சுடச்சுட

  
  32

  ஆற்காடு: தற்போது நெற்பயிரில் புகையான் பூச்சித் தாக்குல் காரணமாக அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
   புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆற்காடு வேளாண் உதவி இயக்குநர் சு.பேபி பர்வதம் கூறியதாவது:
   ஆற்காடு வட்டத்துக்கு உள்பட்ட சக்கரமல்லூர், கிளாம்பாடி, குருமுடிதாங்கல், கரிகந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் புகையான் பூச்சித் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது.
   இந்தத் தாக்குதல் பயிரின் கதிர் பருவம், கதிர் முதிர்ச்சிப் பருவங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், வயலில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும்.
   புகையான் பூச்சித் தாக்குதல் தீவிரம் அடையும்போது தான், நோய் தாக்கிய நிலைமை வெளிப் பார்வைக்கு தெரியவரும்.
   பயிரை விலக்கி அடிப்பகுதியைப் பார்த்தால் கொசு போன்ற சிறிய பூச்சிகள் இளம் பழுப்பு நிறத்தில் ஊர்ந்து செல்வதைக் காண முடியும். இந்நிலையில், விவசாயிகள் நெற்பயிரில் ஆறு அடிக்கு ஒரு அடி வீதம் பயிரை விலக்கி இரண்டு பக்கமும் சாய்த்து இடைவெளி ஏற்படுத்த வேண்டும்.
   மேலும், ஒரு ஹெக்டேருக்கு பைப்பரினில் 0.3 சதவீதம் ஜிபி 16 முதல் 25 கிலோ, இமிடாகுளோபிரிட் எஸ்எல் 100 முதல் 125 மி.லி, பைப்பரினில் 5 சதவீதம் எஸ்.சி. 1,000 முதல் 1,500 மி.லி. அல்லது டைகுளோர்வாஸ் 500 மி.லி. ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை பயிரின் அடிப்பகுதியில் தெளித்து பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மருந்து தெளிக்கும்போது வயலில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பேபி பர்வதம் கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai