Enable Javscript for better performance
நவ.5-இல் பேருந்து தினம்: கூடுதல் பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நவ.5-இல் பேருந்து தினம்: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    By பெங்களூரு  |   Published on : 02nd November 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் நவ.5-இல் பேருந்துதினத்தை கடைபிடிப்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூருவாசிகளுக்கு பாதுகாப்பான, வசதியான போக்குவரத்து வழங்குவதை கழகம் குறிக்கோளாக கொண்டுள்ளது. அதேபோல, பேருந்துசேவைகளை பெருக்கி, காற்றுமாசுபடுதலை குறைக்க கழகம் தொடர்ந்து பேருந்துதினத்தை கடைபிடித்துவருகிறது. அதாவது, சொந்தவாகனங்களுக்கு பதிலாக அரசு பேருந்துகளை பயன்படுத்த மக்களை தூண்டுவதே பேருந்துதினத்தின் முக்கியநோக்கமாகும். இம்மாதம் 5-ஆம் தேதி பேருந்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, பழையவிமானநிலையச்சாலை, சர்ஜாபுரா சாலை, ஒசூர் சாலை, பன்னர்கட்டாசாலை, கனகபுராசாலை, மைசூர் சாலை, மாகடிசாலை, தும்கூர் சாலை, பெல்லாரிசாலை, தனிசந்திராசாலை, ஹென்னூர் சாலை, பழையமெட்ராஸ் சாலைகளில் பேருந்துதினம் கடைபிடிக்கப்படும். வழக்கமாக 6487 பேருந்துகளில் 83,770 நடைகள் இயக்கப்படும். பேருந்துதினத்தையொட்டி, கூடுதலாக 1500 பேருந்துகளில் 3 ஆயிரம் நடைகள் இயக்கப்படும். இந்தவசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai