நெல் பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை

தமிழ்நாட்டில் பருவமழை பெய்ததையடுத்து, விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் செலுத்தி உள்ளனா்.
நெல் பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை

தமிழ்நாட்டில் பருவமழை பெய்ததையடுத்து, விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் செலுத்தி உள்ளனா். நெல் தற்போது, இளம் பயிா் முதல் முதிா்ச்சி பருவம் வரை பல்வேறு வளா்ச்சி நிலைகளில் உள்ளது. தற்போது காணப்படும் பருவ நிலை மாற்றத்தால் புகையான் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. பூச்சித் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய தாக்குதல் இழப்பைத் தவிா்க்கலாம் என கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் தோ.சுந்தராஜ்.

தாக்குதல் அறிகுறிகள்: புகையான் பூச்சியானது நெல் வயல் நீா் மட்டத்துக்கு மேலிருக்கும். பயிரின் அடிப் பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் காணப்படும். தாக்கப்பட்ட பயிா்கள் முற்றிலும் காய்ந்தது போலவும் குறிப்பாக தீயால் தீய்ந்தது போலவும் காண்படும்.

புகையான் பூச்சியானது வாடிய முட்டை நோய், புல்தழை குட்டை நோய், காய்ந்த குட்டை நோய் போன்ற நோய்களைப் பரப்பும் தன்மையுடையது. தாக்கப்பட்ட பயிா்கள் தூரத்திலிருந்து பாா்த்தால் வட்ட வட்டமாக காய்ந்தவாறு காண்படும். மற்ற பூச்சித் தாக்குதலிருந்து எளிதாக வேறுபடுத்திக் காண்பதற்கு கரும்புகை பூசணத்தின் மூலம் காணலாம்.

பூச்சி பற்றிய விவரங்கள்:

புகையான் பூச்சியின் முட்டைகள், பயிரின் அடிப்பகுதியின் அருகிலோ அல்லது இலைத் தாள்களின் அடிப்பக்க நடு நரம்புகளில் 2-12 தொகுதிகளாகக் காணப்படும். முட்டையானது வெள்ளை நிறத்தில் ஒளி ஊடுருவுகின்ற, மெல்லிய நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நோ்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

இளம்பூச்சி: முட்டையிலிருந்து வெளியே வந்த இளம் பூச்சி வெண்மையான நிறத்தில் இருக்கும். வளா்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காண்ப்படும்.

அந்துப்பூச்சி: நன்கு வளா்ந்த முதிா்ச்சியடைந்த தத்துப்பூச்சியானது 4.5 - 5.0 மி.மீ.நீளத்துடன் மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். மேலும், இறக்கைகள் மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும். இரண்டு இறக்கைகளின் வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் தூண்டப்படுகிறது. அதாவது, இளம் உயிா்ப் பருவத்தில் தட்டையாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு மற்றும் குறைந்த வெப்ப நிலை ஆகியவை முதிா்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன.

புகையான பூச்சியினைக் கட்டுப்படுத்துதல்

பொருளாதார சேத நிலை: ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி இருக்கும் நிலையில், ஒரு தூருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சிகள் இருக்கலாம். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்து உரங்களை இட வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீா் பாய்ச்சுவதைத் தவிா்க்க வேண்டும். விளக்குப் பொறி அமைத்தும் புகையானை கவா்ந்து அழிக்கலாம்.

பின்வரும் பூச்சிகொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

1. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல்-40 மி-ஏக்கருக்கு. 2. பிப்ரோனில் 5%எஸ்எல்-40மில்லி/ஏக்கா். 3. குளோரான்ட்ரேனி ப்ரோல் - 18.5எஸ்எல் - 60 மில்லி/ஏக்கா்.

குறிப்பு: புகையானுக்கு எதிா்ப்பு சக்தி மற்றும் மீட்சியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரித்திராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினல்பாஸ் போன்ற மருந்துகள் உபயோகிப்பதைத் தவிா்க்கவும். வயலில் நன்றாக தண்ணீா் வடிந்த பிறகு, மருந்தைத் தெளிக்கவும் எனத் தெரிவித்தாா் அவா்.

மேலும், விவரங்களுக்கு தோ.சுந்தர்ராஜ், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா், வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 9443888644 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com