Enable Javscript for better performance
குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காப்பது எப்படி?- Dinamani

சுடச்சுட

    

    குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காப்பது எப்படி?

    By dn  |   Published on : 26th December 2013 12:27 AM  |   அ+அ அ-   |    |  

    fertilizer

    குலைநோய்த் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எவ்வாறு காப்பது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் தற்போது நடவு செய்துள்ள நெற்பயிர்களை வேளாண்மைத்துறை துணை இயக்குநர் (மாநில திட்டம்) குருமூர்த்தி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பயிர் நோயியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் கமலக்கண்ணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தா.தமிழ்மலர், வேளாண்மை அலுவலர் ஆ.விக்டர் சுபராஜா மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது, செய்துங்கநல்லூர் மற்றும் கருங்குளம் கிராமங்களில் நடவு செய்துள்ள நெற்பயிர்களில் குலைநோய்த் தாக்குதல் பரவலாக தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டார்குளம் மற்றும் விட்டிலாபுரம் கிராமங்களில் நடவு செய்துள்ள நெற்பயிர்களில் இலை உறை கருகல் நோய் தென்படுகிறது.

    இதையடுத்து, குலைநோய் மற்றும் இலைஉறை அழுகல் நோய்களின் அறிகுறிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் அளித்துள்ள ஆலோசனைகள்:

    நெல் குலைநோய் அறிகுறிகள்:

    இலையின் மேற்பரப்பில் சிறிய செம்மை நிற கண் வடிவப் புள்ளிகள் தோன்றி அவை ஒன்றோடு ஒன்று இணைந்து இலை கருகிவிடும், கதிரின் கழுத்துப் பகுதியில் கருமை நிறை புள்ளிகள் தோன்றுவதால், கதிரிலுள்ள மணிகள் பதராகிவிடும். சில நேரங்களில் கதிர் ஒடிந்து கீழே விழுந்துவிடும்.

    காற்றின் மூலம் பரவும் பைரிகுலேரியா ஒரைசா என்ற பூசணத்தினால் இந்நோய் ஏற்படுகிறது. இரவு நேர வெப்பநிலை 20 240 செ மற்றும் ஈரப்பதம் 90 சதவீதம், இந்த நோய் பரவ ஏற்றதாக அமைகிறது.

    நோய்க்கட்டுப்பாடு:

    இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ட்ரைசைக்ளோ சோல் - 200 கிராம் அல்லது இப்ரோபென் பாஸ் - 200 மிலி அல்லது கார்பெண்டாசிம் - 200 கிராம் திரவத்துடன் கலந்து அடிக்க வேண்டும்.

    இலை உறை கருகல் நோய் அறிகுறி:

    நெற்பயிரின் தண்டுப்பாகத்தில் நீண்ட முட்டை வடிவ செம்மை நிறப்புள்ளிகள் தண்ணீர் மட்டத்திலிருந்து தோன்றி மேல் நோக்கி பரவும். நோயின் தீவிரம் அதிகமாகும்போது அனைத்து தூர்களும் பாதிக்கப்பட்டு தூர் கருகிவிடும்.

    தண்ணீர் மூலம் பரவும் ரைசொக்டோனியா சொலானி என்ற பூசணத்தின் மூலம் இந்நோய் ஏற்படுகிறது. பகல் நேர வெப்பநிலை 25 300 செ ஈரப்பதம் 80 சதவீதம் மற்றும் தேங்கும் நீர் ஆகியவை இந்நோய் பரவ ஏற்ற சூழ்நிலைகள் ஆகும்.

    நோய்க்கட்டுப்பாடு:

    இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பெண்டாசிம் - 200 கிராம் அல்லது ஹெக்சகோனாசோல் - 200 மிலி அல்லது இப்ரோபென்பாஸ் - 200 கிராம் என பூஞ்சாணக்கொல்லியுடன் திரவத்துடன் சேர்த்து இலைவழியாக செலுத்த வேண்டும்.

    இதில், ஏதாவது ஒரு மருந்தை இரண்டு தடவை 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மேலுரமாக யூரியா உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் இதனை அறிந்து தகுந்த பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp