பெங்களூர், ஜூலை 14: மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.
பெங்களூர், எடியூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் கூறியது:
மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ள பெல்காம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மும்பையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த போலீஸôர், பெங்களூர் நகரில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும், புதன்கிழமை இரவு முதல் ரயில்நிலையம், பேருந்துநிலையங்களில் பயணிகள் முழு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கர்நாடகத்தில் புதிதாக பணி அமர்த்தப்பட்டுள்ள கமாண்டோ அதிரடிப்படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.