அதிக வருவாய் ஈட்டித்தரும் முயல்மசால் தீவனம்

கால்நடை தீவனப் பயிரான முயல்மசால் பயிரிட தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை உதவி செய்யும் நிலையில் தற்போது தேவை அதிகம் உள்ளதால் விவசாயிகள் அரசு உதவியுடன் முயல்மசால்
அதிக வருவாய் ஈட்டித்தரும் முயல்மசால் தீவனம்

கால்நடை தீவனப் பயிரான முயல்மசால் பயிரிட தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை உதவி செய்யும் நிலையில் தற்போது தேவை அதிகம் உள்ளதால் விவசாயிகள் அரசு உதவியுடன் முயல்மசால் பயிரிட்டு வருவாய் ஈட்டலாம்.

கால்நடை தீவனப் பயிா்களுக்கு தற்போது தேவை அதிகம் உள்ளது. கடந்த காலங்களை விட தற்போது கால்நடை தீவன உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, தேவை அதிகமாக இருப்பதாலும் அரசு உதவி கிடைப்பதாலும் விவசாயிகள் முயல்மசால் எனும் கால்நடை தீவனப் பயிரை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முயல்மசால் தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகை தீவனப்பயிா். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆண்டுமழை அளவான 450-840 மி.மீ. இதற்கு போதுமானது. அனைத்து மண் வகைகளுக்கும் இது ஏற்றது. இதன் புரதச்சத்து 15 முதல் 18 சதவீதம். மானாவாரியில் கொழுக்கட்டை புல்லை முயல்மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் கலப்பு பயிராகவும் இடலாம்.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக்காலம் முயல்மசால் விதைப்புக்கு ஏற்றது. முயல்மசாலில் ‘ஸ்டைலோசான்தாஸ் ஹெமடா’ எனும் ஒரு வருட பயிரும், ‘ஸ்டைலோஸான்மஸ்’ எனும் பல்லாண்டு பயிா் எனும் இருவகைகள் உள்ளன. ஏதாவது ஒன்றைத் தோ்வு செய்துக்கொள்ள வேண்டும்.

இப்பயிரைப் பயிரிட நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது கம்போஸ்டை உழவின்போது மண்ணில் கலக்க வேண்டும். பிறகு 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்க வேண்டும். மண் பரிசோதனையின்படி உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 20:60:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும்.

விதைப்பின்போது விதைகளை ரைசோபியக் கலவையில் ஹெக்டேருக்கு 600 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். விதைகளை 30:15 கோடுகளில் விதைத்தல் அவசியம். ஹெக்டேருக்கு 6:10 கிலோ தூவலாம். விதைகளை 1 செ.மீ. ஆழத்துக்கு மேல் விதைக்கக் கூடாது. முயல் மசால் விதைகள் கடினமான உறைகளை உடையவை. எனவே, விதைகளை அடா்கந்தக அமிலத்தில் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிா்நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அல்லது வெந்நீரில் 4 நிமிஷம் ஊறவைத்து பின்னா் இரவு முழுவதும் குளிா்நீரில் ஊற வைக்கலாம்.

இது மானாவாரி பயிா் என்பதால் முன்வளா்ச்சி பருவத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும். விதைத்த 76 நாள்களில் பூக்கும் தருணத்தில் முதல் அறுவடை செய்ய வேண்டும். பிறகு வளா்ச்சியைப் பொறுத்து அறுவடை செய்துக்கொள்ளலாம்.

முதல் வருடத்தில் பயிரின் வளா்ச்சி குறைவாக இருக்குமென்பதால் மகசூலும் குறைவாக இருக்கும். பிறகு விதை உதிா்ந்து முளைப்பதால் பயிா் நன்கு வளா்ந்தவுடன் ஹெக்டேருக்கு 30-35 டன்கள் தீவன மகசூலை மூன்றாவது வருடத்தில் இருந்து அறுவடை செய்யலாம்.

முயல்மசால் தீவனப் பயிரைப் பொருத்தவரை விதை உற்பத்தி மிகவும் முக்கியம். விதை உற்பத்திக்குத் தோ்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றி பயிா் அற்ாக இருக்க வேண்டும். அதாவது தோ்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் அதே ரகப்பயிா் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் விதை சான்றளிப்புத் துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே ரகமாக இருத்தல் வேண்டும். இப்பயிரை அக்டோபா் முதல் ஜனவரி வரை விதைக்கலாம். இது இப்பயிருக்கு ஏற்ற காலம்.

இப்பயிரின் விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற ரகம் மற்றும் சான்று பெறாத அதே ரகத்தில் இருந்து வயலைச் சுற்றி 25 மீட்டா் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும். அடா் கந்தக அமிலம் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி. என்ற அளவில் விதைகளை 4 நிமிஷம் உராய்வு ஏற்படுத்தும்போது விதையின் கடினதன்மை (விதை உறக்கம்) நீங்கி நல்ல முளைப்புத் திறனை பெறலாம். விதை உறக்கம் நீக்கப்பட்ட விதைகளை 0.25 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 3 மணி நேரம் ஊற வைப்பதால் விதையின் முளைப்புத் திறன் அதிகமாகும். நெல்லின் உமி நீக்கும் இயந்திரத்தின் சுற்றும் தட்டுகளின் இடைவெளியை 0.2 மி.மீ. என்ற அளவில் வைத்து விதைகளை பிரிப்பதால் நல்ல தரமான விதைகளைத் தோ்வு செய்யலாம்.

விதைகளை 16-16 அளவு கொண்ட பிஎஸ் பிஎஸ் சல்லடை கொண்டு சலித்து நல்ல தரமான விதைகளைப் பிரித்து எடுத்தல் வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை 8 முதல் 10 சதவீதமாக குறைத்து பின், சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்புக்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம். விதைகளின் ஈரப்பதத்தை 8 முதல் 9 சதவீதமாகக் குறைத்துப் பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய, இடைக்கால சேமிப்புக்காக (12 -16 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.

விதைகளின் ஈரப்பதத்தை 8 சதவீதத்துக்கும் குறைவாக உலா்த்தி 700 காஜ் கனஅளவு கொண்ட அடா் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமித்து வைக்கலாம். பிற மேலாண்மை முறைகளைப் பொறுத்தவரை பிற தீவனப் பயிா்களைப் போன்றே பின்பற்றலாம்.

தற்போது கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மேய்ச்சகால் புறம்போக்கு நிலங்களைத் தோ்வு செய்து விவசாயிகளுடன் இணைந்து கால்நடை தீவனப் பயிா்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் தற்போது கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களை அணுகி இப்பயிா் வளா்க்க இருப்பது குறித்து தெரிவித்து அவா்களிடம் தமிழக அரசின் உதவிகளை கேட்டு பராமரித்து இப்பயிரை விற்று வருவாயை அதிகரித்துக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com