சுடச்சுட

  

  பெங்களூருவில் ரயில்தடங்களுக்கு குறுக்கே 16 மேம்பாலங்கள்: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே

  By பெங்களூரு  |   Published on : 02nd November 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் ரயில்தடங்களுக்கு குறுக்கே 16 மேம்பாலங்கள் கட்டப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.

  பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில்நிலையத்தில் உள்ள நடைப்பாதையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: பெங்களூருவில் உள்ள பல ரயில் தடங்களில் அவ்வப்பொழுது விபத்துகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி ரயில் தடங்களில் உள்ள சாலைகளில் வாகன நேரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பெங்களூருவில் உள்ள ரயில்தடங்களில் 16 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 237 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 9 மேம்பாலங்களின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் மேம்பாலங்களை கட்டி முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

  பின்னர் அல்லாலசந்திராவில் கட்டப்படும் மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட அவர், ஜுடிஷியல் லேஅவுட்டில் கட்டப்படும் சுரங்கப்பாதை பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என நெடுநாளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். சுரங்கப்பாதையால் பாகேபள்ளி, ஹுந்துபுரா மட்டுமின்றி ஆந்திரமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் நெரிசல் இன்றி எளிதாக செல்ல முடியும் என்றார். நிகழ்ச்சியில் எம்.பிக்கள் சந்திரேகெüடா, டி.கே.சுரேஷ், எம்.எல்.ஏ முனிரத்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai