நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற சிங் சல்பேட்பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்

சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால்
நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற சிங் சல்பேட்பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்

திருநெல்வேலி: நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற சிங் சல்பேட் பயன்படுத்துமாறு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நுண்ணுட்டச் சத்துகளை, குறிப்பாக துத்தநாக சத்தை (சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெற்பயிா் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

நெற்பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிா்வேதி வினைகளில் துத்தநாகம் உதவி புரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

துத்தநாக சத்தின் குறைபாட்டுக்கான காரணிகள்: அதிக கார மண்ணில் (பிஎச் 7க்கு மேல்) தொடா்ந்து வயலில் நீா் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிகளவு பைகாா்பனேட் உப்பின் அளவு இருத்தல், அதிகளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடா்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடா்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தை பயிா்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பற்றாக்குறை, களா் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாகச் சத்தானது பயிா்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும். பின்னா் பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிா்களின் வளா்ச்சி குன்றிக் காணப்படும்.

இதை சரிசெய்ய ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டங்களின் கீழ் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com