Enable Javscript for better performance
கழுத்தை அறுத்து பெண் கொலை- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தனியாக இருந்தப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யபட்டுள்ளார்.

    பெங்களூரு மைக்கோலேஅவுட் காவல் சரகத்தில் உள்ள கே.இ.பி லேஅவுட் வசித்து வருபவர் நஸ்ரத் சுல்தானா (45). இவரது கணவர் அப்துல் ஹபீஸ் துபேயில் பணியாற்றி வருகிறார். நஸ்ரத் சுல்தானா பெங்களூருவில் தனது மகன் இர்பானுடன் வசித்து வந்தாராம். புதன்கிழமை காலை இர்பான் கல்லூரி சென்ற பிறகு, வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் நஸ்ரத் சுல்தானாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர். இது குறித்து மைக்கோ லேஅவுட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகுலு வட்டம் கே.சதுவனஹள்ளியைச் சேர்ந்தவர் ரோஜா (20). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 3-வது செமஸ்டர் படித்து வந்தாராம். புதன்கிழமை இவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து கிருஷ்ணராஜபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai