வருவாய்க்கு வழிவகுக்கும் வாத்து வளர்ப்பு!

திருநெல்வேலி: தமிழகத்தில் வருவாய் தரும் வேளாண் தொழில்களில் வாத்து வளர்ப்பும் ஒன்று. இந்தியாவின் வட மாநிலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் போன்றவற்றால்
வருவாய்க்கு வழிவகுக்கும் வாத்து வளர்ப்பு!

திருநெல்வேலி: தமிழகத்தில் வருவாய் தரும் வேளாண் தொழில்களில் வாத்து வளர்ப்பும் ஒன்று. இந்தியாவின் வட மாநிலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் வாத்து வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், தென்னிந்தியாவில் வாத்து வளர்ப்பு இன்றளவும் உள்ளது. வாத்து முட்டைகளுக்கு கேரளம், ஆந்திரம் மாநிலங்களில் மக்களிடையே அதிக தேவை உள்ளது. இதுதவிர வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் வாத்து முட்டைகள் ஏற்றுமதியாகின்றன.

வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிடும். சாதாரணமாக வாத்து முட்டை 65 - 70 கிராம் எடை இருக்கும். 5 - 6 மாத வயதில் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடத் தொடங்கியதும் 5 முதல் 6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும். குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாள்தோறும் காலை ஒருமுறையும், மாலை இருமுறையும் தீவனம் அளித்தல் சிறந்தது.

நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சி) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை.

முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ. அகலம், 45 செ.மீ. ஆழம் 30 செ.மீ. உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம். மக்காச்சோளம், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, எள் பிண்ணாக்கு, சோயாபீன் துகள், உலர்த்தப்பட்ட மீன், கடற்சிற்பி ஓடுகள், தாது உப்புக்கலவை, உப்பு போன்றவற்றை முட்டையிடும் வாத்துகளுக்கு அளிக்கலாம். ஒவ்வொரு 100 கி.கி. தீவனக் கலவையுடன் வைட்டமின் ஏ 600, வைட்டமின் பி2 600 மில்லி கிராம், நிக்கோட்டினிக் அமிலம் 5 கிராம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாத்துக் குஞ்சு பராமரிப்பு: வாத்துக் குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழக் குட்டையிலும், 29.5 அடி கூண்டுகளிலும் 16ஆவது வார வயதுவரை வளர்க்க வேண்டும். முதல் சில நாள்களுக்கு வெப்பக் கூட்டுக்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2 - 3 நாள்களுக்கு ஒருமுறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8 - 10 நாள்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2 - 3 வாரங்கள் வரைகூட வைத்திருக்கலாம்.

16 வாரங்களைக் கடந்த வாத்துகளை மிகவும் எளிதாகப் பராமரிக்க முடியும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாசன வயல்கள், நீர்நிலைகளின் கரைகள் போன்றவை அதிகம். இங்கு வாத்துகள் எளிதாக சென்றுவரும். சிறிய குட்டைகள் அமைத்துக் கொடுத்தால் அவற்றிலேயே முட்டையிடும் வாய்ப்பும் உள்ளது. வேளாண்மைக்கு பெரிதும் உதவுவதோடு, வருவாய்க்கும் வாத்து வளர்ப்பு உதவுகிறது. வாத்து வளர்ப்பில் தேவையான சந்தேகங்களை திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குச் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com