Enable Javscript for better performance
தனியார் பேருந்துகளில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பின்பற்றப்படும் பயணிகளுக்கானப் பாதுகாப்பு குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
     இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     சுற்றுலாப் பேருந்துகள், ஒப்பந்த வாகனங்கள் உள்ளிட்ட இதர பயணிகள் பேருந்துகளின் பாதுகாப்பு, ஆவணங்கள், தொழில்நுட்ப நிலை ஆகியவை குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
     கடந்த இரு நாள்களில் 139 பேருந்துகளை சோதனை செய்ததில், விதிமுறை மீறியதாக 68 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
     அந்த வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து ரூ. 24,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
     இந்தச் சோதனை மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்பதால், பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அதிகாரிகளுக்கு இந்தச் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     ஆந்திர மாநிலம், மெஹ்பூப்நகரில் அண்மையில் நேரிட்ட தனியார் பேருந்து தீவிபத்தில் 45 பேர் உடல் கருகி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai