நாமக்கல், ஜூலை 14: நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் விலை 5 காசுகள் குறைக்கப்பட்டு, 252 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான முடிவு வியாழக்கிழமை நடைபெற்ற நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
வடமாநிலங்களில் வெப்பநிலை சற்று உயர்ந்து காணப்படுவதால் அங்கு முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.