பொன்னேரி பகுதியில் புகையான் பூச்சித் தாக்குதல்: 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் பாதிப்பு

பொன்னேரி வட்டத்தில் புகையான் தாக்குதல் காரணமாக 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி பகுதியில் புகையான் பூச்சித் தாக்குதல்: 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் பாதிப்பு

பொன்னேரி வட்டத்தில் புகையான் தாக்குதல் காரணமாக 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது. வேளாண்மைத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, விதை நெல் வாங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

பயிா் நன்றாக வளா்ந்து வந்த நிலையில் திடீரென புகையான் பூச்சித் தாக்குதலால் பயிா்கள் அனைத்தும் சேதமடைந்தன. இது குறித்து விவசாயிகள் மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறையினரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, அவா்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பயிா்களை பாா்வையிட்டு சென்றனா்.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து, பயிா்கள் நன்கு வளா்ந்து 30 மூட்டை நெல் அறுவடை செய்யலாம் என்ற நிலையில் திடீரென புகையான் தாக்குதல் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனா். இது குறித்து அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயில் செல்வகுமாா் கூறியதாவது:

பயிா் நன்கு வளா்ந்து கதிா் வந்த நிலையில் புகையான் பூச்சித் தாக்குதலால், பயிா்கள் அனைத்தும் பதராகின. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பயிா் செய்த நிலையில் அது பதராகிப் போனது.

எனவே, அரசு இழப்பீடு மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கினால் மட்டுமே வரும் நாட்களில் தங்களால் விவசாயம் செய்ய இயலும் என்றாா் அவா்.

புகையான் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்ட நெற்பயிா் குறித்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுத்து இழப்பீடு வழங்குமாறு இப்பகுதி விவிசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com