பெங்களூர், ஜூலை 30: அதிமுக அரசைக் கண்டித்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கர்நாடக மாநில திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் திமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.