அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க பிரதமர் மறுப்பு துரதிருஷ்டவசமானது: பொம்மை

பெங்களூர், ஜன.12: மகதாயி நதி நீர் பிரச்னை குறித்து கர்நாடக அனைத்துக் கட்சித்  தலைவர்கள் குழுவுடன் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கிக் கொடுக்க  மறுத்தது துரதிருஷ்டவமானது என்று நீர்வளத் துறை

பெங்களூர், ஜன.12: மகதாயி நதி நீர் பிரச்னை குறித்து கர்நாடக அனைத்துக் கட்சித்  தலைவர்கள் குழுவுடன் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கிக் கொடுக்க  மறுத்தது துரதிருஷ்டவமானது என்று நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

÷கர்நாடகம்-கோவா மாநிலங்களுக்கு இடையே மகதாயி நதி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க மத்திய நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கர்நாடகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்து முறையிட கர்நாடகம் முடிவு செய்தது.

÷இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க அனைத்துக் கட்சிக்குழுவை  செவ்வாய்க்கிழமை தில்லிக்கு அழைத்துச் செல்ல கர்நாடகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கர்நாடக குழுவைச் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுக்க பிரதமர்  மறுத்துவிட்டார். இதனால் கர்நாடகக் குழுவின் தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.

÷இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ்

பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:

÷இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு பிரச்னை இருக்கும்போது அதில் தலையிட்டு சமரசத் தீர்வு காண்பதுதான் மத்திய அரசின் முக்கிய பணியாகும்.  

இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் எழுதி  விளக்கப்பட்டுள்ளது. இருமுறை நேரில் சந்தித்து மகதாயி நதியில் அமைக்கப்படவுள்ள கலசா பண்டூரி குடிநீர்த் திட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கோரிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை செவி சாய்க்கவில்லை.

÷இதனால் அனைத்துக்கட்சிக் குழுவை அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிட அரசு தீர்மானித்தது. இதற்காக டிசம்பர் 12-ம் தேதி நேரம் ஒதுக்கிக் கொடுக்கும்படி பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடக குழுவை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார். நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை.

 பிரதமரின் இந்த செயல் துரதிருஷ்டவமானது. ஐந்து கோடி மக்கள் பிரதிநிதியாக  முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.  ஆனால் நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிடும்படி பிரதமர் அலுவலகம்  சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதுதான் கர்நாடகத்தின் மீது மத்திய அரசு

கொண்டிருக்கும் அக்கறையாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com