Enable Javscript for better performance
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளி விற்பனை: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளி விற்பனை: 2 பேர் கைது

    By பெங்களூரு  |   Published on : 02nd November 2013 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பெங்களூரு குந்தனஹள்ளிகேட் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (27), சரங்கரபுரத்தைச் சேர்ந்தவர் அனந்தராம் (38). இவர்கள் இருவரும் பிரபல நிறுவனங்களில் பெயர்களில் போலி ஜவுளிகளை குந்தனஹள்ளி, பசவனகுடி டிவிஜி சாலையில் விற்பனை செய்து வந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், கிருஷ்ணா, அனந்தராமை கைது செய்து, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள போலி ஜவுளிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து எச்.ஏ.எல் மற்றும் பசவனகுடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பைக்- லாரி மோதல்: 2 பேர் சாவு

    பெங்களூரு கோணதாசப்புராவைச் சேர்ந்தவர்கள் பாண்டு (23), ஜாகீர்பாஷா (21), கோபால் (22) ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை காலை ஒரே மோட்டார் சைக்கிளில் ஆவளஹள்ளி பூதிகெரே கிராஸில் சென்று கொண்டிருந்தப்போது, எதிரே வந்த லாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பாண்டு, ஜாகீர்பாஷா அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த கோபால் நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆவலஹள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.                               

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai