Dinamani - Glance - https://www.dinamani.com/glance/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3239228 Glance வேலை... வேலை... வேலை... ரூ.1,80 லட்சம் சம்பளத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை ஆர்.வெங்கடேசன் Saturday, September 21, 2019 06:02 PM +0530 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட்  என அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Executive Trainee (25வது பிரிவு) 

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical (Power), Electrical and Electronics, Power Systems Engineering, Power Engineering (Electrical) போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 60,000 - ரூ.1,80,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2020 தேர்வில் பெற்றப்படும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்தவிதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com  அல்லது https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2025%20Advt_1.pdf?download=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2020 

]]>
Recruitment of Executive Trainee, executive trainees post, Executive Trainee – 25th Batch, Recruitment, velai vaippu, power grid recruitment 2019, jobs , latest employment news in tamil , velai vaippu seithigal tamil, employment news in tamil this week https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/6/w600X390/powergrid.jpg https://www.dinamani.com/employment/2019/sep/21/velai-vaippu-power-grid-recruitment-through-gate-2020-for-executive-trainees-post-3239228.html
3239220 Glance 'தமிழே உலகின் மூத்த மொழி' - வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்? Muthumari Sunday, September 22, 2019 11:06 AM +0530  

'கல் தோன்றி முன் முன் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க்குடி' என்ற பழமொழியை நிரூபித்துக்காட்டியுள்ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக 'கீழடி நாகரிகம்' இருக்கும் என்று கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். 

கீழடி கிராமம்:

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கும் பழைமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி மூன்று கட்ட ஆய்வுகள்:

இதற்காக, இந்திய தொல்லியல் துறை கடந்த 2014ம் ஆண்டு ஆய்வைத் தொடங்கியது. அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரது தலைமையில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் கிடைத்த மண்பாண்டப் பொருட்கள், கல்மணிகள் உள்ளிட்டவை உலகில் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கீழடியில் 2 முதல் 3 மீ அளவில் நிலத்திற்கடியில் கிடைத்த இந்தப் பொருட்கள் கி.மு.290 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது.

அடுத்ததாக நடைபெற்ற 3ம் கட்ட ஆய்வு முடிவில் கட்டுமானப் பணிகளுக்கானச் சான்று எதுவும் கிடைக்கவில்லை என்று ஸ்ரீதர் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன்பின்னர், கீழடி அகழாய்வை மத்திய அரசு கைவிட்டது.

கீழடி 4-ம் கட்ட ஆய்வு: 

பின்னர், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தலின் பேரில் தமிழக தொல்லியல் துறை இதனை கையில் எடுத்தது. 4ம் கட்ட அகழாய்வு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல் மூன்று கட்ட அகழாய்வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால், 4ம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டுகளுக்கு பழமையானது என்று தெரிய வந்துள்ளது. 

சங்க காலம்:

சங்க காலம் என்று அழைக்கப்படுவது கி.மு.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.2ம் நூற்றாண்டு வரை. சங்க காலத்தில் செழுமையான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்துள்ளனர். சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுதொகை உள்ளிட்ட நூல்களும் இலக்கியச் செழுமையை பறைசாற்றுகின்றன.

ஆண்பாற் புலவர்கள் மட்டுமின்றி ஒளவையார், காக்கைப்பாடினியார் உள்ளிட்ட பெண்பாற் புலவர்களும் சங்ககால வாழ்க்கை முறையை பாடல்கள் மூலமாக நமக்கு காட்டுகின்றனர். இந்நிலையில், கீழடி அகழாய்வின் மூலமாக கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.6ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று தமிழக தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக சங்க காலத்திற்கும் முந்தைய ஒரு நாகரிகம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

கீழடி அகழாய்வின் முக்கியத்துவம்:

கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்கள், மணிகள், உலோகங்கள், மண்பாண்டத் தகடுகள், பல்வேறு குறியீடுகள், சதுரக்கட்டைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு முத்துமணிகள், பெண்கள் உபயோகிக்கும் கொண்டை ஊசிகள், தந்தத்தினால் ஆன சீப்பு உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. 

சுமார் 1000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தகடுகள் கிடைத்துள்ளது சங்க காலத்தில் மண்பாண்டம் ஒரு தொழிலாக இருந்ததாகத் தெரிகிறது.  அதுமட்டுமின்றி மண்பாண்டத் தகடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் பிராமி எழுத்துகளின் காலமும் முன்னோக்கிச் செல்கிறது. மேலும், இந்த எழுத்துகளின் வடிவம் ஒவ்வொரு தகட்டில் வெவ்வேறாக உள்ளது.

கி.மு.6ம் நூற்றாண்டில் தமிழர்கள்:

எனவே, தமிழர்கள் கி.மு.6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கக்கூடும்; இதன் மூலம் தமிழே உலகின் மூத்த மொழி என்று உறுதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கட்டிட பொருட்களின் ஆய்வில், இரும்பு பொருட்கள், சுட்ட செங்கற்கள், களிமண், கூரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று விளையாட்டிற்கு சதுரக் கட்டைகள், 6 பக்கங்கள் கொண்ட தாயக் கட்டைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான சுடுமண்ணால் ஆன பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. விளையாட்டு மற்றும் கட்டிடக்கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை இது காட்டுகிறது.

அதே நேரத்தில் இங்கு சமயம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமயங்கள் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும் இதன் மூலம் யூகிக்க முடிகிறது என்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். 

மேலும், ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் அவைகளில் பெரும்பாலனவை ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் என்று தெரிய வந்துள்ளது. ஆடு, மாடுகள் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேபோன்று நூல் நூற்கும் பொருட்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நெசவுத் தொழிலும் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. 

கீழடி நாகரிகம்:

தமிழகத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் மட்டுமே அதிகளவிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நீண்ட ஆய்வுகள் நடைபெறும் இடமும் கீழடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிந்து, கங்கை நாகரிகம் என்பது போல வருங்காலத்தில் 'வைகை கரை நகர நாகரிகம்' அல்லது 'கீழடி நாகரிகம்' என்றும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறலாம்.

கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் சங்க காலத்தில் தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? தமிழ் மொழி எவ்வளவு பழமையானது? என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வரலாற்றைத் திருத்தும் கீழடி அகழாய்வு:

தொடர்ந்து, 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருப்பதாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அகழாய்வு துவங்கப்பட்ட குஜராத் வாட் நகரில் சர்வதேச அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலம் சவ்னோலியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழங்காலத் தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழர்களின் நாகரிகமே மிகப் பழைமையான நாகரிகம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழி தொன்மையான மொழி என்று கூறியதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அகழாய்வு முடிவுகள் அதனை எடுத்துரைக்கின்றன. 

கங்கை நகர நாகரிகம் போன்று இரண்டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வரலாற்றை, முக்கியமாக தமிழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். 

]]>
சிவகங்கை, Keezhadi excavations, கீழடி அகழாய்வு, இரண்டாம் நகர நாகரிகம், கீழடி கிராமம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/3/w600X390/Keeladi.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/21/keezhadi-excavations-sangam-era-is-older-than-previously-thought-3239220.html
3239219 Glance கைதாவதற்கு ஒரு நாள் முன்பு தலைமறைவாக திட்டமிட்டிருந்தாரா சுவாமி சின்மயானந்த்? ENS ENS Saturday, September 21, 2019 05:15 PM +0530  

ஷாஜஹான்புர்: சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவிடம், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ள சின்மயானந்த், எனது செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் கைதாவதற்கு முன்பு, முமுக்ஷு ஆசிரமத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாக திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறிய சின்மயானந்த், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதாகக் கூறி, ஹரித்வாருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால், அதற்குள் ஆசிரமத்துக்குச் சென்ற சிறப்பு விசாரணைக் குழுவினர், அவர் தனியாக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்து, உடன் சென்றதால், அவர் தப்பிச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில் ஈடுபட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் நவீன் அரோரா, அவர் மீது முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நான் எனது செயலுக்காக வருத்தப்படுகிறேன், இதுபற்றி வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

பெண்களுடன் பாலியல் ரீதியில் பேசியது, உடலை மசாஜ் செய்ய சொன்னது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு எதிராக உள்ள அனைத்து சாட்சிகளும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சின்மயானந்த் மேற்கொண்ட 200 செல்போன் அழைப்புகளின் பதிவுகளும் கிடைத்துள்ளன. புகார் கூறிய பெண்ணுக்கு அவரது தொலைபேசியில் இருந்து 200 முறை அழைத்து பாலியல் ரீதியில் பேசியுள்ளார். அந்த பதிவுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட சுவாமி சின்மயான்ந்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி சின்மயானந்த் தனது அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஷாஜகான்பூர் காவல் துறையினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். சின்மயானந்த் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ளது. 

அந்தக் குழு பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வருகிறது. அக்குழு சின்மயானந்திடம் கடந்த 13-ஆம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த மாணவி, ஷாஜகான்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் கடந்த 16-ஆம் தேதி வாக்குமூலம் அளித்தார். மேலும், தனது புகாருக்கு ஆதரமாக செல்லிடப்பேசி ஒன்றையும், மின்னணு சேமிப்பக சாதனமான பென்-டிரைவ் ஒன்றையும் அந்த இளம்பெண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் வழங்கினார்.

ஆசிரமத்தில் சிகிச்சை: உடல்நலக் குறைவு காரணமாக ஷாஜகான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை சின்மயானந்த் அனுமதிக்கப்பட்டார். அவரை லக்னெளவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அங்கு செல்லாமல், ஆயுர்வேத சிகிச்சை பெறப் போவதாகக் கூறி தனது ஆசிரமத்துக்கு சின்மயானந்த் வியாழக்கிழமை திரும்பினார். 

இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் சின்மயானந்தை அவரது ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர், ஷாஜகான்பூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தாமதம் ஏதுமில்லை: இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சின்மயானந்தைக் கைது செய்த விவகாரத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்தப் புகார் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு மிகவும் கவனத்துடன் விசாரணை நடத்தி வருகிறது. இளம்பெண் அளித்த பென்-டிரைவில் சில விடியோக்கள் இருந்தன. அவை தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் சின்மயானந்த் சிலருக்குப் பணமளித்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்தே, அவரையும் அவரிடம் பணம் பெற்ற மூவரையும் கைது செய்துள்ளோம் என்றார்.

வழக்குரைஞர் குற்றச்சாட்டு: சின்மயானந்த் கைது செய்யப்பட்டதையொட்டி, அவரது ஆசிரமத்துக்கு அருகே காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, சின்மயானந்த் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்த ஆவணத்தையும் காவல் துறையினர் வழங்கவில்லை என அவர் தரப்பு வழக்குரைஞர் பூஜா சிங் குற்றஞ்சாட்டினார். முன்னதாக, சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக மாணவி மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
Swami Chinmayanand, Mumukshu Ashram, Special Investigation Team, Shahjahanpur https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/Chinmayanand.jpg https://www.dinamani.com/india/2019/sep/21/chinmayanand-had-plans-to-flee-the-night-before-his-arrest-3239219.html
3239202 Glance உலகிலேயே இது முதல்முறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இணையும் சட்டக் கல்லூரித் தோழர்கள்! ENS ENS Saturday, September 21, 2019 04:19 PM +0530
புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக பதவியேற்றுள்ள 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, அவர்கள் நான்கு பேரும் 1982ம் ஆண்டு தில்லி சட்டக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் நால்வரும்  உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர்.

ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நீதிபதி எஸ். ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் மற்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் டிஒய் சந்திரகுட், எஸ்கே கௌல் ஆகியோர் தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் சட்டப்படிப்பு முடித்தவர்களாம்.

இது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நிகழாத ஒரு  நிகழ்வாகும். அதாவது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் 4 பேர் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாக இருப்பது இதுவரை நிகழாத ஒன்றாம்.

இவர்களில் சந்திரகுட் 2016ம் ஆண்டு மே மாதமும், கௌல் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 4 நீதிபதிகளில் பட் மற்றும் ராய் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்த நிலையில், இதற்கு குடியரசுத் தலைவர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-ம் இதே கல்லூரியில் வேறு ஆண்டில் படித்தவர்தான். தற்போது நீதிபதிகளாக இருக்கும் ஆர்எஃப் நாரிமன், நவீன் சின்ஹா, தீபக் குப்தா, இந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் இதே கல்லூரியில் வேறு வேறு ஆண்டுகளில் சட்டம் பயின்றவர்கள்தான். 

1924ம் ஆண்டு துவக்கப்பட்ட தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் பயின்று வருகிறார்கள்.
 

]]>
classmates in law college, judges at Supreme Court, Justices D Y Chandrachud, SK Kaul, Justices S Ravindra Bhat, Hrishikesh Roy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/supremecourt.jpg உச்ச நீதிமன்றம் https://www.dinamani.com/india/2019/sep/21/now-judges-at-supreme-court-these-four-were-classmates-in-law-college-3239202.html
3239197 Glance கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி Saturday, September 21, 2019 03:46 PM +0530
வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 54,000

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதைகள் பிரிவு விண்ணப்பத்தாரர்களுக்கு வயதுவரம்பு கிடையாது. 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.drbvellore.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.drbvellore.net/recruitment/admin/images/Vellore_DRB_Advertisement%20%20UCCS_PACS124688_1567691798.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2019

]]>
Vellore Central Cooperative Bank, Vellore Central Cooperative Bank Recruitment 2019, 60 Assistant Posts , Recruitment 2019 , Employment News, Employment News In Tamil, employment news in tamil 2019, bank jobs in tamilnadu , vacancies details, tamilnadu v https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/30/w600X390/bank.jpg https://www.dinamani.com/employment/2019/sep/21/vellore-central-cooperative-bank-invites-online-applications-for-recruitment-of-60-assistant-posts-3239197.html
3239178 Glance பேருந்து ஓட்டுனரை ஹெல்மெட் போடச்சொன்னால் எப்படி...? C.P.சரவணன், வழக்குரைஞர் Saturday, September 21, 2019 03:19 PM +0530  

தலைக்கவசம் அணியாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நொய்டா போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதமாக விதித்தது கண்டு பேருந்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நொய்டா செக்டர் 18 பகுதியைச் சேர்ந்தவர் நிராங்கர் சிங். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. பேருந்துகளைப் பள்ளிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இவரின் பேருந்து நாள்தோறும் ஏதேனும் போக்குவரத்து விதிமுறை மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்படும் என்பதால் அபராத ரசீதைப் பெற்று, அபராதம் செலுத்துவதற்கு தனியாக ஒருவரை நியமித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்து ஓட்டியதாக போக்குவரத்து போலீஸார் அளித்த அபராத ரசீதை ஊழியர் கொண்டுவந்து கொடுத்தார். அதைப் பார்த்த நிராங்கர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஏனென்றால், பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டுதான் நிராங்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக நிராங்கர் சிங் நிருபர்களிடம் கூறுகையில், "எனக்குச் சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் விதிமுறைகளை மீறி பேருந்து ஓட்டியதாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர்.

அந்த ரசீதைப் பார்த்தால், ஹெல்மெட் அணியால் பேருந்து ஓட்டியதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபோன்று காரணமின்றி அபராதம் விதிக்கின்றனர். இதற்கு முன் இதுபோன்று ஒரேநாளில் 3 அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறை மீறல் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால், அபராதத் தொகை மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் இருந்தார் என்பதற்காக ரூ.500 அபராதம் எப்படி விதிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹெல்மெட் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம் என்றனர்.

ஆனால், இந்த தவறை நான் சும்மாவிடப்போவதில்லை. போக்குவரத்துத் துறையினர் எவ்வாறு பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. எனக்குத் தீர்வு கிடைக்க நான் நீதிமன்றம் செல்லப் போகிறேன்" எனத் தெரிவித்தார்

இந்த அபராதம் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
bus driver, no helmet, noida issue, நொய்டா சம்பவம், ஹெல்மெட் அபராதம், பேருந்து ஓட்டுநர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/bus_green.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/21/what-bus-driver-fined-for-no-helmet-3239178.html
3239167 Glance புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் DIN DIN Saturday, September 21, 2019 02:38 PM +0530
நிலுவை ஊதியம், போனஸ் தொகையை வழங்கியும் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த பிஆர்டிசி ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுடன், போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வழக்கம் போல பேருந்துகளை இயக்கினர்.

அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என ஊழியர்கள் கூறி வந்த நிலையில், மேலாண் இயக்குநர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதுவை அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) 946 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி மட்டுமன்றி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 140-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக பிஆர்டிசி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதை உடனே வழங்கக் கோரியும், 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், கடந்தாண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 -ஆம் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 4 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதனால், பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல, காரைக்கால், மாஹே, ஏனாமிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. 

இதன் காரணமாக நாளொன்றுக்கு பிஆர்டிசி மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ. 15 லட்சம் வருமானம் கிடைக்காமல் போனது. பேருந்துகள் ஓடாததால், உள்ளூர் பயணிகளும், வெளியூர் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக, கிராமப்புற மக்கள் தங்களது பகுதிகளுக்குச் செல்ல முடியாமலும், அங்கிருந்து நகரப் பகுதிக்கு வர முடியாமலும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பிஆர்டிசி மேலாண் இயக்குநர் குமார் ஊழியர்களை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊழியர்ளுக்கு வழங்கப்படாமல் இருந்த 3 மாத நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் தொகை ரூ. 11 ஆயிரத்தைச் சேர்த்து மொத்தம் ரூ. 4.8 கோடியை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டதாகவும், எனவே, போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பும்படியும் கூறினார். 

ஆனால், ஊழியர்கள் 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனத் தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், சனிக்கிழமையும் (செப். 21) போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/pondy.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/sep/21/pondy-bus-strike-end-3239167.html
3239166 Glance சிதம்பர ரகசியம் என்றால் என்ன? வியப்பூட்டும் தகவல்கள்..!! C.P.சரவணன் DIN Saturday, September 21, 2019 02:29 PM +0530  

சிதம்பர நடராஜர் கோயிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு அதனால் புதையுண்டு இருக்கும் அதிசயங்கள் போன்றவற்றை தான் சிதம்பர ரகசியம் என்று கூறிவருகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி அக்கோயிலில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்..!!
மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பெயரில் பலரும் பலவிதமான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்கள் தான் அந்த ரகசியங்கள் என்றும் சிலர் அறிவியல் பூர்வமாக கூறுகின்றனர்.

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள். நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒன்றை நமக்கு தெளிவாக கூறுவதாய் தான் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அந்த வியப்பூட்டும் சில அற்புதமான ரகசியங்கள் பற்றி இனிக் காணலாம்..!!

பூமத்திய ரேகையின் மையம்

இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator).

ஒரே நேர் கோடு

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE) அமைந்துள்ளது. இன்று கூகுள் மேப் (Google Map) உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

மனித உடலின் அடிப்படை

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. 

சுவாசம்

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

நாடிகள்

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

திருமூலர் மந்திரம்

திருமூலரின் திருமந்திரத்தில் இதைப் பற்றிய தகவல்கள். மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம் சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

ஆச்சரியங்கள்:

"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்து. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,

28 தூண்கள்:

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (Beam), இது 64 ஆயக்கலைகளைக் குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (Cross Beams), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களைக் குறிக்கின்றது.

பொற் கூரை

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

ஆனந்த தாண்டவம்

சிதம்பர நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவ நிலையினை, வெளிநாட்டு அறிஞர்கள் "Cosmic Dance" என்று அழைக்கின்றனர்.

தீர்த்தங்கள்

கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

கோபுரங்கள்

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

 

]]>
The Real Secret of Chidambaram temple, சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம், சிதம்பரம் கோயில் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/CHIDAMBARAM_-_N.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/21/the-real-secret-of-chidambaram-temple-3239166.html
3239149 Glance 200 அழைப்புகள், பாலியல் பேச்சு, மசாஜ்: குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட சின்மயானந்த் ENS ENS Saturday, September 21, 2019 11:21 AM +0530
ஷாஜஹான்புர்: சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவிடம், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ள சின்மயானந்த், எனது செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையில் ஈடுபட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் நவீன் அரோரா, அவர் மீது முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நான் எனது செயலுக்காக வருத்தப்படுகிறேன், இதுபற்றி வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

பெண்களுடன் பாலியல் ரீதியில் பேசியது, உடலை மசாஜ் செய்ய சொன்னது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு எதிராக உள்ள அனைத்து சாட்சிகளும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சின்மயானந்த் மேற்கொண்ட 200 செல்போன் அழைப்புகளின் பதிவுகளும் கிடைத்துள்ளன. புகார் கூறிய பெண்ணுக்கு அவரது தொலைபேசியில் இருந்து 200 முறை அழைத்து பாலியல் ரீதியில் பேசியுள்ளார். அந்த பதிவுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட சுவாமி சின்மயான்ந்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி சின்மயானந்த் தனது அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஷாஜகான்பூர் காவல் துறையினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். சின்மயானந்த் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ளது. 

அந்தக் குழு பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வருகிறது. அக்குழு சின்மயானந்திடம் கடந்த 13-ஆம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த மாணவி, ஷாஜகான்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் கடந்த 16-ஆம் தேதி வாக்குமூலம் அளித்தார். மேலும், தனது புகாருக்கு ஆதரமாக செல்லிடப்பேசி ஒன்றையும், மின்னணு சேமிப்பக சாதனமான பென்-டிரைவ் ஒன்றையும் அந்த இளம்பெண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் வழங்கினார்.

ஆசிரமத்தில் சிகிச்சை: உடல்நலக் குறைவு காரணமாக ஷாஜகான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை சின்மயானந்த் அனுமதிக்கப்பட்டார். அவரை லக்னெளவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அங்கு செல்லாமல், ஆயுர்வேத சிகிச்சை பெறப் போவதாகக் கூறி தனது ஆசிரமத்துக்கு சின்மயானந்த் வியாழக்கிழமை திரும்பினார். 

இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் சின்மயானந்தை அவரது ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர், ஷாஜகான்பூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தாமதம் ஏதுமில்லை: இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சின்மயானந்தைக் கைது செய்த விவகாரத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்தப் புகார் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு மிகவும் கவனத்துடன் விசாரணை நடத்தி வருகிறது. இளம்பெண் அளித்த பென்-டிரைவில் சில விடியோக்கள் இருந்தன. அவை தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் சின்மயானந்த் சிலருக்குப் பணமளித்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்தே, அவரையும் அவரிடம் பணம் பெற்ற மூவரையும் கைது செய்துள்ளோம் என்றார்.

வழக்குரைஞர் குற்றச்சாட்டு: சின்மயானந்த் கைது செய்யப்பட்டதையொட்டி, அவரது ஆசிரமத்துக்கு அருகே காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, சின்மயானந்த் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்த ஆவணத்தையும் காவல் துறையினர் வழங்கவில்லை என அவர் தரப்பு வழக்குரைஞர் பூஜா சிங் குற்றஞ்சாட்டினார். முன்னதாக, சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக மாணவி மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
Chinmayanand, Special Investigation Team, postgraduate, former Union minister, UP Police https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/chinmaya.jpg பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தை, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஜகான்பூரில்  கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறையினர். https://www.dinamani.com/india/2019/sep/21/chinmayanand-200-phone-calls-sexual-talk-and-body-massage-3239149.html
3238705 Glance தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்கள்: ரூ.100 விலையில் கிடைக்கும் DIN DIN Saturday, September 21, 2019 09:38 AM +0530  

தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்களை ரூ.100 கட்டணத்தில் பெறலாம். இதுகுறித்து அறிவிப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் தேவைப்படுவோர் அதனை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100. தபால் அல்லது கூரியர் செலவுடன் சேர்த்து ரூ.136-க்குக் கிடைக்கும். அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை-28 என்ற முகவரிக்கு வரைவோலை (ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI-28) அனுப்பி நூலைப் பெறலாம்.

]]>
sale, right to information act books, anna instituteof management studies centre, தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்கள், அண்ணா மேலாண்மை நிறுவனம், ரூ.100 விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/anna.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/21/தகவல்-பெறும்-உரிமைச்-சட்ட-நூல்கள்-ரூ100-விலையில்-கிடைக்கும்-3238705.html
3238522 Glance தமிழக வீரர்கள் சிலம்ப போட்டியில் கின்னஸ் சாதனைக்கு தேர்வு C.P.சரவணன், வழக்குரைஞர் DIN Friday, September 20, 2019 05:56 PM +0530  

மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்.

மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்ற நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் உள்பட தமிழகத்திலிருந்து 300 வீரர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், சுருள்வாள், தொடுசிலம்பம், ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் கேடயம், தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட பிரிவில் கலந்துகொண்டு 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். மேலும், 5 நிமிடம் தீப்பந்தம் சுற்றும் பிரிவில் உலகளவில் 300 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 80 பேர் பங்கேற்ற நிலையில் அவர்கள், கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியில், வெற்றிபெற்று திரும்பிய சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/silambam.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/20/தமிழக-வீரர்கள்-சிலம்ப-போட்டியில்-கின்னஸ்-சாதனைக்கு-தேர்வு-3238522.html
3238521 Glance அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை: ஜெகன்மோகன் ரெட்டி C.P.சரவணன், வழக்குரைஞர் Friday, September 20, 2019 05:52 PM +0530  

அரசு மருத்துவர்கள் யாரும் இனி தனியார் மருத்துவமனைகளை நடத்தக் கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று பேசியதாவது:

அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ.1,000 தாண்டினால் மற்ற செலவுகளை அரசே ஏற்கும். இத்திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் ரூ.5000 நிதி உதவி செய்யப்படும்.

ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் 2,000 நோய்கள் இணைக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை அல்லது ‘கிளினிக்’ நடத்தக் கூடாது. இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

]]>
andhra cm, jegan mohan reddy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/30/w600X390/jegan.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/20/andhra-cm-jeganmohan-reddys-announcement-3238521.html
3238519 Glance தமிழகத்துக்கு இந்த வாரம் முழுக்க அமோகமாக இருக்கும்: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன் DIN DIN Friday, September 20, 2019 05:35 PM +0530
சென்னை: தமிழகத்தில் கடந்த புதன்கிழமை பரவலாக மழை வெளுத்து வாங்கியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் மழை வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து நாட்களும் மழை பெய்யும் மாதமாக இது அமைந்துள்ளது.

இந்த திருவிழாவில் மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்கள் சேருமா அல்லது வெளியேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள் மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கடற்கரையோர மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி ஆகியவை மழைக்கு சரியான இலக்காக உள்ளன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை
கடந்த வாரம் எல்லாம் மேக மூட்டமாக இருப்பதும், ஆனால் மழை பெய்யாமல் விஜயகாந்த் வாழைப்பழத் தோலைத் தூக்கி வேறு எங்கோ எறிவது போல வேறு ஒரு இடத்தில் மழை பெய்வதுமாக இருந்தது.

ஆனால் ஒரு வழியாக சென்னையில் கன மழை என்று தலைப்பு வைக்கும் வகையில் பெய்த மழை வேற லெவல். ஆனால் மீண்டும் நமக்கு போன வாரம் ஏற்பட்ட அதே பொறுமை தேவைப்படுகிறது. அதாவது சென்னைக்கு செப்டம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையின் அளவு 147 மி.மீ. வட சென்னையில் ஏற்கனவே ஒரே நாளில் இந்த மழை அளவு கிடைத்துவிட்டது.

கவனிக்க வேண்டிய முக்கியமான சில நாட்கள்
சனிக்கிழமை முதல் புதன்கிழமை (செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி) வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் கவனிக்கப்பட வேண்டிய நாட்களாகும். இந்த மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கவனிக்கப்பட வேண்டிய நாட்களும் இதுவே என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 21ம் தேதி இரவு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மவாட்டங்களில் மழைக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. அதே போல, டெல்டா, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு பலமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
heavy rain, weather report, tamilnadu weatherman, தமிழ்நாடு வெதர்மேன், கன மழை எச்சரிக்கை, Tamilnadu https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/RAIN1fe.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/great-one-week-is-ahead-for-tamil-nadu-tamilnadu-weatherman-3238519.html
3238508 Glance சிக்னல் கோளாறு: சென்டிரல் நோக்கி வந்த ரயில் பாதி வழியில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு DIN DIN Friday, September 20, 2019 04:16 PM +0530
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பாதி வழியில் நின்றதால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பட்டாபிராம் ரயில் நிலையத்துக்கு அருகே நடு வழியில் நின்றதால் அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை  - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 

]]>
Electric train, Few Local trains canceled, Signal problem https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/train.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/signal-trouble-train-stands-near-pattabiram-3238508.html
3238507 Glance கீழடியில் முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்  DIN DIN Friday, September 20, 2019 04:12 PM +0530  

சென்னை: கீழடியில் நடைபெற்ற முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் மூலம் தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என நிரூபிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதப்பட வைத்துள்ளது. உலக வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் கீழடி அகழாய்வு பணிகளை விரிவுபடுத்துவதும், விரைவுபடுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் பழங்கால தமிழர்கள் நாகரிகத்தை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தெரியவந்துள்ள முடிவுகளை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிலுள்ள காளையின் எலும்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்களில் 6 பொருட்கள் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, கரிம ஆய்வு செய்யப்பட்டதில், அவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிந்து வெளி நாகரிகத்தில் இருந்தது போலவே திமில் உள்ள காளைகளின் எலும்புகள் கண்டெடுக்கப் பட்டிருப்பதன் மூலம் அந்த நாகரிகத்துடன் தமிழர்களுக்கு உள்ள நெருங்கியத் தொடர்பு; ரோம் நாட்டைச் சேர்ந்த அரிட்டைன் பானை ஓடுகள் கிடைத்திருப்பதால் அக்கால ரோமப் பேரரசுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிகத் தொடர்பு  ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியது, பொருளாதார வளமையுடன் தமிழர்கள் வாழ்ந்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விதவிதமான எழுத்து வடிவங்களை தமிழர்கள் பயன்படுத்தியிருப்பதால் அப்போதே தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதும் உறுதியாகிறது. தமிழர்கள் தங்கள் நாகரிகத்தைக் கொண்டாட இதைவிட வேறு காரணம் தேவையில்லை. அவ்வகையில் நான்காவது அகழாய்வு முடிவுகளை விரைவாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதேநேரத்தில் கீழடியால் கிடைத்த பெருமிதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம்... கீழடியில் தமிழக அரசால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள்  ஓராண்டு காலத்திற்குள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அதே கீழடியில் 2015 முதல் 2017 வரை நடத்தப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது தான். முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 5,300க்கும் கூடுதலான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பொருட்கள் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவை 2,218 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆய்வு குறித்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படாததால், தமிழர்கள் நாகரிகம் குறித்த உலகமே வியக்கக்கூடிய வகையிலான பல உண்மைகள் மக்களை சென்றடையாமல் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.

கீழடியில் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் இரட்டை கல் சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தமிழர்களின் நாகரிகம், கட்டிடக்கலை போன்றவை குறித்த புதிய உண்மைகளை  வெளிக்கொண்டு வரும். இவை தமிழர்களின் பெருமையை மேலும் உயர்த்தும். எனவே, மத்திய அரசிடம் வலியுறுத்தி கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், ஆதிச்சநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க வேண்டும். அடுத்தடுத்த கட்ட அகழாய்வுகளை தமிழக அரசே மேற்கொள்வதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  வரலாற்று உண்மைகளை மாநிலப்பாடத்திட்ட பாடநூலில் ஒரு பாடமாக சேர்க்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

]]>
ramadoss demands keezhadi results, madurai district, keezhadi site, excavation works, ASI, PMK ramadoss, மதுரை கீழடி, அகழ்வாராய்ச்சி ஆய்வுகள் , முந்தைய ஆய்வு முடிவுகள் , பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழரின் பெருமை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/ramadoss20.jpg பாமக நிறுவனர் ராமதாஸ் https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/pmk-founder-ramadoss-demands-release-of-earlier-excavation-results-from-keezhadi-3238507.html
3238506 Glance சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!! ENS ENS Friday, September 20, 2019 04:06 PM +0530
சென்னை: புதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான சென்னை விமான நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டனர். நீர் ஒழுகிய இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்து மழை நீர் வெளியே சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் கூறுகையில், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அதனை சரி செய்து விடுவோம். இது மிகச் சிறிய விஷயம். உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டுவிழும், தற்போது இது ஒழுக வேறுச் செய்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
chennai airport, leaky roof, MP Kanimozhi tweet, சென்னை விமான நிலையம், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுதல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/air_port.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/leaky-roof-chennai-airport-3238506.html
3238494 Glance திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் சிக்கினர்! சிறையில் களி தயாராகிறது! ENS ENS Friday, September 20, 2019 03:29 PM +0530  

வேலூர்: கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வேலூரில் திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கினர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தந்தை மகன் உட்பட 4 கொள்ளையர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

நவீத் (21), அவரது தந்தை நாசர் பாஷா (58) மற்றும் வசீன் (19), ரஃபீக்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள், இரு சக்கர வாகனங்கள் மூன்று, 2 தொலைக்காட்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு வீட்டுக்குள் திருடச் செல்லும் முன், அதனை சில நாட்கள் நோட்டமிடுவார்களாம். அந்த வகையில் தான் ஒரு வீடு 3 நாட்களாக பூட்டியிருந்ததைப் பார்த்து அந்த வீட்டுக்குள் நுழைந்து, தொலைக்காட்சிப் பெட்டி, இருசக்கர வாகனம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளைபோன போது பதிவான செய்தி இது..

வேலூரில் தென்னாம்பெட் என்ற பகுதியில் திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் சிறிதும் பதற்றமே இல்லாமல், ஏதோ சுற்றுலா வந்தது போல தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளனர். வீட்டின் சமையலறையில் இருந்த மக்ரோனியை சமைத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருந்த எல்இடி டிவி, மைக்ரோவேவ் ஓவன், தங்க நகைகள் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

பக்காடி தெருவில் உள்ள மொஹம்மது பரூப் என்பவர் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பரூக் தனது மனைவியுடன் பெங்களூரு சென்று அங்கு தனது மகன் வீட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டு நேற்று வீட்டுக்கு திரும்பிய போதுதான் தங்களது வீட்டில் கொள்ளைப் போனது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
 

]]>
macaroni burglars, vellore, indian penal code, arrest https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/4/w600X390/MACARONI.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/vellore-macaroni-loving-burglars-arrest-3238494.html
3238490 Glance தமிழகத் தங்கைகளுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சொல்லிச் சென்ற முக்கியமான அறிவுரை! கார்த்திகா வாசுதேவன் Saturday, September 21, 2019 12:55 AM +0530  

தமிழிசை செளந்தரராஜன்..

தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் மாநிலத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்ட பின்னரே தினம், தினம் பட்டி தொட்டியெங்கும் பாஜக பேசுபொருளானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏன்.. தமிழிசைக்கு முன்பு தமிழகத்தில் திறன் வாய்ந்த பாஜக மாநிலத் தலைவர்கள் எவரும் இருந்ததில்லையா? அவர்களால் பாஜகவைப் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சேர்க்க முடிந்ததில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் கட்சியை வளர்த்திருக்கலாம். ஆனால், கட்சியை, கட்சியின் செயல்பாடுகளை மக்களிடையே பேசுபொருளாக்கியதில் அவர்கள் தமிழிசை அளவுக்குச் செயல்பட்டிருப்பார்களா? என்றால் அது விவாதத்திற்குரியது. ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று பிடிவாதமாக அவர்களில் எவரும் பஞ்ச் டயலாக் விட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழிசையைக் காட்டிலும் பிறவி பாஜகவினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் அக்கட்சியில் பிரதான, பிரபல உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருக்கலாம். ஆனால், இவர் தமிழக பாஜகவின் தலைவரான பின்பு மற்றவரெல்லோரும் பின்னணியில் மங்கலாக மறைய தமிழகத்தின் ஒட்டுமொத்த பாஜக முகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தவர் தமிழிசை மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மை.

இதைப் பாருங்களேன்.. குட்! டெங்குவுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்கள் புகைப்படத்துடன் இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

அதனால் தான் அவரைக் கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் பாஜக தலைமை கவர்னராக்கி அழகு பார்க்கிறதோ என்று கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கெல்லாம் தமிழிசையே தமது நேர்காணல்கள் தோறும் தெளிவான பதில் அளித்து பக்காவாகச் அந்தச் சூழலை கையாண்டு கொண்டிருக்கிறார். 

ஒரு பெண்.. இந்த ஆண் மைய உலகில்  அரசியல்வாதியாக ஜெயிப்பதென்பது மிக மிகக் கஷ்டமான காரியம். அதிலும் ஒரு தேசியக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அங்கிருந்து படிப்படியாக கட்சியில் பொறுப்புகளைப் பெற்று உயர்ந்து கட்சியின் மாநிலத் தலைவராக உயர்வதென்பது எளிதில் சாத்தியமாகக் கூடிய காரியமில்லை. அதற்கு கடுமையான உழைப்பும், சலிக்காத பயணங்களும், அயராத மக்கள் சந்திப்புகளும் நிகழ்த்தப்பட வேண்டும். இவை அனைத்தும் ஆண் தலைவர்களால் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படக் கூடும். அதே ஒரு பெண் தலைவர் எனும் போது அவருக்கு அவரது குடும்பத்தின் பக்க பலம் நிச்சயம் தேவை. தமிழிசை விஷயத்தில் அவரது அரசியல் பயணத்தின் பின்னணியில் ஆரம்பம் தொட்டே இருவர் இருந்திருக்கிறார்கள். முதலாமவர் தமிழிசையின் கணவர் டாக்டர் செளந்தரராஜன், இரண்டாமவர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி.

அம்மாவின் அரவணைப்பும், அனுசரணையும் இல்லாவிட்டால் தமிழிசையால் வெற்றிகரமான தலைவராகப் பரிணமித்திருக்க முடியாது என்பது நிஜம்.

இன்றைய அரசியல் களத்தில் மற்ற அரசியல் தலைவர்களது மனைவி மக்கள் குறித்த செய்திகள் எல்லாம் ஊடக வெளிச்சம் பெற்றிருக்கையில் தமிழிசையின் தந்தையும் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மனைவி கிருஷ்ணகுமாரி பற்றி நாம் தெளிவாகவும், விரிவாகவும் அறிய நேர்ந்தது தமிழிசையின் அரசியல் வெற்றிகளின் பின்னரே! மேலும் உறுதியாகச் சொல்வதென்றால் தமிழிசை தெலங்கானா ஆளுநர் ஆனபின்னரே, கிருஷ்ணகுமாரி அம்மாளின் ஆளுமைத்திறன் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

தன் மகளுக்கு மிகச்சிறந்த பக்கபலமாக இருந்து அந்தம்மாள் ஆற்றிய பணியே இன்று தமிழிசையை இந்த உயரத்தில் அமர வைத்து அழகு பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

அந்த வகையில் தமிழிசையும், அவரது தாயாரும் தமிழகப்பெண்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணங்கள் என்றே சொல்லலாம்.

தமிழிசை தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்று அங்கு சென்று தன் பணிகளை முறையாகத் துவக்கும் முன்பு, இங்கு தமிழ்நாட்டுச் சகோதரிகளுக்குச் சொல்லிச் சென்ற ஒரு முக்கியமான அறிவுரையை பெண்கள் எல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம். இதை அறிவுரை என்று எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள், அரசியலில் வென்ற ஒரு மூத்த சகோதரியின் எளிமையான ஆலோசனையாகக்கூட கருதிக் கொள்ளலாம். 

தெலங்கானாவுக்குப் புறப்படும் முன் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய தமிழிசை தனது தமிழகத் தங்கைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்பியது இதைத்தான்;

அதாவது;

‘அரசியல் என்பது பெண்களுக்கானதும் கூட, 50% பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதில் எத்தனை சதவிகிதம் பெண் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? யோசித்துப் பாருங்கள். மிக மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பெண் அரசியல்வாதிகளும், தலைவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். முதலில் அரசியலுக்கு வரவேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும். சில பெண்கள் துணிந்து அரசியலுக்கு வருகிறார்கள், ஆனால், வந்தாலும் இங்கே பெண் அரசியல்வாதிகளுக்கு நேரும் சிரமங்களைப் பார்த்ததும் இது நமக்கான இடம் இல்லை என்று ஓடி விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. அரசியல் என்பது பெண்களுக்கானதும் கூட என்ற உறுதித் தன்மையோடு இருக்க வேண்டும். இதை நான் தங்கைகளுக்குச் சொல்கிறேன்.

பெண் அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் நிறையவே இருக்கின்றன. அந்த சங்கடங்களுக்கு பெரும்பாலும் அவர்களே கூட காரணமாகி விடுகிறார்கள். வெளியிலிருந்து யாரோ தடுப்பதை விடுங்கள், பல நேரங்களில் பெண்களின் அரசியல் முன்னேற்றத்துக்கு அவர்களே தான் தடைகளாக ஆகிக் கொள்கிறார்கள். ஆளுமை இருக்க வேண்டும் அழுகை இருக்கக் கூடாது. பெண்கள் சாதாரணமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். சிரமங்களை எதிர்கொள்ளும் போது தடுமாறிப் போய்விடுவார்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், இதோ இப்போது உங்களுக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மணி நள்ளிரவு 12.30 இதை முடித்து விட்டு நான் 1 மணிக்கு மீட்டிங்குக்கும் வெளியில் சென்று வருவேன். சிரமமாக இருக்கிறதென்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை. தமிழகத்தில் மிக அதிகமாகக் கேலி செய்யப்பட்ட விமர்சிக்கப்பட்ட பெண் அரசியல் தலைமை நானாகத்தான் இருக்கக்கூடும். அதற்காகவெல்லாம் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க முடியுமா? கண்ணீர் சிந்தும் பழக்கமே எனக்குக் கிடையாது. கண்ணீர் சிந்திவிட்டாலே நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று தான் அர்த்தம். நான் இதைப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நானும் அழுதிருக்கிறேன். எமோஷனலான சில நேரங்களில் எனக்கும் கண்கள் கலங்கி கண்ணீர் வந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் எனக்குள் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், கண்களில் இருந்து தண்ணீர் கீழே விழுந்து விட்டாலே நானும் கீழே விழுந்து விட்டதாகத்தான் அர்த்தம். பெண்களுக்கு இருக்கக்கூடிய மிக மோசமான குணம் இந்த அழுகை. அழுத்தம் இருக்க வேண்டுமே தவிர அழுகை இருக்கக்கூடாது. அழுதுவிட்டால் நாம் வலிமை இழந்தவர்களாகி விடுவோம். அரசியலில் ஏமாற்றங்கள் வரத்தான் செய்யும், ஆனால், அதை அழுகையாக வெளிப்படுத்தக்கூடாது அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும். அடுத்த வேலையாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.’

தமிழிசையின் மேற்கண்ட வார்த்தைகள் புதிதாக அரசியல் இறங்கத் துடிக்கும் பெண்களுக்கும் முன்னரே அரசியல்வாதிகளாக கோலோச்சும் பெண்களுக்கும் உந்துசக்தியாக அமையக்கூடும் என்பதால் இங்கே பகிர்கிறோம்.

தமிழிசை சார்ந்திருக்கும் கட்சி குறித்தும் அவரது அரசியல் செயல்பாடு குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு பெண் அரசியல் தலைமையாக அவர் இன்று சாதித்திருப்பது நிஜம்.

இதையும் பாருங்களேன்.. .மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரத்தில் ஒரு கட்சித் தலைமை எனும் நிலையில் தமிழிசையின் அரசியல் பக்குவத் தன்மை பற்றி பரவலாக விமர்சிக்கப்பட்டது. தமிழிசை அந்த விஷயத்தை அணுகியது முற்றிலும் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இதை இந்தத் தலைவர் இப்படிக் கையாண்டிருப்பார், அவராக இருந்தால் மென் சிரிப்புடன் நகர்ந்திருப்பார், இவரானால் சரியான பதிலடி கொடுத்து விட்டு மாணவியை திக்கு முக்காட வைத்திருப்பார் என்றெல்லாம் தமிழிசையை பிற ஆண் அரசியல் தலைவர்கள் மற்றும் பெண் அரசியல் தலைமைகளுடன் ஒப்பிட்டு இவர்  தலைமைப் பொறுப்புக்கே லாயக்கற்றவர் என்று கூட அச்சமயத்தில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து சொந்த மகனே, விமான நிலையத்தில் வைத்து ‘எந்நேரமும் அரசியல், அரசியல், அரசியல் தானா? குடும்பத்தைப் பார்க்க மாட்டீர்களா?’ பாஜக ஒழிக! என்று தன் தாயைப் பார்த்து கோபமாகக் கண்டனக்குரல் எழுப்பினார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இதெல்லாமும் தமிழிசையை வலுவிழக்கச் செய்யும் அஸ்திரங்களாக இருக்கவில்லை என்பது தான் அவரது வெற்றிக்கான ஒரே  அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.

இதோ இன்றும் கூட அவரிடம் ஒரு கேள்வியை அனைத்து ஊடகத்தினரும் மறக்காமல் முன் வைக்கிறார்கள்.

இதுவரை தீவிரமாகப் பாஜக  வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும் தலைமையாக இருந்து விட்டு இப்போது உடனே ஆளுநராக நடுநிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றால்? அதெப்படி சாத்தியப்படும்? என்ற கேள்விக்கு தமிழிசை அளித்த பதில் சுவாரஸ்யமானது.

‘கவர்னர்ஸ் கைட்’ என்றொரு புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு கவர்னருடைய கடமைகள் என்ன? அவருடைய ஆளுமை வரம்பு என்ன? என்பதைக் குறித்து தெளிவாகத் தெரிந்து கொண்டு நான் ஆக்டிவ்வான ஆளுநராகப் பணியாற்றவிருக்கிறேன் என்கிறார் தமிழிசை. எப்படி பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பிரபல காங்கிரஸ் தலைவரின் மகளாக வளர்ந்த போதும், தன்னால் பாஜக தான் தனது உயிர்மூச்சு என்று ஒரே மனதாக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கட்சியின் மேல் அபிமானம் வைக்க முடிந்ததோ, அதே போலத்தான் கவர்னர் பதவி என்றால் அதில் கட்சி சார்பு அடியோடு இருக்கக் கூடாது. நடுநிலைத்தன்மையோடு தான் இருக்க வேண்டும் என்றால் தமிழிசை அப்படித்தான் இருந்து சாதிப்பேன். என்கிறார் தமிழிசை.

அதாவது,  மொத்தத்தில் என் கோர்ட்டுக்கு எந்த பால் வந்தாலும், எந்தப் பக்கமிருந்து வந்தாலும் நான் அடித்து ஆடத் தயாராகவே இருக்கிறேன் என்கிறார்.

கவர்னர் பதவி என்பது தமிழிசைக்கான அரசியல் வாலண்டரி ரிடையர்மெண்டா? என்ற கேள்விக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்.

இல்லை. அதற்கப்புறம் பாருங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் வேகமான, மேலும் செயலூக்கம் பெற்ற தலைமையாக நான் திரும்பி வந்து கட்சிப்பணியாற்றுவேன். என்னைப் பொருத்தவரை எந்த நேரத்தில், நான் எந்த வேலையை ஒப்புக்கொள்கிறேனோ அந்த வேலையில் 100% அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன். என்பதை உறுதியாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்கிறார் தமிழிசை.

]]>
tamilisai soundararajan, telangana governer, tamilisai's advice to tamilnadu sisters, women leaders responsibility in politics, தமிழிசை செளந்திர ராஜன், தமிழக தங்கைகளுக்கு ஓர் அறிவுரை, தமிழிசையின் ஆலோசனை, பெண் அரசியல்வாதிகள், அரசியலில் பெண்களின் பங https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/governer_tamilisai.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/20/telangana-governors-important-advice-to-her-beloved-tamil-sisters-3238490.html
3238489 Glance பழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை DIN DIN Friday, September 20, 2019 02:56 PM +0530
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடைகளில் மட்டுமின்றி,  சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

]]>
police raid, IT Raids, income tax raid, Edapady Palanisamy, Income Tax Department Vacancy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/w600X390/Palani-Panchamirtham.gif https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/palani-panjamirtham-store-income-tax-raid-3238489.html
3238487 Glance கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு ANI ANI Friday, September 20, 2019 02:47 PM +0530
புது தில்லி: உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்தது உள்ளிட்ட சில முக்கிய வரி குறைப்பு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டீவீட் செய்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு செய்திருப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் முடியும். 

நிதித்துறையின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும், 130 கோடி இந்தியர்களின் மனங்களை வெல்லவும் முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/narendra_modi_new.png https://www.dinamani.com/india/2019/sep/20/pm-narendra-modi-tweets-cut-corporate-tax-is-historic-3238487.html
3238463 Glance ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது? - ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்  Friday, September 20, 2019 04:07 PM +0530
"ஐயோ, என் தலையெழுத்து ஏன் தான் இப்படியிருக்கோ" என்று நொந்து கொள்பவர்கள் ஏராளம். அதிலும், "எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குதோ" என்று  அலுத்து கொள்பவர்கள் தனி ரகம். இப்படி அலுத்துக் கொண்டு புலம்புவதால் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறீர்களா? 

"உண்மையிலேயே தெய்வம்னு ஒண்ணு இருக்கா? அப்படி இருந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?" தெய்வத்தைக் குறை சொன்ன பக்தருக்கு மகாபெரியவா  கருணையுடன் சொன்ன உபதேசம்..

ஒரு சமயம் மகாபெரியவாளை ஸ்ரீமடத்திற்கு வந்திருந்த கூட்டத்தில் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் இருந்தார். அந்த நபர் முதல்முறையாக அப்போதுதான்  தரிசிக்க வந்திருந்தார். வரிசையில் நின்ற அவர் தன் முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். எல்லாம் ஏதோ உடனே என்று செய்வது போல்தான் இருந்தது.  நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துக்காக கைநீட்டியபடி நின்ற அவரைப் பார்த்தார் மகாபெரியவா. சில விநாடிகளுக்குப் பிறகு அவரைப் பார்த்து, "என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல இருந்து, ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு. திட்டியும் பிரயோஜனம் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் செய்துண்டு இருந்த  பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?" என்று கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி. 'நாம் எதுவுமே சொல்லவில்லை. இவரை தரிசிப்பதே இதுதான் முதல் முறை. ஆனால், நாம் இதுநாள்வரை செய்த எல்லாவற்றையும், பக்கத்தில் இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்கிறாரே!' என்று ஆச்சரியம். சில விநாடிகள் அப்படியே திகைத்து நின்றவர், உடைந்துபோன குரலில் மெதுவாக பேசத் தொடங்கினார்.

"பெரியவா! சமீபகாலமா குடும்பத்தை ஒவ்வொருநாளும் நடத்துவதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுச்சு. பொறுப்பாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆனாலும் சரியாக  வேலையும் கிடைப்பதில்லை. தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகிற வரைக்கும், பலதடவை மனசாலும், செயலாலும் சுவாமி கும்பிடாத நாளே கிடையாது. ஆனா ஒரு பிரயோஜனமும் இல்லை. கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீ என்ன கல்லா? மரமா? மட்டையா? என்றெல்லாம் திட்டியும் பார்த்துவிட்டேன்.

மத்தவங்க  ஒரு தரம் கேட்டாலே ஓடோடி வந்து அருள்புரியும் சாமிக்கு, எங்க சத்தம் மட்டும் பகவான் காதிலே கேட்கவில்லை போலிருக்கிறது. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!"  கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுத்தார் அவர். பரிவோடு அவரைப் பார்த்தார் மகான்" ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டாக யோசிச்சு பதில் சொல்லு ஒரு ஆஸ்பத்திரிக்கு  தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவார்கள். சிலர் தலைவலி என்று வருவர். சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். 

சிலருக்கு வயிற்றுவலி இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் அங்கே இருக்கும்போது, நச்சுப்பாம்பு கடித்துவிட்டது என்று ஒருவரைத் தூக்கிண்டு வருகிறார்கள் என்று வைத்துக்  கொள்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் டாக்டர்கள் என்ன செய்வார்கள்? யாருக்கு உடனடியாக சிகிச்சை பண்ணாவிட்டால் அப்புறம் அது பிரயோஜனப்படாதோ  அவருக்கு சிகிச்சைதரப் போய்விடுவார்கள்.

அதுக்காக சாதரணக் காய்ச்சல், தலைவலி என்று வந்தவர்களை அலட்சியப்படுத்துவதாக அர்த்தம் இல்லை. அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக சிகிச்சை தந்துக்கலாம். சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவ வேண்டும்கிறது தெரிகிறது என்றால், சாட்சாத் பகவானுக்கு, தன் பக்தர்கள்ல, யாரோட வேண்டுதலுக்கு உடனே பலன் தரவேண்டும். யாருடைய பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று தெரியாதா? உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க தாமதமாகிறது என்றால் உன்னைவிட அதிகமாக அவஸ்தைப்படுகிற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார் என்று அர்த்தம். அந்த வேலை முடிந்ததும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார். அதற்குள் தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை புனஸ்காரங்களை நிறுத்திவிட்டு நாத்திகம் பேசுவதும் தப்பில்லையா?" பெரியவா சொல்லச் சொல்ல அந்த நபரின் மனதில் தெய்வத்தைப்பற்றி இருந்த தவறான எண்ணங்கள் கரைந்து ஓட.. அதற்கு அடையாளமாக அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக வடிந்து ஓடியது கண்ணீர்.

பகவானின் கருணையைப் பற்றி பரமாசார்யா சொன்ன பாடம் அந்த பக்தருக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்குமே தான். என்பதை உணர்ந்து கொண்ட பக்தர்கள் உரத்த  குரலில் கோஷம் எழுப்பினார்கள். 

ஜயஜய சங்கர....ஹரஹர சங்கர..!

மிக அடிப்படையானது கர்மவினை தான் கர்ம வினையை பொருத்தே முடிவுகள் அமையும். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைவழிபாடு, தியானம்,  குருவின் அறிவுரை, ஜோதிடம், இறைவழிபாடோ, யோகாவோ, தியானமோ, குருவின் அறிவுரையோ ஜோதிடமோ எதுவென்றாலும் அடிப்படையாக சில விஷயங்கள் உண்டு.  கர்மவினை தீவிரமாக இருந்தால் எது செய்தாலும் எதுவும் வேலை செய்யாது. கர்மவினை தீவிரம் ஓரளவுக்கு இருக்குமானால் 50 சதவிகிதம் கட்டுப்படுத்தலாம் 50  சதவிகிதம் துன்பப்பட நேரிடும். கர்ம வினையின் தீவிரம் பெரிய அளவுக்கு இல்லாத பட்சத்தில் மேற்சொன்ன ஏதாவது ஒரு வழியில் துன்பத்தில் இருந்து முழுமையாக  விடுபடலாம்.

பஞ்சாங்கமும் பெரும்பாலும் அது வானியல் பற்றி கூறும் விவரமான தகவலாகும். பலாபலன்கள் என்று வரும் பொழுது ஒரு தேர்ந்த ஜோதிட வல்லுனர் ஒருவரால்  மட்டுமே சரிவர கணிக்க முடியும். பலாபலன் என்று பார்க்கும் போது அதில் கணிதத்தில் நுண்ணறிவு மற்றும் ஆன்மிக நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்த ஒருவருக்கு மட்டுமே  சரியான கணிப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

ஒரு ஜோதிடரிடம் சென்றால் பரிகாரத்திற்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்லுவார் பரிகாரத்திற்கு உட்படாத பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னார் என்றால்  அடுத்தவரின் கர்மவினை அவரை பாதிக்கும் அதன் காரணமாகவே பரிகாரத்திற்கு உட்படாத பிரச்னைகளுக்கு பரிகாரம் பரிந்துரைக்க மாட்டார்கள். ஜோதிடம் பிரச்னையை  ஆராய்ந்து அதன் தீர்வாக ஆன்மிக, இறைவழிபாடு மூலமாக தீர்வை சொல்லும் என்பது வழக்கம். ஜோதிடம் இதன் காரணமாக ஆன்மீகத்தை சார்ந்து இருக்கும்.  பரிகாரத்திற்கு உட்படாத பிரச்னைகளுக்கு ஆன்மீக குருவும் வழி சொன்னார் என்றாலும் அது அவரை பாதிக்கச் செய்யும் எனக்குத் தெரிந்த பல ஆன்மிக குருக்கள் அப்படி மற்றவருடைய கர்மவினையை தாங்கள் எடுத்து துன்பப்பட்டு உள்ளார்கள். அவர்கள் துன்பப்பட்டாலும் அந்த கர்ம வினையைக் கரைப்பதற்கான வழிவகைகள் அவர்களுக்குத்  தெரியும் ஆகையால் அவர்கள் துன்பப்படும் கால அளவு மிகக் குறைந்த அளவு.

பொதுவான பரிகார முறைகள் என்னவென்று இங்குக் காண்போம். திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி அமைந்துள்ள நவகைலாயம் என்ற நவக்கிரக கோவில்கள். 

பாபநாசம் - சூரியன்

சேரன்மகாதேவி - சந்திரன்

கோடகநல்லூர் - செவ்வாய்

குன்னத்தூர் - இராகு

முறப்பநாடு - வியாழன்

திருவைகுண்டம் - சனி

தென்திருப்பேரை - புதன்

ராஜபதி - கேது

சேர்ந்த பூமங்கலம் - சுக்கிரன்

சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்! அவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்!! அடிப்படையில் இந்த கோவில்கள் ரோமச முனிவர் என்ற ஒருவர் தான் முக்தி பெறும்  பொருட்டு தன் குருவின் ஆலோசனைப்படி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஸ்தாபித்து வழிபட்ட கோவில்களாகும். ரோமச முனிவர் தன் குருவான அகஸ்தியரின்  ஆலோசனையின் அடிப்படையில் தன் முக்திக்காக ஸ்தாபித்து வழிபட்ட கோவில்கள். மேலும் இக்கோவிலை வழிபடுவதன் மூலமாக சிவபெருமானே நேரடியாக வந்து  கிரகத்தின் பாதிப்பில் இருந்து விடுவிப்பதாக ஒரு நம்பிக்கை. எனவே, ஜாதகத்தில் பிரச்னை உள்ளதோ இல்லையோ, நவக்கிரகங்கள் வழிபட்ட சிவனை தினமும்  வணங்குவதனால் அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது அனைவரின் நம்பிக்கை.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

]]>
மகா பெரியவா, பரமாசார்யா சொன்ன பாடம் , பகவானின் கருணை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/periyava.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/20/ஏன்-எனக்கு-மட்டும்-இப்படி-எல்லாம்-நடக்கிறது-3238463.html
3238459 Glance எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆவேசம் DIN DIN Friday, September 20, 2019 01:28 PM +0530
சென்னை: எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா? என்று மக்கள் நீதி மன்றம் தலைவர் கமல் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்று பதிவிட்டு ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

கமல் வெளியிட்டிருக்கும் விடியோவில்,  எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு பேனர் வைக்கக் கூடாது என்பது கூடவா அதிகாரிகளுக்குத் தெரியாது.

எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா?

அரசாங்கத்தின் அலட்சியத்தால் எத்தனை ரகுக்கள், எத்தனை சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  தவறைத் தட்டிக் கேட்காமல் மக்கள் இருப்பது பைத்தியக்காரத்தனம். அரைவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகிறதோ? என்று கமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

]]>
kamalhasan, Kamal https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/kamalhassan-2.jpg மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் https://www.dinamani.com/tamilnadu/2019/sep/20/kamal-release-video-3238459.html
3238447 Glance மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்! DIN DIN Friday, September 20, 2019 12:43 PM +0530
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகி, தற்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலரும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர்.

மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள், அனைத்து முன்னாள் எம்.பி.க்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால்?

கடந்த மே 25ம் தேதி இந்தியாவின் 16வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். 

ஆனால், 4 மாதங்கள் ஆகியும், பல எம்.பி.க்கள் தற்போது வரை பங்களாவை காலி செய்யவில்லை. இதனால், தற்போது புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கு பங்களாவை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, மத்திய இணை அமைச்சர் ஜி.கே. ரெட்டிக்கு ஏற்கனவே ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு தங்கியிருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டை காலி செய்யாததால், ஜிகே ரெட்டிக்கு புதிய பங்களா ஒதுக்கப்பட்டது.

அசோகா சாலையில் உள்ள புதிய பங்களாவில் இருக்கும் ராதா மோகன் சிங் வீட்டை காலி செய்ய மேலும் கால அவகாசம் கேட்டிருப்பதால், ஜிகே ரெட்டி தற்போது அந்திரா பவனில் தங்கியிருந்துதான் நாடாளுமன்ற அலுவல்களை கவனித்து வருகிறார்.

கடந்த மாதமே, முன்னாள் எம்பிக்கள் பங்களாவை காலி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உத்தரவுகளையும் பிறப்பித்தது. 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, அதுபோன்ற வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையையும் துண்டித்தது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் பங்களாக்களை காலி செய்யாமல் அடம் பிடிக்கும் முன்னாள் எம்.பி.க்களால், புதிய எம்.பி.க்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை கலைக்கப்படும் போதெல்லாம் இந்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அரசு பங்களாக்களில் உரிய காலத்துக்குப் பிறகும் தங்கியிருக்கும் முன்னாள் எம்.பி.க்களிடம் உரிய வாடகை வசூலிப்பது அல்லது அபராதம் வசூலிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மத்திய அரசு இதற்கு தீர்வு காண முடியும். 

]]>
former MPs, official bungalows, indian parliament, 17th loksabha, அரசு பங்களா, முன்னாள் எம்.பி.க்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/19/w600X390/Parliament_building_EPS.jpg https://www.dinamani.com/india/2019/sep/20/what-former-mps-yet-to-vacate-their-official-bungalows-3238447.html
3238395 Glance விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு: நினைத்ததை விடவும் மிகப் பயங்கரமாகும் விஷயம் ENS ENS Friday, September 20, 2019 11:57 AM +0530
கொச்சி: இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் திருடுபோன விஷயம், நினைத்துப் பார்த்ததையும் விட மிகப் பயங்கர பின்விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டப்பட்டு வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலைப் பற்றிய மிக முக்கிய விஷயங்கள் அனைத்தும் அந்த கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் இதில் இருக்குமோ என்ற அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை சோதித்துப் பார்த்த போது அது இயங்காததால், கப்பலில் சோதனை செய்த போதுதான், கணினிகள் திருடுப் போன விஷயமே அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

ஒரு முக்கியமான கம்ப்யூட்டர், 10 ஹார்ட் டிஸ்குகள், 3 சிபியு ஆகியவை விக்ராந்த் கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதிக்குள் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த திருட்டு குறித்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது, திருடிய பொருட்களை, எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கு கொள்ளையர்களுக்கு போதிய அவகாசமும் கிடைத்திருக்கிறது.

இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை, கடற்படை தரப்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இது தொடர்பாக கேரள காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவும்  விசாரித்து வருகிறது. 

கட்டுமானம் செய்யப்பட்டுவரும் போர்க் கப்பலில் இருந்து, கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளது, மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடாக பார்க்கப்படுகிறது. 

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கணினிகளிலிருந்து 10 ஹார்டு டிஸ்க்குகள், 3 சிபியுக்கள் ஆகிய வன்பொருள்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் கப்பல் குறித்த முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுதொடர்பாக உயரதிகாரிகள் கூறுகையில், கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் தான் அந்தப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. திருட்டு நடைபெற்று சுமார் 2 வாரங்களுக்கு அதுகுறித்த தகவல் தெரியவில்லை. இதற்குள்ளாக திருடப்பட்ட பொருள் அது கடத்தப்பட வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.2.10 லட்சமாகும் என்கிறார்கள். 

இதுதொடர்பாக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருவதாக கேரள காவல்துறை இயக்குநர் லோகேநாத் பெஹரா கூறியுள்ளார். 

மேலும், கடற்படையும், மத்திய புலனாய்வு அமைப்பும் தனியே சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு சம்பவம் உளவு வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) வசம் உள்ளது. கடற்பகுதி வழியாக கப்பலுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அதனை எதிர்கொள்ளவே சிஐஎஸ்எஃப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

எனினும், விக்ராந்த் கப்பலின் உள்பகுதியில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் கப்பலில் பாதுகாப்புப் பணிக்கு 82 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் விசாரணை பார்வை விழுந்துள்ளது. 

கப்பலுக்குள் யார் வந்தாலும் அவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். கப்பல் கட்டும் நிறுவனத்தின் ஊழியர்களும், மற்றவர்களும் பாதுகாவலர்களின் கண்காணிப்பில்தான் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் தீவிர விசாரணையை விட, விரைவான விசாரணை என்பதுதான் மிகவும் முக்கியம். காணாமல் போன பொருட்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கினால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே அந்த அவசரத்துக்கக் காரணமாக அமைகிறது.

கடந்த இரண்டு மாத காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தை சுற்றிப் பார்த்துச் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் தீவிரமாக சோதித்த பிறகே அனுமதிப்பது வழக்கம். அந்த ஆவணங்களின் நகல்கள் பாதுகாக்கப்படுவதும் வழக்கம். இந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமானப் பணியில் தொடர்புடைய நபர்கள் எவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

கப்பலின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புக் கேமராவும், கண்காணிப்பு உணர் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

]]>
INS Vikrant, Cochin Shipyard, Indian defence system, Integrated Platform Management System, Central Industrial Security Force https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/20/w600X390/INS_Vikrant_EPS.jpg https://www.dinamani.com/india/2019/sep/20/theft-of-hardware-from-ins-vikrant-could-be-more-serious-than-thought-3238395.html
3237657 Glance உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? சவால்! C.P.சரவணன், வழக்குரைஞர் Thursday, September 19, 2019 06:12 PM +0530  

உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? கடைசியாக எப்போது சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்? என்றால்.. எனக்கு அப்படி உட்கார்ந்து பழக்கமே இல்லை. இன்று கஷ்டப்பட்டு செல்போனில் டைமரை வைத்து எத்தனை நிமிடம் உட்கார முடிகிறது என பார்த்தேன். 15 நிமிடம் உட்கார முடிந்தது. இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் உயரத்தில் இருந்தன. கஷ்டபட்டு முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார்ந்தேன், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாது. முதுகு நேராக தான் இருக்கும்.

இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு.

நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து தான் உண்போம், உட்கார்வோம். வீட்டுக்கு யாராவது வந்தால் "ஜமுக்காளத்தை விரி, பாயை விரி" என தான் முன்பு சொல்வார்கள். இப்ப தான் சேர், சோபா.

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்.

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். 

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நாற்காலி, சோபாவில் அமர்வதன் தீமைகள்

இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது.

இப்படி ஸ்பெஷல் நாற்காலி எல்லாம் வாங்கி முதுகுவலி குணமாகுமா என பார்ப்பது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். அதனால் வலி வரும் விகிதம் குறையுமே ஒழிய வலி வருவது நிற்கப்போவது கிடையாது.

ஜெரென்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழவைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு. ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு, இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணீக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.

கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழகாசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.

இம்மாதிரி கிழே உட்காருவது நாகரிகக்குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம். சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்துபோன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில்தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகிவிடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரிக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.

ஓஸ்டியோபெரோஒசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத்தன்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன

]]>
sitting position, general health issue, walking, சம்மணம் போட்டுஅமர்தல், சம்மணம், பொது ஆரோக்கியம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/sammanam.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/19/உங்களால்-சம்மணம்-போட்டு-உட்கார-முடியுமா-சவால்-3237657.html
3237652 Glance விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை DIN DIN Thursday, September 19, 2019 06:00 PM +0530
கொச்ச்சி : கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் உள்ள நவீன கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய தகவல்கள் அடங்கிய கணினிகள் மாயமாகியிருப்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல், கட்டப்படும் தளத்துக்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் விக்ராந்த் கோர்க் கப்பலில் இருந்த 4 கணினிகள் மாயமாகியிருப்பதும், சில கணினிகளில் இருந்த ஹார்ட்டிஸ்க் போன்றவை காணாமல் போயிருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த கணினிகளில்தான் விக்ராந்த் கப்பலின் முழு தகவல்களும் அதாவது எரிபொருள் நிரப்ப வேண்டிய பகுதி, ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என அனைத்து விவரங்களும் முழுமையாக இருக்கும் என்பதால், கணினிகள் மாயமானது குறித்து தீவிர விசாரணைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த்..
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் கட்டுமானப் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வந்தன. நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ஐஎன்எஸ் விக்ராந்தில் எரிவாயு மூலம் இயங்கும் டர்பைன்கள் செயல்படத் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஐஎன்எஸ் விக்ராந்த் முழுமையான முதல்கட்ட சோதனைக்கு உள்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனையின் போது மிதக்கும் நிலையில் கப்பலின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்திறன் சோதிக்கப்படும். அதைத் தொடர்ந்து கப்பலை கடலில் இறக்கிச் சோதனை செய்யப்படும். இறுதியாக அந்தக் கப்பல் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 

ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே அதில் விமானங்களை இயக்கும் சோதனை நடத்தப்படும். 

சீனா உள்ளிட்ட நமது அண்டை நாடுகளின் பலத்தைப் பொருத்தே நாம் விமானம் தாங்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான தேவையும் இருக்கும். கடல்சார்ந்த பகுதிகளில் நமது விமானப் படையின் செயல்பாடுகளுக்கு இத்தகைய விமானம் தாங்கிக் கப்பல்கள் அவசியமாகும்.

உலகத் தரத்திலான போர்க் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் கட்டுமானம் செய்யும் வகையில் இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது. 

வர்த்தக ரீதியாகவும் கப்பல்களை கட்டுமானம் செய்யக் கூடிய வகையில் நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடற்படை துணைத் தளபதி ஏ.கே. சக்ஸேனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/vikrant.jpg https://www.dinamani.com/india/2019/sep/19/vikranth-ship-important-computer-missing-3237652.html
3237639 Glance ஹிந்தி மொழி விவகாரம்: பின்வாங்கியது யார்? அமித் ஷாவா? ஸ்டாலினா? Muthumari Thursday, September 19, 2019 05:10 PM +0530  

ஹிந்தி மொழி குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்ததை அடுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20ம் தேதி நடத்தப்படவிருந்த திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் ஸ்டாலின் இருவருமே இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ஹிந்தி மொழி குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு:

கடந்த செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அமித் ஷா, 'இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அனைத்து மொழிகளுக்குமே அவற்றுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், நாடு முழுமைக்கும் ஒரே மொழி என்பது தேவை. அந்த வகையில், நாட்டில் பெரும்பான்மையான மக்களால் ஹிந்தி பேசப்படுவதால், அந்த மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும்' என்று கூறியிருந்தார். 

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு: 

மத்திய பாஜக அரசு வெளியிடும் அறிவிப்புகளுக்கு/கூறும் கருத்துகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு கிளம்பும் என்ற அளவிற்கு பேசப்படும் நிலையில், மொழிக்காக போர் நடத்திய தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்...  

அமித் ஷாவின் பேச்சு, ஹிந்தி திணிப்பு முயற்சி என திமுக, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தமிழகத்தில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அமித் ஷா தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க முற்பட்டால் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தைக் காட்டிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

அதேபோன்று, மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் கூட, ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை தென் மாநிலங்கள் மட்டுமல்ல; வடமாநிலங்களே எதிர்க்கும் என்று கூறியிருந்தார்.   

ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்:

ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் செப். 20-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்தது.  போராட்டத்திற்கான வேலைகளிலும் திமுக முழுவீச்சில் இறங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும் என்றும் அனைத்து தொண்டர்களும் கலந்துகொள்வதோடு, மிகப்பெரிய அளவிலான போராட்டமாக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடனும் இதுகுறித்து ஸ்டாலின் ஆலோசனையும் நடத்தினார். மாவட்டத் தலைநகரங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் நிலையில் இருந்தன. 

அமித் ஷாவின் தன்னிலை விளக்கம்:

இந்த ஒரு சூழ்நிலையில் தான் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஹிந்தி மொழி பத்திரிகை ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, 'ஹிந்தி மொழியை நாட்டின் எந்தவொரு பகுதியிலும், எப்போதும் திணிக்க நினைத்ததில்லை. எனினும், அந்தந்த பிராந்திய மொழிகளுக்குப் பிறகு 2-ஆவது மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பேசி வருகிறேன். 

மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன். ஹிந்தி மொழியை பிரதானமாகக் கொண்டிராத மாநிலத்திலிருந்து தான் நானும் வந்துள்ளேன். நான் சார்ந்த குஜராத் மாநிலத்தில் குஜராத்தி தான் தாய்மொழியே தவிர, ஹிந்தி அல்ல. 

ஒரு குழந்தை தனது தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் தடுமாற்றமில்லாமல் இயல்பாக இருக்கும். அவ்வாறு தாய்மொழி என்று குறிப்பிடுவது ஹிந்தி மொழியை அல்ல. குஜராத் மாநிலத்துக்கு குஜராத்தி மொழி இருப்பது போல், அந்தந்த மாநிலத்தின் பிரத்யேக மொழியே தாய்மொழியாக குறிப்பிடப்படுகிறது. 

அதேவேளையில், நாட்டுக்கென பொதுவாக ஒரு மொழி இருக்க வேண்டும். ஒருவர் தனது தாய்மொழிக்கு அடுத்தபடியாக, மற்றொரு மொழியைக் கற்க விரும்பினால் அது ஹிந்தியாக இருக்க வேண்டும். இதையே ஒரு கோரிக்கையாக முன்வைத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைத் தான் புரிந்துகொள்ள இயலவில்லை' என்று விளக்கம் அளித்தார்.

அமித் ஷாவின் இந்த விளக்கம், ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாகவே இருந்தது. எனினும், அமித் ஷா இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

அமித் ஷா தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? 

ஹிந்தி மொழி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தீவிர போராட்டப் பணிகளில் திமுக இறங்கியது இந்திய அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; முக்கியமாக தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவுக்கு திமுகவின் இந்த போராட்டம் முட்டுக்கட்டையாக இருக்கும்; ஏற்கனவே திமுக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதோடு, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்று பேசப்படுகிறது.

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்று கூறியவர்களே, ஸ்டாலின் மிகவும் நுட்பமாக அரசியலை கையாள்கிறார் என்று பேசுகிறார்கள்.  இந்த நிலையில், திமுக ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது தமிழக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த போராட்டங்கள்:

முன்னதாக, 1964ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசு ஹிந்தியை கட்டாயமாக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் 1965ம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுகவில் மிகப்பெரிய அளவிலான ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது இந்தியாவையே உலுக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 

1965ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் நாளான குடியரசு நாளை கருப்பு தினமாகக் கொண்டாட திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் உயிர்பலியையும் சந்திக்க நேரிட்டது.

இந்தப் போராட்டதில் மாணவர்கள் பெரும்பாலானோர் ஈடுபட்டனர். மாணவர் சங்கத் தலைவர்கள் இருவர் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

இந்த மாபெரும் போராட்டதையடுத்து, மத்திய அரசு தனது முடிவை தளர்த்திக் கொண்டது. அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அறிவித்தார். 

திமுகவின் இந்தப் போராட்டம் பின்னாளில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதன்பின்னர் 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. 

சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. 1937ம் ஆண்டு  சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்றது இந்திய தேசிய காங்கிரஸ். அப்போது தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயமாக்கினார் ராஜாஜி. இதற்கு எதிராக பெரியார் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. மூன்று வருடங்களுக்கு இந்த போராட்டம் நீடித்தது . பின்னர் ராஜாஜி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, இத்தகைய போராட்டங்கள் இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் திமுகவின் போராட்டமும் நாட்டு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவாது என்று கருதி அமித் ஷா இதுபோன்று ஒரு விளக்கம் அளித்திருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஏனென்றால் அமித் ஷா, தனது அரசியல் வரலாற்றில், தான் கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் அளித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்டாலின் - ஆளுநர் சந்திப்பு:

இதற்கிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை காலை அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுடன் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் உடன் சென்றார்.

ஆளுநருடனான சந்திப்பையடுத்து, அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஆளுநர் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றோம். வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார். ஆர்ப்பாட்டத்தை என்ன காரணத்துக்காக நடத்துகிறோம் என்பதை விளக்கிச் சொன்னோம்.

அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் ஆளுநர் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று கேட்ட நேரத்தில், நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். மத்திய அரசு சொல்லித்தான் உங்களிடம் கூறுகிறேன் என்கிற உறுதியைக் கொடுத்தார். அதன்படி, வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். அதேசமயம், எந்த நிலையில் ஹிந்தி திணிக்கப்பட்டாலும், நிச்சயமாக அதை திமுக என்றும் எதிர்க்கும்' என்று பேசினார். 

ஸ்டாலின் பின்வாங்கக் காரணம் என்ன?

கட்சித் தொடக்கம் முதலே ஹிந்தித் திணிப்பை எதிர்த்து வரும் திமுக, முதல்முறையாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்டாலினின் பின்வாங்கலில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். 

ஹிந்தி மொழி குறித்த தனது பேச்சுக்கு விளக்கமளித்த அமித் ஷா நேற்று பேசும்போது, ஹிந்தி மொழி குறித்த தனது கருத்து தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும்; தனது கருத்துகளைக் கொண்டு எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால், அது அவர்களின் விருப்பம் சார்ந்தது; அதை வைத்து அரசியல் செய்தால் செய்யட்டும்' என்றும் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலினைத் தான் அவர் மறைமுகமாக எச்சரித்து இவ்வாறு கூறியிருப்பார் போலும். இதனால் தான் ஆளுநர் கூறியவுடன் ஸ்டாலின் தனது போராட்டத்தை கைவிட்டுவிட்டார். ப.சிதம்பரத்தை அடுத்து தமிழகத்தில் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜகவினர் கூறி வருவதன் தாக்கமாக இருக்குமோ? மத்திய அமைச்சர் கூறிய ஒரு சர்ச்சை கருத்து, ஆளுநர் வாயிலாக சமரசம் செய்யப்படுவது ஏன்? நாட்டின் நலன் கருதி தான் ஆளுநர், ஸ்டாலினை சந்தித்து பேசினாரா? என்பன போன்ற கருத்துகள்/ விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

திமுகவை தோற்றுவித்த அண்ணாவும் சரி, வழிநடத்திய கலைஞர் கருணாநிதியும் சரி, மொழி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியதே இல்லை. 1965ல் ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் கருணாநிதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். டால்மியாபுரத்தை 'கல்லக்குடி' என்று மாற்ற வேண்டும் என தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தியதெல்லாம் இங்கு குறிப்பிடத்தக்கவை. 

ஆனால், ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக தலைவரான ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொண்டது முக்கியமாக தமிழக மக்களிடையே பல்வேறு கேள்விகளையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

]]>
திமுக , ஸ்டாலின், MK stalin, பாஜக , அமித் ஷா, Hindi Language, Amit Shah, ஹிந்தி திணிப்பு , ஹிந்தி எதிர்ப்பு, Hindi Imposition https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/stalin_amit_shah.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/19/hindi-language-issue-amit-shah-vs-stalin-3237639.html
3237644 Glance கரும்புக் கடை முஸ்தபாவுக்கு கொடுத்த மாத்திரையில் இரும்புக் கம்பி: என்னக் கொடுமை? Thursday, September 19, 2019 04:27 PM +0530  

கோவையில் பல் வலியால் பாதிக்கப்பட்ட நபர் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (24). இவர் கார் இருக்கை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். முஸ்தபா கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று (செப்.18) காலை கரும்புக் கடை பகுதியில் உள்ள செல்வம் மருந்தகத்தில் மாத்திரை வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று மாத்திரையை உடைத்து உண்ண முற்பட்டார். அப்போது மாத்திரைக்குள் சிறிய இரும்புக் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு செல்வம் மருந்துக் கடையில் முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து மாத்திரை வாங்கியதில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்க இருப்பதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்தபா கூறும்போது, "சாதாரண பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று அலட்சியங்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த மருந்து நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
 

]]>
iron kambi, tablet, pain relief tablet, பல் வலி மாத்திரை, மாத்திரையில் இரும்புக் கம்பி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/iron_kambi.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/19/iron-kambi-in-pain-relief-tablet-3237644.html
3237642 Glance இதைச் செய்தால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையாம்: இம்ரான் கான் திட்டவட்டம் IANS IANS Thursday, September 19, 2019 04:13 PM +0530
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டடிருக்கும் ஒன்றிணைந்த வர்த்தக மையத்தை துவக்கி வைத்துப் பேசிய இம்ரான் கான் இதைக் கூறினார்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 

]]>
ஜம்மு காஷ்மீர், imran khan, இம்ரான் கான், சிறப்பு அந்தஸ்து https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/imran_khan_ap.jpg https://www.dinamani.com/world/2019/sep/19/no-chance-of-talks-with-india-imran-khan-3237642.html
3237636 Glance மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு PTI PTI Thursday, September 19, 2019 03:41 PM +0530
புது தில்லி: அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசினார்.

புது தில்லி நார்த் பிளாக் அலுவலகத்தில் இன்று அமித் ஷாவை சந்தித்துப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து உண்மையான இந்திய குடிமக்கள் கூட நீக்கப்பட்டுள்ளனர். அதில் ஏராளமான பெங்காளி, ஹிந்தி, கோர்காஸ் மொழி பேசும் மக்களும் அடங்குவர். அவ்வளவு ஏன், ஏராளமான அஸ்ஸாமி மக்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசுவதற்காக இங்கு வரவில்லை, அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேறு பற்றிப் பேசவே வந்தேன் என்றும் அவர் கூறினார்.

இதே விஷயம் குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

]]>
amith shah, Amit Shah discussed, Banerjee Meets PM Modi, Mamata Banerjee, bjp president amithsha speech https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/Amit_Shah_Mamata.jpg https://www.dinamani.com/india/2019/sep/19/mamata-banerjee-meets-amit-shah-3237636.html
3237634 Glance ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்? - ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்  Friday, September 20, 2019 04:08 PM +0530  

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்னரே, நமது ரிஷிகளும், முன்னோர்களும் கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். அந்த கிரகங்களின் இயக்கத்தினை நன்கு அறிந்திருந்த நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஜோதிடம் எனும் தெய்வீக கலை. ஜோதிடத்தைக்கொண்டு ஒரு ஜாதகரின் விதியை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்ளும் அந்த விதியில் ஒரு சில விஷயங்கள் அந்த ஜாதகருக்கு சாதகமாக இல்லையே என தெரிய வரும் போது, அதனை ஏதேனும் ஒரு பரிகாரம் மூலம் மாற்றமுடியுமா என்கிற கேள்வி எழும்.

விதி என்கிற ஒரு ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய யோக மற்றும் அவயோகங்களை (யோகமற்ற நிலை) பற்றி, அதாவது அந்த ஜாதகர் அனுபவிக்கக் கூடிய நல்ல மற்றும் தீய பலன்களாகிய, ஜாதகரின் வாழ்க்கை முறைகளைப் பற்றித் தெரிவிப்பதுவே ஆகும். விதியை எவராலும் மாற்ற முடியாது. விதி என்பது இறைவனால் நமது கர்ம வினைகளுக்கு (நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு) ஏற்ப வகுக்கப்படுவது. அதனை உலகில் எவராலும் மாற்றவே முடியாது. அந்த வித்தியானதை, ஒரு குழந்தை இந்த பிரபஞ்சத்தில் வந்து பிறக்கின்ற பொழுதே, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தே அந்த குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விதிப்படி தான் அந்த குழந்தையின் வாழ்க்கை முறை அமையும். இதனை சுருங்க சொன்னால், ஒருவரின் விதி என்பது, முழுக்க முழுக்க அவரின் பூர்வ புண்ணிய / பாவ அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. 

விதியை மதியால் வெல்லலாம், விதியை வெல்லவே முடியாதா! விதி வழியே மதி செல்லும் போன்றவை தோன்றவே செய்யும். அதன் அர்த்தம் என்ன என்கிற வினா, நம்முள் தோன்றுவது இயற்கை தான். ஒரு ஜாதகர் தாம் பிறந்த பொழுது வான் மண்டலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் பயணிக்கிறதோ / சென்று கொண்டிருக்கிறதோ, அது தான் அந்த ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசையே அந்த ஜாதகருக்கு ஆரம்ப தசையாக அமையும். இதனைத் தொடர்ந்து மற்ற கிரகங்கள், ஒரு குறிப்பிட்ட வரிசையில், தத்தமது தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசையைத் தான் மதி (சந்திரனின் வேறு பெயர்) என்று சுருக்கமாக நமது முன்னோர்கள் அழைத்தனர். 

ஒரு ஜாதகத்தில், 7ஆம் பாவம் என்பது, ஒரு ஜாதகரின் வாழ்க்கை துணை (ஆண் ஜாதகர் எனில் மனைவி, பெண் ஜாதகர் எனில் கணவர்) மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும். அதே போல ஆண் ஜாதகத்தில், சுக்கிரன் களத்திர காரகராகவும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் களத்திர காரகராகவும் வருவார்கள். களத்திர காரகர் என்றால் வாழ்க்கைத் துணை மற்றும் திருமண வாழ்வு பற்றித் தெரிவிக்கும் கிரகம் ஆகும்.

விதிவழியே மதி செல்லும், என்பது எவ்வாறு?

பொதுவாக ஒரு ஆண் ஜாதகருக்கு, பாவத்தில் 7-ஆம் பாவமும், கிரகத்தில் சுக்கிரனும் 6, 8, 12 போன்ற கொடிய பாவங்களை தொடர்புகொண்டு கெட்டிருந்தால், திருமண வாழ்க்கை அமைவதே கேள்விக்குறிதான். என்பதனை விதி மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். இந்த 7-ஆம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்தின் தசையோ அல்லது சுக்கிரனின் தசையோ நடப்பில் இருந்தால் (மதி வழியாக தொடர்பானால்) நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும். இங்கே தசாநாதன் என்கிற மதியும் கெட்டுப்போன மாதிரி ஆகிவிடும். இதைத்தான் விதி வழியே மதி செல்கிறது என்பர். ஆனால், நமது மக்கள் விதி வழியே மதி, அதாவது புத்தி செல்கிறது என்பர்.

விதியை, மதியால் வெல்லலாம் எவ்வாறு?

ஆனால், மேலே சொன்னதற்கு மாறாக, 7-ஆம் பாவ உப நட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் மற்றும் சுக்கிரனைத் தவிர மற்ற 7 கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் திருமணத்திற்கு சாதகமான 1, 3, 5, 7, 9, 11 போன்ற பாவங்களைத் தொடர்பு கொண்டு தசை நடத்தும் பொழுது என்ன தான் திருமணத்திற்கான விதி (மேலே சொன்ன 7-ம் பாவம் மற்றும் சுக்கிரன் பாதகமான நிலையில் இருந்தாலும் கூட மதி என்கிற நடப்பு தசை நாதனாக வரும் கிரகம் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தால், விதியில் உள்ள அந்த தீய பலன்களை தற்காலிகமாக நிறுத்தி அதாவது அந்த கிரகத்தின் தாச காலத்தில் மட்டும், மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையைத் தரவல்லது. இதைத் தான் விதியை மதியால் வெல்லலாம் என்பதாகும்.

எல்லாம் வல்ல இறைவன், எவருக்கும் தீமையான பலன்களை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் கர்மா வினைகளைப் பொறுத்தே அமைகிறது. அதனை ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆகவேண்டும்.

பரிகாரம் என்பது என்ன? அவைகளை செய்வதால் நம் பிறந்த  ஜாதக கட்டத்தில் உள்ள பாதிப்பு தரும் கிரக நிலைகள், பாதிப்பற்ற நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

ஒரு ஜாதகர் ஒரு ஜோதிடரை அணுகுகிறார். அவர் அந்த ஜோதிடரிடம் தாம் தற்போது வேலை செய்யும் கம்பெனியை விட்டு ஏதாவது சொந்த தொழில் செய்யலாம் என வினவுகிறார் எனக் கொள்வோம். 

ஜோதிடத்தில், 6ஆம் பாவம் என்பது ஜாதகர் செய்யும் உத்தியோகத்தைக் குறிக்கும், 7ஆம் பாவம் என்பது சொந்தத் தொழிலைக் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எந்த பாவம் புறம் சார்ந்த 2, 4, 6, 10 போன்ற இரட்டைப்படை (பொருளாதாரத்திற்குச் சாதகமான) பாவங்களை வலுவாக தொடர்புகொள்கின்றதோ அதனை ஒரு ஜாதகர் செய்வதே ஏற்புடையது ஆகும். அதாவது ஒருவருக்கு, 6 ஆம் பாவத்தை விட 7ஆம் பாவம் அதிக வலுவுடன் காணப்பட்டால், சொந்தத்தொழில் செய்யக் கொடுப்பினை உள்ளது எனலாம். ஆனால் அதற்கு மாறாக 6ஆம் பாவம் வலுத்திருந்தால், உத்தியோகம் செய்வது தான் சிறந்தது. இது தான் ஒரு ஜாதகர் செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும். பரிகாரம் என்பது, மாற்றுச் செயல் என்பது தான் சரியான பொருள் ஆகும். மேற்படிக்கூறிய கருத்துக்களை, ஒரு தலைசிறந்த ஜோதிடரின் வாயிலாக அறியும் போது, நிச்சயம் ஆவர் ஒரு நல்ல வழியைக் காட்டுவார். ஆனால், அதற்கும் ஒருவரின் ஜாதகத்தில் தெய்வத்தின் கொடுப்பினை இருக்கவேண்டும். அப்படி இருப்பவர்க்கே சரியான பலன்களைப் பெற்று வாழ்வில் நலமுடன் வாழ முடியும். 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

]]>
ரிஷிகள், ஜோதிடம் அவ்வளவு முக்கியமா?, விஞ்ஞானிகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/astro1.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/19/ஜோதிடம்-அவ்வளவு-முக்கியமா-அதை-ஏன்-பார்க்க-வேண்டும்-3237634.html
3237633 Glance டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 176 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி இதுதான்! Sunday, September 22, 2019 11:55 AM +0530
தமிழக நீதிமன்றங்களில் நிரப்பப்பட உள்ள 176 சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்களை நேரடி போட்டித் தோ்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்கவுள்ள இளம் வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 176

பணி: Civil Judge 

சம்பளம்: மாதம் 27,700 - 44770

தகுதி: சட்டப் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டு. வயது வரம்பு சலுகை பெற விரும்புவோர் வழக்குரைஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி சட்ட பட்டதாரிகள் 27 வயதிற்குள்ளும், சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்குரைஞர்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைப் பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்

முதன்மைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2019

]]>
TNPSC, Jobs, notification, Recruitment, Direct Recruitment, vacancies, TNPSC Recruitment 2019, TNPSC invites, employment news in tamil 2019 , latest job, velai vaippu seithigal tamil, current employment news in tamil, latest employment news in tamil , On https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/TNPSC-.jpg https://www.dinamani.com/employment/2019/sep/19/tnpsc-invites-online-applications-for-recruitment-of-176-civil-judge-posts-3237633.html
3237631 Glance தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு அக்.23ம் தேதி முதல் முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் DIN DIN Thursday, September 19, 2019 03:42 PM +0530
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். 

எனவே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

அந்தவகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது,  மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள்,  தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கடந்த ஆண்டைப் போல தாம்பரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். 

வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. 

மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அங்கு பேருந்து நிலையம் இயக்கப்படுமா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

தீபாவளி பேருந்துகளுக்காக ஆகஸ்ட் 23ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும். 

அதேப்போல, தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மட்டுமல்லாமல், பெங்களுருவில் பணியாற்றும் தமிழர்களும் சொந்த  ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதற்குண்டான முடிவுகள் எட்டப்படும்.

சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தீபாவளி பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தில் நகர்ப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
 

]]>
deepavali, special buses, tamilnadu special bus, bus terminals, m.r. vijayabasker, தீபாவளி சிறப்புப் பேருந்து, சிறப்புப் பேருந்து, பேருந்துமுன்பதிவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/13/w600X390/pongal-bus.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/19/deepavali-special-buses-ticket-booking-starts-from-oct-23rd-3237631.html
3237622 Glance திருவள்ளூரில் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் DIN DIN Thursday, September 19, 2019 01:26 PM +0530
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழையும், பூண்டியில் 21 செ.மீ. மழையும், அரக்கோணத்தில் 17 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

மேலும் படிக்க: சென்னையில் இந்த ஆண்டின் முதல் கன மழை நாள் இன்று: எப்படி இருக்கிறது நகரம்?

தமிழகத்தில் கனமழையைப் பொருத்தவரை திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இடைவெளியுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

]]>
சென்னையில் மழை, தமிழ்நாடு வெதர்மேன், திருவள்ளூர்மாவட்டம், சென்னையில் கன மழை, கன மழைக்கு வாயப்பு, வானிலை ஆய்வு மையம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/rain_tamilnadu.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/19/thiruvallur-22-cm-rain-fall-chennai-imd-3237622.html
3237620 Glance மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா? கார்த்திகா வாசுதேவன் Thursday, September 19, 2019 01:11 PM +0530  

இந்தியாவில் செப்டம்பர் 18, 2019 முதல் இ சிகரெட் என்று சொல்லப்படக்கூடிய எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் அல்லது மின் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் தடையானது நடைமுறைக்கு வரும் நிமிடம் மின் சிகரெட்டுகளின் நுகர்வு, உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் மின் சிகரெட்டுகளுக்கான  விளம்பரம் ஆகியவை இந்தியாவில் சட்டவிரோதமாகிவிடும்.

மின் சிகரெட்டுகள், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தவும், அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்கவுமாக உண்டான மாற்று முயற்சிகளில் ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டுத் தானே அனேக மக்களிடையே புழக்கத்துக்கு வந்தது. ஆனால், நாளடைவில் பார்க்கையில், எதற்காக மின் சிகரெட்டுகளை அங்கீகரித்தமோமோ அந்த நோக்கமே முற்றிலுமாகக் கெட்டு தற்போது இந்த மின் சிகரெட்டுகளை நுகர்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்போது இந்த மின் சிகரெட்டுகளின் புகைக்கும் அடிமையாகி தொடர்ந்து அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறார்கள். எனவே மின் சிகரெட்டுகளை முற்றிலுமாகத் தடை செய்து விடலாம் எனும் முடிவுக்கு அரசு வந்தது என்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மின் சிகரெட் தடையை அறிவிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அவரது கரிசனத்திலும் பொருளில்லாமலில்லை. மின் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட முடியாமல் அமெரிக்காவில் இதுவரை 6 பேர் நுரையீரல் நோய் தாக்கி இறந்திருப்பதாக பொதுமக்களிடையே மின் சிகரெட் பாதகங்களுக்கான ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதையும் பாருங்க... அஸாம் கொடூரம்! காவல்துறையின் அரக்கத்தனமான விசாரணையில் கருவை இழந்த கர்ப்பிணிப்  பெண் மற்றும் சகோதரிகள்!

அமெரிக்காவை விடுங்கள், நம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,16,91,781 மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இது  தொடர்பான புள்ளி விவரக்கணக்குகள் கூறுகின்றன.

மின் சிகரெட்டுகளை இந்தியாவில் தடை செய்வதற்கான காரணங்களில் மிக முக்கியமானதாக மத்திய அரசு கருதுவது இப்பழக்கம் இந்திய இளைஞர்களிடையே மிக வேகமாகப் பரவி அவர்களது மூளைச் செயல்பாட்டை முடக்குவதால் அவர்களை மீண்டும் அப்பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பது மிகக்கடினமான காரியமாகி விடுகிறது என்பதையே!

மற்ற சாதாரண சிகரெட்டுகளைப் போல அல்லாமல் மிக அதிகமான ஃப்ளேவர்களிலும் மிகக்கவர்ச்சியான வடிவங்களிலும் இந்தியச் சந்தைகளில் பல்வேறு விதமான மின் சிகரெட்டுகள் கிடைப்பதால் இளைஞர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களான சிறுவர்களிலும் அனேகம் பேர் இந்தப் பழக்கத்தில் புதைந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு ஆரோக்யமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டே அரசு இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

அரசு இப்படியொரு முடிவை எடுப்பதற்கு முன்பே இந்தியாவில் பஞ்சாப், கர்நாடகா, மிசோரம், கேரளா, ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், மேகாலயா, ஒடிசா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் ஒன்றுலுமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் சிகரெட்டுகளுக்கான தடை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கான காரணம், இப்படியொரு முன்னெடுப்பை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மின் சிகரெட்டுகளுக்களின் மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்த காரணத்தால் தான்.
 
மின் சிகரெட்டுகள் என்பதன் உண்மையான பொருள்.. எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம் என்பதே. இவ்வகை மின் சிகரெட் வடிவமைப்புகளில் புகையிலை பயன்படுத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக பேட்டரியிலிருந்து ஆவி கசிவது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். இதில் பேட்டரி சொல்யூஷனில் இருந்து ஆவி வெளியேற அவர்கள் கையாண்டிருக்கும் வழிமுறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பேட்டரி சொல்யூஷன் தயாரிக்க புரொபிலீன் கிளைகால் மற்றும் கிளிசராலுடன் வாசனையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடல் ஆரோக்யத்திற்கு குறிப்பாக நுரையீரல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய அளவிலான நச்சுத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இத்தனை அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மின் சிகரெட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் பிற சாதாரண சிகரெட்டுகளைப் போன்ற வடிவத்தில் தான் இருந்தன. ஆனால் தற்போது இவை இளைஞர்களையும், பள்ளிச் சிறுவர்களையும் மட்டுமல்லாது புகைப்பழக்கத்திற்கு அடிமையான இளம்பெண்களையும் கவர்ந்திழுக்கக்கூடிய பேனா, விசில், மினி லைட்டர், ஹூக்க பைப் போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க.. கண்ணாடி சாப்பிட ரொம்ப ருசியா இருக்குங்க! வழக்கறிஞரின் வித்தியாச உணவுப் பழக்கம்..

இதன் பரவலான விற்பனையைத் தடுக்கும் பொருட்டும் சாதாரண சிகரெட்டுகளைக்காட்டிலும் மிக அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் மின் சிகரெட் போதையை மட்டுப்படுத்தவே தற்போது அரசு அவற்றிற்குத் தடை விதித்திருக்கிறது.

அரசு தடைக்கு முன்பே இந்தியாவில் ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்களில் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்தவோ, கொண்டு செல்லவோ தடை இருந்தது உண்மை.

மின் சிகரெட்டின் அபாயத்தன்மை எத்தகையது?

மின் சிகரெட்டின் பேட்டரி கரைசலில் நிகோடின் பயன்படுத்தப்பட்டவுடன், அதற்கும் வழக்கமான சிகரெட்டிற்கும் உள்ள வேறுபாடு குறைந்து விடுகிறது. உடல்நல அபாயங்களைப் பொறுத்தவரை, நிகோடினை வழங்குவதற்கான மின்-சிகரெட்டின் சக்தி அதன் பயன்பாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை தீர்மானிக்கிறது. நிகோடின் விநியோகம் விரைவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தால், மின்-சிகரெட் வழக்கமான சிகரெட்டிலிருந்து வேறுபட்டதாக இருக்காது. ஆக மொத்தத்தில் மின் சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகளைக் காட்டிலும் அபாயம் குறைவானவை அல்லது அபாயமற்றவை எனும் விளம்பரங்கள் இதன் மூலமாக வலுவிழக்கின்றன,

நிகோடின் விநியோக திறன் ஒரு பிராண்டிலிருந்து மற்றொரு பிராண்டிற்கு மாறுபடும். இந்த திறன் பயன்படுத்தப்படும் கரைசலின் வலிமை மற்றும் ஒரு பயனரின் பஃபிங் நடத்தை ஆகியவற்றைப் பொறுத்தது.

உலக சுகாதார அமைப்பான WHO இதைப் பற்றி என்ன சொல்கிறதென்றால்?

மின் சிகரெட்டுகளின் அபாயத்தன்மையானது கர்ப்ப காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தகூடியதாக இருப்பதோடு இருதய நோய்களை ஊக்குவிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

இதிலிருக்கும் நிகோடின் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், இது புற்றுக்கட்டி தோன்றச் செய்யும் ஊக்குவிப்பாளராக செயல்படக்கூடும் எனக்கருதப்படுகிறது. நிகோடின் வீரியம் மிக்க நோய்களின் உயிரியலின் அடிப்படை அம்சங்களிலும், நியூரோடிஜெனரேஷனிலும் கூட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது அதன் அபாய எல்லையின் தீவிரத்தைச் சுட்டுகிறது.

இன்றைய தேதிக்கு உலகச் சந்தையில் சுமார் 466 மின் சிகரெட் பிராண்டுகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 17% அதிகரிக்கக்கூடும் என குளோபல் மின் சிகரெட் மார்கெட்டை தொடர்ந்து கண்காணித்து வரும் நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்தியாவில் இப்போதாவது மின் சிகரெட்டுகளுக்கு மூடுவிழா நடத்த முன் வந்திருக்கிறதே அரசு என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

இந்த நேரத்தில் மற்றொரு ஆதங்கமும் எழாமலில்லை. மின் சிகரெட்டுகளின் அபாயம் குறித்து இத்தனை கவலைப்படும் மத்திய அரசு நாடு முழுவதும் ஆற்று வெள்ளம் போலத் திறந்து விடப்பட்டிருக்கிறதே மதுபானக்கடைகள் அதற்கும் மூடுவிழா நடத்தவும், தடை விதிக்கவும் ஏதாவது முன்னெடுப்புகளைச் செய்யக்கூடாதா? 

]]>
மின் சிகரெட் தடை, புகைப் பழக்கத்தின் அபாயம், புகை பிடிப்பது தவறு, பொது இடங்களில் புகைப்பது குற்றம், மின் சிகரெட் அபாயம், E Cigarette ban, dangerous E Cigarettes, indian drug and cosmetics act, WHO, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/19/w600X390/ecigar_ban.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/19/e-cigarette-ban-e-cigarette-is-not-an-alternative-to-normal-cigarettes-its-very-very-dangerous-do-you-know-why-3237620.html
3237154 Glance 25. தெளிவுபெற்ற மதியினாய் வா.. வா.. வா..! சந்திரமௌலீஸ்வரன் Thursday, September 19, 2019 10:00 AM +0530  

நம் தேசத்தின் மகாகவிஞன் பாரதி, இளைஞர்களைப் பார்த்து பாடும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஒளிபடைத்த கண்ணிணாய் வா! வா! வா! என அவன் அறைகூவல் விடும் பாடல் அது. அதிலே, தெளிவுபெற்ற மதியினாய் வா! வா! வா! என ஆனந்தமாய் அழைப்பு விடுப்பானல்லவா. அந்த தெளிவுபெறும் மதி என்பது என்ன என இந்த அத்தியாயத்தில் கவனிக்கலாம்.

சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்வது என்பதை கடந்த சில வாரங்களாகக் கவனித்து வருகிறோம். அதன் தொடர்ச்சிதான் தெளிவுபெற்ற மதி.

மாணவர்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் சவால்: தெளிவு இன்மை

ஆங்கிலத்தில் ஓர் அழகான ஆழமான சொல் clarity. இதனை பெரும்பாலும் விளக்கம் எனும் அளவில் புரிந்துகொண்டுள்ளனர் மாணவர்கள். ஆனால் அந்தச் சொல் விளக்கம் எனும் பொருளில் இருந்தாலும் அதன் ஆழ்ந்த உட்பொருள் தெளிவு என்பதாகும்.

மாணவர்களுக்கு கற்கும் பாடம் தவிர, கடைப்பிடிக்கும் பழக்கம், கடைப்பிடிக்கக் கூடாத பழக்கம், தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள், காலத்தே செய்ய வேண்டிய முயற்சிகள், அறிவை, தகவல் அறிவை வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் எப்போதும் இருக்கிறது. இந்த முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடும்போது, அவர்களுக்கு தகவல்களும் விவரங்களும் பல இடங்களில் இருந்து கிடைக்கும். அவற்றில் எது சரி, எது பிழையானது எது நம்பத்தகுந்தது எது நம்பக் கூடாதது எனும் சரியான மதிப்பீடு அவசியம். இந்த சரியான மதிப்பீட்டின் வழியாகவே தெளிவினை அடையமுடியும். தெளிவினை அடைந்தால்தான் சரியான முடிவினை எடுக்கமுடியும். முடிவு சரியானதாக இருந்தால்தான், மகிழ்ச்சியும் நிறைவும் கொள்ள இயலும்.

தெளிவு பெறுதல் என்பது மாணவர்களுக்கு எப்போதெல்லாம் சவாலாக இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக ஒரு பழக்கத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கலாம். அது தீயபழக்கமாக இருக்க வேண்டும் என்பது இல்லை; அது நல்ல பழக்கமாகக்கூட இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான முயற்சிகளுக்காக அந்த பழக்கத்தைத் தொடர இயலாது போகலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீண்டகாலப் பயன் அளிக்கும்வண்ணம் எந்த முயற்சி அமைகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் தெளிவு மாணவர்களுக்கு வர வேண்டும்.

தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தரும் தகவல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்கக்கூடியவை எனும் சிந்தனை, எண்ணம் மாணவர்களிடையே காணப்படும் மிகவும் கவனிக்கத்தக்க தெளிவின்மைத் தன்மையாகும். நாம் எந்த ஒருவர் மீதும் அன்பும், நம்பிக்கையும், அபிமானமும், மரியாதையும் கொண்டிருக்கலாம். அதற்கான காரணங்கள் வேறு வேறானவை. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்கான முயற்சியில் தரும் அறிவுரைகள், தகவல்கள் நன்மையானவைதான், அவசியமானவைதான் என எந்தவித ஆராய்ச்சியும் இல்லாது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பாடம் எடுத்துப் படி, இந்தத் தேர்வு நீ எழுதலாம், இந்தக் கல்லூரியில் நீ சேரலாம் என்பது போன்ற அறிவுரைகள் எல்லாம் நன்மைக்குச் சொல்லப்படுபவைதான். ஆனாலும் இதை நம் அறிவினைக் கொண்டும் சோதித்து அறிவது, தெளிவு பெற்ற மதியின் அடையாளம்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இப்படி நாம் சோதித்து அறியும்போது, மேலோட்டமான ஆராய்ச்சியும் தகவல் சேகரிப்பும் நிகழும் சவாலும் உண்டு. ஆகவே அதனையும் தவிர்த்திட வேண்டும்.

அதுபோலவே நாம் தகவல் சேகரித்து, விவரங்களைக் கொண்டு வைத்திருக்கும் நம்பிக்கை, முயற்சி இவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, நம் நம்பிக்கைக்கு முரணாக மாற்றாக கருத்துகளும் தகவல்களும் கிடைக்கக்கூடும். இப்படியான சூழலை மாணவர்கள் வரவேற்க வேண்டும். முரண்பட்ட கருத்துகளால்தான் ஓர் எண்ணம் ஆரோக்கியாமான கோட்பாடாக வடிவு எடுக்க இயலும். மிக முக்கியமாக பிறர் நம் மீது கொண்டிருக்கும் சரியான மதிப்பீடுகள் அவை நமக்கு பிரியமானதாக இல்லாதபோதும் அவை நன்மை பயக்கும் என்றால் ஏற்கத்தக்கவை எனும் தெளிவு வர வேண்டும். வள்ளுவர் சொன்ன மெய்ப்பொருள் என்பது இதுதான்.

தெளிவு பெறுதலில் இரண்டு வழிகள் உண்டு, முதலில் நம்பிக்கை கொண்டு பிறகு அதனை சந்தேகித்துச் சோதிப்பது இது முதல் வழி, பெரும்பாலும் இதுவே நிகழ்கிறது. இரண்டாவது வழி, நன்கு சந்தேகித்து, நன்கு சோதித்து ஒவ்வொரு சந்தேகமாக நீக்கி தெளிவு பெறுவது. இதுவே நல்ல வழி.

முதல் வழியைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதற்குக் காரணம், தேவையான பொறுமை இல்லாத அவசரம். நாம் முடிவு செய்ய காலதாமதம் செய்யக் கூடாது என்பதாக வரவழைத்துக்கொண்ட அவசரம்.

சோதித்து, சந்தேகம் நீக்கித் தெளிவு பெறுவது எப்படி அவசியமோ, அதேபோல் சோதிக்கும்போது தகவல் சரிபார்த்தலில் நம் நினைவாற்றலை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவசியம். எப்போதும் ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நம் நினைவுகள் பிழை செய்யக்கூடும். அதாவது, நாம் ஒரு தகவலை நம் நினைவிலிருந்து மட்டும் எடுத்துக்கொண்டு அதனை நம்பி செயல் செய்யும்போது விளையும் விளைவுகள் பாதகமாகக்கூட அமையலாம். ஆகவே, நம் நினைவில் இருக்கும் தகவலை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வதும் தெளிவு பெறும் மதியின் அடையாளமே.

தெளிவு என்பது, முற்றிலும் அறிந்துகொள்ளும் நிலையிலும் நிகழும், முற்றிலும் அறிந்துகொள்ள இயலாத நிலையில் நாம் கொண்டிருக்கும் பொறுமையிலும் அமையும்.

ஒரு செயலைச் செய்துவிட்டு அதன் விளைவுகளுக்காக அல்லது பதிலுக்காகக் காத்திருக்கும்போது தொடர்பு இல்லாத பல செயல்களைச் செய்ய தூண்டுதல் ஆழ்மனத்தில் நிகழும். இதனைக் கட்டுப்படுத்துவதும் தெளிவு பெற்ற மதியின் அடையாளம்.

அதுவும் ஒரே சமயத்தில் பல முயற்சிகளை எடுத்து, அதன் பலனுக்காகவும் பதிலுக்காகவும் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் மாணவர்களுக்கு அதிகம் உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மன அழுத்தம், பொறுமையின்மை, ஆர்வம், பயம், எதிர்பார்ப்பு, குழப்பம், எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிக் கலவையால் பாதிக்கப்படும் நிலை வரும். இதனை பொறுமை எனும் தெளிவுகொண்டே எதிர்கொள்ள வேண்டும்.

நம் சக மாணவன், மாணவி இவர்களுடன் நம்மை எந்த எந்த விஷயங்களில் ஒப்பீடு செய்துகொள்வது என்பதில் மாணவர்களுக்கு தெளிவு என்பது அவசியம். குடும்பச் சூழலில் ஒப்பீடு கூடாது. இயற்கையாக அமைந்துவிட்ட உடல் அமைப்பில் ஒப்பீடு கூடாது. இதுபோன்ற தெளிவு பெற்ற மதி அவசியம்.

தெளிவுபெற்ற மதி என்பதற்கான சுவாரசியமான சில சம்பவங்களை அடுத்த அத்தியாயத்திலும் வாசிக்கலாம்..

(தொடரும்)

]]>
மாணவர்கள், நூற்றுக்கு நூறு, மதிப்பெண்கள், மனத் தெளிவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/clarity.jpg https://www.dinamani.com/junction/noottrukku-nooru/2019/sep/19/25-தெளிவுபெற்ற-மதியினாய்-வா-வா-வா-3237154.html
3237190 Glance மருத்துவ ஜோதிட புலி - புலிப்பாணி சித்தர்! - ஜோதிட சிரோன்மணி தேவி Wednesday, September 18, 2019 06:06 PM +0530  

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான பழனியில் ஜீவ சமாதி ஆன போகரின் தலையாய சீடராவார். ஜோதிடர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பவர் நம் புலிப்பாணி. இவர் புரட்டாசி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஒருசிலர் பொன் வணிகர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் மற்றொருவர் வேடவர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

ஜோதிடத்தில் புலியாகவும், குரு போகர் துணைகொண்டு மருத்துவத்தில் வல்லவராகவும், முருகனின் பூஜை முறையை அறிந்தவராகவும், அட்டமா சித்திகளிலும் கைதேர்ந்தவராகவும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினார். இவர் குரு தொண்டு செய்வதில் வல்லவர். எள்ளு என்றவுடன் எண்ணெய்யாக இருப்பார். அதனால் குருவின் அருகே இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.  குருவுக்குத் தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்தலும் அதுதவிர குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்துவந்தார்.

போகர் பழனியில் நவபாக்ஷாண மூலிகை முருகனை உருவாக்க இவர் மிக்க உறுதுணையாய் இருந்தவர். குரு தொண்டு என்றவுடன் ஒன்று நினைவு வருகிறது. ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து வெறும் கையாலேயே போதிய நீரெடுத்துக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இவரைப் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார் [புலி + பாணி (நீர்)] . போகர் கேட்கும் மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறிச் சென்று பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. புலிப்பாணி ஒரு தெய்வ சக்தி கொண்டவராகவும், மிருகங்களை வசியம் செய்யும் சக்தி படைத்தவராகவும் இருந்தார். 

பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில் மக்களுக்கு அருளப்படும் அமைப்பில் புலிப்பாணி உதவியுடன் போகரால் உருவாக்கப்பட்டது. புலிப்பாணிக்கு ஒன்பது மூலிகைகளையும் விகிதாச்சாரத்தில் கலந்த நவபாஷாண முருகர் சிலையைப் பற்றியும், அச்சிலைக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்குப் பதிலாக மருத்துவத்தன்மை பற்றிய விவரங்கள் நன்கு தெரியும். போகர் தன் பணியைத் தொடர சீனா நாட்டிற்குச் செல்லும்பொழுது அனைத்து பொறுப்புகளையும் தன் அன்புக்குரிய சீடரிடம் புலிப்பாணியிடம்  ஒப்படைத்ததாகவும் அதனை அவர் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.  போகருக்கே வைத்தியம் செய்ததாகவும் அதனால் புலிப்பாணி சித்தரை குருவை மிஞ்சிய சீடர் என்றும் போற்றப்பட்டார். புலிப்பாணிக்குப் பழநி தண்டாயுதபாணியின் பூஜை முறைகளைச் சரிவரக் கற்றுக்கொடுத்தார் அவர் குருநாதர். இச்சிலைக்கான வழிபாடு திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் இயற்றியுள்ளார்.

"பாரப்பா மலையதுவின் உச்சியிலே 

பாங்கான போகருட சமாதியருகே 

கட்டான பாடாணவகை எட்டுடனொன்று

காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்

நண்ணவே பிரதிட்டைதான் செய்து

நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய

ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்

ஆரப்பா அறிவார்க ளாருமில்லை."

- புலிப்பாணி

போகர் சொற்படி மூலிகை முருகனுக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் புலிப்பாணியால் வழிபாடு நடைபெற்றது. 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளைத் தொடர்ந்து செய்து வந்தாயிற்று பின்பு புலிப்பாணி பரம்பரை பூஜை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டார். புலிப்பாணியின் சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும், வேண்டுவோருக்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
  
பழனியில் சித்தர்கள் வாழ்ந்த பெருமைகொண்ட ஸ்தலம். அதனால் செவ்வாய் தோஷத்தைப் போக்கி, நிலத் தகராறு, நோய் விட்டு ஓட, சொத்துத் தகராறு தீர, திருமணத் தடை தீர்த்து வைப்பதில் இந்த சித்தர் சமாதிகள் சிறந்த ஸ்தலம் ஆகும். வாழ்வில் ஒருமுறையேனும் சென்றால் மிகவும் நல்லது

புலிப்பாணியின் நூல்களை ஜோதிட ஆய்வுகளின் முக்கிய கூறு, சித்த மருத்துவம், வானியல் சாஸ்திரம், பூஜை முறைகள், சூத்திர விதிகள் அனைத்தும் புலிப்பாணி எழுதிய புத்தகத்தில் உள்ளன. 

புலிப்பாணி வைத்தியம் - 500 

புலிப்பாணி ஜோதிடம் - 300 

புலிப்பாணி ஜாலம் - 325
 
வைத்திய சூத்திரம் - 200 

பூஜாவிதி - 50 

சிமிழ் வித்தை - 25

சண்முக பூஜை - 30 

சூத்திர ஞானம் - 12

சூத்திரம் - 90 

புலிப்பாணி வைத்திய சாரம்

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனிச் சிறப்பாகச் சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் "புலிப்பாணி ஜோதிடம் 300" என்னும் நூலாகும். இதில் உள்ள பாடல்கள் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்துகொள்ள இயலும். அவர் ஜோதிடத்தில் சொல்லாத சூட்சமங்கள் ஒன்றும் இல்லை அவ்வளவு அருமையாகக் கணக்கிட்டுச் செல்லப்பட்டுள்ளார். 

அவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடத்தில் அனைத்தும் வானில் உள்ள கிரக மண்டலத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிவரும் பாதை, 27 நட்சத்திர விவரங்கள், நட்சத்திரங்களின் பாதைகளை 12 ராசிகளாக பிரிதல், கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு, ஆருடம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, ஞான திருஷ்டியின் மூலம் கணக்கீடாகக் கணிக்கும் முறைகள், நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. புலிப்பாணி ஜோதிடம் என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உடன் தெளிவான பொருள் கொண்டு கரைத்துக் குடித்தவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு ஜாதகரின் பலன்களையும் துல்லியமாகச் சொல்ல முடியும்.

இவரின் குருவான போகரின் பெருமை பற்றி பின்பு வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

]]>
புலிப்பாணி சித்தர், மருத்துவ ஜோதிட புலி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/pulipani.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/18/மருத்துவ-ஜோதிட-புலி---புலிப்பாணி-சித்தர்-3237190.html
3237176 Glance நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? தேனி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு DIN DIN Wednesday, September 18, 2019 02:45 PM +0530
தேனி: தேனியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஈ-மெயிலில் வந்த புகாரின் அடிப்படையில் மேல் விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் தேனி காவல்நிலையத்திலும் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவரும் கல்லூரிக்கு வராமல் இருக்கிறார். அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு, இரண்டு முறை அவர் சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததும், 3வது முறையாக மும்பையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

]]>
NEET Exam, நீட் தேர்வு, Entrance Exam, medical exam, tamilnadu mbbs, theni medical college, தேனி மருத்துவக் கல்லூரி, நீட் நுழைவுத் தேர்வு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/12/w600X390/neet.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/18/neet-exam-cheating-case-tamilnadu-theni-3237176.html
3237171 Glance காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா? Muthumari Wednesday, September 18, 2019 04:25 PM +0530  

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாநிலங்களவையில் அறிவித்தார்.

வீட்டுச்சிறையில் காஷ்மீர் தலைவர்கள்:

இந்த சமயத்தில், பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை, போக்குவரத்து சேவை என அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டன. அதே நேரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவும் ஒருவர். இவர் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லாவின் மகன் ஆவார்.

 ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கும்படியும் அவரது மகன் ஒமர் அப்துல்லா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆகஸ்ட் 6ம் தேதி நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மசோதா தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அமித் ஷா - ஃபரூக் அப்துல்லா மோதல்:

அப்போது பேசிய அமித் ஷா, ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை; வீட்டுச் சிறையிலும் வைக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், அன்றைய தினமே காவல்துறையின் புடைசூழ, செய்தியாளர்களிடம் பேசிய  ஃபரூக் அப்துல்லா, 'மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பொய். என்னை வீட்டுச் சிறையில் தான் வைத்துள்ளார்கள்' என்று கூறியது கடும் விவாதத்திற்கு உள்ளது.  

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மத்திய அரசு கூறி வருகிறது.  அவ்வாறு இருக்க ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை இன்னும் வெளியில் விடாதது ஏன்? ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது ஜனநாயக விரோதம் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன. 

ஃபரூக் அப்துல்லாவுக்காக குரல் கொடுக்கும் வைகோ:

இந்த சூழ்நிலையில் தான் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஃபரூக் அப்துல்லாவின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்த வைகோ, இறுதியாக ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'ஃபரூக் அப்துல்லாவுக்கு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வைகோ அவரது உறவினர் அல்ல. ஏற்கனவே அவரது உறவினர்கள் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்' என்று பேசிய நீதிபதிகள், பல்வேறு கட்ட வாதங்களுக்கு பிறகு இறுதியில், 'ஆட்கொணர்வு மனு மீது மத்திய உள்துறை அமைச்சம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகம் வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஃபரூக் அப்துல்லா கைது

இந்த நிலையில் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டிலேயே அவர் சிறை வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கும் காங்கிரஸ் கட்சியினர், வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

தந்தை கொண்டுவந்த சட்டத்தில் மகன் கைது!

இந்த பொது பாதுகாப்புச் சட்டமானது 40 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1978ஆம் ஆண்டில் மரக்கடத்தல் சம்பவத்தை தடுக்க அப்போதைய முதல்வரும், ஃபரூக் அப்துல்லாவின் தந்தையுமான ஷேக் அப்துல்லா கொண்டு வந்தார். இதன்படி, 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். முன்னதாக, ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது கூட, தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பொது பாதுகாப்புச் சட்டம் வாபஸ் பெறப்படும் என பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா கூறியிருந்தார். 

ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு வைகோ தான் காரணமா என்று காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது. எனினும், எந்த காரணத்தினால்  ஃபரூக் அப்துல்லாவை அரசு கைது செய்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பதில் அளித்தால் மட்டுமே தெரியவரும். 

முன்னதாக, வைகோ மீது பல்வேறு எதிர்மறையான கருத்துகள் இருந்துவரும் நிலையில்,  ஃபரூக் அப்துல்லா விவகாரத்திலும் வைகோ அவசரப்பட்டு விட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் 40 ஆண்டுகால நண்பர் வைகோ என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது..

]]>
jammu kashmir, ஜம்மு காஷ்மீர், vaiko, வைகோ, ஃபரூக் அப்துல்லா, அமித் ஷா, Amit Shah, Farooq Abdullah , article 370 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/vaiko.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/18/is-farooq-abdullah-detained-under-psa-because-of-vaikos-petition-in-sc-3237171.html
3237170 Glance வங்கிக் கணக்கில் தவறாக வரவு வைக்கப்பட்ட ரூ.40 லட்சத்தை செலவு செய்த தம்பதி: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? DIN DIN Wednesday, September 18, 2019 02:45 PM +0530  

திருப்பூரில் தவறுதலாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.40 லட்சத்தை திருப்பிச் செலுத்தாமல் செலவு செய்த தம்பதிக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள பொதுத் துறை வங்கியிலிருந்து வேறு ஒருவரது கணக்கிற்கு ரூ. 40 லட்சம் பணப்பரிமாற்றம் செய்தபோது ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) என்பவரது வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக சென்று விட்டது. இதனை மிகத் தாமதமாக அறிந்த வங்கி நிர்வாகம் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு குணசேகரனிடம் கேட்டுள்ளது. ஆனால் அவர் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்தாமல் செலவு செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.

ரூ.40 லட்சத்தை எடுத்து சொத்துக்கள் வாங்கியது, மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்தது என்று அவர்கள் லட்சாதிபதிகளாக வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து வங்கி உதவி மேலாளர் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குணசேகரன், அவரது மனைவி ராதா (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது திருப்பூர் 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பிச் செலுத்தாத குணசேகரன், ராதா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ரூ.40 லட்சம், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப் பணித் துறை ஒதுக்கியதாகும். பொதுப் பணித் துறை செயல்பொறியாளரின் வங்கி எண்ணுக்குப் பதிலாக குணசேகரனின் வங்கி எண்ணுக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டதே மேற்கண்ட சம்பவங்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.
 

]]>
bank account, thirupur couple, wrongly credited Rs.40 lakh, திருப்பூர் தம்பதிக்கு தண்டனை, வங்கிக் கணக்கு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/indian_rupee.jpeg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/18/thirupur-couple-spends-rs40-lakh-wrongly-credited-3237170.html
3237167 Glance மானாமதுரை வங்கியில் பழிக்குப் பழியாக கொலை முயற்சி: மர்ம நபர்கள் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு DIN DIN Wednesday, September 18, 2019 01:29 PM +0530  

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் சரவணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை முயற்சி சம்பவம் முறியடிக்கப்பட்டது.

வங்கிக்குள் வந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மீது வங்கிக் காவலாளி துப்பாக்கியால் சுட்டத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய தங்கராஜைக் கொலை செய்ய, சரவணனின் உறவினர்கள் சிலர் இன்று வங்கிக்குள் நுழைந்து அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனைப் பார்த்த வங்கிக் காவலாளி, வெட்ட முயன்றவர்களை தற்காப்புக்காக சுட்டார். இதில் தமிழ்ச்செல்வன் என்பவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது, அவருடன் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.
 
மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஊமைத்துரை மகன் சரவணன். மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், மானாமதுரை பேரூராட்சி 18-ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தார். மேலும், அமமுக மானாமதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.

 இந்நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி காலை மானாமதுரை - சிவகங்கை புறவழிச்சாலையில் வைகை மேம்பாலம் அருகே நடைபயிற்சி சென்ற சரவணனை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

போலீஸார் விசாரணையில், இந்த கொலை தொடர்பாக பரமக்குடி மணிநகரைச் சேர்ந்த அன்புதாஸ் மகன் மணி ஐயப்பன் (32), மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பழனிக்குமார் (35), திருப்புவனம் புதூரைச் சேர்ந்த குமார் மகன் பாலா என்ற பாலாஜி (32) ஆகிய மூவரையும் கைது செய்தனர். 

சரவணன் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ், இரண்டாவது குற்றவாளியாக அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் தொத்தல் என்ற முத்துச்செல்வம் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

தங்கராஜ், முத்துச்செல்வம், மணி ஐயப்பன் ஆகிய மூவரும் சேர்ந்துதான் சரவணனை கொலை செய்துள்ளனர். பழனிக்குமார், பாலாஜி ஆகிய இருவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் இருந்து நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சரவணனின் எதிரிகள் சிலர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது சரவணன், தங்கராஜ், முத்துசெல்வம் உள்பட 11 பேர் சேர்ந்து அவர்களை வெட்டியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்படவுள்ள நிலையில், தங்கராஜ் உள்ளிட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க சரவணன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், மானாமதுரையில் வாரச் சந்தையை ஏலம் எடுப்பது உள்ளிட்டவற்றில் தங்கராஜ் தரப்பினர் சரவணனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் சரவணன் அரசியலிலும், அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்வதிலும் கவனம் செலுத்தியதால் தங்கராஜ் தரப்பினரை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் உள்ளிட்டோர் சரவணனை திட்டமிட்டு கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/5/w600X390/gun_shot.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/18/murder-attempt-in-manamadurai-bank-man-injured-in-shooting-3237167.html
3237161 Glance பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது.. ஆனால்: ரஜினி கருத்து DIN DIN Wednesday, September 18, 2019 01:29 PM +0530
சென்னை: பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, இந்தியாவின் பொதுவான மொழியாக இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு, பொதுவான ஒரு மொழி இருந்தால் அது நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது. 

ஆனால், இந்தியை திணித்தால் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஏன், இந்தி திணிப்பை வட மாநிலங்களில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்தியை ஒரே மொழியாகக் கொண்ட வர முடியாது என்று ரஜினி பதிலளித்தார்.

பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது ரசிகர்கள் யாரும் பேனர்  வைக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்று ரஜினி கூறினார்.
 

]]>
Hindi Language, Rajini Kanth, ஹிந்தி திணிப்பு , one nation one language, actor rajini, இந்தியாவுக்கு ஒரே தேசம், ஒரே மொழி, அமித் ஷா பேச்சு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/Rajinikanth_PTI__actor.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/18/one-nation-one-language-actor-rajinikanth-welcomes-3237161.html
3237155 Glance அஸாம் கொடூரம்! காவல்துறையின் அரக்கத்தனமான விசாரணையில் கருவை இழந்த கர்ப்பிணி முஸ்லிம் பெண் மற்றும் சகோதரிகள்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, September 18, 2019 12:19 PM +0530  

‘நாடோடிகள்’ படம் பார்த்திருக்கிறீர்களா? இயக்குனர் சசிகுமாரின் இத்திரைப்படத்தில் நண்பனின் காதலுக்காக பெண்ணைக் கடத்திய வழக்கில் மூன்று நண்பர்கள் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஒரு பக்கம் போலீஸ் விரட்ட மறுபக்கம் பெண்வீடு, பையன் வீட்டு ஆட்கள் துரத்த அவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் மூன்று நண்பர்களில் ஒருவருக்கு காலை வெட்டி எடுக்க வேண்டியதாகி விடும், இன்னொருவருக்கு காது சவ்வு கிழிந்து காதே கேட்காது ஆகி விடும். மூன்றாம் நபருக்கு காதல் கைகூடாமலாகி வாழ்க்கையே சோகத்தில் ஆழ்ந்து விடும். அத்தனை இழப்புகளும் எதற்காக என்றால் அவரவர் சொந்தக் காரணங்களுக்காக அல்ல. நண்பனின் காதலுக்கு உதவச் சென்றதால்...

இதையும் பாருங்க.. .‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 

சரி, இவர்கள் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தார்களே.. அவர்களாவது சுபமாக வாழ்ந்தார்களா? என்றால் அது தான் இல்லை. அவர்கள் இருவரும் ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் கணக்கில் சண்டையிட்டுப் பிரிந்து அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்து விடுவார்கள். அப்படியானால் இதில் இளிச்சவாயர்கள் யார் என்றால்? அத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டு இவர்களது காதலை தெய்வீகக் காதலென எண்ணிக் கொண்டு சேர்த்து வைக்கப் பாடுபட்டார்களே, அவர்கள் தான்.

இப்போது எதற்காக இந்த உதாரணத்தைச் சொல்லத் தோன்றுகிறது என்றால் இதை விட கொடூரமான சம்பவம் ஒன்று கடந்த 8 ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் தரங் எனுமிடத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதற்கும் பின்னணியில் இருக்கும் மூலகாரணம் ஒரு காதல் தான். தரங் பகுதியைச் சார்ந்த ஒரு முஸ்லிம் இளைஞனும், இந்துப் பெண்ணுக்கும் காதல். அவர்களது காதலுக்கு உதவுவதற்காக மூன்று முஸ்லிம் பெண்கள் உதவியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் மூவரையும் கடந்த 8 ஆம் தேதி புறநகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்கள் மூவரும் இளம்பெண்கள் என்ற கருணை கூட இல்லாமல் இரவெல்லாம் அவர்களைக் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள். அடி, உதை மட்டுமல்ல அந்த மூன்று இளம்பெண்களும் அங்கிருந்த காவலர்களால் ஆடை களையப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தற்போது மீடியா தலையீட்டில் தெரிய வந்திருக்கிறது.

சம்மந்தப்பட்ட பெண்கள் மூவரும் சம்பவம் நடந்த அன்றே காவல்துறை புகார் அளிக்க முற்பட்டிருக்கிறார்கள். ஆனால், அப்போது இந்தப் புகாரை ஏற்றுக்கொள்ளாத காவலர்கள் தற்போது இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த தகவல்கள் மீடியா வெளிச்சம் பெற்றதும் நேற்று அப்பெண்களின் புகாரை ஏற்று வழக்குப் பதிந்திருக்கின்றனர்.

காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மூன்று பெண்களில் மூத்தவர் கர்ப்பிணியாக இருந்தும் அவர் மீது எந்த விதத்திலும் காவலர்கள் கருணை காட்ட முயற்சிக்கவில்லை என்பது இச்சம்பவத்தில் அதிர்ச்சியான விஷயம். அதை விட அதிர்ச்சி அப்பெண்களைச் சித்திரவதை செய்த காவலர் குழுவில் ஒரு பெண் காவலரும் இடம்பெற்றிருந்தார் என்பது. கர்ப்பிணியான சகோதரியை அடித்துச் சித்திரவதை செய்யும் போது மற்ற இருபெண்களும் கதறித் துடித்து அவர் கர்ப்பிணி என்ற விவரத்தைச் சொன்ன போதும் கூட, சும்மா நடிக்காதீர்கள், முஸ்லிம் பையனுக்காக நீங்கள் கடத்திச் சென்ற இந்துப் பெண்ணை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என மரியாதையாகச் சொல்லி விடுங்கள்’ என்று சொல்லிச் சொல்லி அடித்து துவைத்திருக்கிறார்கள் அவர்கள் மூவரையும். இதில் அந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு கரு கலைந்திருக்கிறது.

தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் அஸாம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் சிக்கிமிகி தாலுக்தார், இந்த தாக்குதல் "கொடூரமான குற்றம்" என்று விவரித்திருப்பதோடு, 

“ஒரு நாகரிக சமுதாயத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கொடூரமான குற்றம்இது . நாங்கள் தாரங் எஸ்.பி.க்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஒரு அறிவிப்பை அனுப்புவோம், ”என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் பார்த்துடுங்க.. 74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிரசவ விவகாரம், IFS மருத்துவர்களின் கண்டனத்தில் நியாயமிருக்கோ?!

தாரங் எஸ்பி இந்தச் சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் இளைஞரால் கடத்தப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகத்தான் அவர்கள் (மூன்று சகோதரிகள்) அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூத்த சகோதரி கடத்தப்பட்ட சிறுமியைத் தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தான் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வழக்கில் அப்பெண்களின் மருத்துவ அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்றார்.

காதல் விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விருப்பம் இல்லாத போது காதலர்களுக்கு நிகழ்த்தப்படும் இடைஞ்சல்கள், துன்பங்கள், கொடுமைகள் ஒரு வகை என்றால் காதலுக்கு உதவியவர்கள், காதலின் பேரினாலான கடத்தலுக்கு உதவியவர்கள் என்ற பெயரில் முற்றிலும் அந்த விஷயத்தில் பெரிதாகத் தொடர்பற்றவர்களுக்கு நடத்தப்படும் கொடுமைகள் அதைக்காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதில் அப்பெண்களுக்கு நடத்தப்பட்ட சித்திரவதைகள் அத்தனையுமே சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்டவையே. இந்துப் பெண்ணை இவர்கள் தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு நிச்சயமான ஆதாரங்கள் எதுவும் இன்னும் காவல்துறையினர் கைப்பற்றியதாகத் தெரியவில்லை. அப்படியான சூழலில் யாரோ ஒருவரின் காதலுக்கு உதவியிருக்கக் கூடும் என்ற சந்தேகச் சித்திரவதையில் இங்கு ஒரு முஸ்லிம் பெண் தன் கருவில் இருக்கும் குழந்தையையே இழந்திருக்கிறார். என்பது வேதனையான விஷயம்.

காவல்துறையினரின் அரக்கத்தன்மையான விசாரணைக்கு பலிகடாக்களாகிப் போன அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க தற்போது அஸாம் மாநில மகளிர் ஆணையம் களமிறங்கியிருக்கிறது.

நியாயம் கிடைத்தால் சரி. இல்லயேல் இவ்விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபமிருக்க வாய்ப்பில்லை.

]]>
assam horror, 3 muslim sisters tortured, police torture, அஸாம் டார்ச்சர், அஸாம் கொடூரம், சித்திரவதைக்க்குள்ளான 3 முஸ்லிம் பெண்கள், காவல்துறை சித்திரவதை, காவல்துறையின் அரக்கத்தனம், கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய காவல்துறை, அஸாம் சம்பவம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/assam_horror.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/18/assam-horror-pregnant-woman-sisters-stripped-tortured-inside-darrang-out-police-station-3237155.html
3237151 Glance 'ஒரே நாடு, ஒரே கட்சி' என்பதை மறைமுகமாகச் சொல்கிறாரா? அமித்ஷா C.P.சரவணன், வழக்குரைஞர் Wednesday, September 18, 2019 01:31 PM +0530  

இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டதாக அமித்ஷா கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என் அமித்ஷா தெரிவித்துள்ளார். சரி பலகட்சி, இருகட்சி, ஒற்றை கட்சி அமைப்புகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்…

அரசியல் கட்சிகள் (A political party)

அரசியல் கட்சிகள் பின்பற்றப்படும் குடியாட்சி முறை நாட்டிற்கு மிகவும் அவசியமானவை. தற்போதைய உலகில் குடியாட்சிகள் பிரதிநிதித்துவத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குடியாட்சி அமைப்புகளில் கட்சிகள் மக்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஊட்டி பங்கேற்க கற்றுத்தருகின்றன. ஒரு ஜனநாயக அமைப்புக்கு அரசியல் கட்சிகள் மிக மிக அத்தியாவசியமான தேவையாகும். இன்றைய சமகால உலகில் ஜனநாயகங்கள் பிரதிநிதித்துவத் தன்மையுடையனவாகப் பண்புக்கூற்றைப் பெற்றுள்ளன. பிரதிநிதித்துவ வடிவிலமைந்த ஓர் அரசாங்கத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்குக் கற்றுத்தந்து செயத்திறன் மிக்க அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான ஆர்வத்தை ஊட்டுகின்றன.

அரசியல் கட்சிகளின் தேவை

ஒரு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு அரசியல் கட்சி என்பது மிகவும் அவசியம். மக்கள் மற்றும் அரசாங்கம், வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தும் பாலமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும். இவை கல்லாமை மற்றும் தீண்டாமை போன்ற சமுதாயக் கொடுமைகளை வேரோடு அழிக்கப் பாடுபடுவதுடன் பஞ்சம், வெள்ளம் போன்றவை மக்களைத் தாக்கும் பொழுது அவற்றிலிருந்து மக்களை கைத்தூக்கி விட்டு காப்பாற்றுவதற்காகப் பாடுபடுகின்றன. இவை அரசியலுக்காக மக்களை ஒன்று திரட்டி ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன. மேலும் இவை மக்கள் நலனுக்காக சமுதாய நல விழாக்களை நடத்துகின்றன.

அரசியல் கட்சிகளின் பொருளும்அவற்றின் கூறுகளும்

பிரதிநிதித்துவத் தன்மை வாய்ந்த எல்லா அரசாங்கங்களும் பிரதிநித்துவத் தன்மை வாய்ந்த எல்லா நிறுவன அமைப்புகளும் அரசியல் கட்சிகளின் இருப்பைத் தங்களின் தேவையாகக் கொண்டுள்ளன.

நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும் அதைத் தக்க வைத்துக் கொள்வதுமேயாகும்.

அரசாங்கத்தை நடத்திச் செல்லுகிற அமைப்பு அரசியல் கட்சிகள் ஆகும். ஒரு கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இடம் பெற்றிருக்கலாம்.

அதிகாரத்தில் உள்ள ஓர் ஆளும் அரசியல் கட்சி அல்லது குறிப்பிட்ட பிரச்னைகளின் மீது குறிப்பாகவும் விமர்சனங்களை முன் வைத்தும் பகுப்பாய்வு செய்தும் செயல்பட்டு வருகிற கட்சி ஆளும் கட்சி எனவும் மற்றும் எதிர்வரிசையில் அமர்கிற கட்சிகள் எதிர்க்கட்சிகள் என அழைக்கப்படுகின்றன.

ஓர் அரசியல் கட்சி கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்

​முறையான உறுப்பினர் தகுதி படைத்த மக்களின் அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அது இருக்க வேண்டும்.

அது மிகத் தெளிவாகத் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் வரையறுத்து அறிவிக்க வேண்டும்.

கட்சியினுடைய உறுப்பினர்கள் அதனுடைய தத்துவார்த்தம் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் – அதிகாரத்தை ஜனநாயகப்பூர்வமான செயல்முறைகளின் மூலமாகப் பெறுவதை அது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

மிகத் தெளிவான ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையுடையதாக அது இருக்க வேண்டும்

அரசாங்கக் கொள்கைகளின் பிரதான பகுதிகளின் மீதும் பரந்த பிரச்சனைகளின் மீதும் அது தன் கவனத்தைக் குவிப்பதாக இருக்க வேண்டும். 

கட்சி அமைப்பின் வகைகள்

இந்தியா பலகட்சி அமைப்பு முறையைக் கொண்டதாகும். இந்திய அரசியல் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. வேறு சில நாடுகள் ஒரு கட்சி அமைப்பு முறையைக் கொண்டவையாக உள்ளன. கடந்த காலத்தில் ஒன்றாயிருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் ஒற்றை அரசியல் கட்சி முறையைக் கொண்டவையாயிருந்தன.   

இரண்டு கட்சி அல்ல துபை-பார்ட்டி அமைப்பு முறையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இருகட்சி அமைப்பு முறையைக் கொண்டவையாகும். இந்நாடுகளில் வேறு கட்சிகளும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் பாத்திரம் முக்கியத்துவமற்ற வகையிலேயே பொதுவாக அமைந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில் இரண்டு முக்கியக் கட்சிகள் உள்ளன. பழமைவாதக் கட்சி (Conservative Party) மற்றும் தொழிற்கட்சி (Labour Party), அமெரிக்காவில் உள்ள இரண்டு முக்கியக் கட்சிகள்: குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி, ஜப்பான், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றம் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பலகட்சி அமைப்பு முறைகள் உள்ளன.

பலகட்சி அமைப்பு (Multi-party system)

சமுதாய அமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் தேசிய அளவில் ஏற்பட்ட வேறுபாடுகளும் பலகட்சி முறை அமைப்பு உருவாவதற்குக் காரணம். இதில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். இதற்கு ,அர்ஜென்டினா, ஆர்மீனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், குரோஷியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லெபனான், மாலத்தீவுகள், மெக்சிகோ, மால்டோவா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, செர்பியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், துனிசியா மற்றும் உக்ரைன் ஆகியவை உதாரணமாகும். 

நன்மைகள்

1. மந்திரி சபை எதேச்சதிகாரம் இருக்காது.
2. தனி மனித சுதந்திரம் அதிக அளவில் இருக்கும். பலவிதமான கருத்துகள் இக்கட்சிகளால் பிரதிபலிக்கப்படும்.
3. இம்முறையில் வாக்காளர்களுக்கு தங்கள் விருப்பப்படி முடிவெடுக்க அதிக அளவு வாய்ப்பு கிடைக்கும்.

தீமைகள்

1. நிலையான அரசாங்கம் இருக்காது
2. அரசியல் கட்சிகளில் பலபிரிவுகள் உண்டாவதால் நாட்டில் குழப்பம் ஏற்படும்.
3. கட்சிகள் மக்களை எதிரி கூட்டங்களாகப் பிரிக்கும்.
4. எந்த மந்திரி சபையாலும் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்ய இயலாது. கூட்டணி மந்திரிகள் குறுகிய காலத்திற்கே பதவியில் இருப்பார்கள்.
5. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை ஏற்பட்டு அரசியல் புனிதத்தைக் கெடுக்கும்

இருகட்சி அமைப்பு(two-party system)

இரு கட்சிகள் இருக்கும் அதில் ஒன்று ஆளும் கட்சி, மற்றொன்று எதிர்க்கட்சி இதற்கு உதாரணம்.

1. இங்கிலாந்து – இங்கு பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி, இதற்கு உதாரணம்.
2. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பன.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, கியூபெக், மானிடோபா மற்றும் சிறிய நியூ பிரன்சுவிக், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் யூகோன் பிரதேசங்கள் இரண்டு கட்சிகள் முறையைப் பின்பற்றுகின்றன.

நன்மைகள்

1. பாராளுமன்ற அரசாங்க முறையில் நிலையான ஆட்சியை கொடுக்கும்.
2. இரு கட்சி அமைப்பில் தான் உண்மையான இரு கட்சிமுறையை ஏற்படுத்த முடியும்.
3. கட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கருத்தை உருவாக்குவது எளிதாகும்.
4. வாக்காளர்கள் இக்கட்சிகளின் கொள்கைகளையும் திட்டங்களையும் நன்கு அறிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கட்சியை தேர்ந்தெடுக்கலாம்.
5. எதிர்க்கட்சி சிறப்பாகப் பங்காற்ற முடியும். அரசாங்கத்திடம் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்ட முடியும்.

தீமைகள்

1.அமைச்சரவை எதேச்சதிகாரத் தன்மையை அதிகரித்து சட்டசபையின் கௌரவத்தைக் குறைக்கும்.
2. ஆளும் கட்சி கொடுங்கோன்மை ஆட்சி புரியும் நிலை ஏற்படும்.
3. கட்சி மற்றும் கட்சித் தலைவன் மீது ஒரு கண்மூடித்தனமான விசுவாசம் ஏற்படும்.

ஒற்றைக்கட்சி அமைப்பு (one-party system)

1. ஒற்றைக்கட்சி அமைப்பில் ஒரே ஒரு கட்சி தான் இருக்கும். இந்த நாட்டின் சட்டம் மாற்று கட்சிகளை அனுமதிக்காது. 

2. 20ஆம் நூற்றாண்டின் ஆராம்பத்தில் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியே ஒற்றைக்கட்சி அமைப்பு உருவாவதற்கு அடிகோலியது. இதற்கு உதாரணம் கம்யனிஸ்ட் சீனா, துருக்கி, கமரூன், துனிசியா, துனிசியா, சிரிய குடியரசு, ஆப்கானிஸ்தான்

நிறைகள்

1. வீண் விவாதங்களில் நேரத்தை வீணாக்காமல் அரசாங்கம் திறமையாக செயல்படும்.
2. உயர்ந்த தேசிய ஒழுங்குமுறையிருக்கும்.
3. அரசியல் எதிர்கட்சியினர் இருக்கமாட்டார்கள்.
4. அனைத்து துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு.

தீமைகள்

1. கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் வேறுபாடு இருக்காது.
2. இதில் சட்டமன்றம் கொள்கை உருவாக்கும் அமைப்பாக இருக்கும். அங்கு மனம் திறந்த விவாதங்களுக்கோ செயலாற்றும் தன்மைக்கோ இடமிராது.
3.இத்தகைய கட்சி ஆட்சி சர்வாதிகார ஆட்சிக்கும் எதேச்சதிகாரத்துக்கும் வழிவகுக்கும்.
4. மக்கள் இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுவார்கள்
5. தனிமனித ஆளுமைக்கு இங்க மதிப்பிராது.
6. மக்களால் எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாது.

ஒரே நாடு ஒரே கட்சி என்ற கொள்கை, ஒற்றை அதிகாரக் குவிப்பினை நோக்கி செல்வதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும். பல கட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது என்ற அமித்ஷா பேச்சு ஒற்றை கட்சி முறையை நோக்கிய நகர்வாக பார்க்க முடிகிறது. நாட்டில் ஏராளமான சீர்திருத்தப் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதில், ஒற்றை நகர்வு மீண்டும் முடியாட்சிக்கே கொண்டுசெல்லும்.

]]>
PM Narendra Modi, Hindi Language, Amit Shah, அமித்ஷா , அரசியல் கட்சிகள், BJP govt, Hindi Imposition, ஒரே நாடு ஒரே கட்சி , One nation one party https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/AmitShah.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/18/is-amit-shah-saying-one-nation-one-party-indirectly-3237151.html
3237135 Glance கிரண்பேடி பாணியில் களமிறங்கப் போகிறாரா தமிழிசை? அதிருப்தியில் தெலங்கானா அரசு! DIN DIN Wednesday, September 18, 2019 02:48 PM +0530
தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜன், கிரண்பேடி பாணியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் அரசுக்கு இணையாக, ஆளுநரும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது குறித்து தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஓரங்கட்டும் வகையிலோ அல்லது அதற்கு இணையாக தமிழிசையும் 'மக்கள் தர்பார்' எனப்படும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்திருப்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தில்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது முறையே அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் வி. நாராயணசாமி அரசுகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இரு தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது, நிலவி வருகிறது.

ஆனால், இதுவரை தெலங்கானா ஆளுநருக்கும், ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், அதனை டிஆர்எஸ் விரும்பவில்லை.

இதுவரை தெலங்கானாவின் மிக முக்கியக் கட்சியாக டிஆர்எஸ் விளங்கி வருகிறது. இந்த பிரச்னை மூலம், பாஜகவும் தெலங்கானாவில் காலூன்றி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை டிஆர்எஸ் விரும்பவில்லை.

இந்த எண்ணத்தை டிஆர்எஸ் எத்தனை நாட்களுக்கு செயல்படுத்த முடியும் என்று தெரியவில்லை. காரணம், செப்டம்பர் 16ம் தேதி மஜ்லிஸ் பசாவோ டெஹ்ரீக் செய்தித் தொடர்பாளர் அம்ஜெத் உல்லா கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு வாரமும் பிரஜா தர்பார் எனப்படும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழிசை, "உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி. ஏற்கனவே இது பற்றி ஆழ்ந்து பரிசீலித்து வருகிறேன்" என்று தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த பதிலால் அதிர்ந்து போன டிஆர்எஸ், தில்லி மற்றும் புதுச்சேரி பாணியில் தெலங்கானாவிலும் ஆளுநர், ஆளும் கட்சி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்ளும் அதே நேரத்தில், எந்த வகையிலும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் மோதல் போக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

இது பற்றி டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்வர் ரெட்டி, மிக கவனமாக பதிலளித்துள்ளார். அதாவது, இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஆளுநர் மக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டு வருகிறாரா? அதுபோல ஆளுநர் மக்கள் குறைகளைக் கேட்டறிய சட்டத்தில் இடமிருக்கிறதா? ஒரு வேளை சட்டத்தில் இடமிருந்தால் செய்யலாம், நாங்கள் எந்த ஆட்சேபனையும் செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, பாஜகவுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே ஒரு செய்து கொள்ளப்படாத ஒப்பந்தம் போல ஒற்றுமையான சூழல் நிலவி வருகிறது. அந்தவகையில், நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த முத்தலாக், ஜிஎஸ்டி, ஆர்டிஐ, 370 சட்டப்பிரிவை நீக்குவது போன்றவற்றுக்கு டிஆர்எஸ் ஆதரவு அளித்தது.

அதே போல, தெலங்கானா தேர்தலிலும், பாஜக, டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்த்தது போன்றவற்றை சொல்லலாம்.

2018ம் ஆண்டு வரை  தெலங்கானாவில் ஒரே ஒரு தொகுதியைக் கைப்பற்றியிருந்த பாஜக, 2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரளவுக்கு காலூன்றியதால், 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் வென்று ஆட்சியமைக்க முடியும் என்ற உத்வேகத்தோடு செயலாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு வழிவகுத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் டிஆர்எஸ் கட்சி மிகக் கவனமாக இருந்து வருகிறது.
 

 

]]>
Telangana, தெலங்கானா, தமிழிசை, tamilisai, Gvoernor Tamilisai, ஆளுநர் தமிழிசை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/9/w600X390/tamilisai.jpg ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்ட தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் https://www.dinamani.com/india/2019/sep/18/telangana-governor-tamilisai-would-follow-kiran-bedi-3237135.html
3237136 Glance புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்ப்பதற்குக் காரணம் அறிவியலா? ஆன்மீகமா? (விடியோ) Wednesday, September 18, 2019 11:21 AM +0530  

செப்டம்பர் 18 இன்று முதல் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் உலகையாளும் எம்பிரான் ஸ்ரீமந் நாராயணனை மனதார தியானிக்க வேண்டிய மாதம். 

இந்த மாதத்தில் அசைவத்தைத் தவிர்ப்பதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா? அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் கட் என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அசைவ பிரியர்களின் கதி அதோ கதி தான்....ஏன் சாப்பிடக்கூடாது...அப்படி என்ன தான் காரணம்?

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்தப் புரட்டாசி மாதம் மழையுடன் இன்று தொடங்கியுள்ளது. பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும்.

இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.

துளசியானது இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காகத்தான் புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து நமது உடலைப் பாதுகாப்போம்.

]]>
why should avoid Non-vegetarian in puratasi month?, puratasi month, புரட்டாசி மாதம், பெருமாள் மாதம், அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்? https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/perumal.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/18/why-should-avoid-non-vegetarian-in-puratasi-month-3237136.html
3236446 Glance மஹாளய அமாவாசையில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்! Tuesday, September 17, 2019 12:24 PM +0530  

மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு கொடுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த பொதுவான சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

 • முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?

அவர்கள் இறந்த திதி, வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லிச் செய்ய வேண்டும்.

தாய் வழி    
தாயாரின் தகப்பனார் - தாயார்    
தாயாரின் தாத்தா - பாட்டி    
தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி    

தந்தை வழி
தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
தகப்பனாரின் தாத்தா - பாட்டி
தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

 • பெண்கள் செய்யலாமா?

தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம். 

 • இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?

எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

 • வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?

வீட்டில் செய்வது நல்லது.

 • தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?

அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

 • தர்ப்பணம் செய்யும் முறைகளைச் சொல்லுங்களேன்?

முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள். அந்தத் திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் அன்று விரதம்

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்

முதலில் யாருக்கு திதியோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்யலாம். 

 • என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்?

ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், ஒவ்வொரு கிரஹணத்தன்றும், சூரிய சந்திர கிரஹண காலங்களில், ஒவ்வொரு மாத அமாவாசையின் போதும் செய்யலாம். 

]]>
Mahalaya Amavasya Tharpana procedure, மஹாளய அமாவாசை தர்ப்பணம் , முன்னோர்கள் வழிபாடு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/19/w600X390/pitru.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/17/mahalaya-amavasya-tarpanam-2019-3236446.html
3235768 Glance ‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு.  கார்த்திகா வாசுதேவன் DIN Monday, September 16, 2019 06:11 PM +0530  

50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு இது. வயதான பெற்றோரில் தந்தை இறந்ததும் அவரது உயில் குடும்பத்தார் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. உயிலில் இருந்த வாசகங்களைக் கேட்டதும் குடும்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம், தன் சொத்தில் பெரும்பகுதியை, கடைசிக் காலத்தில் தன்னை கவனித்துக் கொண்ட வாரிசுக்கு எழுதிவைத்திருந்தார் அந்தத் தந்தை. பிற வாரிசுகள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? உடனே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

என் தந்தையை இறுதிக் காலத்தில் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி அழைத்துச் சென்ற வாரிசு, அவருக்குச் சாதகமாக அதிகப்படியான சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டார். சட்டப்படி இந்த உயில் செல்லாது. மரணத்தறுவாயில் முதியவரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அந்தச் சொத்தை அவர் எழுதி வாங்கியிருப்பார் என்று நினைக்கச் சாத்தியங்கள் உண்டு. எனவே இந்த உயில் செல்லாது எனத் தீர்ப்பளித்து மாற்று உயில் மூலமாக தந்தையின் சொத்துக்களை சரிவிகிதமாக அவரது குழந்தைகள் அனைவருக்குமாகப் பங்கிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்திற்குச் சென்றனர் இறந்தவரின் இதர வாரிசுகள்.

இந்த வழக்கு போடப்பட்டது 1970 களில் ஆனால் இதற்கு அப்போதே மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் இறந்தவரின் உயிலைச் செல்லாது என அறிவிக்க முடியாது. அவர் இந்த உயிலை எழுதும் போது பூரண நலத்துடன் தான் இருந்தார் எனும் போது அவரிஷ்டப்படியே தனது சொத்துக்களைப் பங்கிடும் உரிமை அவருக்கு உண்டு. எந்தக் குழந்தைக்கு எவ்வளவு என முடிவெடுக்கும் உரிமையானது அவரது மனதிற்கு உகந்ததாகவே இருந்திருக்கக் கூடும். அந்த மனநிலையை குறிப்பிட்ட அந்த வாரிசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்வதைக்காட்டிலும் பெற்றவரின் அன்பை அவர் அதிகமாகச் சம்பாதித்திருக்கக் கூடும் என்றும் நாம் இந்த வழக்கில் எடுத்துக் கொள்ள இயலும். இப்போது சொத்துக்காக வழக்காடும் பிற வாரிசுகள் தன் தந்தை மீதான உரிமையை அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்வதில் காட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது தந்தை மீதான உரிமையை அவரது சொத்துக்களை அடைவதில் மட்டும் காட்டுவது நியாயமானது இல்லை. 

நாடு, மதம், மொழி, இன வித்தியாசங்கள் கடந்து இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக நிற்கிறது இறுதிக் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு தவிக்கும் முதியோரின் பரிதாபநிலை. அப்படிப் பட்ட நிலையில் தங்கள் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்காக மட்டுமே நீதிமன்றப் படியேறுவதென்பது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயல். இந்த சுயநல அணுகுமுறையை நீதிமன்றம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்காது. எனவே கடைசிக் காலத்தில் எந்த வாரிசுகள் தம் பெற்றோரை கவனித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே சொத்தில் பெரும்பான்மையை எழுதி வைக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என ஜஸ்டிஸ் நவின் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி இருவரும் இணைந்த உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.
 

இளமையில் பிள்ளைகளைப் பெற்றோர் கவனித்துக் கொள்வதில் குறைந்தபட்சம் 10 % அன்பையும், கடமையுணர்வையுமாவது பிள்ளைகள் வயதான காலத்தில் தம் பெற்றோரைக் கவனித்துக் கொள்வதில் காட்ட வேண்டும். இல்லையேல் கடமை தவறிய பிள்ளைகள் ஆவார்கள், இதை நான் சொல்லவில்லை உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

]]>
SC Encourages parents, property sharing among nominees, will, old age parents rights https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/parents_old_age.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/sep/16/sc-encourages-parents-transferring-property-to-caring-children-3235768.html
3235766 Glance கனவென்று தெரியாமல் திருமண மோதிரத்தை விழுங்கியப் பெண்: அப்புறம் என்ன? DIN DIN Monday, September 16, 2019 06:11 PM +0530
வாஷிங்டன்: கனவில் வந்ததை நிஜமென்று நினைத்து விரலில் இருந்த மோதிரத்தை விழுங்கிய பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மோதிரம் வெளியே அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜென்னா எவான்ஸ் (29), வேகமாக செல்லும் ரயிலில் தனது கணவருடன் சென்று கொணடிருக்கிறார். அப்போது அங்கே வந்த சில திருடர்களுக்குப் பயந்து கையில் இருக்கும் மோதிரத்தை அவர் விழுங்க நேரிடுகிறது. அப்போது திடுக்கிட்டு விழித்த ஜென்னா, ச்சே.. இது கனவா என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் உறங்கச் சென்றுவிட்டார்.

ஆனால் காலையில் எழுந்து பார்த்த போதுதான் அவரது விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லாதது கண்டு திடுக்கிடுகிறார்.

கனவென்று தெரியாமல், நிஜமாகவே கையில் இருந்த மோதிரத்தை தான் உறங்கும் போது விழுங்கியிருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். தனது கணவரிடம் சொன்ன போது இருவரும் சேர்ந்து வயிற்றில் இருக்கும் மோதிரம் குலுங்க குலுங்க சிரித்தார்கள்.

பிறகுதான் நடந்திருப்பதன் விபரீதத்தை உணர்ந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அங்கு உடனடியாக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் 2.4 காரட் மோதிரம் அவரது வயிற்றுப் பகுதியில் இருந்தது. அவருக்கு மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த மோதிரம் அகற்றப்பட்டது.

இது குறித்து ஜென்னா கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு முன் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். அறுவை சிகிச்சையின் போது என்ன நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு என்று, அப்போது நான் மிகவும் கதறி அழுதேன், ஒரு வேளை அறுவை சிகிச்சையின் போது நான் உயிரிழந்தால், மிக மோசமான முட்டாள்தனத்துக்காக உயிரிழந்தவளாகிவிடுவேன் என்று கதறினேன்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஜென்னா உயிரோடு எழுந்து வந்து அந்த திருமண மோதிரத்தை ஆசையோடு அணிந்து கொண்டார்.
 

]]>
Jenna Evans, California, engagement ring https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/wedding_ring.jpg https://www.dinamani.com/world/2019/sep/16/as-sleeping-us-woman-swallows-wedding-ring-3235766.html
3235760 Glance போக்குவரத்து விதிமீறல்: தமிழகத்தில் இரண்டே நாளில் 1.5 லட்சம் பேருக்கு அபராதம் DIN DIN Monday, September 16, 2019 06:11 PM +0530  

சென்னை: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழகத்தில் கடந்த இரண்டே நாளில் 1.5 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி அனைத்து காவலர்களுக்கும் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பு வாகன சோதனையானது செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இவ்வாகன சோதனையானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இவ்வாகன சோதனையில் ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 1.18 லட்சம் பேரும், நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாமல் சென்று 36,835 பேரும் பிடிபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் போக்குவரத்து வித மீறலில் ஈடுபட்ட சுமார் 1.50 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/helmet-18.jpg file photo https://www.dinamani.com/tamilnadu/2019/sep/16/போக்குவரத்து-விதிமீறல்-தமிழகத்தில்-இரண்டே-நாளில்-15-லட்சம்-பேருக்கு-அபராதம்-3235760.html
3235756 Glance வேலை வேண்டுமா..? இந்தியா நிறுவனத்தில் அதிகாரி வேலை Tuesday, September 17, 2019 02:43 PM +0530
பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Officer (Geology)
காலியிடங்கள்: 13
தகுதி: புவியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Officer (Geophysics)
காலியிடங்கள்: 08
தகுதி: ஜியோஃபிசிக்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Senior Officer (Reservior)
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் 4 ஆண்டு இளங்கலை பட்டம் அல்லது 2 ஆண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Officer (Drilling)
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Officer (Production)
காலியிடங்கள்: 13
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பெட்ரோலியம் பிரிவில் 2 ஆண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.09.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2019

]]>
Employment News, வேலைவாய்ப்பு செய்திகள், recruitment, vacancies, latest job, velai vaippu seithigal tamil, velaivaippu seithigal , current employment news in tamil, வேலைவாய்ப்பு செய்திகள் 2019, employment news today , Oil India Ltd invites, velaivaippu s https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/oilindia.jpg https://www.dinamani.com/employment/2019/sep/16/oil-india-ltd-invites-applications-from-indian-nationals-to-fill-up-the-following-posts-in-grade-b-3235756.html
3235751 Glance தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? Tuesday, September 17, 2019 02:44 PM +0530
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 40

பணி: Company Secretary - 01 
சம்பளம்: மாதம் ரூ.76,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ACS, CA, ICWA ஆகியவற்றில் ஏதாவதொன்றை முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Manager (Chemical)- Production - 01 
சம்பளம்: மாதம் ரூ.61,900 - 1,96,700
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Executive (Mechanical) - 11
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: CCR Operators - 16 
தகுதி: கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: X- Ray Analyst - 06
பணி: Shift Chemist - 05 
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tancem.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Senior Manager/Dy. Collector
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,No.735, Anna Salai,
Chennai 600 002.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tancem.com/wp-content/uploads/2019/09/HRMS-52-7-9-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.10.2019

]]>
recruitment, notification, govt jobs, employment news in tamil, today employment news in tamil, latest job, latest employment news in tamil, velai vaippu seithigal tamil, current employment news in tamil, tn employment news , வேலைவாய்ப்பு செய்திகள் 2019, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/27/w600X390/tancem.jpg https://www.dinamani.com/employment/2019/sep/16/tancem-invites-applications-for-recruitment-of-40-company-secretary-manager-technical-executive--ccr-3235751.html
3235747 Glance பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் 12075 கிளார்க் வேலை Tuesday, September 17, 2019 02:42 PM +0530
பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 12 ஆயிரத்து 75 கிளார்க் பணியிடங்களுக்கான 9-வது பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபீபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Clerks 

காலியிடங்கள்: 12,075 (இதில் தமிழகத்திற்கான காலியிடங்கள் 1379)

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2019

]]>
Employment News, recruitment, Bank jobs, employment news in tamil, latest employment news in tamil, velaivaippu seithigal , velaivaippu news, vacancies details, IBPS Recruitment 2019, வேலைவாய்ப்பு செய்திகள் 2019, govt jobs 2019, Bank employment news in in https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/12/7/12/w600X390/IPBS.jpg https://www.dinamani.com/employment/2019/sep/16/ibps-recruitment-2019-for-12075-clerk-vacancies-across-india--3235747.html
3235735 Glance '10 வயது குழந்தைக்கு என்ன தெரியும்?' - குழந்தைகளுக்கு கல்வி மீது வெறுப்பைத் தூண்டுகிறதா பொதுத் தேர்வுகள்? Muthumari DIN Monday, September 16, 2019 03:21 PM +0530  

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு: 

நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில், தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.  அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 5 மற்றும் 8ம் வகுப்பில் தோல்வியுற்றால் 3 ஆண்டுகளுக்கு மாணவர்கள் தங்களது அடுத்த வகுப்பை தொடரலாம் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

தமிழகத்தில் கல்வி:

தமிழகத்தில் தற்போதைய கல்வித்தரம் குறித்து பார்த்தால், எழுத்தறிவு விகிதம் 80.33 ஆக உள்ளது. இதில், ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.77ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.44 ஆகவும் இருக்கிறது. தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 1500க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2500க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையில் அதிக மாணவர்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையும், உயர்கல்வி படிப்பவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் என்ற பெருமைகளையும் தமிழகம் பெற்றுள்ளது.

கல்விப் பணியில் தலைவர்கள்:

தமிழகத்தில் கல்வித்துறையில் அசாத்திய மாற்றங்களை கொண்டுவந்ததில் எம்.ஜி.ஆர், காமராஜர் உள்ளிட்டோருக்கு முக்கியப் பங்கு உண்டு. அதிக பள்ளிக்கூடங்கள் கட்டியதும், அதிகக் குழந்தைகள் பள்ளிக்கு வரவழைத்ததும் காமராஜர் தான். அந்தக் காலத்தில் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டதாலேயே, தற்போது தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது. 

மேலும், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க இலவச மதிய உணவு, சீருடை, புத்தகங்கள் என காமராஜர் காலத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலத்திலும் கூட மாணவர்கள் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்; மேல்நிலைப்பள்ளியை தொடர வேண்டும் என்று இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, கல்வி உதவித்தொகை என அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கு வருபவர்கள் அதிகம் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

மாணவர்களுக்கு தேர்வின் மீதுள்ள ஆர்வம் குறைந்ததா?

மாணவர்களின் நிலையைப் பற்றி ஆராய்ந்தால், முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் இருந்தன. கடந்த 2017-18ம் கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதுவே மாணவர்களுக்கு ஒரு பெரும் சுமையாக இருந்து வருகிறது. அதாவது, 10 மற்றும் 12ம் வகுப்பு எனும் போது இடையில் ஒரு வருடம் இடைவெளி இருக்கும். பொதுத்தேர்வு என்றாலே மாணவர்கள் பதற்றமாகும் சூழ்நிலையில், ஒரு வருடம் மாணவர்களை மன ரீதியாக அவர்களை சரிசெய்ய உதவியாக இருந்தது.

தற்போது 3 வருடங்களும் தொடர்ச்சியாக பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதையோடு, பொதுத் தேர்வை ஆர்வமாக எதிர்கொள்ளும் மாணவர்கள் கூட சோர்ந்து விட அதிக வாய்ப்பிருக்கிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மாணவர்களிடையே தேர்ச்சி விகிதம் மற்றும் அவர்களுக்கு தேர்வின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களிடையே ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 10 வயதில் ஒரு சாதாரண மாணவன் பொதுத்தேர்வு என்றால் என்ன? என்பதை உணர வேண்டும். அந்தத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். பொதுவாக அந்த வயதில் மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார். ஆனால், சில இடங்களில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் வெளிப்படுத்த தயக்கம் இருக்கும். சிலர் புரிந்துகொள்வதற்கு நேரம் எடுத்துக்கொல்லும். 5ம் வகுப்புக்கு மேல் தான் சில குழந்தைகள் அடிப்படைக் கல்வியையே கற்றுக்கொள்வதாக சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

தேர்வில் விடை தெரியாமல் முழிக்கும் அதே குழந்தையிடம் சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கான பதிலை அந்தக் குழந்தையால் சொல்ல முடியும். தேர்வு பயத்தில் மறந்து விட்டது என்று கூறுவார்கள். அப்படி இருக்க 10 வயதில் பொதுத் தேர்வு என்றால் எப்படி சாத்தியமாகும்? ஆக, இந்த இடத்தில் தேர்வு என்பது முக்கியமல்ல. மாறாக, குழந்தையின் கல்வியறிவு என்ன நிலையில் இருக்கிறது என்று அந்த வகுப்பு ஆசிரியர் தெரிந்துகொண்டாலே போதும்.   

மற்ற கலைகள் அழிந்துவிடும் அபாயம்:

10 வயதில் குழந்தைகளுக்கு நடனம், இசை, தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். அனைத்து அடிப்படை அறிவுகளையும் வழங்க வேண்டும் வயதில், 5ம் வகுப்பிலே படிப்பு, தேர்வு என்று இருந்தால் அந்த குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்று தெரியாமலே போய்விடும். மற்ற கலைகளையும் தெரிந்துகொள்ளாத சூழ்நிலை ஏற்படும்.

அனைத்து மாணவர்களும் படிப்பு என்று இறங்கிவிட்டால் மற்ற துறைகளில் ஜொலிக்கப் போகிறவர்கள் யார்? என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. 5ம் வகுப்பில் தேர்வு வைக்கும்பட்சத்தில் சனி, ஞாயிறுக் கிழமை உள்பட அந்தக் குழந்தை பள்ளியில் தான் இருக்க நேரிடும். பொதுத் தேர்வுகளின் மூலம் மாணவர்களின் திறமைகளை வளர்க்க முடியாது. இது மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ, அரசு புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

செயல்வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம்:

பள்ளிகளில் எழுத்துத் தேர்வுக்கு பதிலாக செயல்வழிக் கற்றல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மட்டுமே மாணவரின் ஆற்றல் அதிகரிக்கும். 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத்து வடிவில் வைப்பதற்கு பதிலாக செய்முறைத்தேர்வு வைக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் நிலையை அறிந்துகொண்டு, அடுத்த வகுப்புகளில் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்கலாம்.

ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து எழுதுவது என்பது அனைத்து மாணவர்களாலும் செய்ய முடியாத ஒரு காரியம். ஆனால், செய்முறைத்தேர்வு, திறனறித் தேர்வு வைக்கும்போது அனைத்து மாணவர்களும் எளிதாக கல்வியறிவை பெற முடியும். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருப்பார்கள் என்றால் அனைவருமே ஒரே I.Q லெவலில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா? 

கல்வியறிவு விகிதம் குறையுமா? 

ஆசிரியர்கள், தேர்வு என்ற கோணத்தில் பாடம் எடுப்பதற்கும், அறிவை வளர்க்கும் விதத்தில் பாடம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், சிறு வயதிலே தேர்வை திணிக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு ஏற்படும். 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அதற்கு பயந்துகொண்டே மாணவர்கள் சிலர் படிப்பை நிறுத்தி விடுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், 5ம் வகுப்பு என்றால் மாணவர்களின் மனதில் பொதுத்தேர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தத் தானே செய்யும்.. 

இதில் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். முக்கியமாக கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும். ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் குறையும்.   

மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர்கள்:

ஒரு மாணவர் 10ம் வகுப்பு படிக்கும் போது தேர்வு என்றால் என்ன? பாடத்தை புரிந்துகொண்டு தேர்வு எழுதுவது எப்படி? அதே நேரத்தில் 10 வயதிலே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற ஒன்றை திணிக்கும் போது மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களின் நிலை என்ன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த அறிவிப்பினை அடுத்து 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வைப்பது? என மற்றவர்களிடம் ஆலோசனை செய்து வருகின்றனராம். 

இனி, 5ம் வகுப்பு தேர்வு எழுதிய குழந்தை கூட அண்டை வீட்டாரிடம் இருந்தும், சற்று விலகியே இருக்கும். 5ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் என்னவென்று தெரிந்து அதுகுறித்து உறவினர்கள் கேள்வி எழுப்புவார்கள் அல்லவா?  

ஆசிரியர்கள் பற்றாக்குறை:

தமிழகத்தில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்தச் சூழலில் எப்படி ஒரு மாணவர் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியும். அதேபோன்று செய்முறைத்தேர்வுக்கான ஆய்வகங்களும் அரசுப்பள்ளிகளில் குறைவாகவே இருக்கின்றன. மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, வகுப்பில் தேவையான பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதன் பின்னர், பொதுத்தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதே சிறந்த வழியாக இருக்கும். 

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வினால் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்று தமிழக அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். 5ம் வகுப்பு அரசுப்பள்ளியில் ஆசிரியரே இல்லை என்றால் எப்படி மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும்? என்பதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

கல்வியறிவில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டில், 10 வயது மேல் தான் அடிப்படைக் கல்வியையே கற்றுக்கொடுக்கின்றனர். செய்முறைத் தேர்வுக்கு முக்கியவத்தும் அளிக்கப்படுவதோடு தேர்வு முறைகளும் எளிதாக இருக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்விமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவே வெளிநாட்டுப் பயணம் என்று கூறும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் பின்லாந்து நாட்டிற்குச் சென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று கல்வியாளர்கள் பலர் கூறுவது போல 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளுக்கு கோச்சிங் செண்டர்கள் அதிகரித்துள்ளது போல இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளும் டியூஷன் சென்டர்கள் அதிகரிக்கும். கல்வி வியாபாரம் ஆவதை நம்மால் முழுமையாக தடுக்க முடியாது. ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதனைத் தடுக்கலாமே?

]]>
Education system, public exam, TN Education System, பொதுத் தேர்வுகள், தமிழகத்தில் கல்வி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/1/28/16/w600X390/education.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/16/is-education-system-will-change-students-mindset-3235735.html
3235730 Glance குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு DIN DIN Monday, September 16, 2019 01:23 PM +0530
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார்.

புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை, அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த சந்திப்பின் போது வெங்கய்ய நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவும் உடன் இருந்தார்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.

ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் செளஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ஹிமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா சட்டப் பேரவைத் தலைவர் போசாராம் ரெட்டி, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரத்தின் ஆளுநராக இருந்த இ.எஸ்.எல். நரசிம்மன், இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, தெலங்கானாவின் அடுத்த ஆளுநராக, தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜனை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் படிக்க: நாட்டின் இளவயது ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

58 வயதாகும் தமிழிசை செளந்தரராஜன், 1999-ஆம் ஆண்டு பாஜகவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மருத்துவ அணியின்  மாநில பொதுச் செயலாளர், பாஜகவின் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் என  கட்சியின் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தனது கட்சிப் பதவியை  ராஜிநாமா செய்தார்.
 

]]>
Telangana, தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர், DrTamilisaiGuv, Governor of Telangana, MVenkaiahNaidu, Usha Naidu, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/venkaiah_tamilisai.jpg https://www.dinamani.com/india/2019/sep/16/governor-of-telangana-tamilisai-meets-vice-president-venkaiah-naidu-3235730.html
3235104 Glance பேனர் கலாச்சாரத்தை புறக்கணிக்கும் திரைப் பிரபலங்கள்! ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்களா? Muthumari DIN Sunday, September 15, 2019 05:15 PM +0530  

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண் பி.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கரணை வழியாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கிருந்த கட்சிப் பேனர் ஒன்று காற்றில் பறந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதே நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி ஒன்று சுபஸ்ரீ மீது மோதியது. இதில் அவர் உயிருக்கு போரடிய நிலையில் மருத்துவமனை கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் சுபஸ்ரீயின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பேனர் கலாச்சாரத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், பேனர் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பதை திரையுலகப் பிரபலங்கள் கையில் எடுத்துள்ளன. விஜயின் 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதேபோன்று பேனர்கள் வைப்பதை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையானவற்றை கொடுத்து உதவுங்கள். மேலும், ரத்த தானம் செய்யுங்கள் என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார். 

எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மதுரையில் அஜித் ரசிகர்களின் சுவரொட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது. அந்த சுவரொட்டியில், 'சுபஸ்ரீயின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவிக்கின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படவும். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 

தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

'பேனர்கள் வைக்க வேண்டாம்; மாறாக ஏழைக்குழந்தைகளுக்கு உதவுங்கள்' என கடந்த 2013ம் ஆண்டு அஜித் கூறிய செய்தித்தாள்களின் பிரசுரங்களும் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 3 -யை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் சுபஸ்ரீ-யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, முன்னதாகவே தனது ரசிகர்களுக்கு, கட்சித் தொண்டர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தியதாகக் கூறினார். 

திரையுலகத்தில் தல - தளபதி என்று அழைக்கப்படும் விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களே இந்த விவாகரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து திரைப் பிரபலங்களும் இதனை தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக பேனர் கலாச்சாரத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

]]>
விஜய், அஜித், கமல்ஹாசன், vijay, Kamal Haasan, ajith, banners, சுபஸ்ரீ உயிரிழப்பு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/15/w600X390/ajithvijay.jpg https://www.dinamani.com/cinema/2019/sep/15/banners-should-be-banned-3235104.html
3234384 Glance நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் PTI PTI Saturday, September 14, 2019 03:14 PM +0530
புது தில்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையேக் காட்டுகிறது.

பொருளாதார சூழல் மீண்டு வருவதற்கான சீரான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழிற்சாலைகளில் உற்பதி அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பின் பயன், மக்களுக்கு சென்றடையும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுத் துறை வங்கித் தலைவர்களை செப்டம்பர் 19ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

5 முக்கிய துறைகளில் பொருட்களின் நுகர்வு குறைந்துவிட்டது. பகுதி கடன் உறுதித் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன. நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும். சிறிய அளவில் வரி செலுத்துவோர் செய்யும் தவறுகளுக்காக பெரிய அளவில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

]]>
Finance Minister Nirmala Sitharaman, Remission of Duties, Taxes on Export Products, Merchandise Exports from India Scheme https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/nirmala_seetharam.jpg மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் https://www.dinamani.com/india/2019/sep/14/revival-signs-in-industrial-production-fixed-investment-nirmala-sitharaman-3234384.html
3234382 Glance மும்பையை மீண்டும் மிரட்டும் மழை: 2-3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ANI ANI Saturday, September 14, 2019 02:53 PM +0530
புது தில்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. எனினும் இது கன மழையாக இருக்கவில்லை.

கொலாபாவில் 6.2 மி.மீ. மழையும், சான்டா க்ரூஸ் பகுதியில் 41.3 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேப்போல, தில்லி, குருக்ராம், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதே சமயம், இந்த மழை கன மழையாக இருக்காது என்றும், நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றும் சொல்லியிருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
 

]]>
Santa Cruz, Colaba, Skymet, India- Mumbai , financial capital, weather forecasting https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/RAIN1fe.jpg https://www.dinamani.com/india/2019/sep/14/mumbai-likely-to-receive-more-rainfall-in-next-2-3-days-3234382.html
3234364 Glance டி.கே. சிவக்குமாரின் பெயரில் 317 வங்கிக் கணக்குகளாம்: பினாமி பெயரில் இருக்கும் சொத்துக்கள் மட்டும்..! DIN DIN Saturday, September 14, 2019 12:40 PM +0530 கருப்புப் பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் அமலாக்கத் துறை காவலை, வரும் 17-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கருப்புப் பணத்தையும், பினாமி சொத்துக்களையும் கூட விடுங்க, பொதுமக்களால் அதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

ஆனால், டி.கே. சிவக்குமாரின் பெயரில் மொத்தம் 20 வங்கிகளில் 317 வங்கிக் கணக்குகள் இருக்கின்றனவாம். இந்த வங்கிக் கணக்குகளில் கணக்கில் வராத அதாவது கருப்புப் பணம் என்று சொல்வார்களே அது மட்டும் ரூ.200 கோடி அளவில் இருப்பில் உள்ளதாம். ஆனால் இந்த பணம் எந்த வகையில் வந்தது என்பதை அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டனர்.

மாதத்துக்கு நூறு, இருநூறு என வரும் சிலிண்டர் மானியத்துக்காக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கிவிட்டு, ஏழை, எளிய மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல, அந்த இரு நூறு ரூபாயைப் பெற தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று பொதுமக்களை, வங்கிகள் படுத்தும் பாட்டைப் பார்க்கும் போது ஒரே ஒரு வங்கிக் கணக்குக்கே இந்த அளவுக்கு சிரமப்படும் ஏழை மக்கள், 317 வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு சிவக்குமார் வங்கிகளிடம் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருப்பாரோ என்று நினைத்து கவலையில் ஆழ்ந்து விடும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி சிவகுமாரைக் கைது செய்தனர். பின்னர், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 9 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

அமலாக்கத் துறையின் காவல் நிறைவடைந்த நிலையில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என்.நட்ராஜ் முன்வைத்த வாதம்:

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளது; ரூ.800 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் உள்ளன. இதுதொடர்பான பல முக்கிய விவரங்கள் சிவகுமாருக்கு மட்டுமே தெரியும். ஆனால், விசாரணையின்போது மழுப்பலாக அவர் பதிலளிக்கிறார். அதுமட்டுமன்றி, இந்த விவகாரம் தொடர்பாக கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

எனவே, அவரது காவலை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கே.என்.நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது கோரிக்கைக்கு சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். 

வெகுநேரம் நீடித்த வாதத்தின்போது, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிவகுமாரின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு, அதாவது வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதலில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்; பிறகுதான் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும்.

சிவகுமாரை அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர்கள் நாளொன்றுக்கு அரை மணி நேரம் சந்திக்கலாம். மேலும், சிவகுமார் தனது மருத்துவர் ரங்கநாதனைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

]]>
black money, அமலாக்கத் துறை, Enforcement Directorate , dk sivakumar, 317 bank accounts, டிகே சிவக்குமார், 317 வங்கிக் கணக்குகள், பினாமி சொத்து https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/DK_Shivakumar.jpg கோப்புப்படம் https://www.dinamani.com/india/2019/sep/14/dk-sivakumar-have-317-bank-accounts-3234364.html
3234356 Glance மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசை, விருப்பம் இதுவாம்! DIN DIN Saturday, September 14, 2019 11:46 AM +0530  

இன்று ஹிந்தி மொழி தினம் என்பதால் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஏராளமான ஹிந்தி பதிவுகளை இட்டுள்ளார்.

அவர் கூறியிருக்கும் விஷயங்களில் முக்கிய விஷயம் என்னவென்றால், இன்று ஹிந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நான் நாட்டு மக்களுக்கு ஒரு  கோரிக்கையை வைக்கிறேன். அதாவது, அவரவர் அவருடைய தாய்மொழியில் பேசுவது போல, அதனுடன் ஹிந்தியையும் கற்று அதில் பேசுவதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே மொழியாக ஹிந்தி அமைந்துவிடும். அனைத்து திசைகளிலும் பேசப்படும் மொழியாக ஹிந்தி மாறிவிடும். அதன் மூலம் சர்தார் படேல் கண்ட கனவு நிறைவேறும்.

மேலும் படிக்க: மோடி அரசின் 100-ஆவது நாள்: தேசப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்: அமித் ஷா பெருமிதம்

இந்தியா பல மொழி பேசும் நாடுதான். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் உண்டு. ஆனால், நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போது, சர்வதேச அளவில் நமது இந்தியா அறியப்படும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் ஹிந்தி மாறும் என்றும் அமித் ஷா தனது விருப்பத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
 

]]>
hindi day, amit shah, Hindi speaking, அமித் ஷா, ஹிந்தி தினம், ஹிந்தி மொழி, Prime Minister https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/amit_shah_hindi.jpg https://www.dinamani.com/india/2019/sep/14/hindi-day-home-minister-amit-shah-tweets-3234356.html
3233584 Glance விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கப்படுவதில்லை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து DIN DIN Friday, September 13, 2019 03:52 PM +0530
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பேனர் வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரபாகர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், சென்னை மாநகராட்சி ஆணையர், சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

விதிமீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க: அதிகாரிகளின் மெத்தனமே பேனர் விழுந்து இளம்பெண் பலிக்குக் காரணம்: நீதிமன்றம் கண்டனம்

வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு கால தாமதம்

மேலும், நேற்று பிற்பகல் 2.30க்கு விபத்து நேரிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான புகார் மாலை 6 மணிக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகாலம் காவல்துறைப் பணியில் இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது, அதுவும் தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லையே ஏன்? விபத்து நடந்த இடத்தில் 4 பேனர்கள் இருந்துள்ளன என்று நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் தொடர்பாக புகாரில் ஒரு வார்த்தை கூட பதிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்விக்கு, புகார் பதிவு செய்யும் போது பேனர் தொடர்பான விஷயத்தை மறந்துவிட்டதாக காவல் ஆய்வாளர் பதில் அளித்தார்.

ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்களை வைக்க தடை அமலில் உள்ளது. அந்த விதிப்படிதானே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது? என்று நீதிபதிகள் கேட்டனர்.

மேலும் படிக்க: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து:  இளம் பெண் பலி

சிசிடிவி கேமரா மூலம் இதுபோன்ற பேனர் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாதா? யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தாலே தவறுகள் குறைந்துவிடும். பேனர் தொடர்பாக பிரச்னைகள் வரும் போதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? என்றும் நீதிபதிகள் சரமாரியக் கேட்டனர்.

சுபஸ்ரீ குடும்பத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப் போகிறீர்கள். சுபஸ்ரீ குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகளிடம் இருந்தும், பேனர் வைத்தவர்களிடம் இருந்தும் வசூலியுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
chennai high court, சென்னை உயர் நீதிமன்றம் , பள்ளிக்கரணை விபத்து , Subashri, banner accident, pallikaranai accident https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/Subhasri.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/death-of-subasri-madras-hc-rebukes-political-parties-in-tn-for-encouraging-banner-culture-3233584.html
3233581 Glance அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் எடப்பாடி: துரைமுருகன் கடும் தாக்கு  DIN DIN Friday, September 13, 2019 03:42 PM +0530  

சென்னை: அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார் என்று, திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக  வெள்ளியன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"நீர்மேலாண்மைக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன ?” என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள். நீர்மேலாண்மைத் திட்டங்கள்- நதி நீர்த் திட்டங்கள்- நீர்த் தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், ‘கமிஷன் கலாச்சாரத்தில்’ முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி முதலமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.

நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி தி.மு.க. ஆட்சிதான்.  “தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்” மற்றும் “காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்” ஆகிவயற்றைக் கொண்டு வந்தவர் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் என்பதைத் தமிழக நதிநீர் இணைப்பு வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. அந்தப் பதிவுகளைப் பார்ப்பது எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு நல்லது.

“தி.மு.க. ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள்” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் திரு எடப்பாடி பழனிசாமி. 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, 5.42 லட்சம் கோடி முதலீடு வரப் போகிறது என்று ‘பகட்டு’ அறிவிப்பை வெளியிட்டு - இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ள திரு. பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த 14 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தை முதலமைச்சரால் மறுக்க முடியுமா? மறுக்கட்டுமே பார்க்கலாம். அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அவர் தி.மு.க.வைப் பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது;

இந்தியா முழுவதும்  பொருளாதரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பொருளாதாரப் பின்னடைவு, தொழில் பின்னடைவு இல்லை என்று முதலமைச்சர் பீற்றிக் கொள்வதை உண்மை என்று யாரும் ஏற்கமாட்டார்கள். கோவையிலும் திருப்பூரிலும் கேட்டால் சொல்வார்கள், எத்தனை தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன, எத்தனை ஆயிரம்பேர் வேலை இழந்துள்ளனர் என்ற விவரங்களைச் சொல்வார்கள்;பத்திரிகையாளர்களைக் கேட்டாலும் பட்டியல் இட்டுத் தருவார்கள்

எல்லோரும் பாராட்டிய நிர்வாகம் அளித்த எங்கள் கழகத் தலைவர் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய எங்கள் கழக தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை - எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

]]>
duraimurugan slams EPS, tamilnadu CM EPS, DMK treasurer duraimurugan, DMk stalin, தமிழ்நாடு , அரசு நிர்வாகம் , நீர் மேலாண்மை , தொழில் வளர்ச்சி , முதல்வர் எடப்பாடி , திமுக துரைமுருகன் , கடும் விமர்சனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/duraimurugan.jpg திமுக பொருளாளர் துரைமுருகன் https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/dmk-treasurer-duraimurugan-describe-eps-as-the-one-who-doesnt-know-how-to-rule-the-state-3233581.html
3233577 Glance துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் DIN DIN Friday, September 13, 2019 03:52 PM +0530  

துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் மதராசப் பட்டினம் எனும் 3 நாள் உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்து  முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகரம் 400 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான நகரம் மட்டுமல்ல, இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது என்பதும் பெருமைக்குரியதாகும். கிழக்கிந்திய கம்பெனி 1639- ஆம் ஆண்டு தமிழகத்தில் காலூன்றியபோது, அவர்களை முதலில் ஈர்த்த நகரம் மதராசப் பட்டினம்தான். அப்போது சென்னைப்பட்டினம் மற்றும் மதராசு பட்டினம் என்று இரண்டு கிராமங்கள் இருந்தன. இவை இரண்டும் இணைந்து உருவான நிலப்பரப்புதான் தற்போதைய சென்னை என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினத்திற்கு வருவதற்கு முன்பே, மதராசபட்டினத்தில் தமிழர்கள் வளமுடனும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இத்தகைய பாரம்பரியச் சிறப்புமிக்க, மதராசபட்டினத்தினை நினைவுகூறும் வகையில், “மதராசபட்டினம் விருந்து” என்ற பெயரில் இன்றையதினம் விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக அமைச்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

மேலும் படிக்க: விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க.. மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா சென்னையில் துவக்கம்!!

நோய்நொடியற்ற, உடல் வலிமையுள்ள, உழைக்கக்கூடிய மக்கள் சமுதாயம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். இரசாயணப் பொருட்கள் கலப்படமில்லாத உணவு தானியங்கள் மற்றும் பொருள்களால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான, சுகாதாரமான உணவுதான் மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது. நமது உடலில் சக்தி உருவாக, செல்கள் வளர்ச்சி பெற, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்பட இயற்கை உணவுகள், பூண்டு, வெங்காயம், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், ஆகியவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோயை உண்டாக்காத உணவும், அதேநேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் மிகவும் அவசியம் ஆகும்.

மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்- என்றார் திருவள்ளுவர்.

முன் உண்ட உணவு செரித்த பின்னர், அதனை ஆராய்ந்து, பிறகு தக்க அளவு உணவு உண்டால், உடம்பிற்கு மருந்து என, ஒன்று வேண்டியதில்லை, என்பது இதன் பொருள் ஆகும். உணவை  மருந்துபோன்று குறைவாக, அளவாக உண்ண வேண்டும். அதிகம் உண்டால், எதிர்காலத்தில் மருந்தே உணவாகிவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இளைய சமுதாயத்தினர்தான், நமது நாட்டின் எதிர்காலத் தூண்கள். தற்போது ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. எவ்வித புரதச் சத்துக்களோ, வைட்டமின்களோ, கனிமச் சத்துக்களோ இல்லாத, உணவுகளாக துரித உணவுகள் உள்ளன. அவற்றில் உப்பும், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் உள்ளதால், அவற்றை உண்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உட்பட, பல்வேறு நோய்கள் வருகின்றன.

எனவே, துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணிக நோக்கத்தினை மட்டுமே மையமாகக் கொண்டு, மேலை நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள், செயற்கை குளிர்பானங்கள், அதிக எண்ணெய் உள்ள உணவுப்பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தினால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருள்களும், தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெல்லமும்... ஆரோக்கியமும்!

2000-க்கும் மேற்பட்ட வியாதிகள், தற்போது சுகாதாரமற்ற உணவினால்தான், பரவுகின்றன என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், குறைவான எடையில் 20 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றும், உலகில், 39 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மக்களுக்குத் தரமான உணவினை அளிக்க வேண்டிய கடமை, அரசுக்கும், உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது. நுகர்வோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. 

மேலும் படிக்க:  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை... தலையணை அல்ல!

இவற்றைக் கருத்தில் கொண்டுதான், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பதை, உறுதி செய்யவும், உணவு பாதுகாப்பு, மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 மற்றும் அது தொடர்பான சட்டங்களை செயல்படுத்தவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 69 கோடி ரூபாய் செலவில், உணவு பாதுகாப்புத் துறை என்ற புதிய துறையை, 2011-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்கள்.

உணவு வணிகர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர அனைத்து பொதுமக்களுக்கும், உணவு பாதுகாப்பு குறித்து, தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக இத்துறை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

மகாத்மா காந்திஜியின், 150-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட, “சுவஸ்த் பாரத் யாத்ரா” எனும், மிதிவண்டி தொடர் பேரணி பிரச்சாரம், தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு, மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்த, இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட, இந்தச் சைக்கிள் பேரணியில், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த கொழுப்பு” என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு, பொதுமக்களுக்கு, சரியான உணவைத் தேர்வு செய்வது எப்படி என்ற முழு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் குழந்தைகள், மாணவர்கள், தேசிய மாணவர் படை, அரசு அலுவலர்கள், சுய உதவி குழுக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என, 97,250 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த சைக்கிள் பேரணியை சிறப்பாக நடத்தியதற்கான விருதினை, மத்திய அரசிடமிருந்து அதிமுக அரசு பெற்றது. மேலும், சிறந்த நடமாடும் உணவு ஆய்வகமாக தமிழ்நாட்டின் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கும் விருது வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்திய அரசின், உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம், மற்றும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர்புர வாழ்வாதார குழுமமும் இணைந்து, உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராச பட்டிணம் விருந்து விழா, 13.09.2019 முதல் 15.09.2019 வரை மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமமும், சென்னை பெருநகர மாநகராட்சி, சாலையோர வியாபாரிகள் சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்பு, சிவில் சங்கங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தும், இந்த உணவுத் திருவிழாவில், உணவு கடைகள், வினாடி வினா, கலந்தாய்வு, செய்முறை விளக்கம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உணவு விழாவில் பொதுமக்களும், வணிகர்களும், நுகர்வோர்களும் திரளாக கலந்து கொண்டு, ரசித்து, ருசித்து பயன்பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன் என்று பேசினார்.
 

]]>
chennai island ground, cm ops, tamilnadu CM palanisamy, உணவுத் திருவிழா, தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, சென்னை தீவுத்திடல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/7/w600X390/Palaniswami_EPS.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/dont-eat-fast-food-cm-palanisamy-3233577.html
3233548 Glance படித்த எம்.பி.க்கள் புதுமை: ஸ்டாலினிடம் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கை தாக்கல்! DIN DIN Friday, September 13, 2019 01:02 PM +0530  

திமுக எம்.பி.க்கள் தங்களது மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்து வருகின்றனர். 

திமுகவின் தருமபுரி தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், "ஆகஸ்டு மாத செயல்பாட்டு அறிக்கையை கழகத் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கியபோது" என்கிற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார், இதற்கு திமுகவினர் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திமுகவில் இதுபோன்ற அறிக்கைகளை எம்.பி.க்கள் தாக்கல் செய்வது தற்போதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது என்கின்றனர்.

மக்கள் நெருக்கம் அதிகரிப்பு
மேலும் ஒவ்வொரு தொகுதி எம்.பி.யும் தங்களது செயல்பாடுகளை தலைமையிடம் மாதந்தோறும் கொடுப்பதன் மூலம் கட்சிக்குத்தான் வலிமை சேர்க்கும். மக்களிடம் திமுகவுக்கான நெருக்கத்தை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அலுவலகங்கள் திறக்க
ஒவ்வொரு எம்.பி.யும் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளில் அலுவலகங்களைத் திறக்க வேண்டும் என்று திமுக தலைமை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் பொதுமக்கள் கேட்கும் அத்தனை அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கூறியிருக்கிறது திமுக தலைமை.

எதனடிப்படையில் அறிக்கை
இதனடிப்படையில்தான் தங்களிடம் வந்த கோரிக்கை மனுக்கள் எத்தனை? என்ன என்ன மனுக்கள் வந்திருக்கின்றன? அந்த மனுக்களுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், தமது செயல்பாடுகள் குறித்த பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக கட்சித் தலைமையிடம் திமுக எம்.பி.க்கள் கொடுத்து வருகின்றனர்.

கட்சி நிர்வாகிகள் உற்சாகம்
திமுகவின் இப்புதிய அணுகுமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுவதால் தேர்தல் காலங்களில் தங்களது பணி மிக எளிதானதாகிவிடுகிறது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
 

]]>
திமுக எம்பி, திமுக தலைவர் ஸ்டாலின், dmk party chief, dmk leader stalin, tamilnadu mp, MP Dr. Senthil, தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/dmk_mp_senthil.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/dmk-mp-senthil-submited-monthly-report-to-party-chief-stalin-3233548.html
3233545 Glance பொருளாதார மந்தநிலையா? குடும்பப் பிரச்னையா? பெண் தொழிலதிபர் மரணத்தில் எழும் சந்தேகங்கள்! DIN DIN Friday, September 13, 2019 01:02 PM +0530
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரீட்டா (49) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

ரீட்டா - லங்காலிங்கம் தம்பதி, லேண்ஸன் குழுமத்தின் புகழ்பெற்ற டோயோட்டா டீலர்ஷிப்பை பெற்று தமிழகம் முழுவதும் ஏராளமான ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களை நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியாகி ரீட்டாவின் கணவர் லங்காலிங்கம் முருகேசு இருந்தார்.

இந்த நிலையில், கார் விற்பனை குறைவு,  தொழிலில் ஏற்பட்ட நலிவு காரணமாக ரீட்டா தனது அலுவலகத்தில் உள்ள அனைத்து மேலாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது மேலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை கணவர் தட்டிக் கேட்டுள்ளார். மேலாளர்கள் முன்னிலையில் தன்னை கணவர் திட்டியதால் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க: சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை

இதனால் ரீட்டா அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு கணவர் லங்கா லிங்கம் வீட்டுக்கு வந்த போது அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால், அவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.  இந்த நிலையில் மனமுடைந்த ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே, பொருளாதார மந்தநிலையால் மனம் உடைந்து இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் நேற்று கூறப்பட்டதாவது:
சென்னை கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்கா லிங்கம் (49) அதே நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்தார்.  இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.  இதில் மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.

மேலும் படிக்க: காபிடே உரிமையாளர் சித்தார்த் நீரில் மூழ்கி இறப்பு: தடயவியல் அறிக்கையில் தகவல்

ரீட்டா மற்றும் அவரது கணவர் லங்கா லிங்கம் சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டின் மேற்பார்வையாளராக ஏசுபாதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ரீட்டாவின் வீட்டுக்கு வந்தபோது ரீட்டாவின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதையடுத்து அறையின் உள்ளே பார்த்தபோது ரீட்டா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுபாதம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
கார் விற்பனை, Reeta Lankalingam, Lanson Toyota company, found dead, Lanson Group, Toyota dealership, showrooms, Lankalingam Murugesu, ரீட்டா - லங்காலிங்கம், டோயோட்டா டீலர்ஷிப், தொழிலில் ஏற்பட்ட நலிவு , தூக்கிட்டு தற்கொலை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/reeta_lankalingam.JPG பெண் தொழிலதிபர் ரீட்டா (49) https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/slowdown-pain-lanson-toyotas-joint-md-reeta-lankalingam-suicide-3233545.html
3233542 Glance ஆன்லைன் சினிமா கட்டணத்தில் மாற்றம்: அமைச்சர் கடம்பூர் ராஜு எழில் DIN Friday, September 13, 2019 11:46 AM +0530  

எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

திரையரங்குகளில் சினிமா பார்ப்பதற்கு ஆன்-லைனில் மட்டுமே டிக்கெட் விற்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் அறிவித்தார். தமிழகத்திலுள்ள 977 திரையரங்குகளிலும் எத்தனை டிக்கெட்டுகள் விற்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் விதமாக முதன் முறையாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தெரிவித்ததாவது: எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைனில் கிடைக்கும்படி வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

]]>
Online booking, TN , Kadambur Raju, compulsory, theaters https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/theatre8171.jpg https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/13/online-booking-will-be-made-compulsory-in-theaters-across-tn-says-kadambur-raju-3233542.html
3233540 Glance எது நலம் / நலமற்றது?  வாருங்கள் தெரிந்து கொள்ளலாம், இது தேசிய ஊட்டச்சத்து மாதம்! பெ.உமா மகேஸ்வரி Friday, September 13, 2019 11:44 AM +0530  

"உயிர் வளர்க்கும் ஊட்டச்சத்து"

செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படும்  தேசிய ஊட்டச்சத்து வாரம், கடந்த ஆண்டு முதல்  தேசிய ஊட்டச்சத்து மாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்விற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அவசியமான சூழல்!

வறுமையின் காரணமாகப் போதிய உணவு மற்றும் ஊட்டமின்மையும் அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்பட்டு உடல் எடை மற்றும் வளர்ச்சியின்மை என்பது  அவர்கள் பெரியவர்களான பின்பும் சரி செய்ய இயலாது நிரந்தரமாகி விடுகிறது. இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால்  அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்  திறனும் குறைந்து ஏழ்மை  தொடர்கிறது .இந்த சுழற்சி (vicious cycle)  இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதையும் பாருங்க... சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!

உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி ( Global Nutrition Report,2018) வயதுக்கேற்ற போதிய உயரமின்மை கொண்ட 46.6 மில்லியன் குழந்தைகளும், உயரத்திற்கேற்ற போதிய எடையின்மை கொண்ட 25.5 மில்லியன் குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளது. யுனிசெஃப் அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு விதமான ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க அதிக உடல் எடை கொண்ட  ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் இந்தியா தாயகமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான ஊட்டம் என்கிற இரட்டைச் சுமையைக் கொண்ட நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கருத்தாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பஞ்சசீல கொள்கையை போன்று ஐந்து முக்கிய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம், இரத்த சோகை மற்றும் தீவிர வயி்ற்றுப் போக்கு தடுப்பு, தனி மனித சுகாதாரம், சரிவிகித ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை. ஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரம்பிப்பது  முதல் பிறக்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1000 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. இந்த ஆயிரம் நாட்களே  ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் காலகட்டமாக மறைமுகமாக ஒரு தேசத்தின் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முக்கிய நாட்களாக அமைகிறது.

இதையும் பாருங்க... ‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்!

கர்ப்ப காலத்திற்குத் தேவையான அதிகப் படியான ஊட்டச்சத்து, அத்தியாவசிய தடுப்பூசிகள், சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல்  உணவுகள், சுகாதாரம் என இவை அனைத்தையும் இக்கால கட்டம் உள்ளடக்கியது.

பற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக் குறைவு... ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. மனித ஆரோக்கியத்திலும், முன்னேற்றத்திலும் ஊட்டச்சத்தின்மை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது உற்பத்தி இழப்பையும் பொருளாதார ரீதியிலான பின்னடைவையும் உண்டாக்குகிறது. ஆரோக்கியமான குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். போதுமான ஊட்டச்சத்து கொண்டவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள். மாறாக ஊட்டச்சத்தின்மை நோய்த்தடுப்பாற்றலை குறைத்து நோய் தாக்கத்திற்கு ஆளாக்கி, உடல், மன வளர்ச்சியை தடுத்து ஆக்க சக்தியையும் குறைக்கிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துக்களையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும் (சரிவிகித உணவு) இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும். ஒரு சமநிலை உணவு ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம்  கலோரிகளையும் புரதத்திலிருந்து பத்திலிருந்து பதினைந்து சதவிகிதத்தையும், கொழுப்பிலிருந்து 20 முதல் 30 சதவீதத்தையும் வழங்க வேண்டும், உணவில் புரதம், மாவு, கொழுப்பு, உயிர்ச்சத்து, தாது, நீர் ஆகிய ஆறு வகை சத்துக்,கள் அடங்கியுள்ளன. உயிர்வாழ்க்கை, வளர்ச்சி, உடலியக்கம், திசு சீரமைப்பு இவை அனைத்திற்குமே ஊட்டச்சத்து தேவையானது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது. 

தாய்ப்பாலில் போதுமான அளவிற்கு புரதம், கொழுப்பு, கலோரி, உயிர்ச்சத்து , இரும்பு , தாது , நீர் மற்றும் நொதிகள் உள்ளன. நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எளிதாக செரிமானம் ஆகிறது. ஆனால் இங்கும் மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விளம்பரங்களில் வருவது போன்று தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என அறியாமையின் காரணமாக தாய்மார்கள் நினைக்கின்றனர். எனவே முதல்  ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கூடுதல் உணவுகளை ஆரம்பித்துவிடுகின்றனர். மறுபுறம் ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் உணவுகளை  வழங்க வேண்டிய அவசியம் மற்றும் எளிதாக வீட்டிலேயே தயாரிக்க இயலும் சத்துமாவு, ராகிக் கூழ் போன்றவை குறித்த சரியான விழிப்புணர்வின்மையின் காரணமாக குறிப்பிட்ட சதவிகித தாய்மார்கள் இருப்பதும் நிதர்சனம்!

முறையாகத் தாய்ப்பால் கொடுப்பது வயிற்றுப்போக்கை தடுக்கும். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட ஐந்து லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழப்பதற்கு இந்த வயிற்றுப்போக்கே காரணமாகிறது. இதனை  எளிமையாக மிக மலிவான விலையில் கிடைக்கும் உப்பு, சர்க்கரை கரைசலைக் கொண்டு (ORS) குணப்படுத்திவிடலாம் என்பது இன்னும அனைவரையும் சென்று சேரவில்லை.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலை இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் நுரையீரல்களில் இருந்து பிராணவாயுவை உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் மற்றும் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும் முக்கியமான பணியை செய்கிறது. மூளை உட்பட  உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயுவின் அளவு குறையும்போது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது .இரத்த சோகை ஏற்பட பல விதமான காரணங்கள் உண்டு .வளர் இளம் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழப்பதாலும்,கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்தின் போது ஏற்படும் இரத்தப் போக்கினாலும் இரத்தசோகை ஏற்படுகிறது .இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது ,மலேரியா காய்ச்சல் மற்றும் குடலில் கொக்கிப் புழுக்கள் பாதிப்பு ஆகியவையும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இரத்த சோகையினால்  உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு,நோய் எதிர்ப்பு சக்தியின்மை,படிப்பில் கவனம் இன்மை,நெஞ்சில் படபடப்பு,சோர்வு,அன்றாடப்பணிகள் செய்ய இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சுண்டைக்காய் ,உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கோதுமை, பொட்டுக்கடலை, மீன், முட்டை, இறால் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சோகையைத் தடுக்கும். உலகிலேயே முதன்முறையாக 1970 ல் இரத்த சோகையை தடுக்கும் திட்டத்தை நம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடக்கப் போகும் இந்நிலையிலும் பதினைந்திலிருந்து 49 வயதிற்குட்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் உடலில் தற்கால வாழ்வியல் முறை, சுற்றுப்புறம் ஆகியவற்றினால் free radical damage ஏற்படுகிறது. சிறியது  முதல் பெரிய வியாதிகள் வரை அனைத்திற்கும் காரணி இது தான். இதனைத் தடுத்து  நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை Anti oxidants. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்் அதிகம் உள்ள கொய்யா, மாதுளை, சீத்தா பழம், பன்னீர் திராட்சை ( திராட்சை விதை புற்று நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது), இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் நார்ச்சத்து மிகுந்தது அத்திப்பழம்,

கால்சியம், இரும்பு, கரோட்டின் நிறைந்த முருங்கைக்கீரை, வைட்டமின் சி மலிவாகத் தரும் எலுமிச்சை ஆகியவற்றை உட்கொள்வது சிறந்தது. முருங்கைக் கீரையின் மகத்துவத்தை அறிந்து இங்கிருந்து கொண்டு சென்று கியூபாவில் பயிரிடச் செய்தவர் மறைந்த அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் நமக்கு அருகாமையிலேயே மலிவாகக் கிடைக்கிறது. தேவை விழிப்புணர்வு மட்டுமே.

முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அவ்வப்போது சமைத்த உணவுகளையும் பச்சை காய்கறிகளையும், கீரைகள், பழங்கள், உலர்ந்த திராட்சை போன்றவற்றை உண்ண வேண்டும். துரித உணவுகளின் மூலம் நமக்கு கிடைத்த கொடை அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை. ஐந்து கிராமிற்கும் குறைவாக  உப்பை உபயோகிப்பது வருடத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய வியாதிகள் மூலம் ஏற்படும்  1.7 மில்லியன் இறப்புகளை தவிர்க்கும். பதப்படுத்தப் பட்ட உணவுகள், துரித உணவுகள், சாஸ் மற்றும் மென்பானங்களில் தேவைக்கு அதிகமான உப்பும், சர்க்கரையும் ஒளிந்திருக்கின்றன.

தனி மனித சுத்தம், சுற்றுப் புறத் தூய்மை, தூய்மையான குடிநீர் ஆகியவை ஆரோக்கிய வாழ்வில் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறைகள் என்பது இன்னும் எட்டப் படாத நிலை என்பது எவ்வளவு வெட்கக்கேடான உண்மை?

ஜோக்கர் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். திறந்தவெளியில் மலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் நவீன அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது போன்று ஒரு காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

அடிப்படை ஊட்டச் சத்தான  உணவு, குடிநீர், வீடுகளில், கல்வி நிறுவனங்களில், பொது இடங்களில் தேவையான கழிப்பறை வசதிகள், முறையான மருத்துவம் போன்ற அடிப்படைகளைத் தவறவிட்டு எங்கோ தொழில்நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது எதனை நோக்கி என சிந்திக்க வேண்டும்.

 

]]>
தேசிய ஊட்டச் சத்து மாதம், செப்டம்பர் - தேசிய ஊட்டச் சத்து மாதம், National Nutrition Month, september, Healthy living, லைஃப்ஸ்டைல், ஆரோக்யம், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/Eat-Right1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/13/national-nutrition-day---we-need-to-know-the-dos-and-donts-about-healthy-nutrition-3233540.html
3233539 Glance வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: இது தான் வளர்ச்சியா? C.P.சரவணன், வழக்குரைஞர் Friday, September 13, 2019 01:03 PM +0530
நிலவுக்கு சந்திரயான் விடும் அதே வேளையில், இந்தியா அதீத வறுமை நாடுகளின் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஜூன், 2018 இல் நாடுகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து வேல்டு பாவர்ட்டி கிளாக் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்,

* உலக அளவில் அதிகமான ஏழைகள் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 
* இந்தியாவில் விநாடிக்கு 44 இந்தியர்கள் விகிதத்தில் தீவிர வறுமையில் இருத்து மக்கள் விடுபட்டு வருவதாகவும்,  

* இந்நிலை தொடர்ந்தால் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை நிலை 3 சதவிதத்திற்கு கீழ் குறையும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* 87 கோடி மக்கள் தீவிர வறுமை நிலையில் உள்ள நைஜீரியா, ஏழைகள் அதிக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

* இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர்.

* இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து அது மூன்றாம் இடத்திற்கு குறையும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது

உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடம் நைஜீரியா என்கிறது.

உலகில், தீவிர வறுமையில் வாழும் மக்கள்.

 • நைஜீரியா: 15.7%
 • காங்கோ: 10%
 • இந்தியா: 8%
 • எத்தியோப்பியா: 4.6%
 • தான்சானியா: 3%
 • பங்களாதேஷ்: 2.3%
 • தென்னாப்பிரிக்கா: 2.3%
 • இந்தோனேசியா: 2.1%
 • ஏமன்: 1.6%
 • பிரேசில்: 1.1%
 • சீனா: 0.9%
 • பாகிஸ்தான்: 0.3%
 • அமெரிக்கா: 0.3%
 • மெக்சிகோ: 0.3%

(World Poverty Clock)

நமது நாட்டில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது இப்புள்ளி விவரம். இதையடுத்து எத்தியோப்பியா 4.6%; தான்சானியா 3%; வங்கதேசம் 2.3% என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிற நாடுகளின் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டோர் சதவீதம்:
தென்னாப்பிரிக்கா 2.3%; இந்தோனேசியா 2.1%; ஏமன்- 1.6%; பிரேசில் 1.1%; சீனா- 0.9%; பாகிஸ்தான் 0.3%; அமெரிக்கா- 0.3% ; மெக்சிகோ- 0.35 எனவும்  அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

வறுமைக்கோடு (Poverty Line) என்றால் என்ன?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி 2011 -ல் மறைந்த சுரேஷ் டெண்டுல்கர் வரை பல பொருளியல் அறிஞர்கள், அரசின் வல்லுநர் குழுக்கள், உலக வங்கி போன்ற அமைப்புகள் வறுமையினை அளவிட முயன்றும், அதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் நடந்தேறியும், எல்லோரும் எற்றுக்கொள்ளுமளவுக்கு எந்த ஒரு வரையறையும், அளவீடும் இன்றுவரை எட்டப்படவில்லை. 

திட்டக்குழுவின் வறுமை மதிப்பீடு
அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள். திட்டக்குழு இதை நகர்ப்புறத்துக்கு 2,400 கலோரி, கிராமப்புறத்துக்கு 2100 கலோரி என 1973-74 இல் மாற்றியமைத்தது; இதனடிப்படையில் அன்றைய விலைவாசியில் தினமும் 2400 கலோரியுள்ள உணவை கிராமங்களில் வாங்க ஒரு மாதத்திற்கு ஒருவருக்குத் தேவைப்பட்ட பணம் ரூ.49.10; நகர்ப்புறத்தில் தினமும் 2100 கலோரி உணவு வாங்க ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட பணம் ரூ.56.

இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள். இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர். 1973-74-ல் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுத் தேவையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வறுமைக்கோடு எந்தவித பெரிய மாற்றமும் இன்றி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடந்து கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் விலைவாசி ஏற்றத்துக்குத் தேவையான திருத்தங்கள் மட்டும் இதில் செய்யப்பட்டது. திட்டக்குழுவின் இந்த அணுகுமுறையும், ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும்தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துவிடுகின்றான் என்ற நிலைப்பாடும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாயின.

திட்டக்குழு, தன்னுடைய வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஐந்தாண்டுக்கொருமுறை NSS –ன் (National Sample Survey Organisation) நுகர்வோர் செலவினப்புள்ளி விவரத்தைக் கொண்டு வறுமையில் உள்ளோரை எண்ணிக்கையிலும், “தலை எண்ணிக்கை விகிதத்திலும்” ( Head Count Ratio ) கணக்கிடுகின்றது. அதாவது, வறுமைக்கோடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தேவைகள் இல்லாத மக்கள், எண்ணிக்கையில் எத்தனை பேர், மக்கள் தொகையில் எத்துனை சதவீதம் என கணக்கிடப்படுகின்றது.

1973-74-ல், ஒவ்வொரு நூறு பேரில் 55 பேர் ஏழைகளாகக் கணிக்கப்பட்டார்கள். அது 1999-2000-ல் இந்தியாவில் 26 பேராகவும், தமிழ் நாட்டில் 21 பேராகவும் குறைந்துள்ளதாக திட்டக்குழு கணித்தது. நகர்ப்புற, கிராமிய வறுமையினை ஒப்பிடுகையில், தேசிய அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தமிழ் நாட்டில் நகரத்தைவிட கிராமப்புறத்தில் வறுமை சற்று அதிகமாக இருந்தது.

பல பொருளியல் அறிஞர்கள் இதே NSS–ன் புள்ளி விவரத்தைக் கொண்டு திட்டக்குழுவின் மதிப்பீட்டைவிட வறுமை அதிகமாக உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். எனினும், அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் திட்டக்குழுவின் மதிப்பீடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

குறைந்தபட்ச உணவை மட்டுமே நமது அடிப்படைத் தேவை என்று திட்டக்குழு கூறுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உணவு, உடை, தங்குமிடம், குடிநீர் கல்வி, சுகாதாரம், வேலை போன்ற வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகளை இழந்திருக்கும் நிலையை வறுமை எனலாம். இந்த இழப்புகள் எவை எவை என்பதை உறுதிசெய்வதில் சுய உணர்வுகளை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும், சமூக உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுரேஷ் டெண்டுல்கர் குழு அறிக்கை
நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்த, சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியானது கடந்த 2009-ல் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தற்போது வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படு வருகின்றன. அதன்படி நகரங்களில் நாள் ஒன்றுக்கு உணவு உள்ளிட்ட தேவைக்கு, 33.33 ரூபாய்க்கும், கிராமப் புறங்களில், 27.20 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்பவர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும், என பல தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். திட்ட குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்பொழுது நிதி ஆயோக் குழு பரிசீலித்து வருகிறது.

வறுமைக் காரணிகள்

அறிவியல் ஆராய்ச்சிகள் மனித உழைப்பை குறைக்கின்றது மனித வளம் பல நாடுகளில் மிகுதியாக உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் தேவைக்கு ஏற்றமனிதவள வாய்ப்புகள் உருவாகவில்லை.
பொறியியல் சாதனங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றால் மனிதவளத்தின் தேவை குறைகிறது, பொறியியல் சாதனங்களை கையாளக் கூடிய திறன் சில பேருக்கு கிடைக்கின்றது இதன்மூலம் பல பேர் தங்கள் வேலை இழக்கின்றனர். 

பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருந்தால் இதுபோன்ற சூழல் எங்கும் ஏற்படாது, ஐரோப்பாவில் சில நாடுகள் குறிப்பாக holland, அயர்லாந்து போன்ற நாடுகள் விவசாயத்தில் பெரும் முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளன இங்கு விவசாய பண்ணைகளில் வேலை செய்வதற்கான மனித வளம் அதிகமாக தேவைப்படுகிறது. 

தேவை குறைவாகவும் மனித வளம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஏழ்மை உண்டாகின்றது.

பணக்காரன் பெரும் பணக்காரனாகிறான், ஏழை இன்னும் ஏழையாகிறான்.
லஞ்சல், ஊழல், சுரண்டல் வறுமைக்கு வழிவகுக்கிறது.

தீர்வுகள் என்ன?
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி அளித்தது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றால் வறுமை தீரவில்லை என்பதே உண்மை.

மக்களின் கல்வி, சிறந்த மருத்துவம், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும், தனியார் சுரண்டல்களிலிருந்து மக்களை விடுவிப்பதுமே நல்லபலனைத் தரும்,

]]>
poor country, poverty index, India list, வறுமைக் கோடு, இந்தியாவில் வறுமை நிலை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/poor_people.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/13/special-article-poverty-index--india-3rd-place-3233539.html
3233537 Glance விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க.. மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா சென்னையில் துவக்கம்!! DIN DIN Friday, September 13, 2019 11:18 AM +0530
சென்னை: விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வகை செய்யும் மதராஸப்பட்டினம் என்னும் 3 நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத் திடலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது முதல்வர் கூறுகையில், பாரம்பரிய உணவுகளைத் தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன. பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அவசியம்.

கம்பு, கேழ்வரகு, சாமை ஆகிய தானியங்களை மீண்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்  என்று கூறினார்.

வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை அதிகளவில் அருந்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு - கலாசார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அதனை தொடக்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெறும் உணவு திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது. 

அதற்காக பல்வேறு உணவு நிறுவனங்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல வகையான உணவுப் பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய உணவுகள், மூலிகை உணவுகள் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:
நமது கலாசாரத்தோடு இரண்டறக் கலந்திருக்கும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் பல உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்றார் அவர்.

அமைச்சர் சரோஜா பேசுகையில்,  சமூக நலத்துறை சார்பில் பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் 2023-க்குள் உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
 

]]>
OPS, Edappadi Palanisamy, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், Tamilnadu chief Minister, food exhibition, chennai island ground, உணவுத் திருவிழா, சென்னை தீவுத்திடல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/food.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/food-exhibition-starts-in-chennai-island-ground-3233537.html
3233534 Glance அதிகாரிகளின் மெத்தனமே பேனர் விழுந்து இளம்பெண் பலிக்குக் காரணம்: நீதிமன்றம் கண்டனம் DIN DIN Friday, September 13, 2019 11:00 AM +0530
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்த முறையீட்டின் போது, அதிகாரிகளின் மெத்தனமே பேனர் பலிக்குக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

விதிமீறி பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்பு, சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண்  மீது பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பெண் மரணம் அடைந்தது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதி மீறி பேனர் வைப்பது நீடிக்கிறது. உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தந்தால் போதும் என்று அரசு கருதுவதே காரணம். சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கேக் காரணம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து:  இளம் பெண் பலி

சென்னை பள்ளிக்கரணையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23).  கனடா செல்வதற்காக  பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். 

ரேடியல் சாலை பகுதியில் அவர் சென்றபோது சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து  சுபஸ்ரீ மீது விழுந்தது.  அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.  சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 

]]>
AIADMK fuctionary, Pallikaranai , Subashri, Kamatchi hospital, Chromepet Government Hospital, post mortem, The Mount Traffic Investigation police, பேனர் விழுந்துவிபத்து, பள்ளிக்கரணையில் இளம்பெண் பலி, இளம்பெண் சுபஸ்ரீ பலி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/13/w600X390/Subhasri.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/chennai-woman-run-over-by-lorry-after-illegally-erected-aiadmk-banner-falls-on-her-3233534.html
3237148 Glance 64. கண்ணாடிப் புன்னகை ஜி. கௌதம் Friday, September 13, 2019 12:00 AM +0530  

வணிகர் ஒருவர் ஊரில் இருந்தார். ஊருக்குள் அவருக்கு மிகுந்த செல்வமும் செல்வாக்கும் இருந்தது. 

அவர் எதிரில் நின்று பேசுவதற்கே அனைவரும் தயங்குவார்கள். 

மற்றவர்கள் தன்னிடம் தயங்கித் தயங்கிப் பேசுவதை ஆரம்பத்தில் தனது கௌரவத்துக்கான அடையாளமாக எடுத்துக்கொண்டார் அவர். வயதாக ஆக.. தான் தவறாகப் புரிந்துகொண்டது அவருக்கே புரிந்தது. தன்னிடம் பயம் கொண்டுள்ளார்கள் அனைவரும் என்ற உண்மையை அறிந்துகொண்டார். 

எதிரே நின்று பேசுவதற்கே பயப்படும் அளவுக்கு கொடிய மிருகம்போலவா நான் இருக்கிறேன் என தன்னை நினைத்து கொஞ்சம் அவமானமாகவும் உணர்ந்தார். 

குருவருள் வேண்டி ஆசிரமத்துக்குச் சென்றார். 

அவரை வரவேற்று குருவின் முன்பாக அழைத்துச் சென்ற சிஷ்யன், “தாகமாக இருக்கிறதா? பருக ஏதேனும் கொண்டுவந்து கொடுக்கட்டுமா?” என்று கேட்டான்.

“எதுவும் வேண்டாம்..” என்று சொன்னார் வணிகர். குருவை வணங்கினார். 

“குருநாதரே.. உங்களுக்கே தெரியும், ஊரில் நல்ல நிலையில் இருக்கிறேன் நான். என்னிடம் பலர் பணிபுரிகிறார்கள். பல வீடுகளில் அடுப்பெறிய நான் காரணமாக இருக்கிறேன். யாருக்கும் கெடுதல் செய்ய நினைத்ததில்லை. ஆனாலும், யாரும் என் எதிரே நின்று இயல்பாக பேசுவதில்லை. பயத்துடனும் பதட்டத்துடனும்தான் பேசுகிறார்கள். அவர்கள் அப்படி நடந்துகொள்வதை எனக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை என என் இளமைக் காலத்தில் கருதிக்கொண்டேன். ஆனால், வயதான பின்புதான் அது தவறென்று உரைக்கிறது. ஒரு கொடிய மிருகத்தின் முன்னால் நிற்பவர்களைப் போல, அவர்கள் என் எதிரே நிற்கவே பயப்படுகிறார்கள்..” என்றார் வணிகர்.

அவரது முகத்தில் தெரிந்த கவலையைக் கண்டு, அவரை ஆயாசப்படுத்தும் நோக்கத்தில் அருகே வந்தான் சிஷ்யன். அவர் பருகுவதற்காக, நீர் நிரப்பியிருந்த குவளையினை நீட்டினான் சிஷ்யன். 

“அதான் எதுவும் வேண்டாமென்று சொன்னேனல்லவா..” என்றபடியே அவர் சட்டென சிஷ்யனை கோப முகத்துடன் ஏறிட, சிஷ்யனின் முகம் பட்டென வாடியது. குவளையோடு இருந்த கையை பின்நோக்கி இழுத்துக்கொண்டான். விலகி, தூரம் சென்றுவிட்டான். 

நடந்தவை அனைத்தையும் கவனித்தபடியே இருந்தார் குரு. சிறிய விஷயத்துக்கும் சட்டென கோபம் கொள்ளும் அவரது குணம்தான் அவரிடமிருந்து மற்றவர்களை விலக்கிவைத்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். 

“நீங்கள் வேண்டாம் என்று சொன்னபோதும், உங்களை ஆயாசப்படுதுவதற்காகவே நீர் கொடுத்தான் என் சிஷ்யன். அவனது உள் நோக்கத்தை உணராமல் கடிந்துகொண்டீர்கள் நீங்கள். அதனால் அவன் பதறியதைக் கவனித்தீர்களா?” என்று கேட்டார்.

“இல்லை குருவே.. நான் வேண்டாம் என்று சொன்னபிறகும் அவன் கொடுத்ததால்தான் என்னையறியாமல் கோபம் வந்துவிட்டது எனக்கு..” என்றார் வணிகர்.

“இந்தக் கோபம்தான் உங்கள் எதிரி. அதுதான் உங்களிடம் மற்றவர்கள் பயந்து ஒதுங்குவதன் காரணம்” என்றார் குரு.

தலை கவிழ்ந்தார் வணிகர்.

“நிலைக்கண்ணாடி முன்பு நின்று நீங்கள் புன்னகைத்தால், அதில் தெரியும் உங்கள் பிம்பமும் புன்னகைக்கும். கோப முகம் காட்டினால் என்னாகும்? கண்ணாடியில் தெரியும் பிம்பமும் கோப முகத்தையே காட்டும். கண்ணாடி போலத்தான் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள். நீங்கள் கோபப்பட்டால் உங்களுக்குச் சமமாக இருப்பவர்கள் கோபத்தையே பதிலாகக் காட்டுவார்கள். மற்றவர்கள் பயத்துடன் ஒதுங்கிவிடுகிறார்கள். நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதால் பதிலுக்கு உங்களிடம் கோபப்பட முடியாதல்லவா, அதனால்தான் ஒதுங்கிவிடுகிறார்கள். இதுதான் நிஜம். இனி யாரிடம் என்ன பேசுவதானாலும் உங்கள் முன் ஒரு நிலைக்கண்ணாடி இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் மறுப்பையோ நிராகரிப்பையோகூட புன்னகையுடன் சொல்லிப் பழகுங்கள். மற்றவர்களுக்கும் உங்கள் புன்னகை பரவும். யாரும் உங்கள் முன் பயந்து நடுங்கமாட்டார்கள்..” என்றார் குரு. 

தனது பிரச்னைக்கான தீர்வை அறிந்துகொண்ட மகிழ்ச்சியோடு நன்றி கூறி விடைபெற்றார் அந்த வணிகர். ஆசிரமத்தை விட்டு வெளியேறும் முன்னர், சிஷ்யனிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, புன்னகையுடன் சென்றார். 

சிஷ்யனின் வாடியிருந்த முகம் இன்முகமாக மாறியது.

]]>
குரு, சிஷ்யன், ஆசிரமம், கோபம், மிருகம், செல்வந்தர், மரியாதை, நிலைக்கண்ணாடி, புன்னகை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/17/w600X390/guru-disciple.jpg https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/sep/13/64-கண்ணாடிப்-புன்னகை-3237148.html
3232875 Glance சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு! RKV DIN Thursday, September 12, 2019 06:18 PM +0530  

சான்ஃபிரான்சிஸ்கோ: வடக்கு கலிபோர்னியா பகுதிகளில் உள்ள சில்லறை வர்த்தகக் கடைகளில் விநியோகிக்கப்படும் M D H சாம்பார் மசாலா பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க உணவு ம்ற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அறிவித்துள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மசாலா பொடி நிறுவனமானது, தங்களது சமீபத்திய தயாரிப்பு ஸ்டாக்கில் இருந்து கலிபோர்னிய கடைகளில் விநியோகிக்கப்பட்ட  3 லாட் மசாலா பொடி பாக்கெட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

ஆர் பியூர் (R Pure) அக்ரோ ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஹவுஸ் ஆஃப் ஸ்பைசஸ் (இந்தியா) நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்ட இந்த மசாலாப்பொடி தயாரிப்பு FDA வால் சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் சோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையில் தான் குறிப்பிட்ட இந்த மசாலாப்பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல் இருப்பது தெரிய வந்தது.

சால்மோனெல்லா பாக்டீரியா பரவலுக்கு உள்ளான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் சால்மோனெல்லாசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் மனிதர்களுக்கு உண்டு. இந்த நோய்க்கூறின் பொதுவான அறிகுறிகளாகக் கருதப்படுபவை எவையெனில்;

பாக்டீரியா படிந்த உணவை உண்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் உண்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும்.

இந்த நோய் பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சியின்றியே குணமாகி விடக்கூடும் என்றாலும் சிலருக்கு உடனடியாக நோய் குணமாகாத சூழலில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து நிற்காமலிருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தித் திறன் கொண்டவர்கள் மேற்கண்ட அறிகுறிகளின் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடலாம்.

எனினும். வரும் முன் காப்போம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மசாலா பொடியில் சால்மோனெல்லா ஊடுருவல் இருப்பது தெரிந்த மாத்திரத்தில்  அதுவரை புழக்கத்தில் இருந்த MDH சாம்பார் மசாலாப் பொடி பாக்கெட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு சம்மந்தப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவதில் வெற்றியும் கண்ட FDA வைப் பாராட்ட வேண்டும்.

 

]]>
Salmonella Bacteria Found In MDH Sambar Masala, Food Regulator, FDA, US, சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா, எம் டி ஹெச் சாம்பார் மசாலா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/MDH.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/sep/12/bacteria-found-in-mdh-sambar-masala-sold-in-us-fda-3232875.html
3232873 Glance அரசு மருத்துவமனைகளில் செவிலியர் ஒப்பந்த நியமனத்துக்கு இடைக்காலத் தடை DIN DIN Thursday, September 12, 2019 06:24 PM +0530
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்தன.

இந்த தேர்வில் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனத்துக்கான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மனு மீது மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/nurse.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/அரசு-மருத்துவமனைகளில்-செவிலியர்-ஒப்பந்த-நியமனத்துக்கு-இடைக்காலத்-தடை-3232873.html
3232869 Glance தரமான நல்ல சாலைகளால்தான் விபத்துகள் நேரிடுகின்றன: கண்டுபிடித்தவர் கர்நாடக துணை முதல்வர் DIN DIN Thursday, September 12, 2019 05:57 PM +0530
பெங்களூரு: முதலில் சாலையைப் போடுங்கள், பிறகு அபராதத்தை வசூலிக்கலாம் என்று பொது மக்கள் சொல்லும் கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பொதுப் பணித் துறையை கவனித்து வரும் கர்ஜோலிடம், சாலை மற்றும் கட்டமைப்புகள் மோசமாக இருக்கும் நிலையில், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை மட்டும் அதிகரிப்பது ஏன் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது அவர் நல்ல தரமான சாலைகளால்தான் விபத்துகள் நேரிடுகின்றன என்று தடாலடியாக பதில் அளித்தார்.

அதாவது, நல்ல சாலையோ, மோசமான சாலையோ எதுவாக இருந்தாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளைப் பாருங்கள், அதில் வாகனங்கள் எல்லாம் 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன எனறும் தான் கூறிய கருத்துக்கான அர்த்தத்தை விளக்கினார்.

மேலும், அதிக அபராதத் தொகை வசூலிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை, அது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் பதில் கூறினார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/road.jpg https://www.dinamani.com/india/2019/sep/12/karnataka-deputy-chief-minister-speech-3232869.html
3232867 Glance கேரளாவில் ஓணத்திற்கு சரக்கு விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக்கிற்கு 'டஃப் பைட்'!  IANS IANS Thursday, September 12, 2019 05:35 PM +0530  

திருவனந்தபுரம் கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மாநில அரசின் கீழ் செயல்படும் 'கேரள மாநில மதுபானங்கள் ஆணையம்' மூலமாக மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. 

அதேபோல் அங்கு ஓணம் என்பது பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுவினரால் கொண்டாடப்படும் ஓர் அறுவடைத் திருவிழாவாகும். செப்டம்பர் 10-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட ஓணத்தை முன்னிட்டு செப்டம்பர் 3 முதல் 10 வரையிலான எட்டு நாட்களில் அங்கு மதுபான விற்பனை அமோகமாக இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானக் கடைகளில் விற்பனையான மதுவகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எட்டு நாட்களில் கேரளா முழுமைக்கும் சேர்த்து ரூ. 487 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.457 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் உள்ள கடை ஒன்றில் அதிகபட்சமாக ரூ. 1.44 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த வருடம் இது ரூ. 1.22 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
kerala tipplers make merry , KSBC, liquor outlets, onam festival, record sales, கேரளா, ஓணம் திருவிழா , மதுக்கடைகள் , மதுபானம் விற்பனை, ரூ.487 கோடி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/kerala_liquor_shop.jpg கேரளாவில் உள்ள மதுபானக் கடை https://www.dinamani.com/india/2019/sep/12/tipplers-make-merry-spend-rs-487-cr-on-liquor-during-onam-3232867.html
3232865 Glance நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை: ராஞ்சியில் மோடி பெருமிதம்    IANS IANS Thursday, September 12, 2019 05:39 PM +0530  

ராஞ்சி: நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை என்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு சமீபத்தில் தனது நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி வியாழனன்று மூன்று தேசிய அளவிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், பழங்குடியின மாணவர்களுக்கான 462 உறைவிடப் பள்ளிகள், சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் மீன்வளத்தைப்  பெருக்கும் பன்னோக்கு முனையத் திட்டம், ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் அங்கு புதியதலைமைச் செயலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் திட்டம் உள்ளிட்டவைகளைத் துவங்கிவைத்த பிறகு, ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய அரசின் முதல் நூறுநாள் ஆட்சி என்பது ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை. தாங்கள் சட்டத்தை விட உயர்வானவர்கள் என்று கருதியவர்கள் தற்போது பிணை கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார்கள். நான் என்ன உறுதியளித்தேனோஅதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  செயல்படக்கூடிய திறமை வாய்ந்த ஒரு அரசை உங்களுக்கு அளிப்பதாக நான் உறுதி கூறியிருந்தேன்.

இந்த நூறு நாட்களில் முத்தலாக் தடைச்ச சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதன் காரணமாக இஸ்லாமியப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள்.  தீவிரவாத எதிர்ப்புச் சட்டமானது வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்குத் தவறிழைத்தவர்கள் தகுந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நாங்கள் என்ன உறுதியளித்தோமோ அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற பருவகால கூட்டத் தொடரானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முக்கியமான மசோதாக்கள் இந்தத் தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

]]>
பிரதமர் மோடி, opposition parties, ராஞ்சி , பாஜக ஆட்சி, முதல் நூறு நாட்கள், modi on his 100 days , ranchi meeting, welfare schmes launch, promises by modi, நலத்திட்டத் துவக்கம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/modi__ranchi.jpg ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி https://www.dinamani.com/india/2019/sep/12/100-days-of-govt-just-a-trailer-full-movie-yet-to-come-modi-3232865.html
3232861 Glance ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு? எங்கே? எப்படி? ENS ENS Thursday, September 12, 2019 04:23 PM +0530
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பலாப்பூர் விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு, விழாவின் 11வது நாள் நிறைவில் ஏலத்துக்கு விடப்பட்டது.

இந்த லட்டுவை கோலன் ராம் ரெட்டி என்பவர் ரூ.17.6 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்துள்ளார். கடந்த ஆண்டு இதே பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட லட்டு ரூ.16.6 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் 28 பேர் பங்கேற்றனர், ஆரம்ப விலை ரூ.1,116 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.17.6 லட்சம் வரை 10 நிமிடங்களில் ஏலத்துக்கு விடப்பட்டது.
 

]]>
Hyderabad's Balapur Ganesh, Balapur Ganesh laddu, auction, Khairatabad Ganesh idol https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/Balapur_Ganesh_laddu.jpeg https://www.dinamani.com/india/2019/sep/12/balapur-ganesh-laddu-fetches-rs-176-lakh-in-auction-3232861.html
3232857 Glance கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டி! குவியும் பாராட்டுகளும், ஆதரவுகளும்.. Muthumari DIN Thursday, September 12, 2019 05:21 PM +0530  

85 வயதான மூதாட்டி தள்ளாத வயதிலும் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். அதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இட்லி வியாபாரம் தொடங்கிய முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கு இட்லி விற்று வந்தார், அதன்பின்னர் கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இனிமேல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

சிறிய வீடு; விறகு அடுப்பு; மாவு அரைக்க ஆட்டுக்கல்; சட்னி அரைக்க அம்மிக்கல்; முறையாக செய்த மாசால் பொடியைக் கொண்டு சாம்பார். இப்படி ஒரு இயற்கையான உணவு என்பது தற்போதைய நவீன காலகட்டத்தில் அரிதான ஒன்றாகி விட்டது. ஆனால், இதனை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார் சமூக பணியாற்றும் கமலா பாட்டி. 

மேலும், சாப்பிட வேண்டுமென்றால் வாழை இலையில் தான் பரிமாறுவார். பார்சல் வேண்டுமென்றால் பாத்திரம் எடுத்து வந்து தான் வாங்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அந்தப் பகுதியில் வேலைக்குச் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் கமலா பாட்டியின் இட்லி என்றால் அவ்வளவு இஷ்டம். ஒருமுறை அவரது கடைக்கு வந்து சாப்பிட்டால் அவர்கள் வேறு கடைக்குச் செல்வதில்லை என்பதும் கூடுதல் தகவல். மேலும், பெரும்பாலும் அவர் கடைக்கு விடுமுறை அளிப்பதில்லை. அரிதிலும் அரிதாகவே கடைக்கு விடுமுறை இருக்கும். 

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இட்லி வியாபாரம் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் 5 கிமீ தூரத்தில் இருந்து அவரது கடைக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் பலர். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களே ஏதேனும் உதவி செய்தால் அதனை மறுத்துவிடுவாராம். 

தற்போது கமலா பாட்டி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் கோவை சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பாட்டியின் கடைக்கு படையெடுத்துள்ளனர். சாதாரண மக்கள் பலரும் அவரது கடைக்கு நேரில் சென்று சாப்பிட்டு விட்டு அவரது அளப்பரிய பணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். முது வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் யாருமில்லை. 

நேற்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கமலா பாட்டியின் ஒரு விடியோவை வெளியிட்டு, 'கமலாத்தாளின் கதையை கேட்டால் நாம் செய்யும் சாதனைகள் ஒன்றுமில்லை என்றாகி விடும். அவர் விறகு அடுப்பை உபயோகப்படுத்துவதை கவனித்தேன். அவரை யாருக்காவது தெரிந்தால் எனக்குத் தகவல் தெரிவியுங்கள். அவருடைய தொழிலுக்கு முதலீடு செய்ய நான் உதவுகிறேன். மேலும், அவருக்கு கேஸ் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்கிறேன்' என்று பதிவிட்டார். நேற்று முதல் கமலா பாட்டி குறித்த பதிவுகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவர் குறித்த பல நெகிழ்ச்சியான பதிவுகள் நம்மை கண்கலங்க வைக்கின்றன. 

தகவலறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அவரது வீடு பழுதடைந்துள்ளதால், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் அவருக்கு புதிய வீடு கட்டித்தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ளும்படியும் கூறியுள்ளார்.

நாம் எதிர்பார்ப்பில்லாமல் ஒரு சேவை செய்யும் போது, கண்டிப்பாக அதற்கான பாராட்டுகளும், பரிசுகளும் என்றாவது ஒருநாள் நம்மைத் தேடி வரும். இந்த மூதாட்டியே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கமலா பாட்டியின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள் தெரிவிப்போம். 

]]>
coimbatore, கோவை, கமலாத்தாள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/kamala.png https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/tn-85-year-old-woman-sells-idly-for-rs-1-for-30-years-3232857.html
3232858 Glance எனக்கு நாடுதான் முக்கியம்; அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன்: பிரபல இயக்குநரின் ரகளை ட்வீட்  DIN DIN Thursday, September 12, 2019 05:38 PM +0530  

மும்பை: எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.  

இந்நிலையில் எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ரா ஒன்' மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற 'ஆர்ட்டிகிள் 15'  உள்ளிட்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் அனுபவ்  சின்ஹா. அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'தற்போதுதான் உபர் ஆப்-ஐ டெலீட் செய்தேன். தேசமே முதலில்'  என்று ட்வீட் செய்திருந்தார்.

 

 

அதற்காக அவரைப் பாராட்டியும் விமர்சித்தும் பலரும் பின்னூட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

]]>
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , bollywood director's viral tweet , finance minister nirmal seetharaman, ola and uber apps, anubhav sinha, viral tweet, ஆட்டோமொபைல் தொழில் , பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா , வைரல் ட்வீட் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/UBER2.jpg உபர் ஆப் https://www.dinamani.com/india/2019/sep/12/article-15-movie-director-anubhav-sinha-tweets-about-uber-app-and-got-reactions-from-nettizens-3232858.html
3232854 Glance ‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, September 12, 2019 03:38 PM +0530  

இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரி ஹால் எனும் 24 வயது இளம்பெண் அமரிக்கா... வாஷிங்டனில் உணவகம் ஒன்றுக்குச் சென்றார்  அங்கே சாப்பிட்ட சிக்கன் சாண்ட்விச்சின் சுவை அவரை அள்ளிக்கொண்டது. வறுத்த சிக்கனின் சுவையில் மட்டும் அவர் மனம் பறிகொடுக்கவில்லை அந்த உணவகத்தாரின் பொறுமையான அன்பான உபசரிப்பையும் கண்டு ப்ரி ஹால் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தார். இதனால் என்ன ஆயிற்று தெரியுமா? சாப்பிட்ட கையோடு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தனது ருசிமிக்க அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். பிரி ஹால் 24 வயது இளம்பெண் அத்துடன் அவர் ஒரு பாப் பாடகி மற்றும் மாடல் என்பதால் அவருக்கு ஏராளமான நண்பர்களும் ரசிகர்களும் உண்டு. தங்கள் தானைத் தலைவி சொல்வதைக் கேட்டு இவர்கள் அத்தனை பேரும் சம்மந்தப்பட்ட அந்த உணவகத்துக்கு இவர் குறிப்பிட்டுப் பாராட்டிய அந்த ரோமிங் ரூஸ்டர் சிக்கன் ஃப்ரை சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட முட்டி மோதத் தொடங்கினர். விளைவு அந்த உணவகத்தில் அன்று முதல் நீண்ட கியூ இதோ இப்போதும் கூட குறையவில்லை என்கிறார் அந்த உணவக உரிமையாளரான ஹேப்டிமரியம்.

ப்ரி ஹால் தனது ட்விட்டரில் எங்களது உணவகத்தின் ரோமிங் ரூஸ்டர் சிக்கன் சாண்ட்விச் குறித்து சிலாகித்துப் பேசிய பின் கடைக்கு வரும் கூட்டம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரி ஹால் எங்கள் உணவகத்தின் சிக்கனை வெறுமே புகழ்ந்திருந்தாலும் பரவாயில்லை. அவர் அப்படிச் செய்யாமல் அமெரிக்காவின் மிகப்பிரபலமான சிக்கன் சாண்ட்விச்சான பாப்பீஸ் சிக்கனுடன் எங்களுடையதை ஒப்பிட்டுப் பேசி, அதைத்தான் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே? அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், நீங்கள் இந்த ரோமிங் ரூஸ்டர் சிக்கன் சாண்ட்விச்சையும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். இங்கே உணவு மட்டுமல்ல, உணவைப் பரிமாறி அவர்கள் அன்போடு உபசரிக்கும் விதமும் அருமையாக இருக்கிறது. இதுவரை நான் சாப்பிட்ட சாண்ட்விச்சுகளிலேயே பெஸ்ட் சிக்கன் சாண்ட்விச் என்றால் அது இதுதான் ’ என்றெல்லாம் புகழ்ந்து எங்களது உணவகத்தின் பெருமையை கொலம்பியா மாகாணம் முழுக்க மட்டுமல்ல சமூக ஊடகங்கள் வாயிலாக இதோ உலகம் முழுமைக்குமாகக் கொண்டு சென்றிருக்கிறார்.

இதையும் பாருங்க... எடைக்குறைப்புக்கு தினமும் விரற்கடை அளவு காயகல்பம் எடுக்கலாமே!

அதனால் எங்கள் கடையில் கூட்டம் அதிகரித்திருப்பதோடு வியாபாரமும் பெருகியிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே, நாங்கள்... ப்ரி ஹாலின் டிவிட்டிற்குப் பிறகு அவருக்கு வாழ்நாள் முழுக்க ஃப்ரீ சிக்கன் சாண்ட்விச் தருவது என முடிவெடித்தோம் என்கிறார்.
ரோமிங் ரூஸ்டர் உணவகத்தைத் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் ஹேப்டிமரியம்.

இந்த உணவகத்துக்கு ப்ரிஹால் தானே முடிவெடுத்துச் செல்லவில்லை. தனது பாய் ஃப்ரெண்ட் கிறிஸ்டோபர் ஹெட் முதல்முறையாக இங்கு சென்று வந்த அங்கு கிடைத்த அபார சுவை மிகுந்த சிக்கன் சாண்ட்விச் குறித்துப் புகழ்ந்து பேசவே அதைக்கேட்டு இம்ப்ரெஸ் ஆகி பிறகு தான் தானும் அந்தக் கடைக்குச் சாப்பிடச் சென்றிருக்கிறார்.

தெரிஞ்சுக்குங்க... தரமற்ற காய்கறி, பழங்களில் இருந்து எஸ்கேப் ஆவது எப்படி?

இதன் மூலமாக ப்ரி ஹால் இந்த உலகத்துக்குச் சொல்வது என்னவெம்றால்;

தயவு செய்து உணவு நன்றாக இருந்தால், நன்றாக இருக்கிறது என ஊருக்கு கேட்க உரக்கச் சொல்லி விடுங்கள். என்கிறார்.

சரி தான், ரோமிங் ரூஸ்டர் உணவகம் ப்ரிஹாலுக்கு லைஃப்டைம் ஃப்ரீ சிக்கன் அறிவித்திருக்கிறதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு;

என்னுடைய இடுப்பின் சுற்றளவை அதிகரிக்க எனக்கு ஆசையாகவா இருக்கும். என்று பதில் அளித்திருந்தார். சில நிமிடங்களில் இந்தக் கருத்தின் முன் ’மச் லவ்’ (Much Love) எனும் வார்த்தைகளைச் சேர்த்துக் கோண்டார்.

ப்ரி ஹால் பாராட்டிய உணவகத்துக்குச் சொந்தக்காரர் ஒரு எத்தியோப்பியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரி ஹாலின் மேடைப் பெயர் லா ஹரா (LA HARA).

]]>
America, அமெரிக்கா, பாப் பாடகி, pop model, Bri hall, washidon DC, PopeyesCHICKEN, ROAMING ROOSTER CHICKEN, FRIED CHICKEN, பிரி ஹால், ரோமிங் ரூஸ்டர் சிக்கன், வாழ்நாள் முழுமைக்கும் சிக்கன் ஃப்ரீ https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/BRI_HALL.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2019/sep/12/model-priced-roaming-rooster-chicken--in--social-media-and-gets-lifetume-free-chicken-3232854.html
3232853 Glance சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த  வேலை ஆரம்பமாகிவிட்டது!  ஆனால்.. C.P.சரவணன், வழக்குரைஞர் Thursday, September 12, 2019 03:20 PM +0530  

சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த  செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாரும் பணி ஆரம்பமாகியுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்தும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. எட்டு ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த பணியால், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இது, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மொத்தம், 3,800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 3.63 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்க முடியும். இந்த நீரை வைத்து, சென்னையின், 100 நாள் குடிநீர் தேவையை, எளிதாக பூர்த்தி செய்ய முடியும். பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால், ஏரியின் கொள்ளளவு, 40 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்துவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய பகுதிகளில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு, வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், நீர்வரத்தின்றி, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. மெல்ல மெல்ல தண்ணீரின் அளவு குறைந்ததால், ஏப்., 2ம் தேதி முதல், சென்னைக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு கிடக்கும் நிலையில், தூர் வாரும் பணிகளை துவக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை எழுந்து வந்தது. நிதித்துறை அனுமதி பெறுதல் உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து, செம்பரம்பாக்கம் ஏரி, முழுமையாக வறண்டதால், தூர் வாரி, ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

ஒரு வழியாக, இந்த பணிகளுக்கு, ஜூன் மாதம் அனுமதியும் கிடைத்தது. தொடர்ந்து, அளவீடு கற்கள் நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு, ஏரியை தூர் வாரும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. 

மேலும் படிக்க: செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கி வைப்பு

வருமானம் 
ஏரியை தூர் வாரும் தனியார் நிறுவனம் மூலம், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏரியை தூர் வாரும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கொசஸ்தலை வடிநில கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், செம்பரம்பாக்கம் உதவி பொறியாளர், சத்திய நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏரியின் அடிமட்ட அளவிற்கு மேல் தேங்கியுள்ள, உபரி மண் முழுமையாக அகற்றப்படும். இது, இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும். அதாவது, சில இடங்களில், 3 அடியிலும், சில இடங்களில், 5 அடியிலும் மண் தேங்கியிருக்கும். சில இடங்களில், சுத்தமாக மண் தேங்கியிருக்காது. அந்த இடங்களில், தூர் வாரப்படாது. அதேநேரத்தில், மற்ற இடங்களில், அடிமட்ட அளவிற்கு தூர் வாருவர்.

மேலும் படிக்க: திருப்பத்தூர் ஏரியின் நீர்வரத்து கால்வாயில் சாலை அமைத்ததால் வீணாகும் மழை நீர் 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் 1 மீட்டர் தூர் வார முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்த, கடந்தாண்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கு, 1 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரப்படும். இப்பணி, எட்டு ஆண்டுகள் நடைபெறும். மொத்தம், 25.30 லட்சம் லோடு மண் வெளியேற்றப்படும். ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும், தூர் வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இப்பணியால், 536 மில்லியன் கன அடி கொள்ளளவு மீட்கப்படும். இதன் மூலம், கூடுதலாக, 56.50 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கலாம். மேலும், உபரி நீரை உடனுக்குடன் வெளியேற்றுவதை தடுக்கலாம். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

மேலும் படிக்க: ஏரிக்கரையை உடைத்து தொழிற்சாலைக்கு பாதை அமைக்க முயற்சி

கனிம வளத்துறை திடீர் எதிர்ப்பு
காலை முதல் லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்ட நிலையில், பிற்பகலில், காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளத் துறையினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குன்றத்துார் அருகே சென்ற இரண்டு மண் ஏற்றிய லாரிகளை மடக்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர், பெருமாள்ராஜன், லாரிகளை சிறைபிடித்துள்ளார். ஏரிகளில் மண் அள்ளுவதற்கு, பொதுப்பணித்துறை அனுமதி மட்டும் செல்லாது. கனிமவளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி, குன்றத்தூர் போலீசிலும் அவர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து தூர் வாரும் பணிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை விழுந்துள்ளதால், பொதுப்பணித் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்த பிரச்னையில் முதல்வர், எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 

]]>
செம்பரம்பாக்கம் ஏரி, தூர்வாரும் பணி துவக்கம், சென்னையில் குடிநீர் பஞ்சம், சென்னைவாசிகளின் பரிதாப நிலை, Chembarambakkam lake, Desilting work of Chembarambakkam lake https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/chembarakkamlake.jpg செம்பாம்பாக்கம் ஏரி https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/12/desilting-work-of-chembarambakkam-lake-begins-but-3232853.html
3232852 Glance காசா மீது போர் தொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்  IANS IANS Thursday, September 12, 2019 05:38 PM +0530  

ஜெருசலேம்: பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கு மற்றும் ராக்கெட் வீச்சு சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் வரும் வாரத்தில் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அஷ்டோட் நகரில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டது இஸ்ரேலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.    

இந்நிலையில் பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தேசிய வானொலியான கான் பெட்டில் வியாழனன்று பேசும்போது அவர் கூறியதாவது:

பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பது என்பது எங்களது கடைசி தேர்வு. இருந்தாலும் அங்கிருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக முழு அளவில் செயல்பட  அதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை.

அஷ்டோட் நகர ராக்கெட் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றிற்கு ஹமாஸ்தான் காரணம். காஸாவில் ஹமாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று உறுதி தருகிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

]]>
பாலஸ்தீனம், rocket attack, war in Gaza, palestine city, israel Prime Minister Benjamin Netanyahu, hamas terror, மேற்கு கரை காசா , ஹமாஸ் இயக்கம் , ராக்கெட் வீச்சு , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/benjamin_netanyahu.jpg இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு https://www.dinamani.com/world/2019/sep/12/israel-will-probably-start-war-in-gaza-netanyahu-3232852.html
3232850 Glance செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!  ENS ENS Thursday, September 12, 2019 02:58 PM +0530
சமீப காலமாக வண்டி ஓட்டுவது முதல் சமையல் செய்வது வரை செல்போன் பேசிக் கொண்டே வேலை செய்வதும் ஒரு கலையாகிவிட்டது.

ஆயக் கலை அறுபத்து நான்கும் தெரியுமோ தெரியாதோ, நிச்சயம் பலருக்கும் இந்தக் கலை நன்றாகவே தெரிந்திருக்கிறது. சரி அது இப்போது பிரச்னையில்லை. 

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரில் கட்டிலில் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்புகளை கவனிக்காமல், செல்போனில் பேசியபடி கட்டிலில் அமர்ந்த பெண்ணை பாம்புகள் கடித்ததில், அவர் மரணத்தைத் தழுவினார்.

கோராக்பூரின் ரியான்வ் கிராமத்தில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தாய்லாந்தில் பணியாற்றி வரும் ஜெய் சிங் யாதவின் மனைவி கீதா. தனது கணவருடன் செல்போனில் பல மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார் கீதா. அப்போது அவருக்குத் தெரியாமல் இரண்டு பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் ஏறிவிட்டன.

மேலும் படிக்க: 9 ஆண்டுகளில் 100 பாம்புகளை பிடித்து மனித உயிர்களைக் காத்த தோட்டக் காவலர்: பொதுமக்கள் பாராட்டு

அப்போதும் கீதா செல்போனில் பேசியபடி, அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்துதான் தாமதம், அவருக்காகவே காத்திருந்தது போல, இரண்டு பாம்புகளும் கீதாவைக் கொத்தின. நினைவின்றி கட்டிலில் சரிந்த கீதாவை, உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போதும் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது உறவினர்களுக்குப் புரியவில்லை.

கீதாவின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த போதும், அதே கட்டிலில் இரண்டு பாம்புகளும் அப்படியே இருந்துள்ளன. அதைப் பார்த்துதான் என்ன நடந்தது என்பதை உறவினர்கள் அறிந்து கொண்டனர்.

ஆத்திரத்தில் இருந்த கீதாவின் உறவினர்கள் பாம்புகளை அடித்துக் கொன்றனர்.
 

]]>
snakes lying on bed, bitten and dies, Riyanv village, bizarre incident, talking on the phone, பாம்புக்கடி, விஷம் முறிவு, செல்போன் அரட்டை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/SNAKE.jpg https://www.dinamani.com/india/2019/sep/12/up-woman-sits-on-snakes-lying-on-bed-during-phone-call-gets-bitten-and-dies-3232850.html
3232849 Glance தமிழ்த் திரையுலகின் புதிய கதாநாயகி! (படங்கள்) எழில் DIN Thursday, September 12, 2019 03:04 PM +0530  

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் மூலமாகக் கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சுலர் படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. இப்படத்தின் முதல் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

]]>
GVPrakash, Coimbatore model, divyabarti, Popular model, Bachelor First Look https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/Divyabharathi133xx.jpg https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/12/coimbatore-model-divyabarti-roped-in-for-gvprakash-s-next-3232849.html
3232842 Glance சிறப்புக் கட்டுரை: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தமிழக வளர்ச்சிக்கு உதவுமா?  Muthumari DIN Thursday, September 12, 2019 05:22 PM +0530  

கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த முதல்வரும் கையில் எடுக்காத ஒரு விஷயத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே தமிழகத்தில் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினாரே தவிர, இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வெளிநாடு சென்றதனால், தமிழகத்திற்கு என்ன பலன்? அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது மாநில வளர்ச்சிக்காகவா? அல்லது தனிப்பட்ட விருப்பத்திற்காகவா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. 

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்:

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். 13 நாட்கள் வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள பல்வேறு தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டதோடு, அந்நாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைத்தார்.

மொத்தமாக ரூ.8,835 கோடி முதலீட்டுக்கு 41 நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் இந்தப் புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முக்கியமாக இங்கிலாந்து நாட்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளை நிறுவனத்தை தமிழகத்தில் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன. முதல்வர் தனது பயணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். 

சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், 'வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக ரூ.8,835 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 41 நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்தப் புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும்' என்று தெரிவித்தார். 

மேலும், ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? அவர் பேசுவது முழுவதும் பொய்யான செய்தி. கடந்த 5 ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டால், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். தொழில் தொடங்க அதிகபட்சம் 5 ஆண்டு காலம் ஆகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2006 -11ம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 26,000 கோடி ரூபாய் முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளன. 

முதல்வரின் அடுத்த பயணம்:

நாம் பேசும் போது அமெரிக்காவில் அப்படி இருக்கிறது? துபாயில் இப்படி இருக்கிறது? என்றெல்லாம் பேசுகிறோம். வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் நாம் அதற்கான தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொண்டு நமது மாநிலத்தில் செயல்படுத்த முடியும். எனவே, எங்களது வெளிநாட்டுப்பயணங்கள் தொடரும்.

நீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்வதற்காக விரைவில் இஸ்ரேல் செல்ல இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காவே வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சி தான் திமுக. மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்ட தலைவர் தான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்' என்று பேசினார். 

மேலும், 'நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த முறை முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு 4 மாதத்திற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க தொழிலதிபர்கள் தெரிவித்தனர். அதனால் தான் ஆந்திராவில் தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்டார். 

40 ஆண்டுகளாக வெளிநாட்டுப்பயணத்தை புறக்கணித்த முதல்வர்கள்

முன்னதாக, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது வெளிநாடு சென்றார். 1970ம் ஆண்டு கருணாநிதி, 1978ம் ஆண்டு எம்.ஜி.ஆர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டனர். அதன்பின்னர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தமிழகம், அதிக வளங்கள் நிறைந்த பகுதி மட்டுமின்றி திறன்மிகு மனித வளங்கள் கொண்ட மாநிலம். Human Development Index எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவிலே தமிழகம் 2வது இடம் பெற்றுள்ளது. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என்ற பெயரையும் தமிழகம் தொடர்ச்சியாக பெற்று வருகிறது. 

அந்நிய முதலீடு தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துமா?  

இந்த நிலையில், அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் கொண்டு வரப்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தொழில் நிறுவனம் தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படாத அளவுக்கு, சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களைப் போலன்றி தமிழகத்தில் அனைத்து விதமான தொழில்துறை நிறுவனங்களும் இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் முதல்முறையாக BELL நிறுவனம் திருச்சியில் தொடங்கப்பட்டது, முன்னதாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தகுந்த இடம் கிடைக்காமல் இறுதியாக தமிழகத்தில் நிறுவப்பட்டது. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழகம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்னும் சில ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகமாக தொடங்குவதன் மூலமாக, வேலைவாய்ப்பும் பெருகும். அந்த வகையில் முதல்வரின் இந்தப் பயணம் பெரும்பாலும் வரவேற்கத்தக்கதாவே உள்ளது. 

அதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டையும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது. 

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுகிறதா?

வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை அளிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கலாம். பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதே தொழில் நிறுவனர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இரண்டு  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் நிலை என்ன? அவற்றில் எவ்வளவு செயல்வடிவம் பெற்றுள்ளன? இவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில் நிறுவனங்கள் தொடக்கப்பட்டும் தமிழகத்தில் பெரும்பாலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது.  அது ஏன்? அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் நிலை என்ன? 

இயற்கை வளங்கள் பாதிக்கப்படுமா?

தொழில் நிறுவனங்கள் தொடங்க அடிப்படை ஆதாரம் தண்ணீர். கோடைக் காலத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தது அனைவரும் அறிந்ததே. எனவே, ஒருபக்கம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டாலும் மறுபக்கம் தமிழகத்தின் வளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 

தமிழக அரசு பதில் அளிக்குமா? 

]]>
EPS, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இபிஎஸ் , TN CM Edapapdi palanisamy, Foreign visit https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/31/w600X390/cm.jpg தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/analysis-tn-cm-edapapdi-palanisamys-first-foreign-visit-3232842.html
3232848 Glance அன்பான காதலராக, நியாயமான கணவராக இருங்கள்: முஸ்லிம் இளைஞருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை ENS ENS Thursday, September 12, 2019 02:34 PM +0530
புது தில்லி: கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

எப்போதுமே நாங்கள் கலப்புத் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல, இந்து - முஸ்லிம் கலப்பு திருமணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா,எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு.

சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒருவர், இந்துவான தனது மகள் முஸ்லிம் இளைஞரைக் காதலித்தார். முஸ்லிம் இளைஞர் இந்துவாக மதம் மாறியதால் அவரது திருமணத்துக்கு ஒப்புக் கொண்டோம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் மீண்டும் முஸ்லிமாகவே மாறிவிட்டார் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

தந்தையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, கலப்புத் திருமணம் என்ற பெயரில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், நீதிமன்றம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இங்கு திருமணம் பற்றி ஆராய விரும்பவில்லை, சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம் பாதுகாக்கப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நாங்கள் இங்கே சட்டத்துக்காக மட்டும் இல்லை, அப்பெண்ணின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்வதற்காகவே இருக்கிறோம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

அதே சமயம், நியாயமான கணவராகவும், சிறந்த காதலராகவும் இருக்குமாறு முஸ்லிம் இளைஞருக்கும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
 

]]>
inter-faith marriages, Hindu-Muslim marriages, Justices Arun Mishra, Chhattisgarh , The Supreme Court, Senior lawyer Mukul Rohatgi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/supremecourt.jpg உச்ச நீதிமன்றம் https://www.dinamani.com/india/2019/sep/12/be-a-loyal-husband-and-great-lover-sc-tells-muslim-man-3232848.html
3232839 Glance கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட ஆடுகள்: செய்த குற்றம் இதுதான்! ENS ENS Thursday, September 12, 2019 01:11 PM +0530
இரண்டு ஆடுகளை காவல்துறையினர் கைது செய்து நேற்று இரவு முழுவதும் காவல்நிலையத்தில் கட்டி வைத்திருந்தனர். அவற்றின் மீது என்ன வழக்குப் பதிவானது என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

வாருங்கள், தெலங்கானாவில் மரம் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஹரிதா ஹரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் நடப்பட்ட செடிகளை தின்றதாக இந்த ஆடுகள் மீது புகார் கொடுத்துள்ளது ஹசுராபாத் முனிசிபாலிடி.

ஹரிதா ஹரம் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக் கன்றுகளை ஆடு மாடுகள் மேய்ந்து விடுவதால் அதிருப்தியில் இருந்த சமூக அமைப்பு ஒன்று, அவ்வாறு மரக்கன்றுகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.

நேற்று இரவு முழுவதும் காவல்நிலையத்திலேயே அந்த ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.  அதன் உரிமையாளர் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டு, காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
 

]]>
Haritha Haram, tree saplings, Municipal authorities, voluntary organisation, headache https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/Goats_police.jpg காவல்நிலையத்தில் ஆடுகள் https://www.dinamani.com/india/2019/sep/12/two-goats-ended-up-spending-a-day-in-the-police-station-3232839.html
3232838 Glance ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் இதுதான்! Thursday, September 12, 2019 01:05 PM +0530
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை (செப்.13) கிரிவலம்  செல்ல உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஆவணி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8.19 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (செப்.14) காலை 10.19 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

]]>
திருவண்ணாமலை, Tiruvannamalai Girivalam timings, பௌர்ணமி கிரிவலம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/12/7/5/w600X390/girivalam.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/12/tiruvannamalai-girivalam-timings-3232838.html
3232836 Glance சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தற்கொலை DIN DIN Thursday, September 12, 2019 01:00 PM +0530
சென்னை: சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

அவர் கோயம்பேட்டில் உள்ள கார் விற்பனையகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் ரீட்டா ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

ரீட்டாவின் கணவர் லேன்சன் டோயோட்டோ ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
 

]]>
தற்கொலை, suicide, chennai businesswoman, reeta janaki, suicide note, ரீட்டா ஜானகி, சென்னை பெண் தொழிலதிபர், தற்கொலைக்கடிதம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/7/w600X390/suicide-HangingZSc.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/chennai-businesswoman-reeta-janaki-suicide-3232836.html
3232834 Glance திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்! Thursday, September 12, 2019 02:40 PM +0530  

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 2. திருவண்ணாமலை - http://bit.ly/2kIiV6K

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேஷமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.

கிரிவல பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

லிங்கத்தின் பெயர்
திசை
பிரதிஷ்டை செய்தவர்
தொடர்புடைய கிரகங்கள்
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் 
இந்திர லிங்கம்
கிழக்கு
இந்திரன் (தேவர்களின் அரசன்)
சூரியன், சுக்கிரன்
நீண்ட ஆயுள் மற்றும் புகழ்
அக்னி லிங்கம்
தென்
கிழக்கு
அக்னி
சந்திரன்
நோய்களிலிருந்தும், பயத்திலிருந்தும் நிவாரணம்
எம லிங்கம்
தெற்கு
எமன்
செவ்வாய்
நீண்ட ஆயுள்
நிருதி லிங்கம்
தென்
மேற்கு
நிருதி(அசுரர்களின் அரசர்)
ராகு
உடல் நலம், செல்வம் மற்றும்  புகழ், குழந்தை பாக்கியம் 
வருண லிங்கம்
மேற்கு
வருணன்
சனி
நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக நீர் சம்பந்தபட்ட வியாதிகள்)
வாயு லிங்கம்
வட
மேற்கு
வாயு
கேது
நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக இதயம், மூச்சுக்குழாய், வயிறு)
குபேர லிங்கம்
வடக்கு
குபேரன்
குரு
செல்வம் மற்றும் உன்னதமான வாழ்க்கை
ஈசான்ய லிங்கம்
வட
கிழக்கு
ஈசான்யன்
புதன்
மனஅமைதி

அதன்படி, ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

ஆவணி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8.19 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (செப்.14) காலை 10.19 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

]]>
திருவண்ணாமலை கிரிவலம், அஷ்ட லிங்கம், Benefits of Tiruvannamalai Girivalam https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/19/23/w600X390/thiruvannamalai.jpg https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/12/benefits-of-tiruvannamalai-girivalam-3232834.html
3232833 Glance உங்கள் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் பதில் DIN DIN Thursday, September 12, 2019 01:01 PM +0530
சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, நெல்லை ஆகிய மவாட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 14 செ.மீ. மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இந்த தென்மேற்குப் பருவ மழை காலத்தில் ஒட்டுமொத்தமாகக் கிடைக்க வேண்டிய பருவ மழையின் அளவு 36 செ.மீ. ஆனால், 42 செ.மீ. மழை கிடைத்திருக்கிறது.

தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வர இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து படிப்படியாக தென்மேற்குப் பருவமழை குறையும். தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை அக்டோபர் முதல் வாரத்தில் முடியும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
 

]]>
Tamilnadu, chennai, மழை நிலவரம், இயக்குநர் புவியரசன் , rain report, சென்னை வானிலை மையம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/sep_12.jpg சென்னை வானிலை மையம் https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/tamilnadu-weather-report-chennai-regional-centre-3232833.html
3232832 Glance தமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்! எழில் DIN Thursday, September 12, 2019 01:01 PM +0530  

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த மாதம் இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

என் மூலமாக தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும் - என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் என்று எழுதினார். ட்விட்டரில் ஹர்பஜனை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 

இந்நிலையில் தமிழ்ப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டார் ஹர்பஜன் சிங். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். பேச்சுலர் படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார். திவ்யா பாரதி என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை - ஜி.வி. பிரகாஷ், தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. 

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த வருடம் ஏற்கெனவே 4 படங்கள் வெளியாகிவிட்டன. இதுதவிர - ஐயங்கரன், 100% காதல், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். 

]]>
GV Prakash, romantic drama https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/harbhajan_csk911xx.jpg https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/12/gv-prakashs-next-to-be-a-romantic-drama-3232832.html
3232825 Glance வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபர்தான் காரணமா? சொந்தமாக கார் வைத்துக் கொள்வது நல்ல ஐடியாவா? DIN DIN Thursday, September 12, 2019 11:45 AM +0530  

சென்னை: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே பொருளாதார மந்தநிலை, மக்களை வாட்டும் நிலையில், அதன் எதிரொலியாக வாகன விற்பனையில் மந்தநிலை என்பது பல்வேறு துறைகளில் எதிரொலிப்பதாக அமைந்துள்ளது.

வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். அதுவும் நம்ம சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க: நிதி ஒதுக்கீட்டு தேவையை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற போதுதான் அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ள போது, இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையிலேயே, நெட்டிசன்கள் தரப்பில் கடுமையான விமரிசினங்கள் முன் வைக்கப்பட்டன. மீம்ஸ்களுக்கும் அளவில்லை என்று சொல்லலாம்.

சரி அவர் சொன்னதை ஏன் நாம் அலசிப் பார்க்கக் கூடாது? வாருங்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவோம்.

 • ஒருவர் சொந்தமாக கார் வைத்திருப்பதில் என்னென்ன அசௌகரியங்கள் உள்ளன என்றால்
 • ஒரு காரை தவணை முறையில் வாங்கும் போது மாதத் தவணை கட்ட வேண்டும் என்ற நெருக்கடி.
 • சொந்தமாக கார் வைத்துக் கொண்டு அதனை கடும் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிச் செல்வது.
 • விதிகளை மீறும் போது அதிகப்படியான அபராதத் தொகை செலுத்த வேண்டும்.
 • தினந்தோறும் எகிறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைப் பார்த்து மனம் பதற வேண்டும்.
 • காருக்கு இன்ஷ்யூரன்ஸ், மெயின்டெனஸ் வேறு.
 • தினமும் காலையில் காரை சுத்தம் செய்ய வேண்டும். மாதத்துக்கு அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வாட்டர் வாஷ் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: சரிந்து வரும் கார் விற்பனையை ஊக்குவிக்க எஸ்பிஐ எடுத்திருக்கும் புது முயற்சி!

ஆனால் இதெல்லாம் ஓலா, உபரைப் பயன்படுத்தும் போது இருக்காதுதான். ஆனால்,

 • ஒரு முக்கிய நகர்ப் பகுதியில் ஓலா, உபரைப் பயன்படுத்துகிறோம் என்றால், குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கு நகரத்துக்கு ஏற்ப அது ரூ.10 முதல் ரூ.20 வரை செலவாகும்.
 • அதுவும் நாம் திட்டமிட்ட தொகைக்குள் பயணம் அமைவதில் சில அல்லது பல நேரங்களில் சிக்கல் ஏற்படும். பீக் ஹவர்ஸ்களில் பயணம் செய்வது பயணச் செலவை சில சமயம் இரண்டு அல்லது மூன்று மடங்காகக் கூட ஆக்கிவிடுகிறது.
 • சில சமயங்களில் கார் கிடைக்காமல் டென்ஷன் மட்டுமே மிஞ்சும் நிலையும் ஏற்படும்.
 • மழை மற்றும் இரவு நேரங்களில் கேப் கிடைக்காமல் திண்டாடும் நிலையோ, ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓலா, உபர் கார்கள் வராமல் தவிர்ப்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.
 • மாதத்தில் 20 முதல் 25 முறை இதுபோன்ற ஓலா அல்லது உபர் கார்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் பயணக் கட்டணம் ஒன்று போல அமையாது. இதனால் பயணச் செலவை முன்கூட்டியே திட்டமிட முடியாது.

மேலும் படிக்க: பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும்: மாருதி சுஸுகி நம்பிக்கை

ஆனால் அதே சமயம் சொந்தமாக கார் வைத்திருப்பதில் இந்த சிக்கல்களைத் தவிர்க்கலாம். காரின் விலை அல்லது மாதத் தவணை, எரிபொருள் விலை, மெயின்டெனன்ஸ் செலவு போக நாமே சொந்தமாக காரை ஓட்டினால்  டிரைவர் சம்பளம் மிச்சமாகும். 

ஒரு மாதத்தில் 25 முறைக்கு மேல் ஓலா அல்லது உபர் காரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், எப்படி பார்த்தாலும், கிலோ மீட்டருக்கு என்று எடுத்துக் கொண்டால் கூட சொந்தமாக கார் வைத்திருப்பது நிச்சயம் செலவு குறைவுதான். ஆனால் சொந்தமாக நாமே காரை ஓட்ட வேண்டும். ஓட்டுநர் வைத்தால் நிச்சயம் அது ஒலா, உபருக்குத்தான் மதிப்பெண்ணைக் கூட்டித் தரும்.

எனவே, காரில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், காரை வாங்காமல், ஓலா, உபர் போன்ற சேவை நிறுவனங்களின் காரைப் பயன்படுத்துவது செலவு என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி, பெருமைக்குரிய விஷயமாகப் பார்த்தாலும் சரி சொந்தக் காருக்குத்தான் மவுசு அதிகம் என்கிறது புள்ளி விவரங்கள்.
 

]]>
ஓலா, உபர் கார் வாடகை, ஓலா வாடகை எவ்வளவு, உபர் கார் செயலி பதிவேற்றம், சொந்த கார், கார் விலை, கார் விற்பனை, அதிகம் விற்பனையாகும் கார் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/30/w600X390/car.jpg https://www.dinamani.com/india/2019/sep/12/own-car-is-the-best-solution-than-ola-and-uber-cabs-3232825.html
3232183 Glance வலைத்தளம் ஏற்படுத்திய மாற்றம்! - நடிகை ரம்யா பாண்டியன் - சுதந்திரன் Thursday, September 12, 2019 01:01 PM +0530  

மேக்கப் போட்டு நடித்த மூன்று  முழு நீளத் திரைப்படங்கள் கொண்டு வந்து சேர்க்காத புகழை, பிரபலத்தை வலைதளத்தில் பிரசுரமான, மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல் பிரமாண்ட செட் இல்லாமல், விலையுயர்ந்த டிசைனர்  உடைகள் இல்லாமல், சாதாரண  சேலை உடுத்தி  மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட  சில  படங்கள்  கொண்டு வந்து சேர்த்துள்ளன. 

ரம்யா பாண்டியன். இன்று தமிழ் நாட்டின்  ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை. ஒரே ஒரு இரவில் சமூக தளங்களின் கொண்டாட்ட அதகளமாகியிருக்கும்   ரம்யாவுக்கு வயது முப்பது என்றால் யாரும் நம்பவே   மாட்டார்கள்.

அதைவிட ஆச்சரியம்  ரம்யா   பச்சை தமிழ்ப் பெண். தாமிரவருணி தவழும் திருநெல்வேலிப் பெண். வருஷத்திற்கு ஒரு முறை தென்காசி போகும் பெண். வாழ்வது சென்னையில் என்றாலும் நண்பிகள் ஒன்றிரண்டுடன் இருக்கும் பெண். அண்ணா பல்கலைக் கழகத்தில்  பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்...

ரம்யா "மானே தேனே ..பொன்மானே' குறும்படத்தில் அறிமுகமானவர்.  "டம்மி டப்பாசு', "கூந்தலும் மீசையும்', "ஜோக்கர்', "ஆண் தேவதை' படங்களில் ரம்யா நடித்திருந்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ரம்யாவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை  என்பதுதான் நிஜம்.

வலைதளங்களில் புயலாக உருவெடுத்திருக்கும் இப்போதைய படங்களை எடுத்தவர் சுரேந்திரன் என்பவராம். முன்னர் பல போட்டோகிராபர்கள் படங்களை எடுத்து வெளியிட்டாலும், இப்போது  சுரேந்தர் எடுத்த படங்கள்தான் நட்சத்திர அந்தஸ்தை ரம்யாவுக்கு போனஸாக வழங்கியிருப்பதுடன் சில பட வாய்ப்புகளையும்  ரம்யாவிடம் கொண்டு வந்திருக்கிறது. 

“பதவி உயர்வு கிடைத்தபோதுதான்  எனக்கு  "மானே தேனே  பொன்மானே' கூறும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.  இயக்குநர் மணிரத்னம் உதவியாளர் ஷெல்லி  இயக்கிய படம். படிக்கும் போதும் சரி.. வேலை பார்க்கும் போதும் சரி.. "நீ நடிக்கலாமே.." என்று  நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அது  பலித்தே விட்டது.. “

"படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டிருப்பது உண்மை. அதற்காகப்  பட வாய்ப்புகள் வரவில்லை என்று அர்த்தமல்ல.. எனக்குப் பிடித்த கதை, பாத்திரங்கள் இல்லாததால்  நான் சில படங்களை ஒதுக்கிவிட்டேன். இரண்டு குழந்தைகளுக்குத்  தாயாக   நடித்தவர்  அந்த  மாதிரி  வேடங்களில்  மட்டும் நடிப்பார்  என்று  அவர்களாகவே  முடிவு  செய்திருக்கலாம்  கவர்ச்சி காட்டவும், பட வாய்ப்புகளை பெறவும் இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.அது உண்மையில்லை. படம் பிடிப்பது இதற்கு முன்னும் நடந்திருக்கிறது. எனது உடல் எடை, தோற்றம் எப்படி உள்ளது...  அவற்றில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா  என்று சுய மதிப்பீடு செய்து கொள்ளத்தான்  இந்தப் படங்களை எடுத்தோம்.  அந்தப் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். படங்களில் பாத்திரத்திற்கு ஏற்றமாதிரி கவர்ச்சியாகவும் கவர்ச்சியில்லாமலும் நடிப்பேன்... சாதாரண  புடவை  உடுத்தி எடுக்கப்பட்டப் படங்கள் எப்படி இந்த அளவுக்கு வைரல் ஆனது என்பதுதான் எனக்கு இன்னமும்  புரியாத புதிர் ''  என்கிறார் ரம்யா பாண்டியன்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/2/w600X390/Ramya_Pandian_2019_2cc.jpg https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/sep/11/web-dominance-inched---actress-ramya-pandian-3232183.html
3232168 Glance ‘இம்மானுவேல் சேகரன் குருபூஜையை ஒட்டி 144 தடை உத்தரவு’ யார் இந்த இம்மானுவேல் சேகரன்? வழக்கறிஞர் சி.பி.சரவணன் Wednesday, September 11, 2019 06:06 PM +0530  

இமானுவேல் சேகரனின் 62 வது நினைவுநாள் குருபூஜை கொண்டாடப்படவிருக்கிறது,  அதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டும் வழக்கம் போல் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

யார் இந்த இமானுவேல் சேகரன்?

ஹிட்லர் மீசை மிக புகழ் பெற்ற ஒன்று. அவருக்கு பின் சார்லி சாப்ளினும், இம்மானுவேல் சேகரனும் இந்த மீசைக்கு புகழ் பெற்றவர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

இதையும் தெரிஞ்சுக்குங்க.. ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

இம்மானுவேல் சேகரன் அவர்கள் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினர். அதற்கு ஒரு சான்றாக  1942 ஆம் ஆண்டில் அவருடைய 18 வது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன்பின், இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமர்தம் கிரேஸ் என்பவரை மனந்தார். இவருக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி எனும் நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். 

நாட்டின் மீது கொண்ட பற்றினால் இம்மானுவேல் சேகரன் 1945 ல் இராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.

தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், அம்பேத்கர், பெருமாள் பீட்டரோடு ராணுவ வீரரான இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இம்மானுவேல் சேகரன், இராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை 1952 ல் துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

அப்போது நடந்து கொண்டிருந்த பொதுத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தக்கது. இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்வகள் எல்லாம் களத்தில் அன்றைய இளம் வேட்பாளர்கள். காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குல‌க்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர் திரு. இம்மானுவேல் சேகரன். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என சாக்கு சொல்லி, அதனை ஈடுகட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என இராஜாஜி எடுத்த முடிவை மிக வன்மையாகக் கண்டித்தார். கிறித்துவ பள்ளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி பிடித்த போது ஒடுக்கப்பட்ட சமுகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். 

கிறித்துவ திருச்சபைகளுக்கு சொந்தமான பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற‌ளவும் இயங்க முடிகிறதென்றால் அன்றைக்கு இம்மானுவேல் சேகரன் முழங்கிய போர் முரசே காரணம். 1952 ல் நிகழ்ந்த பொதுத்தேர்தலின் போது இம்மானுவேல் சேகரன் கிறித்துவத்திலிருந்து வெளியேறி இம்மானுவேல் என்ற பெயரை இம்மானுவேல் சேகரன் என மாற்றினார். அந்த தேர்தலில் களத்தில் போட்டியிட்டார்.

1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதில் நாடார், பறையர், அருந்ததியர், வண்ணார், போன்ற சமூக அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மருமணம், ஆகிய 7 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.

மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.

26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார். 2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார். 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்கப் பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கினார்.

பூவைசிய இந்திரகுல சங்கத்தை நடத்திக்கொண்டிருந்த பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து சமூக பணிகளை செய்தார். இளைஞரான இமானுவேல் சேகரனின் துடிப்பான வீரத்தையும், சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டதின் தீவிரத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவர்களான காமராஜரும், கக்கனும் அவரை மிகுந்த ஆதூரத்துடன் அரவணைக்கவே அவர்களது  ஆதரவுடன் தன்னை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துக் கொண்டார் .

ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.பல நேரங்களில் இம்மானுவேல் சேகரன் அவர்களுடன் வேலுச்சாமி நாடார் அவர்கள் உறுதுணையாக இருந்தார். எனவே  அருப்புகோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகத்துக்கு எழுதிய கடிதத்தில், "வேலுச்சாமி நாடாரை நாம் மறந்தோமானால் நாம் நன்றி கெட்டவர்களாகிவிடுவோம்" என குறிப்பிடுகிறார் இம்மானுவேல் சேகரன். (இது மண்ணுரிமை என்னும் இதழிலும் வெளியாகியுள்ளது)

1957 நாடாளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியை எதிர்த்து பேசவே துணிச்சல் இல்லாத தலைவர்கள் மத்தியில் இம்மானுவேல் சேகரன் பார்வட் பிளாக் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இம்மானுவேல் சேகரனின் விடுதலைக்கான போர்க்குணத்தை பலர் வரவேற்றனர். இன்றைய தினகரன் நாளிதழை தோற்றுவித்த அதன் ஆசிரியரான தினகரன் தேவர், இம்மானுவேல் சேகரனுக்கு ஆதரவாகத் தனது தினகரன் பத்திரிக்கையில் எழுதினார்.

1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் பிரதான பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனும் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். இந்த பிரச்சனையை இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார். அதனால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டு மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கு எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. 

அதன் விளைவாக 5-9-57 ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் நடக்கிறது.  இம்மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கர் இந்த கலவரத்தை தடுக்க 1957 செப்டம்பர் 09 ஆம் தேதி அனைத்து சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார். 10ம் தேதி நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் பெருமாள் பீட்டர் மற்றும் இம்மானுவேல் சேகரனும்  நாடார்கள் சார்பில் வேலுச்சாமி, கமுதி சவுந்தர பாண்டிய நாடாரும் கலந்து கொண்டனர். 

தேவர்களின் சார்பில் முத்துராமலிங்கதேவர் கலந்துக்கொண்டார்.

இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பரான வேலுச்சாமி நாடார் அவர்களின் வீட்டில் இரவு தங்கினார். காலையில் பள்ளியில் இருந்து பாரதியார் விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது எனவும் அதற்குத் தான் செல்லவிருப்பதாகவும் இம்மானுவேல் சேகரன் கூறினார். வேலுசாமி நாடார் அவர்கள்  "இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை" என்று தடுத்தும் இமானுவேல் சேகரன் கேட்காமல் புறப்பட்டார். காலையில் பரக்குடி பள்ளியில் நடந்த பாரதியார்  நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்டு இரவு 9 மணி அளவில் வீட்டிக்குச் சென்றார். 

அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்புகிறது.

12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57 ல் ராமநாதபுர மாவட்டத்தின் சட்டம் ஓழுங்கைச் சீர்குலைத்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்க தேவரின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு  முத்துராமலிங்க தேவர் 14 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். பார்வர்டு பிளாக், காங்கிரஸ் கட்சி மோதலையே பின்னாளில் தேவர் தேவேந்திர குல மோதலாக அரசியல் ஆதாயத்திற்காக சில கட்சிகள் மாற்றினர் என்றால் அது மிகையாகாது.

33 வயதேயான தியாகி இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் மக்களின் இணையற்ற தலைவராக இருக்க காரணமாக அமைந்தது.

]]>
இம்மானுவல் சேகரன், குருபூஜை, தேவேந்திர குல வேளாளர், விடுதலைப் போராட்ட வீரர், 144 தடை உத்தரவு, immanuel sekaran gurupujai, section 144, socail activist, freedom fighter, devendra kula velalar, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/11/w600X390/immanuval.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/11/இம்மானுவேல்-சேகரன்-குருபூஜையை-ஒட்டி-144-தடை-உத்தரவு-யார்-இந்த-இம்மானுவேல்-சேகரன்-3232168.html
3232164 Glance ஜக்கி வாசுதேவ் பயணிக்கும் பைக்கின் விலை என்ன தெரியுமா? C.P.சரவணன், வழக்குரைஞர் DIN Wednesday, September 11, 2019 05:59 PM +0530
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் `காவேரி கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். 

அந்த இயக்கம் குறித்து பிரசாரம் செய்வதற்காக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் தலைக்காவிரியில் தொடங்கி திருவாரூரில் முடியும் இந்தப் பயணத்துக்கு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்துவது ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக். இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் கிடையாது. இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறார்.

தொலைதூரப் பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் 1237cc V4 இன்ஜின் உள்ளது. 127bhp பவர் மற்றும் 12.6Kgm டார்க் தரக்கூடிய இன்ஜின் இது. வழக்கமாக பைக்குகளில் வரும் செயின் டிரைவுக்குப் பதிலாக ஷாஃப்ட் டிரைவ் இதில் உண்டு. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே. கார்களைப் போல மேனுவல் மோடில் வைத்தும் ஓட்டலாம். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்கிரீன், IMU சென்சார்கள், முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட கம்பைண்ட் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட பைக் இது.

இதில், ஸ்டிக்கரிங் மற்றும் ஹெட்லைட்டை மாற்றியமைத்துப் பயன்படுத்தி வருவது தெரிகிறது. CBU முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.19 லட்சம். ஆன்ரோடு விலை ரூ.25 லட்சத்துக்குள் இருக்கலாம்.

பிரபல யோகா குருவான ஜக்கி வாசுதேவ் ஒரு பைக் ப்ரியர். ஏற்கெனவே, டுகாட்டி ஸ்க்ராம்பிளர் டெசர்ட் ஸ்லெட், BMW RG1200s போன்ற விலை உயர்ந்த பைக்குகளை பயன்படுத்தியுள்ளார்.

சென்ற ஆண்டு `நதிகளை இணைப்போம்' பயணத்துக்காக 80 லட்சம் விலையுள்ள மெர்சிடீஸ் பென்ஸ் GL63 AMG என்ற லக்ஸூரி வாகனத்தில் இந்தியாவைச் சுற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
Cauvery Calling, Sadhguru, Jakki vasudev, சத்குரு, காவேரி கூக்குரல், ஜக்கி வாசுதேவ், பைக் பயணம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/11/w600X390/jakki_vasudev.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/11/cauvery-calling-sadhguru-begins-journey-3232164.html
3232148 Glance காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையானதா?  Muthumari DIN Wednesday, September 11, 2019 02:29 PM +0530  

காஷ்மீர் விவகாரத்தில் தனது மனசாட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆதரவாகவும், பாராட்டு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தன.

இவர் உண்மையாகவே காஷ்மீர் மக்களுக்காகத் தான் மிக உயரிய பதவியை ராஜினாமா செய்தாரா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன..என்னவென்று பார்க்கலாம்..

கண்ணன் கோபிநாதன். ஐ.ஏ.எஸ்

கேரளாவில் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் என்பவர் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எஞ்சினியரிங் படித்தார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இதற்கிடையே, யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சி செய்த அவர், கடந்த 2012ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 59ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். 

யூனியன் பிரதேசமான டையூ & டாமனில் பணியாற்றிய அவர், தாத்ரா நகர் ஹவேலியில் மின் மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறையின் செயலாளராக இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீர் மக்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்த கலவையான பல விமர்சனங்கள், கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் காஷ்மீர் மக்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தது நாட்டு மக்களிடையே தனி கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். 

காஷ்மீர் மக்களுக்காக பதவி ராஜினாமா:

ராஜினாமாவுக்கு அவர் கூறிய காரணமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ஜம்மு-காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலம் முழுவதும் தடை போடப்பட்டு மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாட்டின் பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும் மக்களுக்கு உரிமை உண்டு.

இதுபோன்ற விவகாரத்தில் அரசுக்கு முடிவெடுக்க முழு அதிகாரம் இருந்தாலும், காஷ்மீர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. மக்களின் குரலாக இருப்பதற்காக தான் நாங்கள் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்களது குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. 

நான் ஒருவன் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. அதனை நான் நன்கு அறிவேன். ஆனால், காஷ்மீர் மக்களுக்காக என்ன செய்தாய்? என்று எனது மனசாட்சி கேட்டால் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்றாவது கூறிக்கொள்வேன். 

ஒரு மாவட்ட ஆட்சியராக போராட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், மக்களின் குரலுக்கு அதிகாரிகள் யாரும் தடையாக இருந்ததில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். என்னுடைய இந்த முடிவு அரசியல் ரீதியானது என்று சிலர் பேசினால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எனது மனசாட்சிக்குப் பதில் சொல்லியாகவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த முடிவை எடுத்திருக்கிறேன்' என்று விளக்கம் தெரிவித்திருந்தார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் சமூகப்பணி:

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு, இவர் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்துள்ளார். பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  ஐ.ஏ.எஸ் ஆன பிறகு தான் பணியாற்றிய தாத்ரா நகர் ஹவேலி பகுதிக்கு தனிப்பட்ட முறையில் 1 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளதாகவும் தகவல் உள்ளது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, தனது மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அவர் தோளில் சுமந்து சென்ற புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. 

தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகவலைத்தள பதிவுகள்:

இந்நிலையில்,  ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு பின்னணியில் வேறு சில அதிர்ச்சிகரமான தகவல்களும் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகிறது. 'ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அதில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்னாளில், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்ததால் தான் மோடி அரசு தன்னை கைது செய்து விட்டது என்று அவர் கூறிக்கொள்ளலாம்.. '

இவ்வாறான ஒரு கோணத்தில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியுடன் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் விவரக்குறிப்பு:

ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணனுக்கு கீழ்குறிப்பிட்ட காரணங்களால் விளக்கம் கேட்டு குறிப்பாணை (Show cause notice) அனுப்பட்டுள்ளதாக விவரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டையூ & டாமன் , தாத்ரா நகர் ஹவேலியில் நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆவணத்தை கடந்த 9 மாதங்களாக சமர்ப்பிக்காமால் இருப்பது, யூனியன் பிரதேச அரசு அதிகாரியாக இருந்துகொண்டு கேரளாவுக்குச் சென்று வெல்ல நிவாரண பணியில் ஈடுபட்டது குறித்து அரசுக்கு தெரிவிக்காதது, 2018ம் ஆண்டே முடிக்கவேண்டிய புதைவட மின்சார இணைப்பு வேலைகளை முடிக்காதது; புதைவட மின்சார இணைப்பு வேலைகளை மாற்றுவழியில் கையாண்டது உள்ளிட்டவை அதில் காரணங்களாக கூறப்பட்டுள்ளன. 

அகில இந்திய குடிமைப்பணிகள் நடத்தை விதிகள் 1968ன் படி இது தவறானது என்றும் இதுகுறித்து 10 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பாணை(Show Cause Notice) கடந்த ஜூலை 8ம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர், அந்தப் பதவிக்கான நடத்தை விதிமுறைகள் குறித்து நன்கு அறிந்த பிறகே பதவியில் அமர்த்தப்படுவார். அவ்வாறு இருக்கும் போது அவர் சொந்த ஊருக்குச் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்காமல் செல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்  உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் சென்றால் கூட இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்படுவார்.

மேலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், ஊழல், லஞ்சம் போன்ற குற்றச் செயல்களாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.  அவர் மீது குற்ற வழக்குகளோ அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறித்தோ இணையத்தளத்தில் தகவல் எதுவும் இல்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

ஐ.ஏ.எஸ் கண்ணன் இதற்கு விளக்கம் அளிக்காத பட்சத்தில் வேண்டுமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இருந்தபோதிலும் இதுபோன்ற காரணங்களுக்காக உச்சகட்ட நடவடிக்கை என்பார்களா? என்பது கேள்விக்குறிதான்.

எனினும், இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியோ அல்லது மத்திய அரசோ உரிய விளக்கம் அளிக்கும் பட்சத்தில் தான் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிய வரும். 

]]>
home ministry, Kashmir Issue , கண்ணன் கோபிநாதன், IAS Kannan Gopinathan, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, Kashmir special status https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kannan_gopinathan.jpg https://www.dinamani.com/india/2019/sep/11/are-the-comments-circulating-on-social-media-about-the-ias-officer-true-3232148.html
3232136 Glance காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்? DIN DIN Wednesday, September 11, 2019 12:38 PM +0530
புது தில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் வைகோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு மதிமுக சார்பில் செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். எனவே அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வைகோ தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
 

]]>
supreme court, உச்ச நீதிமன்றம், Farooq Abdullah , ஆட்கொணர்வு மனு, vaiko MP, MDMK general secretary vaiko, மாநிலங்களவை உறுப்பினர் வைகோ https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/vaiko3.jpg https://www.dinamani.com/india/2019/sep/11/vaiko-files-habeas-corpus-petition-for-farooq-abdullah-3232136.html
3231560 Glance குழந்தைகளுக்காக "யூ டியூப்' இணையதளம்! அ.சர்ஃப்ராஸ் Thursday, September 12, 2019 01:03 PM +0530 குழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட் போன்களைப் பிரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில் பெற்றோர்களுக்கு பெரும் சவாலான காரியம்.

ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூ டியூப் வீடியோக்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் வீடியோ கேம்களையும்,  வீடியோக்களையும் தான் பெரும்பாலும் காண்கிறார்கள்.  

கார்ட்டூன் வீடியோக்களில் மருந்தை அப்படியே குடித்ததும் பெரும் பலசாளி ஆவதும், எதிரியைக் கத்தியால் தாக்குவது போன்ற காட்சிகளைக் காணும் குழந்தைகளின் ஆழ்மனதில் அவை பதிந்துவிடுகின்றன.  அதிலும் ஆபாசம், வன்முறை வீடியோக்கள் வருவதால் யூ டியூப் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது  என கட்டுப்பாடு  விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன்தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே "யூ டியூப் கிட்ஸ்' என்ற தனி செயலியை (ஆப்) அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலிலும் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வீடியோக்களைப் பிரித்து காண்பிக்கத் தவறிவிட்டது. அதுமட்டுமின்றி வீடியோக்களைக் காணும் குழந்தைகளின் தரவுகள் சேகரித்து விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. 

இதன் அடுத்த கட்டமாக தற்போது  https://www.youtube.com/kids/ என்ற தனி இணையதளத்தை யூ டியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வீடியோக்கள் என தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் கண்ட வீடியோக்களின் தொகுப்புகளும் இடம் பெற்றிருக்கும். இந்த வீடியோக்களில் ஆபாசம், வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இருக்காது என்று யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மேலும் பாதுகாப்பான வகையில் இந்த இணையதளத்தைக் குழந்தைகள் பயன்படுத்த மேற்கொள்ள செய்ய வேண்டிய மாற்றங்களை பெற்றோர்கள் தெரிவிக்காலம் என யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்பதால், குழந்தைகளுக்கான பாதுகாப்பான விடியோக்கள் மட்டுமே இந்த இணையதளங்களில் உலவும் என்று உறுதியாகக் கூற முடியாது. "வரும் முன் காப்போம்' என்பதைப்போல் "குழந்தைகள் முன் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்போம்' என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்தாலே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/youtu.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/குழந்தைகளுக்காக-யூ-டியூப்-இணையதளம்-3231560.html
3231548 Glance அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒரு வாரத்தில் பாராட்டு விழா: ஸ்டாலின் DIN DIN Tuesday, September 10, 2019 06:08 PM +0530
வெளிநாடு சுற்றுலாப் பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார்!

தமிழகம் முதலீட்டுக்குத் தக்க இடம் என்றிருந்ததால், தானாக வந்த முதலீடுகளால், இன்றைக்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் தொழிற்சாலைகள் அணி வகுத்து நிற்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் பொறுப்பிலிருந்த தலைவர் கருணாநிதி, தொழிற்துறை அமைச்சராக என் நிர்வாகத்திலும், வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல், ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தல், உள்ளிட்ட கமிஷன் இல்லாத அனுமதிகள் மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகின. 

மாநிலமே இந்திய நாட்டில் வளர்ச்சியின் நட்சத்திரமாக விளங்கியது. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக தி.மு.க. ஆட்சியில்தான் விளங்கியது.

2015ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை; கானல் நீராகிப் போனது! 2019ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை; காற்றில் கறைந்து விட்டதோ? தமிழகத்தில் தொழில் துவங்க வந்த முதலீட்டாளர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் சென்றார்கள் என்ற விவரமும் வெளியாகவில்லை.

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கைக் கூட வைக்கவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு - செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடத் தயாரா?

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

]]>
ADMK, DMK, MK stalin, OPS, Tamilnadu Government, தமிழக முதல்வர் , Edappadi, வெள்ளை அறிக்கை , திமுக தலைவர் ஸ்டாலின் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/stalinfin.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/sep/10/admk-government-dmk-leader-mk-stalin-3231548.html