சுடச்சுட

  

  தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க  கர்நாடக அமைச்சர்  லண்டன் பயணம்

  By  பெங்களூரு,  |   Published on : 04th November 2013 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய வருமாறு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க அந்த மாநில அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் வருகிற 6-ஆம் தேதி லண்டன் செல்கிறார்.
   தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் தலைமைக் குவிமையமாக கர்நாடகத்தை மாற்றியமைக்க அந்த மாநில அரசு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுத்துள்ளது.
   அதன்படி, இந்தத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் தென்னிந்திய தொழில் வர்த்தகசபை நடத்தவுள்ள கூட்டத்தில் கர்நாடக தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் கலந்து கொள்கிறார்.
   இதுகுறித்து அவர் கூறியது:
   2020-ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெங்களூருவை முதலிடத்தில் கொண்டு வருவதற்காக எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்வேன். தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலிடத்தில் உள்ள சிலிகான் வேலியைக் காட்டிலும், முன்னுக்கு வருவது சுலபமானதல்ல.
   எனினும், எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற கடும் முயற்சியில் ஈடுபடுவோம். லண்டனை தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரியில் அமெரிக்கா சென்று தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பேன். அரசு வகுத்துள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் 1.05 லட்சம் ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்கும் பணி வருகிற 2032-இல் முடிவடையும்.
   இந்தத் திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேர் நேரடியாகவும், 28 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். தொழில் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றார் அவர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai