சுடச்சுட

  

  புரவன்கரா நிறுவனத்தின் நிகரலாபம் நிகழாண்டின் 2-ஆவது காலாண்டு இறுதியில் 14 சதமாக உயர்ந்துள்ளது.

  இதுகுறித்து புரவன்கரா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ரவி புரவன்கரா வெளியிட்டுள்ள அறிக்கை: எஙகளதுநிதிநிலை, புரவன்கரா நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியைஎடுத்துக்காட்டுக்கிறது. செப்.30-ஆம்தேதியுடன் நிறைவடைந்த நிகழாண்டின் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தை காட்டிலும் 28 சதம் உயர்ந்து, ரூ.670.1 கோடியாக உள்ளது. இதே காலக்கட்டத்தில், நிறுவனத்தின் நிகரலாபம் 14 சதம் உயர்ந்து, ரூ.100.2 கோடியில் இருந்து ரூ.114.2 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. நிகழாண்டின் 2-ஆவது காலாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 10 சதம் உயர்ந்து, ரூ.300.8 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் நிகரலாபம் இதேகாலகட்டத்தில் 8 சதம் குறைந்து, ரூ.46 கோடியாக இருந்தது. 2-ஆவது காலாண்டின் இறுதியில் நிறுவனத்தின் விற்பனை 21 சதம் உயர்ந்துகாணப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai