Enable Javscript for better performance
கூடுதல் மகசூல் பெற நெல் சாகுபடியில் உயிர் உர விதைநேர்த்தி- Dinamani

சுடச்சுட

    

    கூடுதல் மகசூல் பெற நெல் சாகுபடியில் உயிர் உர விதைநேர்த்தி

    By DN  |   Published on : 04th October 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    padi

    நெல் சாகுபடியில் உயிர் உர விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
    நெல் சாகுபடியில் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும், மேலும் பயிர் வளர்வதற்கான வளிமண்டலத் தழைச் சத்தைக் கிரகித்து வழங்கவும் உயிரியல் விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் அடைந்திட விதை நோóத்தி செய்யலாம் என புதுக்கோட்டை வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
    உயிரியல் விதை நேர்த்தி: நெல் சாகுபடியில் விதை, மண் மூலம் பரவும் நோய்களான குலை நோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் பழநோய் ஆகியவற்றை உயிரியல் விதை நேர்த்தி மூலம் கட்டுப்படுத்த முடியும்.
    சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் என்ற எதிர் உயிரி பூஞ்சான மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு கிலோ விதை, 10 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து உலர வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது டிரைகோடொமோ விரிடி ஒரு கிலோவுக்கு  4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
    நுண்ணுயிர் விதை நேர்த்தி: காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு வழங்கி, மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றித் தரும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உரமாகப் பயன்படுத்துவதனால் இவற்றை உயிர் உரம் என்றழைக்கிறோம்.
    நெல் பயிருக்கு அஸோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை தலா மூன்று பாக்கெட் (200 கிராம்) 1 ஹெக்டேருக்குத் தேவையான  நெல் விதையுடன் 1 லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து விதைகளை மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர்கள் நன்றாகக் கலக்கும்படி செய்ய வேண்டும். பின்னர் 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.
    நாற்றுக்களின் வேர்களை நனைத்தல்: உயிர் உரங்களை நெல் நாற்றின் வேர்களை நனைத்தும் பயன்படுத்தலாம். தேவையான எண்ணிக்கையில் உயிர் உரப் பாக்கெட்டுகளை வயலோரத்தில் கலந்து சிறு குட்டைபோல் நீரில் தேக்கி அதில் வேர்களை நனைத்து நடலாம். இதனால் வேர்களில் நுண்ணுயிர்கள் ஒட்டிக் கொண்டு பயிர் நன்றாக வளரும்.
    நடவு வயலில் நுண்ணுயிர் உரமிடுதல்:
    ஒரு ஹெக்டேருக்குத் தேவையான 10 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் (நெல்) 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோவுடன் கலந்து நடவுக்கு முன்னதாக வயல் முழுவதும் சீராகத் தூவ வேண்டும்.  
    இதனால் நெல் வயலில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைந்து, மண் வளம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள தழைச்சத்துகளை வேரில் ஈர்த்து வைத்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. உரச் செலவு குறைகிறது. பூஞ்சான நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தி, விதை முளைப்புத் திறன் பயிர் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. எனவே விவசாயிகள் தவறாமல் நடப்பு சம்பா நெல் சாகுபடியில் உயிர் உரம் விதை நோóத்தி செய்து உரச் செலவைக் குறைத்து, அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai