பெங்களூர், ஜூலை 30: உள்நோக்கத்துடன் எடியூரப்பா பெயரை சுரங்க முறைகேடு அறிக்கையில் சேர்த்ததாக லோக் ஆயுக்த அமைப்பு மீது வழக்கு தொடரப்படும் என்று கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் எடியூரப்பா மட்டுமே எங்கள் நிரந்தரத் தலைவர்.
அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் எங்கள் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றாலும், எங்களது நிலையை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். சுரங்க முறைகேடு அறிக்கைற்யில் முதல்வர் எடியூரப்பாவின் பெயரை உள்நோக்கத்துடன் லோக் ஆயுக்த அமைப்பு சேர்த்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் பெயரை ஆளுநரின் வழிகாட்டுதலின்படி நீக்கியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
விரைவில் லோக் ஆயுக்த அமைப்பு மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.