சுடச்சுட

    

    மறைந்த பாடகர் மன்னா டேயின் மருத்துவச் செலவை அரசு ஏற்கும்

    By  பெங்களூரு  |   Published on : 04th November 2013 11:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த பின்னணிப் பாடகர் மன்னா டேயின் மருத்துவச் செலவை கர்நாடக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
     பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அண்மையில் நடைபெற்ற கர்நாடக உதய தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த 58 பேருக்கு விருது வழங்கி அவர் பேசியது:
     பெங்களூருவில் அண்மையில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டேயின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும். இதற்காக ரூ. 25 லட்சத்தை அரசு ஒதுக்கும். கன்னடத் திரைப்படங்களில் சில பாடங்களை பாடியுள்ள மன்னா டேயின் கலைத் துறை பங்களிப்புக்கு மரியாதை செய்யும் வகையில், இந்த மருத்துவ நிதியுதவி அளிக்கப்படுகிறது.
     மேலும், அவருக்கு பெங்களூருவில் இசையஞ்சலி செலுத்துவதற்காக விரைவில் இசைக் கலை இரவு நடத்தப்படும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai