Enable Javscript for better performance
திருமண நிதியுதவித் திட்டம்: எடியூரப்பா தொடர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    திருமண நிதியுதவித் திட்டம்: எடியூரப்பா தொடர் தர்னா

    By  பெங்களூரு  |   Published on : 04th November 2013 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாய ஏழைப் பெண்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது நாளாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா தர்னாவில் ஈடுபட்டார்.
     கர்நாடகத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் திருமண நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அனைத்து சமுதாய ஏழைப் பெண்களுக்கும் விரிவாக்க வலியுறுத்தி, கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கம் காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில்
     கஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது நாளாக நீடித்தது. இரவு, பகலாக தர்னாவில் ஈடுபட்டு வரும் எடியூரப்பா, திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாயத்தினருக்கும் விரிவாக்காவிடில் வருகிற 5-ஆம் தேதிக்குப் பிறகு போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதாக தெரிவித்தார்.
     இதுகுறித்து எடியூரப்பா கூறியது:
     திருமண நிதியுதவித் திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தினருக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
     ஏழைப் பெண்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கிறார்கள். ஏழைகளுக்காக செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் ஜாதி, மத பாகுபாடு கூடாது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, மக்களை ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
     எந்தக் காலத்திலும் இது போன்ற முயற்சியை அனுமதிக்க முடியாது. திருமண நிதியுதவித் திட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆராய்வதற்கு வருகிற 5-ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.
     இந்தக் கூட்டம், தற்போது போராட்டம் நடைபெறும் இடத்திலேயே நடத்தப்படும் என்றார் அவர்.
     போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஷோபா கரந்தலஜே, ஹர்தாள் ஹாலப்பா, முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai