பெங்களூர், ஜூலை 3: சிமெண்ட் கலவை லாரி மோதி சாலையைக் கடக்க முயன்ற சிறுமி இறந்தார்.
பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரியப்பா. இவரது மகள் மஞ்சுளம்மா (12). ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவர், பிழைப்பு தேடி பெங்களூர் வந்த தாய், தந்தையுடன் அருளூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த சிமெண்ட் கலவை லாரி மோதியதில் மஞ்சுளம்மா அதே இடத்தில் இறந்துள்ளார்.
இது குறித்து மடிவாளா போக்குவரத்து போலீஸôர் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.