நைஸ் சாலை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-கெüடா

பெங்களூர், ஜன.12: பெங்களூர்-மைசூர் அதிவிரைவுச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் நிலம் கையப்படுத்தப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.  எடியூரப்பாவை முன்னாள் பிரதமரும

பெங்களூர், ஜன.12: பெங்களூர்-மைசூர் அதிவிரைவுச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் நிலம் கையப்படுத்தப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.  எடியூரப்பாவை முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவருமான எச்.டி. தேவகெüடா வலியுறுத்தியுள்ளார்.

÷இதுதொடர்பாக அவர் பெங்களூரில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

÷பெங்களூர்-மைசூர் இடையே அதிவிரைவுச் சாலை அமைக்கும் திட்டத்தை நந்தி அடிப்படை கட்டமைப்பு நிறுவனம் (நைஸ்) மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தால் வீடு, நிலங்களை இழந்து விவசாயிகளும் பொதுமக்களும்  பாதிக்கப்பட்டு வருவதால் கோபத்தில் முதல்வர் எடியூரப்பா, அட்வகேட் ஜெனரல் மற்றும் நந்தி அடிப்படைக் கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குநர் அசோக் கெனி ஆகியோரை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டேன். அதற்காக ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். தற்போது மீண்டும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

÷இதற்காக எனது உருவ பொம்மையை பாஜகவினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பாஜக அலுவலகங்கள் மீது கல்வீசுவது அல்லது பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் ஈடுபட வேண்டாம்.

÷பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நந்தி நிறுவனத்துக்கு கூடுதலாக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 41 கி.மீ. தூர எல்லையில் சுமார் 4484 ஏக்கர் கூடுதல் நிலத்தை மோசடி செய்து வழங்கியுள்ளனர்.

 கடந்த 1995-ல் கர்நாடகத்தில் நான் முதல்வராக இருந்தபோது அதிவிரைவு சாலைத்  திட்டத்துக்காக 5118 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் எனது ஆட்சிக்குப் பிறகு அந்த திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எடியூரப்பா ஆட்சியில் சாலைத் திட்டத்துக்காக நூற்றுக்கணக்கான அப்பாவி விவசாயிகள், பொதுமக்களின் நிலங்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. 1077 ஏக்கர் நிலத்தை நந்தி நிறுவனத்துக்கு விற்று ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். இவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக எனது உயிருள்ளவரை தொடர்ந்து போராடுவேன்.

 இதுதொடர்பான வழக்கு விசாரணை திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, இந்த சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி, எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து 8 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 எனவே, எனது ஆட்சிக்குப் பிறகு ஜே.எச். படேல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி மற்றும் எடியூரப்பா ஆட்சிகளில் நைஸ் சாலைத் திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன? எந்தெந்த ஆட்சி காலத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டன? திட்டத்துக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது? உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக 2 வார காலத்திற்குள் வெளியிட முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் தேவகெüடா.

÷அதைத் தொடர்ந்து, சாலைத் திட்டத்தால் நிலம், வீடுகளை பறிகொடுத்த பெண்களும், ரெüடிகள் கத்திக் குத்தில் காயமடைந்த விவசாயிகளும் தேவகெüடா முன்னிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, சாலைத் திட்டத்தை செயல்படுத்தும் நந்தி அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும்,  ரெüடிகளும் தங்களது வீடுகளை இடித்து, நிலத்தையும் விவசாய நிலத்தையும் சட்டவிரோதமாக கையகப்படுத்தினார்கள். இதனால் நாங்கள் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com