Enable Javscript for better performance
கொள்ளை முயற்சி: 14 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     பெங்களூரு ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (37), சரத் (25), பிரவீண்குமார் (25), ஜே.பி.நகர் ரவிக்குமார் (25), ஆடுகோடி அசோக் (27), பெலக்கள்ளி சாந்தக்குமார் (23) ஆகியோர் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஜெய நகர் காவல் சரகத்தில் பதுங்கியிருந்தனராம்.
     தகவலறிந்த போலீஸார் 6 பேரையும் கைது செய்து, அரிவாள், கத்தி, மிளகாய்ப்பொடி பாக்கெட்டுகள், காரைப் பறிமுதல் செய்தனர்.
     ஸ்ரீராமபுரம் காவல் சரகம்: ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த ராஜு (23), மணிகண்டன் (22), அருண்குமார் (21) ஆகியோர் அதே பகுதியில் கொலை செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். மூவரையும் கைது செய்த போலீஸார், 2 அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய்ப் பொடி பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
     ஹனுமந்த நகர் காவல் சரகம்: ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (33), ரஜத் (30), ஜெகதீஷ் (22) பேங்க் காலனியைச் சேர்ந்த சுனில் (32), முனீஸ்வரா பிளாக்கைச் சேர்ந்த ரவிக்கிரண் (22) ஆகியோர் ஹனுமந்த நகர் காவல் சரகத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனராம்.
     தகவலறிந்த போலீஸார் அவர்களை கைது செய்து, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
     கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai