பெங்களூர், கங்காநகர் லேஅவுட், 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் லட்சுமண். இவர், கதவை பூட்டிக் கொண்டு சாவியை வீட்டுக்குள் வைத்து விட்டு வியாழக்கிழமை வெளியில் சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது, ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை திருடப்பட்டு விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆர்டி நகர் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.