மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க முயற்சியா?

பெங்களூர், ஜன.12: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை; திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் எடியூரப்பா உறுதிபடத் தெரிவித்தார். பெங்களூர் மாநகராட்சி மன்ற

பெங்களூர், ஜன.12: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை; திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் எடியூரப்பா உறுதிபடத் தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தேர்தலை திட்டமிட்டபடி பிப்ரவரி 21-ல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையின பெஞ்ச்சும் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை என்றும் இதனால் வெளி ஆட்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர அரசு முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முதல்வர் எடியூரப்பாவை சந்தித்த நிருபர்கள்,  பெங்களூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாவது  குறித்து கேட்டனர். அதற்குப் பதில் அளித்து எடியூரப்பா கூறியதாவது:

மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்க யாருடனும் சேர்ந்து அரசு முயற்சிக்கவில்லை. மேலும் இதற்காக யாரையும் நியமிக்கவில்லை. தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அறிவித்தபடி பிப்ரவரி 21-ம் தேதி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

எனவே, தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம். திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து, விரைவில் மக்கள் பிரதிநிகள் ஆட்சி மலர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com