சுடச்சுட

  

  கர்நாடகத்தில் சுரங்க நிலத்தை ஏலம் விடுவது தொடர்பாக தலைமைச் செயலாளர் கெüசிக் முகர்ஜி தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
   கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கம் நடத்தி வரும் நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் ஏ,பி,சி ஆகிய 3 பிரிவுகளாக பிரித்துள்ளது. சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட "சி' பிரிவைச் சேர்ந்த 51 நிறுவனங்களின் சுரங்க நில ஒப்பந்தங்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை அளித்தது.
   அதன்படி, இந்த நிறுவனங்களில் நில ஒப்பந்தங்களை கர்நாடக அரசு அண்மையில் ரத்து செய்தது.
   இந்த நிலையில், 51 நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலத்தை மறு ஏலம் விடுவது தொடர்பாக ஆராய்ந்து, அரசுக்கு ஆய்வறிக்கைத் தாக்கல் செய்ய அரசு தலைமைச் செயலாளர் கெüசிக் முகர்ஜி தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
   இந்தக் குழுவில் நிதி, வனம், சுரங்கம், சட்டம், வருவாய் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிலத்தை மறு ஏலம் விடுவது குறித்து மாநில அரசு இறுதி முடிவெடுக்கவுள்ளது.
   சுரங்க நிலத்தை ஒதுக்க மாநில அரசுக்குச் சொந்தமான மைசூர் மினரல்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளிக் கோரவும் அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai