சுடச்சுட

  

  பூண்டி ஒன்றியத்தில் சாமந்திப் பூ விளைச்சல் அமோகம்

  By திருவள்ளூர்  |   Published on : 21st March 2016 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  flowe

  திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூண்டி, மோவூர், புல்லரம்பாக்கம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் சாமந்திப்பூ விளைச்சல் அமோகமாக உள்ளது.

  திருவள்ளூர் உழவர் சந்தை அருகே உள்ள பூ மார்க்கெட்டில் சாமந்திப் பூ விற்பனை அமோகமாக உள்ளது.

  இங்கு சாமந்திப்பூ பூண்டி ஒன்றியத்தில் இருந்து விற்பனைக்கு வரவழைக்கப்படுகிறது.

  இந்த சாமந்திப்பூ திருவள்ளூருக்கு மட்டுமல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் பூண்டி ஒன்றியத்தில் இருந்து பெருமளவில் வந்தவண்ணம் உள்ளது. தற்போது விளைச்சல் நல்ல நிலையில் இருப்பதால் ஒரு கிலோ ரூ. 120 முதல் 150 வரை சில்லறையில் விற்கப்படுகிறது. வியாபாரமும் விறுவிறுப்பாக உள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai