பெங்களூர், ஜூலை 3: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கநகை மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர், எச்எஸ்ஆர் லேஅவுட், அரலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுப்பராய ரெட்டி (67) மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி (62). சனிக்கிழமை இரவு இவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கநகை, 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து எச்எஸ்ஆர் லேஅவுட் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.