Enable Javscript for better performance
தண்ணீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கேற்ற நெல் ரகம்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கேற்ற நெல் ரகம்

    By dn  |   Published on : 12th August 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nel1

    நீடாமங்கலம்:  தண்ணீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கேற்ற நெல் ரகம் சிஆர் 1009 சப் 1 என  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் இராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் ரெ.பாஸ்கரன்  ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

     இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

     தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டாவில் மட்டும் சம்பா பருவத்தில் அதிக பரப்பளவாக 4.1 லட்சம் எக்டரிலும், தாளடி பருவத்தில் 1.2 லட்சம் எக்டரிலும் நெல் பயிரிடப்படுகிறது.

     வடகிழக்குப் பருவமழையின்போது காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் சூழல் உருவாகும். அத்தருணங்களில் தண்ணீர் தேங்குவதால் நெற்பயிருக்குப் பாதிப்பு உண்டாகி விளைச்சல் பாதிக்கும்.

     எனவே, இதை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 15 நாட்கள் வரை நெற்பயிரானது வெள்ளத்தால் சூழ்ந்திருந்தாலும் எவ்விதப் பாதிப்புமின்றி வளரும் சிறப்புடைய சிஆர் 1009 சப் 1 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளது. இந்த ரகமானது சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்றது ஆகும்.

    சிஆர் 1009 சப் 1 ரகத்தின் சிறப்புகள்  இந்த ரகமானது 155-160 நாட்கள் வயதுடையது. நீண்ட கதிர்களில் குறுகிய பருத்த மணிகளைக் கொண்டது. எக்டருக்கு 5,759 கிலோ மகசூல் தரவல்லது. 1000 மணிகள் எடை 23.5 கிராம் ஆகும்.

    அதிக அரவைத்திறனும் முழு அரிசி காணும் திறனும் கொண்டது. அதிக மாவுச்சத்து உள்ளதால் இட்லி தயாரிப்பதற்கு சிறந்தது. நேரடி விதைப்பிற்கும் ஏற்ற ரகம்.

    புகையானுக்கு எதிர்புத்திறன் கொண்டது. இலைப்புள்ளி, குலைநோய், வெண்முதுகு தத்துப்பூச்சி ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai