Enable Javscript for better performance
கன்னடத் திரைப்பட இயக்குநர்  ராஜேந்திரபாபு காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    கன்னடத் திரைப்பட இயக்குநர்  ராஜேந்திரபாபு காலமானார்

    By  பெங்களூரு,  |   Published on : 04th November 2013 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னடத் திரைப்பட இயக்குநர் ராஜேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
     கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜேந்திரபாபு (62), குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
     இந்த நிலையில், பெங்களூருவில் அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கழிவறைக்குச் சென்ற போது, கால்தவறி கீழே விழுந்தார். எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
     இவரது மனைவி நடிகை சுமித்ரா. மகள்கள் உமா, நக்ஷத்ரா.
     கன்னடத்தில் ராமாச்சாரி, ஒலவின உடுகொரெ, திக்கஜரு, நானு நன்ன ஹென்ட்தி, ஹாலுன்ட தவரு, அப்பாஜி, பிந்தாஸ் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
     இவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட இரங்கல் செய்தி:
     கன்னடத் திரைப்பட உலகில் பல வெற்றிப் படங்களை தந்த ராஜேந்திரபாபு, ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்கும்படி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
     ராஜேந்திராபாபுவின் மறைவு கன்னட திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று, அந்த மாநில செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட் தெரிவித்தார். இவரது மறைவு கன்னட திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று, நடிகர் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். நடிகைகள் ஜெயமாலா, மாலாஸ்ரீ, ரம்யா, நடிகர் உபேந்திரா உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் ராஜேந்திரபாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai