சுடச்சுட

  

  போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உதவ தொலைபேசி எண்

  By  பெங்களூரு,  |   Published on : 04th November 2013 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு உதவ தொலைபேசி உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   அவசரச் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
   இதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அவசரச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
   இதைத் தவிர்ப்பதற்காக, போக்குவரத்து நெரிசலில்
   சிக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் குறித்து பெங்களூரு மாநகரக் காவல் துறைக்கு 080-22943030 (மேற்கு சரகம்), 22943131 (கிழக்கு சரகம்) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
   இந்தத் தகவலின் அடிப்படையில், போக்குவரத்து நெரிசல் களையப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனப் பயணத்திற்கு வழியேற்படுத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai