திமுக சார்பில் பொங்கல் விழா

பெங்களூர், ஜன.12: கர்நாடக மாநில திமுக சார்பில் பொங்கல் விழா  கொண்டாடப்படுகிறது. ÷இதுதொடர்பாக மாநில திமுக பொறுப்புக்குழு செயலாளர் தி.கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ÷கர்நாடக மாநில திமுக சா

பெங்களூர், ஜன.12: கர்நாடக மாநில திமுக சார்பில் பொங்கல் விழா  கொண்டாடப்படுகிறது.

÷இதுதொடர்பாக மாநில திமுக பொறுப்புக்குழு செயலாளர் தி.கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ÷கர்நாடக மாநில திமுக சார்பில் புத்தாண்டு விழாவும், பொங்கல் விழாவும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பெங்களூர் ராமச்சந்திரபுரத்தில் உள்ள திமுக பணிமனை கலைஞரகத்தில் அன்று காலை 10 மணிக்கு துவங்கும் விழாவுக்கு பொறுப்புக்குழுத் தலைவர் வி.டி.சண்முகம் தலைமை தாங்குகிறார்.

÷பொறுப்புக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணி முன்னிலை வகிக்கிறார். பொறுப்புக்குழு உறுப்பினர் ந.ராமசாமி திமுக கொடியை ஏற்றி வைப்பார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.டி.ஆனந்தராஜ் அனைவருக்கும் இனிப்பு வழங்குவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com