Enable Javscript for better performance
 முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற திறப்புவிழாவில் பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

     முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற திறப்புவிழாவில் பங்கேற்க அழைப்பு

    By பெங்களூரு  |   Published on : 02nd November 2013 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற திறப்புவிழாவில் கலந்து கொள்ளுமாறு முத்தமிழ்காவலர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சையில் வருகிற நவ.8,9,10 ஆகிய தேதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் எனும் இறுதிப்போரில் ஈழத்தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு மக்கள்பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட தமிழன் புலித்தேவன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, ஈழப்போர் தளபதிகள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உயிர்நீத்த முத்துக்குமரன், தங்கவயல் மொழிப்போர் தியாகிகள் போன்ற 22 தியாகிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம், ஈழத்தமிழர் படுகொலையின் பின்னணியையும், வேதனையையும் தலைமுறை தாண்டியும் மக்களிடம் கொண்டு சேர்க்கும். தமிழர்களின் வரலாற்றில் திருப்புமுனையாக அமையவுள்ள இந்த நிகழ்ச்சியில் கர்நாடகதமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9448701713 என்ற செல்பேசி எண்ணில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai