குற்ற வழக்குகளில் 60 பேர் கைது: ரூ.3 கோடி பறிமுதல்

பெங்களூர், ஜன.12: பெங்களூரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மோசடி வழக்குகளில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்; மொத்தம் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்

பெங்களூர், ஜன.12: பெங்களூரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மோசடி வழக்குகளில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்; மொத்தம் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

÷இதுகுறித்து நகர காவல் துறை ஆணையர் சங்கர் பிதரி நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

÷பெங்களூர் காவல் துறை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மல்லேஸ்வரம், ஜே.சி.நகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் மட்டும் குற்ற வழக்குகளில் 49 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பணம், வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்óறும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வங்கி மோசடியில் 7 பேர் கைது: அமிர்தஹள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் மேலாளர் நாகராஜ் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி கப்பன்பேட்டையில் ஒரு புகார் அளித்தார். அதில் குறிப்பிட்ட 7 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.1.50 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

÷இதுதொடர்பாக விசாரித்த போலீஸôர் சிவானந்தா பை, விஜயகுமார், காயத்ரி, மீனாட்சி, சீனிவாஸ், பிரசாத் மற்றும் நாகராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்கள் கோமளா என்ற பெண்ணின் பெயரில் குறிப்பிட்ட ஸ்டேட் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கி அதிகாரியின் உதவியுடன் ரூ.1.50 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்தவர்கள் கைது:  வாகனங்களைத் திருடி போலி ஆவணங்கள் தயாரித்து விற்று வந்த சேலத்தைச் சேர்ந்த தன்ராஜ், ரவி, சுரேஷ் மற்றும் கோலாரைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் நகர குற்றப்பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் போக்குவரத்து துறை முத்திரைகளையும் ஆர்.சி. புக், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றையும் போலியாகத் தயாரித்து திருடிய வாகனங்களை விற்றுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகராட்சி தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு:  பிப்ரவரி 21-ம் தேதி நடக்கும் பெங்களூர் மாநகராட்சித் தேர்தலுக்கு நகர காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும். ஜனவரி 15-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நகரில் அமலாக உள்ளன. தேர்தல் அமைதியாக நடக்க முன்னெச்சரிக்கையாக நகரில் உள்ள ரெüடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

÷சில நாட்களுக்கு முன் ஜேசிபி நாராயணா, குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்டார். இதேபோல மேலும் தலைமறைவாக உள்ள ஐந்தாறு ரெüடி கும்பல்களையும் கைது செய்ய வேண்டியுள்ளது. ரெüடிகளும் தாங்களாகவே காவல் நிலையங்களில் வந்து சரணடைவது நல்லது.

வன்முறையில் ஈடுபட்ட 40 பேர் கைது:  கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடிகர் விஷ்ணுவர்த்தன் இறுதிச் சடங்கு பெங்களூரில் நடந்தபோது நகரில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை ரெüடிகள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com