பெங்களூர், பிப். 10: தமிழ் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் கோலார் தங்கவயலில் உள்ள கோல்டன் சிட்டி கிரியேஷன்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொங்குதமிழ் மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் கு.கணேசன் வெளியிட்ட அறிக்கை: கோலார் தங்கவயலில் பொங்குதமிழ் மாநாடு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துகுமாரின் 3-ம் ஆண்டு நிகழ்வு ஆகியவை ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்க வைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோல்டன் சிட்டி கிரியேஷன்ஸ் கிளப்பில் நடைபெறும். தமிழ் அமைப்புகள் அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.