பெங்களூர், டிச.18: தகாத உறவால் தனது 8 வயது மகளை கொலை செய்ததாக அச்சிறுமின் தாயும், அவரது காதலரும் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் ஊரக மாவட்டம், தலகட்டபுரத்தைச் சேர்ந்த நாகராஜின் மனைவி சரிதா (28). இவருக்கும் வீட்டு உரிமையாளர் மகன் சிவாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.
இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 18-ம் தேதி கணவர் நாகராஜுக்குத் தெரியாமல் சரிதா, தனது மகள் தனுஸ்ரீ மற்றும் சிவாவுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
தனது மனைவி மற்றும் மகளைக் காணவில்லை என்று நாகராஜ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
÷இதுபற்றி ஹாரோஹள்ளி போலீஸôர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சென்னப்பட்டனா அருகே சிம்சா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இக்லூர் அணைக்கு அருகே வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில் சிறுமியின் உடலை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளிச் சீருடையுடன் காணப்பட்ட சிறுமியின் உடலை கிராம மக்களின் உதவியுடன் போலீஸôர் அடையாளம் கண்டுள்ளனர். இது தனுஸ்ரீயின் உடல் என்பதை போலீஸôர் உறுதி செய்துள்ளனர்.
÷இதனிடையே தர்மஸ்தலாவில் திருமணம் செய்து கொண்டு ஷிமோகாவிலுள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த சரிதா மற்றும் சிவாவை போலீஸôர் கைது செய்தனர்.
தொடக்கத்தில் தனுஸ்ரீயை தனது கணவர் கொன்றிருக்கலாம் என்று கூறிய சரிதா, பின்னர் இக்லூர் அணையில் தள்ளி தனுஸ்ரீயை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது கள்ளக்காதல் பற்றி கணவரிடம் தெரிவித்துவிட்டால் என்ன செய்வது என்று சந்தேகித்த சரிதா, சுற்றுலா செல்வதாக தனது மகள் தனுஸ்ரீயை இக்லூர் அணைக்கு அழைத்துச் சென்று, அணையில் இருக்கும் தண்ணீரை பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
÷தண்ணீரை குழந்தை ஆர்வமாக பார்த்தபோது பின்னால் இருந்து தனுஸ்ரீயை தள்ளிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் சரிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸôர் விசாரிக்கின்றனர்.