சுடச்சுட

  
  Paddy

  பனிப்பொழிவில் இருந்து சம்பா பயிரை காக்க கூடுதல் பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாதது, இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது.

  பயிர்களை காப்பது குறித்து மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரேவதி கூறியதாவது: குளிர்காலத்தில் நெல் பயிரில் இருந்து கதிர் வெளிவரும்போது புகையான், இலை சுருட்டுப்புழு, மற்றும் தண்டு துளைப்பான் போன்றவற்றால் பயிர்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயிரினை பாதுகாக்க தழைச்சத்து உரத்தினை கூடுதலாக இடுவதை தவிர்க்கவும்.

  அத்துடன் ஏக்கருக்கு இமிடோகுணோபிரைடு 50 மி.லி., பியூபிரோபெசின் 200 மி.லி., கார்டாப் ஹைடோ குளோரைடு 200 மி.லி. இவற்றினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானில் தெளிக்கவும்.

  மேலும் கதிர் வெளிவரும் நிலையில் நெல் இலை உறை கருகல், நெல் உறை அழுகல் நோய் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு டிரைசைக்னோசோல் 120 கிராம், மான்கோசெப் 400 கிராம், பிரப்பகோனோசோல் 200 மி.லி., இவற்றில் ஏதேனும் ஒன்றில் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

  மேலும் விபரங்களுக்கு மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரேவதி 9444367016, துணை அலுவலர் பவுன்ராஜ் 9940207695 ஆகிய எண்களில் விவசாயிகள் கூடுதல் விபரங்களை பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai