சுடச்சுட

  

   புதிய தலைமைச்செயலாளராக கெüசிக் முகர்ஜி பதவியேற்பு

  By பெங்களூரு  |   Published on : 01st November 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கெüசிக் முகர்ஜி பதவியேற்றுக்கொண்டார்.

  கர்நாடக அரசின் தலைமைச்செயலாளராக இருந்த எஸ்.வி.ரங்கநாத் வியாழக்கிழமையுடன் பணி ஓய்வுபெற்றார். இதை தொடர்ந்து, புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கெüசிக் முகர்ஜி, பெங்களூரு, விதானசெüதாவில் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ரங்கநாத் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

  பின்னர் கெüசிக் முகர்ஜி கூறியது: பெங்களூரு நகரின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தரிசுநிலவிவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளிப்பேன். என்னுடைய பதவிகாலத்தில் நேர்மை மற்றும்நீதிநெறி தவறாமல் நிர்வாகம் செய்வேன். கர்நாடக மாநில அரசின் அதிகாரிகள் துடிப்பான மற்றும் நேர்மையுடன் கடமையாற்றக்கூடியவர்கள். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே இணக்கமான சம்பந்தம் இருக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமையுணர்வுடன் செயலாற்றினால், மாவட்ட அளவில் மக்கள் குறைத்தீர் முகாம்கள் நடத்தவேண்டிய அவசியமில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கிராமங்களுக்கு சென்று பஞ்சாயத்து மட்டத்திலான நிர்வாகத்தை ஆய்வுசெய்வேன். அரசு மற்றும் வனநிலங்களை ஆக்கிரமித்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்பாக கடினமான நடவடிக்கையை எடுப்பேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai