சுடச்சுட

  

   சொத்துக்குவிப்பு வழக்கு: புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம்

  By பெங்களூரு  |   Published on : 01st November 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹாவை நியமித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்துவரும் பெங்களூரு சிறப்புநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர்(பொறுப்பு)கே.பி.சங்கப்பா பிறப்பித்துள்ளார். மாவட்ட நீதிபதியான ஜான் மைக்கேல் குன்ஹா, தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளராக பணியாற்றிவருகிறார். அடுத்த வாரத்தில் இவர் பதவியேற்பார் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.

  இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா, கடந்த செப்.30-ஆம் தேதி பணி ஓய்வுபெற்றிருந்ததால், இந்த பதவி காலியாக இருந்தது. போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கை விசாரித்துவரும் சிறப்புநீதிமன்றத்தின் நீதிபதி ஜி.பி.முடிகெüடர், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்தை கூடுதல் பொறுப்பில் கவனித்துவந்தார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால், நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிகாலத்தை நீட்டிப்பது குறித்து கருதலாம் என்று செப்.30-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது. எனினும், தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக நீடிக்க பாலகிருஷ்ணா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்புநீதிமன்றத்தின் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹாவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பச்சாபுரே, மனோலி, ஆன்டின், மல்லிகார்ஜுனையா, சோமராஜூ, பாலகிருஷ்ணா, முடிகெüடரை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கப்போகும் 8-ஆவது நீதிபதி குன்ஹா. அடுத்த விசாரணை நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai