Enable Javscript for better performance
நாளை பெங்களூருவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: மைதானம் அருகே உள்ள சாலைகளில் வாகனம் நிறுத்தத் தடை- Dinamani

சுடச்சுட

    

    நாளை பெங்களூருவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: மைதானம் அருகே உள்ள சாலைகளில் வாகனம் நிறுத்தத் தடை

    By பெங்களூரு  |   Published on : 01st November 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் சனிக்கிழமை (நவ.2)ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், சின்னசாமி மைதானம் அருகே உள்ள சாலைகளில் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து, நவ.2-ம் தேதி காலை 10 மணிமுதல் இரவு 11.30 மணி வரை குவின்ஸ்சாலை, எம்.ஜி.சாலை, லிங்க்சாலை, ராஜ்பவன்சாலை, சென்ரல்சாலை, கப்பன்சாலை, மதராஸ்வங்கிச்சாலை, மியூசியம்சாலை, கஸ்தூரிபாசாலை, கப்பன்பூங்கா, லாவல்லிசாலை, சித்தலிங்கையாசாலை, விஜய்மல்லையாசாலைகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்:

    கர்நாடக கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் தங்களது வாகனங்களை லாவல்லிசாலையில் உள்ள புனித கத்தீட்டரல் தேவாலய மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

    பொதுமக்கள் கன்டீருவா உள்விளையாட்டு அரங்கம்,சிவாஜிநகர் பேருந்து நிலைய மேல்தளத்தில் நிறுத்த வேண்டும்.

    பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது வாகனங்களை கப்பன்பூங்காவில் உள்ள கே.ஜே.ஐ.டி கட்டடத்தின் முன்புறத்தில் நிறுத்த வேண்டும்.

    போட்டி முடிந்த பிறகு மாநகரின் எல்லாப்பகுதிகளுக்கு மாநகரப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai