பெங்களூர், ஜூலை 9: பெல்லாரி மாவட்டம், கெüல் பஜார் தெருவைச் சேர்ந்தவர் தாதாபீர் (எ) அப்துல் (36). இவர் பெங்களூர் ஊரக மாவட்டம், ஆனேக்கல் பகுதி மக்களிடம் பூமியில் இருந்து புதையல் எடுத்துத் தருவதாக ஆசை காட்டி, அவர்களிடமிருந்து தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக போலீஸôரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸôர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடக்கிறது.