Enable Javscript for better performance
தீபாவளி பண்டிகை: இன்று பலிபாட்யமிக் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி பண்டிகை: இன்று பலிபாட்யமிக் கொண்டாட்டம்

    By  பெங்களூரு  |   Published on : 04th November 2013 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையையொட்டி, கர்நாடகத்தில் திங்கள்கிழமை (நவ.4) பலிபாட்யமிக் கொண்டாடப்படுகிறது.
     கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையை நீர் நிரப்பும் விழா (நீரு தும்புவா ஹப்பா), நரகாசதுர்தஷி (நரகாசுரனை கிருஷ்ணர் வென்ற திருவிழா), லட்சுமி பூஜை (செல்வம் வேண்டுதல்), பலிபாட்யமி (அகம்பாவ அரசன் பலி சக்ரவர்த்தியை விஷ்ணுபகவான் வீழ்த்தியதை கொண்டாடும் திருநாள்) என நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது.
     கடந்த வெள்ளிக்கிழமை நீர் நிரப்பும் விழாவும், சனிக்கிழமை தீபாவளியின் இரண்டாவது நாளாக நரகா சதுர்தஷியும் கொண்டாடப்பட்டன.
     ஞாயிற்றுக்கிழமை கர்நாடகம் முழுவதும் லட்சுமி பூஜை நடைபெற்றது. தீபாவளியின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை, பலிபாட்யமியாகக் கொண்டாடப்படுகிறது. கர்வம் நிறைந்த பலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம் எடுத்து விஷ்ணுபகவான் பாதாளத்தில் தள்ளியதை கொண்டாடுவதே பலிபாட்யமி.
     பலி சக்ரவர்த்தியாக சாணியைப் பிடித்து வைத்து, அதன்மீது செண்டுமல்லி செருகி பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள். பண்டிகையை முன்னிட்டு, சுவையான உணவு பரிமாறப்படும். இந்த நாளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும்.
     உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விருந்துண்டு தீபாவளியைக் கொண்டாடுவது கர்நாடகத்தில் வழக்கம். தீபாவளியை முன்னிட்டு, சந்தையில் பூஜை பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூடினர். கர்நாடகத்தில் தொடர்ந்து 4 நாள்கள் அரசு விடுமுறையாக வந்ததால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai