ள ஞான சக்தியான வடிவுடையம்மனையும், மாலை வேளையில் திருமுல்லைவாயில் சென்று கிரியா சக்தியான கொடியிடையம்மனையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் தரிசனம் செய்வோர், இப்பிறவிலேயே சகல நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர், இத்தலத்து இறைவி வடிவாம்பிகை மீது பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிராகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிராகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடையம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி ஆகியவை கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி ஆகியவை இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

சிறப்புகள் பல உள்ள திருவொற்றியூர் ஆலயத்துக்கு நீங்கள் எப்போது செல்லப்போகிறீர்கள்?

சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் அருளிய பதிகங்கள் - பாடியவர் சொ.சிவகுமார், செண்பகவிநாயகர் ஆலயம் - சிங்கப்பூர்

 

 

]]>
திருவொற்றியூர், ஆதிபுரீஸ்வரர் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/oct/12/அனைத்து-நட்சத்திரக்காரர்களும்-வழிபட-வேண்டிய-தலம்---ஆதிபுரீஸ்வரர்-கோவில்-திருவொற்றியூர்-பகுதி-2-3017650.html
3013143 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 1) என்.எஸ். நாராயணசாமி Friday, October 5, 2018 03:48 PM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக இருப்பது திருவொற்றியூர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்திரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிலலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

இறைவன் பெயர்: ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், தியாகராஜர்

இறைவி பெயர்: வடிவுடைஅம்மன், திரிபுரசுந்தரி

இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம். இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்து, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் இரண்டு என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

இத்திருத்தலம், சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்குச் செல்கின்றன. புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்,

திருவொற்றியூர்,

சென்னை600 019.

இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாள்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் தல வரலாறு

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்துக்குப் பின் புதிய உலகத்தைப் படைக்க பிரம்மா கேட்டபோது, சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து புதிய உலகைப் படைக்க பிரம்மாவுக்கு அருள் புரிந்ததால், இத்தலம் ஒற்றுயூர் எனப் பெயர் பெற்றது. அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. மற்றொரு காரணமாக, இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக்கொண்டதால் (ஒற்றிக்கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் எனவும் அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் சூரிய குலத்தைச் சார்ந்த மாந்தாதா என்ற மன்னன், சிவஸ்தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறை விதித்து சுற்றோலை அனுப்பினான். அப்போது, அவனுக்கும் ஓலை எழுதிய நாயகத்துக்கும் தெரியாதபடி வரி பிரிந்து ‘இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க’ என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததைப் படித்து வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயரிட்டு மாந்தாதா மன்னன் இறைவனை வழிபட்டான்.

பிரளயத்துக்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால், இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று பூஜித்த வாசுகி என்ற பாம்புக்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். அப்பாம்பின் வடிவத்தை இறைவர் திருமேனியில் இன்றும் காணலாம்.

புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் மூன்று நாள்களைத் தவிர மற்ற நாள்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாள்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்திவிடுவர். இந்த 3 நாள்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.

27 நட்சத்திரங்கள் இங்கு வந்து, நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்திபெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரரகள் தாங்கள் பிறந்த நாளில் அந்த நட்சத்திர லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.

சுந்தரர் திருமணம்

சுந்தரர், திருவொற்றியூர் இறைவனைத் தரிசிக்க வந்தபோது, இறைவனுக்குப் பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்துவந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்துகொள்ள விரும்பி, இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்துகொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கெனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்துகொண்டிருந்தார். அதனால், சுந்தரர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர், இறைவனிடம், ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரியமாட்டேன் என்ற சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும், சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்துகொள்ளும்படியும் கூறினார்.

இந்த விவரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார். எனவே, திருமணம் நடக்கும் சமயம், சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து ‘என்றும் உன்னைப் பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டார். இந்த மகிழ மரம் வடக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ளது. இந்தச் சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின்போது ‘மகிழடி சேவை’ விழாவாக நடைபெறுகிறது.

இவ்வாலயத்தின் மற்ற சிறப்புகளைப் பற்றியும் ஆலயத்தின் அமைப்பைப் பற்றியும் அடுத்த பகுதியில் காணலாம்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மீது இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. சங்கிலி நாச்சியாரிடம்  உன்னை விட்டுப் பிரியேன் என்று சத்தியம் செய்து திருமணம் செய்துகொண்ட சுந்தரர், சிறிது காலத்துக்குப் பிறகு திருவாரூர் தியாகேசர் நினைவு வர திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டார். சத்தியத்தை மீறியதால், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் அவரது இரு கண்களிலும் பார்வையை இழந்தார். கண்களில் பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்து இறைவனை நோக்கி இப்பதிகத்தைப் பாடி தனது தவறை மன்னித்து ஆட்கொள்ளும்படி வேண்டுகிறார்.

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்

அதுவும் நான்படற் பாலதொன் றானால்

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்

வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்

மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்

காதற் சங்கிலி காரண மாக

எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ

என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்

பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்

பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை

ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே

கட்டி யேபலர்க் குங்களை கண்ணே

அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே

அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்

சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல

வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி

ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால்

யாவ ராகில்என் அன்புடை யார்கள்

தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்

சொல்லு வாரையல் லாதன சொல்லாய்

மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்

கொள்வ தேகணக் குவ்வழக் காகில்

ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்

உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்

சுழித்த லைப்பட்ட நீரது போலச்

சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்

கழித்த லைப்பட்ட நாயது போல

ஒருவன் கோல்பற்றிக் கறகற விழுக்கை

ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு

வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்

தேனை ஆடிய கொன்றையி னாய்உன்

சீல முங்குண முஞ்சிந்தி யாதே

நானு மித்தனை வேண்டுவ தடியேன்

உயிரொ டுந்நர கத்தழுந் தாமை

ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

ற்றுத் தேவரை நினைந்துனை மறவே

னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன்

பெற்றி ருந்து பெறாதொழி கின்ற

பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன்

முற்று நீயெனை முனிந்திட அடியேன்

கடவ தென்னுனை நான்மற வேனேல்

உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

கூடினாய் மலை மங்கையை நினையாய்

கங்கை யாயிர முகமுடை யாளைச்

சூடினாய் என்று சொல்லிய புக்கால்

தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே

வாடி நீயிருந் தென்செய்தி மனமே

வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி

ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டே

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

மகத்திற் புகது ஓர் சனி எனக்கு ஆனாய்

மைந்தனே மணி யே மணவாளா

அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்

அழையல் போ குருடா எனத் தரியேன்

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்

முக்கணா முறையோ மறை ஓதீ

உகைக்குந் தண்கடல் ஓதம் வந் உலவும்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

 

ஓதம் வந்து உலவும் கரை தன்மேல்

ஒற்றியூர் உறை செல்வனை நாளும்

ஞாலந்தான் பரவப்படுகின்ற

நான்மறை அங்கம் ஓதிய நாவன்

சீலம் தான் பெரிதும் மிக வல்ல

சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த

பாடல் பத்து இவை வல்லவர் தாம்போய்ப்

பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் குமாரவயலூர் பாலசந்திரன்

 

]]>
திருவொற்றியூர், ஆதிபுரீஸ்வரர் , தியாகராஜர், வடிவுடைஅம்மன், திரிபுரசுந்தரி, படம்பக்கநாதர் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/oct/05/அனைத்து-நட்சத்திரக்காரர்களும்-வழிபட-வேண்டிய-தலம்---ஆதிபுரீஸ்வரர்-கோவில்-திருவொற்றியூர்-பகுதி-1-3013143.html
3009072 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம் (சென்னை) என்.எஸ். நாராயணசாமி Thursday, September 27, 2018 03:21 PM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருவலிதாயம். தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருவலிதாயம் என்ற பெயருடன் விளங்கிய இத்தலம் இன்றைய நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் பெயர்: வலிதாயநாதர், வல்லீஸ்வரர்

இறைவி பெயர்: ஜகதாம்பாள், தாயம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பாடிக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. பாடியிலுள்ள லூகாஸ் டிவிஎஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்

ஆலய முகவரி

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

பாடி,

சென்னை 600 050.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை = ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பரத்வாஜ முனிவர், கருங்குருவியாக (வலியன்) வந்து இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும், இறைவன் வலிதாயநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிராகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவம் இருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.

வெளிப் பிராகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிராகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிராகாரத்தில், சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னம் அடைய, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னம் ஆன மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

உள் பிராகாரத்தில் சூரியன், நான்கு கரங்களுடன் உள்ள பாலசுப்ரமணியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை ராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிராகாரத்தில் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

பாரத்வாஜ தீர்த்தம்

ஒரு சமயம் பரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு, அவரால் உருவாக்கப்பட்ட பரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால், இத்தலம் பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்துகொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்துகொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சம்பந்தர் வலிதாய இறைவன் மேல் பாடிய தனது இப்பத்துப் பாடலையும் மனத்துள் கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்க போகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் இத்தல இறைவனை வழிபடுவதால் துன்பங்களோ நோய்களோ வந்தடையாது என்றும் வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையாது என்றும, வினைகள் தீரும், நலங்கள் உண்டாகும் என்றும், இத்தல இறைவன் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம் என்றும், திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் என்றும் பலவாறு இத்தல இறைவனின் பெருமைகளை பாடியுள்ளார்.

1. பத்தரொடு பலரும் பொலியம் மலர் அங்கைப்புனல் தூவி

ஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர்சென்னி

மத்தம்வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்

சித்தம்வைத்த அடியார் அவர்மேல் அடை யாமற்று இடர்நோயே.

 

2. படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆகக் கனலேந்திக்

கடை இலங்கு மனையில் பலிகொண்டு உணும் கள்வன் உறை கோயில்

மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்

அடையநின்ற அடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே.

 

3. ஐயன் நொய்யன் அணியன் பிணிஇல்லவர் என்றும் தொழுது ஏத்தச்

செய்யன் வெய்ய படையேந்த வல்லான் திருமாதோடு உறைகோயில்

வையம் வந்து பணியப் பிணிதீர்த்து உயர்கின்ற வலிதாயம்

உய்யும் வண்ணம் நினைமின் நினைந்தால் வினை தீரும் நலமாமே.

 

4. ஒற்றை ஏறு அது உடையான் நடமாடி ஓர் பூதப்படை சூழப்

புற்றின் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்

பற்றி வாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே.

 

5. புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய

அந்தி அன்னது ஒரு பேரொளியான் அமர் கோயில் அயல் எங்கும்

மந்தி வந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயம்

சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

 

6. ஊன் இயன்ற தலையில் பலிகொண்டு உலகத்து உள்ளவரெ ஏத்தக்

கான் இயன்ற கரியின் உரிபோர்த்து உழல் கள்வன் சடை தன்மேல்

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலிதாயம்

தேன் இயன்ற நறுமாமலர் கொண்டு நின்று ஏத்தத் தெளிவாமே.

 

7. கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டிப்

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறைகோயில்

மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மைக் கதியாமே.

 

8. கடலின் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி

அடல் இலங்கை அரையன் வலிசெற்று அருள் அம்மான் அமர் கோயில்

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத்துயர் போமே.

 

9. பெரியமேரு வரையே சிலையா மலைவுற்றார் எயில் மூன்றும்

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறி வொண்ணா வடிவு ஆகும்

எரியதாகி உற ஓங்கியவன் வலிதாயம் தொழுது ஏத்த

உரியராக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

 

10. ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி

ஏசி ஈம் இலராய் மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்

பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

 

11. வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து

அண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலைத் தமிழாகக்

கண்டல் வைகுகடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்துங்

கொண்டு வைகி இசை பாடவல்லார் குளிர் வானத்து உயர்வாரே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருமுறை செல்வர் பா.சிவப்பிரகாசம் ஓதுவார், மலேசியா

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/28/திருமணத்-தடை-குரு-தோஷம்-போக்கும்-வலிதாயநாதர்-கோவில்-திருவலிதாயம்-சென்னை-3009072.html
3003569 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க சிஷ்டகுருநாதர் கோவில், திருத்துறையூர் என்.எஸ். நாராயணசாமி Thursday, September 20, 2018 05:44 PM +0530  

சிவன் குருவாக இருந்து அருளும் தலம் திருத்தளூர். சுந்தரருக்கு உபதேசம் செய்த இவர் சிஷ்டகுருநாதராக இங்கு வீற்றிருக்கிறார். இறைவனை வியாழனன்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். குழந்தை இல்லையே என்று வருந்துபவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டும்.

பாடல் பெற்ற நடுநாட்டு தலங்கள் வரிசையில் 15-வது தலமாக இருப்பது திருத்துறையூர். திருத்துறையூர் தற்போது வழக்கில் திருத்தளூர் என்று அழைக்கப்படுகிறது.

இறைவன் பெயர்: சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்

இறைவி பெயர்: பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி

இத்தலத்துக்கு சுந்தரர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் சென்று, கரும்பூர் சாலையில் திரும்பிச் சென்று திருத்துறையூரை அடையலாம். பண்ருட்டியில் இருந்து வடமேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்துக்கு நகரப் பேருந்து வசதி உண்டு. பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் NH45C சாலையில் கந்தாரகோட்டையை அடைந்து, அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் செல்லும் திருத்துறையூர் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம். இவ்வழியே சென்றால் சுமார் 11.5 கி.மீ தொலைவு. ஆனால் நல்ல சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்

திருத்துறையூர் அஞ்சல்

பண்ருட்டி வட்டம்

கடலூர் மாவட்டம் – 607 205.

இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மற்றும் அடுத்து ஒரு உள்வாயிலும் உள்ளது. உள்வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டி மண்டபத்தை அடைந்தால், இத்தலத்தின் இறைவன் சிஷ்டகுருநாதர் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக அருள்காட்சி தருகிறார். அம்பாள் வடக்கு நோக்கிய சந்நிதியில் அருள்காட்சி தருகிறாள். இவ்வாறு வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி காண்பது மிகவும் அரிது. உள்பிராகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

இதில், தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர், சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி, கோவிலுக்கு வெளியே உள்ளது. திருமணம், புத்திரதோஷம் உள்ளவர்கள் சிஷ்டகுருநாதருக்கும், தட்சிணாமூர்த்திக்கும் ஏழு வியாழக்கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, வில்வ அர்ச்சனை செய்கின்றனர். இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, ராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

கோவிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தேரடியில் உள்ள விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தியாவார். கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தில் குருபூஜை நடத்தப் பெறுகிறது. அருணந்தி சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள் ஆவார்.

சுந்தரர், திருவெண்ணெய்நல்லூரில் இருந்து இத்தலத்துக்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றி மறுகரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு, இறைவன் சுந்தரர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொண்டார்.

சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான தம்பதியைக் காணவில்லை. அப்போது நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார் என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவடிவில் எழுந்தருளி தவநெறி உபதேசம் செய்தார். எனவேதான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அருணகிரியார் இவரை, ‘குருநாதர்’ என்று திருப்புகழில் பாடியிருக்கிறார்.

இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. இங்கு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்விடத்தில்தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும், பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தலபுராணம் தெரிவிக்கிறது.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ‘உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன், வேறொன்றையும் வேண்டேன்’ என்று மனமுருகிப் பாடியுள்ளார். திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது தான் பாடிய இப்பதிகத்திலுள்ள பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார். பெண்ணையாற்றின் சிறப்பைப் பற்றியும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்

1. மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்

குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்

கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்

தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

2. மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி

முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்

பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்

அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

3. கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்

செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்

மந்தி பலமா நடமாடுந் துறையூர்

எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

4. அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்

சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்

விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

5. பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி

நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்

வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

6. மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி

மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்

சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

7. மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்

தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்

நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

8. கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்

செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்

ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

9. விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய

மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்

அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

10. மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்

ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்

பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்

தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

 

11. செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்

கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்

பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்

மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.

சுந்தரர் அருளிய பதிகம் - பழநீ க.வெங்கடேசன் ஓதுவார்

 

]]>
சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர், பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி, திருத்துறையூர் https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/21/திருமணத்-தடை-நீங்க-புத்திர-பாக்கியம்-கிடைக்க-சிஷ்டகுருநாதர்-கோவில்-திருத்துறையூர்-3003569.html
2998955 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் நமது பாவங்கள், தீவினைகளை அகற்றும் சௌந்தரேஸ்வரர் கோவில், திருநாரையூர் என்.எஸ். நாராயணசாமி Saturday, September 15, 2018 04:07 PM +0530  

விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம் உள்ள ஒரு சிவாலயத்தைப் பற்றி நாம் இதில் தெரிந்துகொள்ளப் போகிறோம். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர். இத்தல இறைவனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்களைப் பற்றி ஞானசம்பந்தர் தனது பதிகம் ஒன்றில் (2-ம் திருமுறை 86-வது பதிகம்) மிகவும் விவரமாகவும், தெளிவாகவும் குறிப்பிடுகிறார். இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால் நமது பாவங்கள், வினைகள் யாவும் தொலைந்து, வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படும்.

இறைவன் பெயர்: சௌந்தரேஸ்வரர்

இறைவி பெயர்: திரிபுரசுந்தரி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும் என மொத்தம் ஐந்து பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி - குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்

திருநாரையூர் அஞ்சல்,

காட்டுமன்னார்குடி வட்டம்,

கடலூர் மாவட்டம் 608 303.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ல வரலாறு

ஒருமுறை, கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையைக் கீழே போட்டான். அது, அங்கு தவம் செய்துகொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். கந்தர்வன் சாப விமோசனம் கேட்டு கதறி அழுதபோது, இத்தலத்தில் உள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கைத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் விமோசனம் பெறலாம் என்று கூறினார்.

அதன்படி, சாபம் அடைந்த நாரை தினமும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டுவந்து இங்கு இருந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் திருநாரையூர் எனப்பட்டது. ஒருநாள் சுவாமியை வழிபட நாரை வந்தபோது, இறைவனின் சோதனையால் புயலுடன் கடும் மழை பிடித்துக்கொண்டது. காற்றை எதிர்த்துப் பறந்ததில், அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது, வாயில் இருந்த கங்கை தீர்த்தத்தில் இருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு காருண்ய தீர்த்தம் என்று பெயர்.

இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர், இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

தலச் சிறப்பு

இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.

அனந்தேசர் என்ற பக்தர் இத்தல விநாயகரை தினமும் பூஜை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வது அவரது வழக்கம். வீட்டில் இருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி, அவரிடம் பிரசாதம் கேட்கும்போதெல்லாம், ‘விநாயகர் சாப்பிட்டுவிட்டார்’ என்று சொல்லிவிடுவார். ஒரு சமயம், அனந்தேசர் வெளியூர் செல்லவேண்டி இருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்யம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதைச் சாப்பிடுவார் என நினைத்துக் காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி நைவேத்யத்தை ஏற்றுக்கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்குக் காட்சி தந்து நைவேத்யத்தை எடுத்துக்கொண்டார். இப்படி, தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருளுபவராக இத்தல விநாயகர் வீற்றிருக்கிறார்.

திருமுறை காட்டிய தலம்

பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்குப் பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது).

மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, ஒரு புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்குபடுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும், திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். ‘திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்குப் பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்’ என்று தெய்வவாக்கு கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் எருக்கத்தம்புலியூர் தலத்திலுள்ள அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.

இவ்வாறு, திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்ததால், பொள்ளாப் பிள்ளையாருக்கு திருமுறை காட்டிய விநாயகர் என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். முழுமுதற் கடவுளான விநாயகரை அவரின் முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலன் தரும்.

கோவில் அமைப்பு

கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே, கிழக்கில் காருண்ய தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. அதைத் தொடர்ந்து 78 அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால், இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிராகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியும், வடமேற்கில் ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன. வடகிழக்கில் ஸ்ரீ பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன் சன்னதிக்கு வெளியே வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி விமானம் அர்த்தசந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் அமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சௌந்தரேஸ்வரருக்கு ஒருவர், பிராகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிராகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சி அளிக்கின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது.

சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஸ்ரீ நம்பியாண்டர் நம்பி முக்தி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. சம்பந்தர் தனது ‘உரையினில் வந்தபாவம் உணர்நோய்களும்’ என்று தொடங்கும் பதிகத்தில், இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும்; உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும்; தீவினையால் உலகில் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும்; உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும்; உலகில் எல்லோரும் கூடி மெள்ளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிந்து போகும்; இறக்கும் காலத்தில் உயிர்கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கைகூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று குறிப்பிடுகிறார். இதனால், தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெறலாம்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. உரையினில் வந்தபாவம் உணர் நோய்களும்

செயல்தீங்கு குற்ற முலகில்

வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்

மிகவேத்தி நித்தம் நினைமின்

வரைசிலை யாகவன்று மதில் மூன்று எரித்து

வளர் கங்குல் நங்கை வெருவ

திரையொலி நஞம் உண்ட சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

2. ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி யுற்ற

பிணிநோய் ஒருங்கும் உயரும்

வான் அடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி

விதியான வேத விகிர்தன்

கான் இடை ஆடிபூதப்படையான் இயங்கு

விடையான் இலங்கு முடிமேல்

தேன் அடை வண்டுபாடும் சடையண்ணல் நண்ணு

திருநாரையூர் கை தொழவே.

 

3. ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்

துயருற்ற தீங்கு விரவிப்

பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை

ஒழிவுற்ற வண்ண மகலும்

போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று

புகழ்வான் உளோர்கள் புணரும்

தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த

திருநாரையூர் கை தொழவே.

 

4. தீ உறவு ஆயஆக்கை அதுபற்றி வாழும்

வினைசெற்ற வுற்ற உலகின்

தாய் உறு தன்மையாய தலைவன் தன் நாமம்

நிலையாக நின்று மருவும்

பேய் உறவு ஆயகானில் நடமாடி கோல

விடம் உண்ட கண்டன் முடிமேல்

தேய்பிறை வைத்துமுகந்த சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

5. வசை அபராதம் ஆய உவரோத நீங்கும்

தவமாய தன்மை வரும்வான்

மிசையவர் ஆதியாய திருமார்பு இலங்கு

விரிநூலர் விண்ணும் நிலனும்

இசையவர் ஆசிசொல்ல இமையோர்கள் ஏத்தி

அமையாத காதலொடு சேர்

திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

6. உறைவளர் ஊன்நிலாய உயிர்நிற்கும் வண்ணம்

உணர்வாக்கும் உண்மை உலகில்

குறைவுளவாகி நின்ற குறைதீர்க்கு நெஞ்சில்

நிறைவாற்று நேசம் வளரும்

மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்

அரவார்த்த அண்ணல் கழலே

திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற

திருநாரையூர் கை தொழவே.

 

7. தனம்வரும் நன்மையாகும் தகுதிக்கு உழந்து

வருதிக் குழன்ற உடலின்

இனம்வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று

நினைவு ஒன்று சிந்தை பெருகும்

முனமொரு காலம் மூன்று புரம் வெந்து மங்கச்

சரமுன் றெரிந்த அவுணர்

சினம் ஒருகாலழித்த சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

8. உரு வரைகின்ற நாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்

நனியஞ்சும் ஆதல் உறநீர்

மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்

அழிபா டிலாத கடலின்

அருவரை சூழ் இலங்கை அரையன்றன் வீரம்

அழியத் தடக்கை முடிகள்

திருவிரல் வைத்து உகந்த சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

9. வேறுஉயர் வாழ்வுதன்மை வினை துக்கம் மிக்க

பகை தீர்க்கும் மேய வுடலில்

தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற

கரவைக் கரந்து திகழுஞ்

சேறுஉயர் பூவின்மேய பெருமானும் மற்றைத்

திருமாலும் நேட எரியாய்ச்

சீறிய செம்மையாகும் சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

10. மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம்

வெளியாக்கும் உன்னி உணரும்

படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்

ஒலிபாடி ஆடி பெருமை

உடையினை விட்டு உளோரும் உடல்போர்த்து உளோரும்

உரைமாயும் வண்ணம் அழியச்

செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழவே.

 

11. எரியொரு வண்ணம் ஆய உருவானை எந்தை

பெருமானை உள்கி நினையார்

திரிபுரம் அமன்றுசெற்ற சிவன்மேய செல்வத்

திருநாரையூர் கை தொழுவான்

பொருபுனல் சூழ்ந்த காழி மறைஞானபந்தன்

உரைமாலை பத்தும் மொழிவார்

திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்க

துளதென்பர் செம்மை யினரே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி முருக.இரமேஷ்குமார் ஓதுவார்

 

 

]]>
திருநாரையூர், சௌந்தரேஸ்வரர், திரிபுரசுந்தரி, காட்டுமன்னார்குடி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/14/நமது-பாவங்கள்-தீவினைகளை-அகற்றும்-சௌந்தரேஸ்வரர்-கோவில்-திருநாரையூர்-2998955.html
2995423 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பித்ருதோஷ நிவர்த்தி தலம் அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை என்.எஸ். நாராயணசாமி Friday, September 7, 2018 11:18 AM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 127-வது தலமாக இருப்பது கோடியக்கரை. தற்காலத்தில் இத்தலம் குழகர்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர் - அமிர்தகடேசுவரர்

இறைவி பெயர் - மையார்தடங்கன்னி, அஞ்சனாட்சி

எப்படிப் போவது?

வேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி வழியாக தெற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்துக்குச் செல்லலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்
கோடியக்கரை அஞ்சல்,
வழி வேதாரண்யம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் - 614 821.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் செல்லும்போது, அவரிடமிருந்து அமுதக் கலசத்தைக் கைப்பற்ற அசுரர்கள் முனைந்தனர். வாயுதேவன், முருகனை மனத்தால் வணங்கி அமுதக் கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக்கொண்டார்.

அமுதக் கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிராகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம், ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால், இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.

இவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுதக் கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவற்றை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுதக் கலசத்துடன் உள்ள முருகப்பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்கப்படுகிறது.

இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன்மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.

இறைவி மையார்தடங்கன்னி சந்நிதி, முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்புக்காக காடுகிழாள் என்ற அம்பிகையின் சந்நிதியும் முன்மண்டபத்தில் உள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அமிர்த தீர்த்தமும், கோடியக்கரை கடலும் உள்ளன. அமிர்த தீர்த்தம் ஆலயத்தினுள் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மற்றொரு ஆலய தீர்த்தம் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால், சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆடி அமாவாசையிலும், தை அமாவாசையிலும் இங்குள்ள கடலில் நீராடி அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்துக்கு வரும் வழியில் ராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் ராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்துக்கு வந்த சுந்தரர், கடலருகே கோவிலில் இறைவன் தனித்து இருப்பதைப் பார்தது உள்ளம் வருந்தி பாடினார்.

கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. 

முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே. 

மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 

காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. 

மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. 

அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. 

பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 

ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய கோடிக் குழகா
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 

நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே. 

பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே. 

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

]]>
அஞ்சனாட்சி, அமிர்தகடேசுவரர், மையார்தடங்கன்னி, பித்ருதோஷ நிவர்த்தி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/07/பித்ருதோஷ-நிவர்த்தி-தலம்-அமிர்தகடேசுவரர்-கோவில்-கோடியக்கரை-2995423.html
2985436 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் பதஞ்சலி நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர் என்.எஸ். நாராயணசாமி Friday, August 24, 2018 02:42 PM +0530  

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 32-வது தலமாக இருப்பது திருக்கானாட்டுமுள்ளூர். இத்தலம் தற்போது கானாட்டம்புலியூர் என்று வழங்கப்படுகிறது. சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் பாதிப்பு ஏதேனும் இருப்பின், இத்தலம் வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டு பலன் பெறலாம். ராகு தோஷ பரிகாரத் தலமாகவும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சிறப்புமிக்க திருத்தலமாகவும் இது விளங்குகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: பதஞ்சலி ஈஸ்வரர்

இறைவி பெயர்: கோல்வளைக்கையம்மை, கானார்குழலிஅம்மை, அம்புஜாட்சி

எப்படிப் போவது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் ஓமாம்புலியூர் என்னும் பாடல் பெற்ற தலத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதியின் வடகரையில் இத்தலம் இருக்கிறது. காட்டுமன்னார்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள இத்தலத்துக்கு கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்துசென்று இக்கோவிலை அடையலாம். 

ஆலய முகவரி

அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்
கானாட்டம்புலியூர், முட்டம் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் - 608 306.

இவ்வாலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்துக்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலதுபுறம் கோல்வளைக்கையம்மை என்றும் கானார்குழலிஅம்மை என்றும் அழைக்கப்படும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி என்ற பெயரும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வலதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்துகொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

முன்மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சந்நிதியை அடையலாம். சந்நிதி நுழைவாயில் இருபுறமும் விநாயகரும், பாலதண்டாயுதபாணியும் காடிசி அளிக்கின்றனர். மூலவர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை மூலவர் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவுக்கு நேர் எதிரே வள்ளி தெய்வானை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. 

கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம், ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. 

தல வரலாறு 

பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன்.

மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சியைக் காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்தலத்துக்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இத்தலத்து பதிகத்தில் கானாட்டுமுள்ளூர் தலத்தின் இயற்கை வளத்தையும், இயற்கை காட்சிகளையும் சுந்தரர் ஒவ்வொரு பாடலிலும் விவரிக்கிறார். தனது பதிகத்தின் பத்து பாடல்களையும் நாள்தோறும் பாடவல்லவர்கள் நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்களுக்கும் தலைவராக வாழ்ந்து பின்பு வானுலகம் சென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாடக்
காவிவாய் வண்டு பல பண்செய்யும் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே. 

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

சுந்தரர் அருளிய பதிகம் - 7/40 - பாடியவர் - இரா.குமரகுருபரன் ஓதுவார்

 

]]>
பதஞ்சலி நாதர் கோவில், சிம்ம ராசி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/aug/24/சிம்ம-ராசி-சிம்ம-லக்னத்தில்-பிறந்தவர்கள்-வழிபட-வேண்டிய-தலம்-பதஞ்சலி-நாதர்-கோவில்-திருக்கானாட்டுமுள-2985436.html
2921607 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலம் மதுவனேஸ்வரர் கோவில், நன்னிலம் என்.எஸ். நாராயணசாமி Thursday, May 17, 2018 02:31 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 71-வது தலமாக இருப்பது நன்னிலம். தேவர்களால் உருவாக்கப்பட்ட தேவ தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோர், தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழ்வார்கள். மேலும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபடுவோர் எல்லா செல்வங்களும் பெற்று இனிது வாழ்வர் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் எழுதிய பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்

இறைவி பெயர்: மதுவனநாயகி, பிரஹதீஸ்வரி
 

எப்படிப் போவது

கும்பகோணம் - நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில், அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்
நன்னிலம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் - 610 105.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில். 

முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் ராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிராகாரத்தை அடையலாம். நேர் எதிரில் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இந்தப் பிராகாரத்தை வலம் வரும்போது சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் இருப்பதைக் காணலாம். நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.

மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்ல வேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாக உள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர், சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.


தல வரலாறு 

துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால், இறைவன் மதுவனேஸ்வரர் என்றும் அம்மன் மதுவன நாயகி என்றும் பெயர் பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால், இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.

ஒரு சமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயு பகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன் பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும்போது, அந்தச் சிகரத்தின் சிறிய துளி இந்தத் தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.

1. தண்ணியல் வெம்மையி னான்றலை 
யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக் 
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை 
யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

2. வலங்கிளர் மாதவஞ் செய்மலை 
மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை 
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி 
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

3. கச்சிய னின்கருப் பூர்விருப் 
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல 
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை 
தீர்புன லாற்றொழுவார்
நச்சிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

4. பாடிய நான்மறை யான்படு 
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி 
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல 
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

5. பிலந்தரு வாயினொ டுபெரி 
தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள 
வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு 
மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

6. வெண்பொடி மேனியி னான்கரு 
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர 
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின் 
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

7. தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை 
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட் 
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர் 
மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

8. குளிர்தரு திங்கள்கங் கைகுர 
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை 
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட 
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

9. கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் 
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன 
னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு 
சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

10. கருவரை போலரக் கன்கயி 
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள் 
செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை 
வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே. 

11.கோடுயர் வெங்களிற் றுத்திகழ் 
கோச்செங்கணான் செய் கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை 
யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகு 
வார் பரலோகத்துள்ளே. 

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார் 

 

]]>
மதுவனேஸ்வரர் கோவில், பரிகாரத் தலம், மதுவனநாயகி https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/may/18/துன்பங்களில்-இருந்து-விடுபட-பரிகாரத்-தலம்-மதுவனேஸ்வரர்-கோவில்-நன்னிலம்-2921607.html
2817958 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் வயிற்று வலி, மற்ற பிணிகள் நீங்க சுந்தரேஸ்வரர் கோவில், திருக்கலிகாமூர் என்.எஸ். நாராயணசாமி Friday, December 1, 2017 12:00 AM +0530  

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருக்கலிகாமூர். இந்நாளில் இத்தலம் அன்னப்பன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வயிறு சம்பந்தப்பட நோய்கள், மற்ற பிணிகள் யாவும் நீங்க வழிபட வேண்டிய தலம் இது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: சுந்தரேஸ்வரர்

இறைவி பெயர்: அழகம்மை

எப்படிப் போவது

சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன்பேட்டை வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே ஊர் உள்ளது. ஊரின் நடுவில், சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தென்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,

அன்னப்பன்பேட்டை, தேனாம்பட்டினம் அஞ்சல்,

வழி மங்கைமடம், சீர்காழி வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 106.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

இப்பகுதியில் வாழ்ந்து வந்த வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். தென்திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். இறைவன் அருளால் அவனது வயிற்று வலி பாதியளவு நீங்கியது. பின்பு அவன் திருமுல்லைவாயில் தலத்திலிருந்து கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதை எடுத்துவந்து வழிபட, அவனது தீராத வயிற்று வலி மறைந்தது. பின், இறைவன் ஆசரீரியாக இட்ட ஆணைப்படி இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இத்தல ஈசனுக்கு அருகில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

இந்தப் புராண வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு, இன்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வில்வ மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இத்தலம் வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்து, அந்த வில்வத்தை பிரசாதமாக உட்கொண்டு வர தீராத வயிற்று வலி நீங்கும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

சம்பந்தரால் 11 திங்கட்கிழமைகள் பாடப்பெற்ற இத்தல பதிகத்தை, வீட்டிலேயே பாராயணம் செய்து 12-வது திங்கட்கிழமை இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், வயிற்று வலி மற்றும் பிற பிணிகள் யாவும் நீங்கி பலன் பெறலாம் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

உதிரன் என்ற அசுரனை பராசர முனிவர் அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால், ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

கோவில் அமைப்பு

உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர முனிவர் காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

வலம் முடித்து உட்சென்றால், நேரே மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இத்தலத்தின் அம்பாள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவள். சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும்போது, இறைவன் கடற்கரை அல்லது நதிக்கரைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் அம்பாள் அழகம்மை மாசி மாத பெளர்ணமி அன்று கடலில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறாள். இது தவிர மாத பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா போன்ற விசேஷங்களும் இத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்துக்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்க துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அனுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும், அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள்,

மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாகப் போற்றிப் பாடியுள்ளார். 4-வது பாடலில் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் என்றும், அவர்கள் எமனது சுற்றத்தார் ஆவார்கள் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்

கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்

உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த

இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.

 

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்

கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்

மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்

ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.

 

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்

காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்

ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

 

குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி

கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்

என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி

நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.

 

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்

கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்

ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த

நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.

 

துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்

கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்

மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த

நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.

 

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்

காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்

ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி

ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.

 

ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு

காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்

தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்

ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.

 

அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்

இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்

ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்

திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.

 

மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை

மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்

காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்

ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.

 

ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண

ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற

காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்

வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் முருக. இரமேஷ்குமார் ஓதுவார் சிவகாசி

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/dec/01/வயிற்று-வலி-மற்ற-பிணிகள்-நீங்க-சுந்தரேஸ்வரர்-கோவில்-திருக்கலிகாமூர்-2817958.html
2619378 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற, நித்யசுந்தரர் கோவில் - திருநெடுங்களம் என்.எஸ். நாராயணசாமி Friday, December 23, 2016 12:00 AM +0530 காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருநெடுங்களம்.

     இறைவன் பெயர்: நித்யசுந்தரர், நெடுங்களநாதர்
     இறைவி பெயர்: ஒப்பிலா நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இடர் களையும் திருப்பதிகம் என்று போற்றப்படும் இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நமக்கு வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழலாம்.

எப்படிப் போவது

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்,
திருநெடுங்களம் அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் – 620 015.

இக் கோயில், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

கோயில் இரண்டு கோபுரங்களுடனும், இரண்டு பிராகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சந்நிதியும் உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

வடக்கு வெளிப்பிராகாரத்தில் அகஸ்தியர் சந்நிதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்த கிணறும் உள்ளது. இதில் எக்காலத்திலும் நீர் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், உள்பிராகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சந்நிதிகள் உள்ளன. தென்பிராகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சந்நிதியும், மேற்கு பிராகாரத்தில் தெய்வானையுடன் முருகருக்கு தனி சந்நிதியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சந்நிதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது. சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12-ம் தேதி வரை காலையில், சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து வழங்கினால் நோய் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலத்தில், மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடு கொண்டது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் ‘இடர் களையும் திருப்பதிகம்’ என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் ‘இடர்களையாய்’ என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தைப் படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு இப்பதிகத்தை நாள் தோறும் ஓதி வாழ்வில் வளம் பெறுவோம்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்ர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றினுச்சி மேல்விளங்கும் கொடிமதிற் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/dec/23/இடர்கள்-நீங்கி-வாழ்வில்-இன்பம்-பெற-நித்யசுந்தரர்-கோவில்---திருநெடுங்களம்-2619378.html
2600309 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் கோபம் போக்கும் தலம் சற்குணநாதேசுவரர் கோவில், திருஇடும்பாவனம் என்.எஸ். நாராயணசாமி Friday, November 18, 2016 03:34 PM +0530  

பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 108-வது தலமாக இருப்பது திருஇடும்பாவனம். கோபம் நீக்கும் தலமாக இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

     இறைவன் பெயர்: சற்குணநாதேசுவரர்
     இறைவி பெயர்: மங்களநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்துக்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்,
இடும்பாவனம்,
இடும்பாவனம் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம் – 614 703.

இக்கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு : சசிசேகர சிவாச்சாரியார் - கைபேசி: 9843628109

இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கோபம் என்ற குணம் இருக்கும். அப்படி கோபப்படாத மனிதரை காண்பது அபூர்வம். கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனிடம் இருந்தால் அது அம்மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கோபமடைந்தால் முதலில் மனமும் சிந்தனைகளும் பாதிக்கப்படும். இரண்டாவது, உடலில் பாதிப்புகள் உண்டாகும். இறுதியில் செயலிலும், குழப்பமான மற்றங்கள் உண்டாகும். கோபத்தில் எவன் தன்னை இழக்கிறானோ, அவன் நரகத்தில் இடம்பிடித்துவிடுகிறான் என்று ஒரு பழமையான நீதிநூல் கூறுகிறது. வள்ளுவரும் தனது குறளில் பல இடங்களில் கோபத்தைப் பற்றி குறிப்பிட்டு அதனால் விளையும் தீங்குகளைப் பற்றியும் கூறியுள்ளார்.

சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிரகற்ற தலமாக விளங்குவது திருஇடும்பாவனம். பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வந்தது. பிரம்மா, சிவபெருமானிடம் வந்து அடிக்கடி கோபப்படும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அசரீரி வாக்காக, இடும்பாவனம் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார். அதன்படி இடும்பாவனம் வந்த பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவவலிமை கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளிய சிறப்புடைய தலம் இடும்பாவனம்.

பிரம்மன் சாத்வீக குணங்கள் பெறவேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால், இத்தல இறைவன் சற்குணநாதேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். கோபமுற்று சிலபல செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் இத்தலம் வந்து சற்குணநாதேஸ்வரரை வழிபட்டால், கோப குணம் நீங்கி சாத்வீக குணத்தைப் பெற்று நலமுடன் வாழலாம்.

இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின், இத்தலம் இடும்பாவனம் எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன், இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.


 
அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக இடும்பாவனம் புகழப்படுகிறது. இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை

கோவில் அமைப்பு

நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒரே பெரிய பிராகாரத்துடன் ஆலயம் விளங்குகிறது. முதலில் ராஜகோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை, உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.

வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர். “இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்” என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10-வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான பார்வதியும் ஈசனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது.

மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவளாக அருள்பாலிக்கின்றாள். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.

சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட, கரங்களால் ஊன்றி வந்து ஆலயத்தை அடைந்து திருப்பதிகம் பாடியதாகக் கூறப்படுகிறது. அப்பரும் தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம் ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினம் ஆர்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

2. மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி
நிலையார் தரு நிமலன் வலி நிலவும் புகழ்ஒளி சேர்
கலையார் தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில்
இலையார் தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

3. சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம் மிகு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
ஏலம் ங்கமழ் பொழில் சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

4. பொழில் ஆர்தரு குலைவாழைகள் எழிலார் திகழ் போழ்தில்
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்
குழல் ஆர்தரு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

5. பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழுநீர் வயல் கரைமேல்
கொந்து ஆர்மலர் புன்னைமகிழ் குரவம் கமழ் குன்றில்
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

6. நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவாகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவுக்
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்
எறி நீர்வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

7. நீர் ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாரு ஏறிய படுவெண்தலை கையில் பலி வாங்காக்
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏர் ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

8. தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒருபஃது அவை நெரித்துக்
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

9. பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர்பல தூய்
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

10. தடுக்கை உடன் இடுக்கித் தலைபறித்துச் சமன் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்
மடுக்கண் மலர் வயல்சேர் செந்நெல் மலிநீர் மலர்க்கரை மேல்
இடுக்கண்பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

11. கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல்சொலப் பறையும் வினைதானே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் திருமறைக்காடு சொ. சிவக்குமார்

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/nov/18/கோபம்-போக்கும்-தலம்-சற்குணநாதேசுவரர்-கோவில்-திருஇடும்பாவனம்-2600309.html
2757 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி) என்.எஸ். நாராயணசாமி Monday, September 5, 2016 05:19 PM +0530  

இந்த ஆண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி, செவ்வாய்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினத்துக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி மாதம் 18-ம் நாள் (ஆடிப்பெருக்கு) ஆகிய சிறப்புகளும் உள்ளன. ஆக, இப்போது குரு பரிகாரத் தலமான ஆலங்குடியை பற்றி அறிந்துகொள்வோம்.

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 98-வது தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆபத்சகாயேசுவரர்

இறைவி பெயர்: ஏலவார் குழலியம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்,
ஆலங்குடி,
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 801.
தொலைபேசி: 04374 - 269407

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும், இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

இக்கோவில், திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க, அவரது தலையை வெட்டிவிடும்படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி, அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சத்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி, இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

மற்றுமொரு புராணச் செய்தியின்படி, தேவர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடையும்போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால், இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானுக்கு 9 பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது. மற்ற பரிவாரத் தலங்கள் முறையே, 1. திருவலஞ்சுழி (விநாயகர்), 2. சுவாமிமலை (முருகன்), 3. திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்), 4. சூரியனார்கோவில் (நவக்கிரகம்). 5. திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்), 6. சிதம்பரம் (நடராஜர்), 7. சீர்காழி மற்றும் 8. திருவாரூர் (சோமஸ்கந்தர்).

கோவில் அமைப்பு

கோயிலின் தெற்குக் கோபுரம் 5 நிலைகளை உடையது. கிழக்கிலுள்ள கோபுரம் சிறியது. இத்தல விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில், அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வரும் உள்பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின்போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.

இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் பிரபலமானவர். குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவி சமேதராக வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில், திரளான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இந்த ஐந்துமே காவிரியின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாமப் பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவை. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்,

1. திருக்கருகாவூர் (முல்லை வனம்) - விடியற்கால வழிபாடு.

2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாடு.

3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாடு.

4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேர வழிபாடு.

5. திருக்கொள்ளம்புதூர் (வில்வ வனம்) - அர்த்தஜாமப் பூஜை வழிபாடு.

சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர், தன் தலயாத்திரையின்போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

பிற குரு ஸ்தலங்கள்

திட்டை

தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. சென்றால் திட்டை என்ற தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள திட்டை என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திட்டை தலமும் ஒரு சிறந்த குரு பரிகாரத் தலம். இத்தலத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை.

திருவலிதாயம்

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில், பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம் குரு பகவானுக்கு இவ்வாலயத்தில் தனிச் சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்புண்டு.

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/jul/29/குரு-தோஷ-பரிகாரத்-தலம்-திருஇரும்பூளை-ஆலங்குடி-2757.html
2558256 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி என்.எஸ். நாராயணசாமி Saturday, September 3, 2016 02:52 PM +0530 பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 123-வது தலமாக திருக்கோளிலி உள்ளது. தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது.


இறைவன் பெயர்: கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலி
 


இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும். சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்,
திருக்குவளை, திருக்குவளை அஞ்சல்,
திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால், பிரம்மாவின் படைப்புத் தொழிலை அவரிடம் இருந்து இறைவன் பறித்து சாபம் இடுகிறார். தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.

பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுபாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர்.

நவகோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

கோவில் விவரம்

திருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிராகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தல இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், இறைவன் கருவறை உள்ளது. கருவறையில் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், அதன் தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.

இத்தலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை, இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய அற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர், சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச்சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி, நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச்செல்ல வகை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அந்தப் பதிகம் இதோ –

நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே.


வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்

மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே

கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே.


சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ

புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ

கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே

பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா

கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்

அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.


எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்

வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே

செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்

பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்

குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்

கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை

நல்லவர் தாம்பர வுந்திரு நாவலவூரன் அவன்

நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்

அல்லல் களைந்துல கின்அண்டர் வானுலகு ஆள்பவரே.


என்று சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில், அந்த நெல் மூட்டைகளை திருவாரூரில் உள்ள சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார். இப்பதித்தை ஓதும் யாவரும் தங்களது இன்னல்கள் களைந்து வானுலகில் வாழ்வர் என்று சுந்தரர் தனது கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார்.

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/aug/26/நவக்கிரகங்களின்-தோஷத்தை-நீக்கும்-தலம்-திருக்கோளிலி-2558256.html
2594 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் வைத்தீஸ்வரன் கோவில் என்.எஸ். நாராயணசாமி Monday, August 29, 2016 05:23 PM +0530 காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோவில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

இறைவன் பெயர்: வைத்தியநாதர்

இறைவி பெயர்: தையல்நாயகி

 

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் எழுதிய இரண்டு பதிகங்கள், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம்தான் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. நவக்கிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்,
வைத்தீஸ்வரன்கோவில்,
வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 117.

 

இவ்வாலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம், காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்புபெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான், இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

 

]]>
https://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/jul/11/செவ்வாய்-தோஷ-பரிகாரத்-தலம்-வைத்தீஸ்வரன்-கோவில்-2594.html