பெங்களூர், பிப். 10: பெங்களூர், கெங்கேரி, ஹர்ஷா லேஅவுட் 9-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜண்ணா. இவர், வங்கியில் வியாழக்கிழமை பெற்ற ரூ.5 லட்சம் ரொக்கத்தை தன்னுடைய ஸ்கூட்டரில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அங்கு, வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று திரும்பி வருவதற்குள் ரூ.5 லட்சம் திருடப்பட்டு விட்டது தெரியவந்தது.
இதேபோல, பெங்களூர், விஜயநகர், நாகரபாவி சாலையில் உள்ள மதுக்கடை எதிரில் தாமஸ்ஜோசப் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரின் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டு விட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.