வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?

தற்போதுள்ள குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை குறித்து திரூர் வேளாண்
வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?
Published on
Updated on
1 min read

தற்போதுள்ள குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை குறித்து திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி தெரிவித்துள்ளார்.
 திருவள்ளூர் மாவட்டம், ராமராஜ் கண்டிகை கிராமத்தில் வாழைப் பயிர்களை வெட்டுப்புழு தாக்கி, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஆய்வில், மாவட்டம் முழுவதும் இதே நிலை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, குளிர்கால பருவத்தில் விவசாயிகள் வாழை பயிர் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
 பயிர் சேதத்தின் அறிகுறி: இளம்புழுக்கள் இலைக்கு அடியில் இருந்து கொண்டு சுரண்டித் தின்னும், பின்னர், இரவு நேரங்களில் இலைகளை அதிகமாக உண்ணும்.
 பூச்சியின் விவரம்: புழுக்கள் இளம்பச்சை (அ) பழுப்பு நிறத்திலும், கருமையான நிறத்திலும் காணப்படும். பூச்சியின் முன்னிறக்கை பழுப்பு நிறத்தில் தோன்றும், அதனுள் அலை போன்ற வெள்ளை கோடுகள் தோன்றும். பின்னிறக்கை வெள்ளை நிறத்திலும், ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளுடனும் காணப்படும்.
 கட்டுப்படுத்தும் முறை: கையில் எடுத்து புழுக்களை அழிக்க வேண்டும். தாக்கப்பட்ட பகுதிகளை, அழித்துவிட வேண்டும். கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்தும் அழிக்கலாம்.
 இதேபோல், குளோர்பைரிபாஸ் 2 மில்லி லிட்டர் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு), டைகுளோரவாஸ்-76 2 மில்லி, டைபுளுபெச்சுரான்-25 ஒரு கிலோ லிட்டர் (ஒரு லிட்டருக்கு) பூச்சி மருந்துகளை தெளிக்கலாம் என பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com