Enable Javscript for better performance
தூய விதையே சாகுபடிக்கு உகந்த நல்விதை!- Dinamani

சுடச்சுட

    
    seeds

    சாகுபடி செய்யும் விவசாயிகள் தூய விதையே நல்விதை என்பதை கருத்தில் கொண்டு பரிசோதனை செய்யப்பட்ட விதையைப் பயன்படுத்துமாறு வேளாண்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக திருநெல்வேலி விதை பரிசோதனை அலுவலர் மூ.மு. முகம்மதுகாசீம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிகம் சுத்தத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    சுத்தமான விதைகள், விதைப்பின்போது சீராக விதைப்பதற்கும், வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    நெல் சிறுதானியங்கள், பயறு ஆகிய விதைகளுக்கு 98 சதம் புறச்சுத்தமும், வெண்டை 99 சதவிகிதமும், கேழ்வரகு, எள் 97 சதவிகிதமும், நிலக்கடலை, முருங்கை ஆகியன 96 சதவிகிதமும், கீரை, மல்லி ஆகியன 95 சதவிகிதமும் புறச்சுத்தம் இருத்தல் வேண்டும்.

    திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு விதைகளை அனுப்பும்போது, தூய விதை, பிறதானிய விதை, உயிர்ப்பற்ற பொருள், மற்றும் களை விதை ஆகியவற்றை தனித்தனியே கணக்கிடப்பட்டு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாங்கள் பயன்படுத்தும் விதைகளின் சுத்தத் தன்மை தெரிந்து சாகுபடிக்கு பயன்படுத்திட வேண்டும்.

    விதைப் பகுப்பாய்வு அவசியம்: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் விதைப் பரிசோதனை ஆய்வகத்திற்கு இம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை மாதிரிகள் பரிசோதனை செய்ய அனுப்பும்போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

    தங்களிடம் இருப்பில் உள்ள விதைக் குவியலில் இருந்து நெல் விதை 400 கிராம், மக்காசோளம், உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, நிலக்கடலை, சூரியகாந்தி ரகம் மற்றும் ரகப்பருத்தி பஞ்சு உள்ளது.

    வெண்டை போன்றவை 1,000 கிராம் வீதமும், சோளம், தக்கைப்பூண்டு மற்றும் சோளம் விதை 900 கிராம், கம்பு, மிளகாய், கத்தரி தலா 150 கிராம் வீதமும் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

    விதை மாதிரிகளை துணிப்பையில் எடுத்து அதனுள் வைக்க வேண்டும். விவரச் சீட்டில் பயிர், ரகம், குவியல் எண், அறுவடைத் தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதிரிக்கும் ரூ. 30  வீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai