Enable Javscript for better performance
\\\"கர்நாடகத்தின் வளர்ச்சியில்  தமிழர்கள் பங்கேற்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கர்நாடகத்தின் வளர்ச்சியில்  தமிழர்கள் பங்கேற்க வேண்டும்'

    By  பெங்களூரு  |   Published on : 04th November 2013 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று, கன்னட சங்கீத பிதாமகன் புரந்தரதாசர் அமைப்பின் செயலாளர் சுவர்ணா மோகன்குமார் கேட்டுக் கொண்டார்.
     கர்நாடக திமுக சார்பில், பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள டாக்டர் கலைஞரகத்தில் அண்மையில் நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில் அவர் பேசியது:
     1956 நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பல்வேறு திசைகளில் பிளவுண்டிருந்த கன்னடம் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டதை நினைவுக்கூரும் வகையில், கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுகிறது.
     இந்த விழாவை கர்நாடக திமுகவும் கொண்டாடுவது பொருத்தமாகும். கர்நாடகத்தின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடகத்தின் உயர்வில் தமிழர்கள் பங்கு கொள்ள வேண்டும்.
     கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார் அவர்.
     விழாவுக்கு அதன் மாநில அமைப்பாளர் ந.ராமசாமி தலைமை வகித்தார்.
     மாநிலப் பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி, நிர்வாகிகள் மா.மன்னர், வி.எஸ்.மணி, வி.தேவராசன், போர்முரசு கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai